- சிறுகதையை மக்கள் அனைவரும் படிக்கும் இலக்கிய வகையாக மாற்றி அமைத்தவர் யார்? கல்கி
- கல்கியின் இயற்பெயர் என்ன? இரா. கிருஷ்ணமூர்த்தி
- கல்கியின் முதல் சிறுகதைத் தொகுப்பு யாது? சாரதையின் தந்திரம்
- சாரதையின் தந்திரம் வெளியான ஆண்டு எது? 1931
- கல்கியின் இரண்டாம் சிறுகதைத் தொகுதியின் பெயர் என்ன? கணையாழியின் கனவு
- கணையாழியின் கனவு தொகுப்பு வெளியான ஆண்டு யாது? 1937
- கல்கி தொடக்க காலத்தில் பணியாற்றிய இதழ் யாது? ஆனந்த விகடன்
- கல்கி தொடங்கிய இதழ் யாது? கல்கி
- கல்கி சிறுகதைகளின் குறையாகக் கூறப்பட்டது? சிறுகதைக்கான இலக்கணத்திற்குள் அல்லாதவை
- கல்கி சிறுகதையின் சிறப்பு யாது? நகைச்சுவை நடை, ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் கதைப் பாங்கு
- கல்கியின் சிறந்த கதைகள்? கேதாரியின் தாயார், திருடன் மகன் திருடன், அமர வாழ்வு, இழ்ந்த கோட்டை, ஒற்றை ரோஜா, கணையாழியின் கனவு, சாரதையின் தந்திரம், மயில் விழி மான், மயிலைக் காளை, மாடத் தேவன், வீணை பவானி
- சிறுகதையின் திருமூலர் யார்? மௌனி
- மௌனியைச் சிறுகதையின் திருமூலர் என்றவர் யார்? புதுமைப்பித்தன்
- மௌனியின் இயற்பெயர் யாது? எஸ். மணி
- மௌனியின் ஊர் எது? சிதம்பரம்
- மணிக்கொடி தொடங்கி கசடதபற வரை சிறுகதை எழுதியவர்? மௌனி
- மௌனியைச் சிறுகதை உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார்? பி.எஸ்.இராமையா
- மௌனி எழுதிய கதைகளின் எண்ணிக்கை? 24
- தத்துவ நுட்பமும் காதல் செறிவும் நிறைந்த மௌனியின் சிறுகதை எது? அழியாச்சுடர்
- மனஓட்டம் சார்ந்த மௌனியின் சிறுகதைகள் யாவை? குடும்பத்தேர், பிரபஞ்சகாலம், எங்கிருந்தோ வந்தான்
- மௌனியின் முதல் சிறுகதை வெளிவந்த ஆண்டு யாது? 1936
- மௌனி சிறுகதைகளின் அடிப்படை யாவை? தத்துவ மரபு, வேதாந்த விசாரனை
- மௌனியின் சிறுகதை நடை? படிமம், குறியீடு நிறைந்த கவிதை நடை
- மௌனி சிறுகதையில் மக்களுக்குச் சோர்வு தரும் பண்பு யாது? நடை [படிமம், குறியீடு நிறைந்த கவிதை நடை]
- மௌனியின் புகழ் பெற்ற சிறுகதைகள்? அழியாச்சுடர், மனக்கோலம்
- மௌனியின் சிறுகதைத் தொகுதி யாது? அழியாச்சுடர்
- அழியாச்சுடர் வெளியான ஆண்டு? 1959
- அழியாச்சுடரை வெளியிட்டவர் யார்? க.நா.சு
- மௌனியின் இரண்டாம் சிறுகதைத் தொகுதி வெளியான ஆண்டு? 1967[தருமு சிவராமன், க. நா. சு முன்னுரையுடன்]
- மௌனியின் மூன்றாம் சிறுகதைத் தொகுதி வெளிவந்த ஆண்டு? 1978[கிரியா பதிப்பக வெளியீடு
- தி.க.ரங்கநாதன் சிறுகதை ஆசிரியராக அறிமுகமான இதழ் ? சங்கு
- சங்கு இதழில் வெளியான தி.க. ரங்கநாதன் கதைகள்? பணக்காரி குஞ்சிதம், பவுன் செடி
- திக ரங்கநாதனின் சிறுகதைத் தொகுதி எது? சந்தனக்காவடி
- தி.ஜானகிராமன் பிறந்த மாவட்டம்? தஞ்சை
- தி.ஜா-வின் சிறுகதைத் தொகுப்புகள்? கொட்டுமேளம், சிகப்பு ரிஷா, அக்பர் சாஸ்திரி [அக்கினி சாஸ்திரி] பிடி கருணை
- மனித உணர்ச்சிகளை எழுத்தில் வடித்து வாசகனையும் உணர்ச்சி மயமாக்கும் சிறுகதை எழுத்தாளர் யார்? தி.ஜானகிராமன்
- படிப்போரைச் சிலிர்க்கச் செய்யும் தி.ஜா-வின் சிறுகதை? சிலிர்ப்பு
- தி.ஜாவின் சிறுகதையின் சிறப்பு? உணர்ச்சி வயப்படுத்துதல், அழகியல், உரையாடல், பெண்ணிய சிக்கல்
- குறிப்பிடத்தகுந்த தி.ஜா-வின் சிறுகதைகள்? சிலிர்ப்பு, கொட்டுமேளம், அக்பர் சாஸ்திரி, கோபுர விளக்கு
- பள்ளிச்சிறுவனின் மனநிலை பற்றிய தி.ஜவின் கதை? முள்முடி
- பாலியல் உளவியல் நுட்பம் சார்ந்த தி.ஜா-வின் கதை? வீடு
- விபச்சாரப் பெண்ணின் மனச்சிக்கலைப் பேசும் தி.ஜ.வின் கதை? கோபுர விளக்கு
- பெரிய மனிதர்களின் போலித்தனத்தைப் பேசும் தி.ஜாவின் சிறுகதை? கங்காஸ்நானம்
- கரிசல் வட்டார இலக்கிய முன்னோடி? கு. அழகிரி சாமி
- கு. அழகிரி சாமி எந்த ஊரைச் சேர்ந்தவர்? திருநெல்வேலி மாவட்டம், இடைச்செவல்
- கு. அழகிரிசாமி சிறுகதைகளின் சிறப்பு? எளிமை, வட்டாரவழக்கு, மனித இயல்புகளைப் படம் பிடித்துக் காட்டுவது.
- குறிப்பிடத் தகுந்த கு. அழகிரி சாமியின் சிறுகதைகள்? சிரிக்கவில்லை, அன்பளிப்பு, கற்பக விருட்சம், தவப்பயன்
- கு. அழகிரிசாமி எந்த நாளிதழின் உதவி ஆசிரியராக விளங்கினார்.
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 30 செப்டம்பர், 2020
சிறுகதை வினாவங்கி 3
செவ்வாய், 29 செப்டம்பர், 2020
தமிழ்ச் சிறுகதைகள் - வினா வங்கி 2 [மணிக்கொடி எழுத்தாளர்கள்]
- மணிக்கொடி இதழ் தொடங்கி ஓராண்டிற்குள் எந்த இதழுடன் இணைக்கப்பட்டது? டி.எஸ். சொக்கலிங்கத்தின் 'காந்தி'
- மணிக்கொடி இதழ் மீண்டும் தொடங்கப்பட்ட காலம் எது? 1937
- மணிக்கொடி சிறுகதை எழுத்தாளர்கள் யாவர்? பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, வ.ரா, கு.ப.ரா.,சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியம், லா.ச.ரா.
- பி.எஸ்.ராமையாவின் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எது? நட்சத்திர குழந்தைகள்
- கு.ப.ராஜகோபாலன் தன கதைகளில் எத்தகைய பரிசோதனைகளை செய்தார்? உள்ளடக்கப் பரிசோதனை
- கு.ப.ரா கதைகளில் மையமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுவன யாவை? உணர்ச்சி விவரிப்பு,பாலியல் சிக்கல்களை ஆராய்வது
- கு.ப.ராவின் சிறுகதை நூல்கள் யாவை? புணர்ஜென்மம், காணாமலே காதல், இறுதி வெளிச்சம்
- கு. ப. ராவின் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகள் யாவை? காணாமலே காதல், விடியுமா? புனர்ஜென்மம், கனகாம்பரம், சிறிது வெளிச்சம், சாருன்னிசா, ஆற்றாமை, வயது வந்துவிட்டது, மூன்று உள்ளங்கள்
- கு. ப. ராவின் முற்று பெறாத புதினம் எது? வேரோட்டம்
- கு.ப. ரா பிறந்த ஆண்டு? 1901
- கு.ப.ரா பிறந்த ஊர்? கும்பகோணம்,
- கு.ப.ரா இறந்த ஆண்டு? 1944
- கு.ப.ரா எந்த இதழில் பணியாற்றினார்? கிராம ஊழியன்
- கு.ப.ரா எத்தனைக் கதைகள் எழுதியுள்ளதாக க.நா.சு கூறுகிறார்? 85
- சிறுகதையின் மன்னன் யார்? புதுமைப்பித்தன்
- சிறுகதையின் மாப்பஸான் யார்? புதுமைப்பித்தன்
- புதுமைப்பித்தன் பிறந்த ஆண்டு? 1906 ஆம் ஆண்டு [ஏப்ரல்]
- புதுமைப்பித்தன் மறைந்த ஆண்டு 1948 ஆம் ஆண்டு
- புதுமைப்பித்தனின் தந்தைப் பெயர் யாது? சொக்கலிங்கம்
- புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன? விருத்தாச்சலம்
- புதுமைப்பித்தன் பிறந்த ஊர் எது? திருப்பாதிரிப்புலியூர்
- புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை எது? ஆற்றங்கரை பிள்ளையார்
- புதுமைப்பித்தனின் தமிழ் இலக்கிய அறிவையும், உணர்வையும் வெளிப்படுத்துபவை யாவை? அன்று இரவு, சாபவிமோச்சனம், கபாடபுரம்
- இலக்கிய, வரலாற்றுச் சம்பவங்களுக்கு அமரத்துவம் கொடுத்து புதுமைப்பித்தன் உருவாக்கிய சிறுகதைகள் யாவை? அன்று இரவு, சாப விமோச்சனம், அகல்யை, சிற்பியின் நரகம், கபாடபுரம்
- அங்கதச் சுவை நிறைந்த புதுமைப்பித்தனின் சிறுகதைகள் யாவை? நாரதராமாயணம், எப்போதும் முடிவிலே இன்பம், திருக்குறள் குமரேசம் பிள்ளை, புதிய கந்த புராணம், கட்டிலை விட்டிறங்கா கதை
- கார்த்திகேசு சிவத்தம்பி கடவுளும் கந்தசாமி பிள்ளையும் குறித்துக் கூறுவது யாது? புதுமையும் பழமையும் இணைத்துக் காட்டும் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் புதுமைப்பித்தனின் அற்புத சிருஷ்டிகளில் ஒன்று
- வாதவூராரின் மனப்போராட்டத்தைச் சித்தரிக்கும் புதுமைப்பித்தனின் கதை எது? அன்றிரவு [அன்று இரவு]
- புதுமைப்பித்தனின் கதைகள் எவ்வகை இலக்கிய இசத்தைச் சார்ந்தவை? எதார்த்தவாதம்
- புதுமைப்பித்தன் கதைகளில் எத்தகு வழக்குக் கையாளப்படுகிறது? திருநெல்வேலி பேச்சு வழக்கு [திருநெல்வேலி வேளாளர் பேச்சு வழக்கு]
- வட்டாரவழக்கு மொழிநடையில் சிறுகதை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? புதுமைப்பித்தன்
- உலகளவில் நன்வோட்ட உத்தியைக் கையாண்டு வெற்றி பெற்றவர் யார்? ஜேம்ஸ் ஜாய்ஸ்
- தமிழில் முதலில் நனவோடை உத்தியைக் கையாண்டவர் யார்? புதுமைப்பித்தன்
- நனவோட்ட உத்தியைக் கையாண்டு புதுமைப்பித்தன் இயற்றிய கதைகள் யாவை? கயிற்றரவு, செல்லம்மாள், சுப்பையா பிள்ளையின் காதல்கள்
- புதுமைப்பித்தன் நனவோட்ட உத்தியைக் கையாண்டு எழுதிய முதல் கதை எது? கயிற்றரவு
- "பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குஒ பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்" - என தன் கதை பற்றிக் கூறியவர் யார்? புதுமைப்பித்தன் [காஞ்சனை முன்னுரை]
- தன் கதைகளின் பொதுப் பண்பாக புதுமைப்பித்தன் கூறியது யாது? நம்பிக்கை வறட்சி
- புதுமைப்பித்தனின் மறுவாசிப்பு சிறுகதைகள் யாவை? சாபவிமோச்சனம், அகலிகை, புதிய நந்தன்
- பேய்பயத்தை மையமிட்ட புதுமைப்பித்தனின் சிறுகதை எது? காஞ்சனை
- கற்பிற்குப் புதுப்பொருள் கூறும் புதுமைப்பித்தனின் கதை? பொன்னகரம்
- சிறுகதை எழுதிய இலக்கிய இரட்டையர்கள் ? கு.ப.ரா, ந. பிச்சமூர்த்தி
- சிறுகதையின் சாதனை என்று மதிப்பிடப்படுபவர்? ந. பிச்சமூர்த்தி
- ந. பிச்சமூர்த்தியின் குறிப்பிடத் தகுந்த படைப்பு? பதினெட்டாம் பெருக்கு
- மணிக்கொடி குழுவில் ஒருவரான சி.சு.செல்லப்பா ஆசிரியராக இருந்த இதழ் யாது? எழுத்து
- சி,சு செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்புகள் யாவை? சரசாவின் பொம்மை, மலைமேடு, அறுபது, வெள்ளை, புதியவன், நொண்டிக் குழந்தை, கொண்டுவந்த சீர், நீர்க்குமிழி, என்ன சம்பந்தம்
- வாழ்க்கை முரண், மனித முரண்களை வெளிக்கொணரும் எழுத்தாளர் யார்? லா.ச.ராமாமிருதம்
- லா.ச.ரா.வின் சிறப்புடைய சிறுகதைகள் யாவை? கைவண்ணம், ஜனவரி இதழ்கள்
- சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற மனிதனின் குறை வாழ்க்கையை காட்டும் சி.சு. செல்லப்பாவின் கதை? மூடி இருந்தது
- குற்றப்பரம்பரை சட்டத்தினைப் பேசும் சி.சு. செல்லப்பாவின் சிறுகதை யாது? கள்ளர் மடம்
- இந்தியக்காதல் பற்றி பேசும் சி.சு.செல்லப்பாவின் கதை? வாழ்க்கையில் காதல்
- காபூலி நாடோடிகளைப் பற்றிய சி.சு வின் கதை? பந்தயம்
- நடைமாடுகள்- மாட்டுத்தாவணிகள் பற்றி பேசும் சி.சு.வின் கதை? பெண்டிழந்தான்
- பண்ணையாளர்களின் மாட்டுவண்டிப் பந்தயத்தைப் பேசும் சி.சுவின் சிறுகதை யாது? கூடு சாலை
- பேருந்து வருகையால் அழிந்து போன குதிரை வண்டிக்காரர்கள் பற்றி பேசும் சி.சு. செல்லப்பாவின் கதை? மூணுலாந்தல்
- சி.சுவின் சிறுகதை திறனாய்வு நூல் யாது? தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.
திங்கள், 28 செப்டம்பர், 2020
தமிழ்ச் சிறுகதைகள் - வினா வங்கி 1 [தொடக்ககாலம்]
- சிறுகதையின் பிறப்பிடம் எது? அமெரிக்கா
- உலக அளவில் சிறுகதையின் முன்னோடி யார்? ஆலன் எட்கர்போ
- சிறுகதை முன்னோடி ஆலன் எட்கர்போ சிறுகதைக்கான இலக்கணம் வகுத்த ஆண்டு? 1842
- ஆலன் எட்கர்போ சிறுகதையின் இலக்கணமாகக் கூறுவது? முதல் வாக்கியமே படிப்போரை ஈர்த்துவிட வேண்டும்
- சிறுகதையின் தொடக்கமும், முடிவும் குதிரைப் பந்தையம் போல இருக்க வேண்டும் என்றவர்? செட்ஜ்வி
- உலகளவில் முதல் சிறுகதையை எழுதியவர் யார்? வாசிங்டன் இர்விங்
- வாசிங்டன் இர்விங் எழுதிய முதல் சிறுகதை எது? ரிப்வேன் விம்பிள்
- வங்காள மொழியில் சிறுகதை முன்னோடிகள் யாவர்? பக்கிங்க் சந்திரர், ரவீந்திரநாத தாகூர்
- தமிழ்ச்சிறுகதைகளின் முன்னோடி எது? பரமார்த்த குரு கதை
- பரமார்த்த குரு கதையின் ஆசிரியர் யார்? வீரமாமுனிவர்
- சந்திரவண்ணம் பிள்ளையின் கதை நூல் எது? கதாசிந்தாமணி
- வீராச்சாமி செட்டியாரின் கதை நூல்? விநோதரசமஞ்சரி, விக்கிரமாதித்தியன்
- தாண்டவராய முதலியாரின் கதை நூல்? பஞ்சதந்திரக் கதைகள்
- தமிழ்ப் புலவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக அமைந்த நூல் எது? விநோதரசமஞ்சரி
- பாரதியார் யாருடைய சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தார்? தாகூர்
- கொல்கத்தாவில் எந்த இதழில் வெளியான தாகூரின் கதைகளைப் பாரதியார் மொழிபெயர்த்தார்? மார்டன் ரிவ்யூ
- பாரதியின் சிறுகதைகளைக் கட்டுக்கதை என்றவர்? கார்த்திகேசு சிவதம்பி
- பாரதி சிறுகதைக்கு ஆற்றிய சிறந்த சேவை எனக் கார்த்திகேசு சிவத்தம்பி எதைக் கூறுகிறார்? தாகூர் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தது.
- பாரதியார் தம் கதைகளை எந்த இதழ்களில் வெளியிட்டார்? ஞானபாநு, கதாரத்னாகரம், சக்கரவர்த்தினி, இந்தியா, சுதேசமித்திரன்
- பாரதியார் அதிகமான சிறுகதைகளை வெளியிட்ட இதழ் எது? சுதேசமித்திரன் [16 கதைகள்]
- பாரதியார் தம் கதைகளை எதைக் கருதி எழுதுவதாகக் கூறுகிறார்? கற்பனை நயம்
- பாரதியார் எந்தெந்தப் புனைப்பெயர்களில் கதை எழுதினார்? ஷெல்லிதாஸ், சாவித்திரி, காளிதாஸன், சக்திதாஸன்
- பாரதியாரின் வடிவச் செ றிவு மிக்கக் கதைகள் யாவை? காந்தாமணி, பண்டாரத்தின் கதை, மிளகாய்ச் சாமியார்
- மாதவையா எழுதிய கதைகளின் தொகுப்பு? குசிகர் குட்டிக்கதைகள்
- குசிகர் குட்டிக்கதைகள் வெளிவந்த ஆண்டு? 1924
- மாதவையா நடத்திய இதழ் யாது? பஞ்சாமிர்தம்
- மாதவையா நிறைவு செய்யாமல் விட்ட கதை யாது? ஏட்டுச்சுரைக்காய்
- வ.வே.சு-வின் சிறுகதைக் தொகுதி? மங்கையற்கரசியின் காதல்
- மங்கையற்கரசியின் காதலில் எத்தனை கதைகள் உள்ளன? 8
- மங்கையற்கரசியின் காதலில் ஆங்கில தாக்கம் உள்ள கதைகள்? 4
- வ.வே.சு ஐயரின் ஆங்கில தாக்கம் உள்ள கதைகள் யாவை? அழேன்ழக்கே, எதிரொலியாள், அனார்க்கலி, லைலா மஜ்னூன்
- தமிழின் முதல் சிறுகதை என ஏற்கப்படுவது? குளத்தங்கரை அரசமரம்
- குளத்தங்கரை அரசமரம் வெளியான ஆண்டு யாது? 1913 - 17/ 19
- மங்கையற்கரசியின் காதல் வெளியான ஆண்டு எது? 1927
- வ.வே.சு ஐயர் சிறுகதைக்கு அளித்த முன்னுரையை எப்படிக் கூறுகிறார்? சூசிகை. விஜயசூசிகை
- 'ஜாதீய சலனங்கள் எல்லாவற்றிற்கும் இலக்கியம் அளவுகோல்' என்றவர் யார்? வ.வே.சு. ஐயர்
- வ. வே. சு ஐயர் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் எது? தேசபக்தன்
- "கதைகள் ரஸம் பொருந்தியவையாயிருப்பதோடு பெருநோக்கம் கொண்டவையாயிருத்தல் வேண்டும்" என்றவர் யார்? வ.வே.சு.ஐயர்
- சிறுகதையின் அகல வளர்ச்சிக்குக் காரணம் யார்? கல்கி
- சிறுகதையின் ஆழ வளர்ச்சிக்குக் காரணம்? மணிக்கொடி குழுவினர்
- மணிக்கொடி தன் இதழ் வழி சிறுகதை வளர்த்த காலம்? கி.பி.1933-1955
- சிறுகதையை ஒரு இயக்கமாகக் கொண்டு வளர்த்த இதழ்? மணிக்கொடி
- மணிக்கொடி தொடங்கிய ஆண்டு எது? 1934
- மணிக்கொடியைத் தொடங்கியவர் யார்? கே. சீனிவாசன்
- மணிக்கொடி எழுத்தாளர்கள் யாவர்? பி. எஸ். ராமையா, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியம், லாசாரா
- மணிக்கொடியின் பதிப்பாசிரியர் யார்? வ. ரா
- 1933 இல் தொடங்கிய ஓராண்டுக்குள் நின்றுவிட்ட, சிறுகதைகளை வெளியிட்ட இதழ்? மணிக்கொடி
- மீண்டும் மணிக்கொடி இயங்கத் தொடங்கிய காலம் எது? 1937
- கதைகளின் வடிவிலும், கதைப் பொருளிலும் புதிய சோதனைகள் செய்வதற்க்குக் களமாக அமைந்த இதழ்? மணிக்கொடி
- சிறுசிறு நிகழ்ச்சிகளைக் கதையாக்கிய உ. வே.சு அவற்றிற்கு இட்ட பெயர்? கண்டதும் கேட்டதும், நல்லுரைக்கோவை
- ஒரே மூச்சில் படித்து முடித்தற்குரிய கதையே சிறுகதை என்றவர் யார்? அட்சன்
- சிறுகதை என்பது பிரச்சனைகளை அலசிடும் படைப்பன்று, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுகளைக் கொண்டதன்று. அது மனித சூழமைவு பற்றி உள்ளவாறு கூறுவதாகும் என்றவர் யார்? பிராங்க் ஓ கானர்
புதன், 23 செப்டம்பர், 2020
தொல்காப்பிய மரபியல் வினா வங்கி
- இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9]
- ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல், களிறு, சேவு, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி,கடுவன்]
- பெண் பெயர்கள் எத்தனை? 13[பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி
- பறவையின் இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பிள்ளை
- தவழ்பவற்றுக்கு உரிய இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பிள்ளை
- குட்டி என அழைக்கப்படுபவை எவை? கீரி [மூங்கை],வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, குரங்கு
- பறள் எனப்படுபவை யாவை? கீரி, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி
- குருளை எனப்படுபவை யாவை? நாய், பன்றி, புலி, முயல், நரி
- பிள்ளை என்று அழைக்கப்படுபவை யாவை? பன்றி, புலி, முயல், நரி
- மறி எனப்படுபவை யாவை? ஆடு, குதிரை, மான், உழை, புல்வாய்
- குரங்கின் இளமைப் பெயர்கள் யாவை? மகவு, பிள்ளை, பறள், பார்ப்பு
- கன்று என அழைக்கப்படுபவை யாவை? யானை, குதிரை, கழுதை, கடமை[கடமா], மான், எருமை, மரைமா, கவரி, கரடி [கராகம்], ஒட்டகம்
- குழவி என அழைக்கப்படுபவை? யானை, ஆ, எருமை, கடமா, மரைமா, குரங்கு, முசு, ஊகம்
- உயர்திணைக்கு [மனிதர்] உரிய இளமைப் பெயர் யாது? பிள்ளை, குழவி
- புல், மரத்திற்கு உரிய இளமைப் பெயர் யாது? பிள்ளை, குழவி, கன்று, போத்து
- ஓரறிவு உயிருக்கு உரிய உணர்வு எது? தொடுதல்
- ஈரறிவு உயிடுக்கு உரிய உணர்வு எது? தொடுதல், சுவைத்தல்
- மூவறிவு உயிருக்கு உரிய உணர்வு - தொடுதல், சுவைத்தல், முகர்தல்
- நான்கறிவு உயிருக்கு உரிய உணர்வு - தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல்
- ஐந்தறிவு உயிருக்கு உரிய உணர்வு - தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல்
- ஆறறிவு உயிருக்கு உரிய உணர்வு - தொடுதல், சுவைத்த, முகர்தல், பார்த்தல், கேட்டல், பகுத்தறிதல்
- தொல்காப்பியர் பகுத்தறிவை எவ்வாறு கூறுகிறார்? மனன் [மனம்]
- ஓரறிவு உடையவை யாவை ? புல், மரம்
- ஈரறிவு உடையவை யாவை? நந்து, முரள்
- நந்து என்பது யாது? சங்கு, நத்தை, அலகு, நொள்ளை [நத்தை வகை]
- முரள் என்பது யாது? சிப்பி[இப்பி], கிளிஞ்சல், ஏரல் [இப்பி வகை]
- மூவறிவு உடையவை யாவை? கரையான் [சிதல்], எறும்பு
- நாலறிவு உடையவை யாவை? நண்டு, தும்பி [வண்டு]
- ஐந்தறிவு உடையவை யாவை? விலங்கு, பறவை [தவழ்பவை]
- ஆறறிவு உடையவை யாவை? மக்கள், தேவர். அசுரர் இயக்கர்,
- ஆறறிவு உடையவை விலங்குகள் யாவை? யானை, கிளி, குரங்கு
- களிறு எந்த விலங்குகளின் ஆண்பாற் பெயர்? யானை, பன்றி
- ஒருத்தல் எந்த விலங்கின் ஆண்பாற் பெயர்? புல்வாய், புலி, உழை,மரை, மரைமா, கரடி, யானை, பன்றி, எருமை
- ஏறு எந்த விலங்குகளின் ஆண்பாற் பெயர்? பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பசு, சுறா
- போத்து எந்த விலங்குகளின் ஆண்பாற் பெயர்? பசு, எருமை, புலி, மரை, புல்வாய், முதலை, மயில், வல்லூறு[எழால்]
- இரலை எந்த விலங்குகளின் ஆண்பாற் பெயர்? கலை, புல்வாய்
- கலை எந்த விலங்குகளின் ஆண்பாற் பெயர்? உழை, குரங்கு [முசு]
- ஆட்டைக் குறிக்கும் ஆண்பாற் பெயர்கள் யாவை?மோத்தை, தகர், உதள், அப்பர்
- சேவல் எவற்றிற்கான ஆண்பாற் பெயர்? மயில் தவிர்த்த பிற பறவைகள்
- ஆண்பால் அனைத்திற்கும் உரிய பெயர் எது? ஏற்றை
- பிடி என்பது எந்த விலங்கிற்கு உரிய பெயர்? யானை
- பெட்டை எந்தெந்த விலங்குகளின் பெண்பாற் பெயர்? ஒட்டகம், குதிரை, களிறு, மரைமா, பறவைகள்
- அளகெனப்படுவது எவ்வுயிர்களின் பெண்பாற் பெயர்? கோழி, கூகை
- பிணை எவற்றின் பெண்பாற் பெயர்? புல்வாய், நவ்வி, உழை, கவரி, சொல்வாய்
- பிணவு, பிணவல் எவற்றின் பெண்பாற் பெயர்? பன்றி, புல்வாய், நாய்
- ஆ எவற்றின் பெண்பாற் பெயர்? பசு, எருமை, மரை
- மனிதர்களுக்கான பெண்பாற் பெயர் யாவை? பெண், பிணவு
- நாகு எவற்றின் பெண்பாற் பெயர்? எருமை, மரை, பசு, நத்தை
- ஆட்டின் பெண்பாற் பெயர்கள் யாவை? மூடு, கடமை
- பாட்டி எவற்றின் பெண்பாற் பெயர்? பன்றி, நாய்,நரி
- மந்தி எவற்றின் பெண்பாற் பெயர்? குரங்கு, முசுவு, ஊகம்
தொல்தமிழக விருதுகள்
- மாராயம் என்பது என்ன? போரில் சிறந்த வீரனுக்குத் தரப்படும் பட்டம்
- மாராயம் குறித்து பேசும் தொன்னூல் எது? தொகாப்பிய வஞ்சித் திணையில் மாராயம் பெற்ற நெடுமொழி என்ற துறையில் குறிக்கப்பட்டுள்ளது
- எட்டி என்பது என்ன? எட்டி என்பது நாட்டின் சிறந்த வணிகனுக்கு வழங்கப்படும் விருது ஆகும். வீரன் கண்ணுக்கு எட்டும் வரை உள்ள நிலம் இறையிலி நிலமாக வழங்கப்படும். அடையாளமாக எட்டிப்பூவும் வழங்கப்படும். இது குறித்து இளம்பூரணர் விவரிக்கிறார்.
- காவிதி என்பது என்ன? காவிதி என்பது நாட்டைப் பஞ்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் காக்கும் சிறந்த உழவனுக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும்.
- காவிதி பட்டம் பெற்ற சங்கப்புலவர்கள் யாவர்? ஆவூர் காவிதிகள் சாதேவனார், இளம்புல்லூர் காவிதி, கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார்
- இறையிலி என்றால் என்ன? இறை என்பது வரியைக் குறிக்கும். வரி இல்லாத நிலம் இறையிலி நிலம் ஆகும்.
- தலைக்கோல் என்றால் என்ன? ஆடற்கலையில் சிறந்தவருக்கு சிறந்தவருக்குத் தரப்படும் விருது ஆகும்.
- தலைக்கோள் எதனால் ஆனது? தோற்ற மன்னனின் வெண்கொற்றக் குடை எடுத்து அதில் விலை உயர்ந்த சம்பூதநம் என்ற பொன் தகடு, விலை உயர்ந்த நவமணி கலந்து தயாரிக்கப்படும் கோல் ஆகும்.
செவ்வாய், 22 செப்டம்பர், 2020
தமிழ வரலாறும் பண்பாடும் வினா வங்கி - 1[சங்க காலம்]
- அரசன் கோ என்று அழைக்கப்பட்டான்.
- இளவரசன் எவ்வாறு அழைக்கப்பட்டான்? இளங்கோ
- நிலையான புகழைப் பெற்ற மன்னன் அரசன் அழைக்கப்பட்டான்? மன்னன்
- உயர்ந்த நிலையை எட்டியவனை எவ்வாறு அழைத்தனர்? வேந்தன்
- பல வெற்றிகளைப் பெற்றுக் குறுநில மன்னர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவன் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கொற்றவன்
- பேரரசனுக்கு ஒப்பானவன் யார்? கொற்றவன்
- மன்னனின் ஆட்சியாண்டு அவ்வாறு கணக்கிடப்படுகிறது? மன்னன் முடிசூட்டிய நாளிலிருந்து
- மன்னனுக்குரிய சிறப்புச் சின்னங்கள் யாவை? முடி, கொடி, வெண் கொற்றக்குடை, முரசு
- சங்ககாலத்தில் எத்தகைய வாரிசுமுறை பின்பற்றப்பட்டது? தந்தை வழித் தாய முறை
- இளம்வயதில் அரசாட்சி பெற்ற மன்னர்கள் - கரிகாற் சோழன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்
- சங்ககால நிர்வாகத் தலைமையகம் எது? அரசவை
- அரசவையின் வேறு பெயர்கள் யாவை? இருக்கை, ஓலக்கம், வேந்தவை
- அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?ஆலோசகர்கள், காவிதிமாக்கள்
- அரசர்கள் கலந்தாலோசிக்க இருந்த குழுக்கள் யாவை? எண்பேராயம், ஐம்பேராயம்
- எண்பேராய உறுப்பினர்கள் யாவர்? காரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளிமறவோர்.
- ஐம்பேராயத்தில் இடம்பெற்றோர் யாவர்? அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், சாரணர்
- அரசின் பெருங்கணக்கர் கரணத்தியலவர் எனப்பட்டனர்
- அரசின் பொருட்களைப் பாதுகாப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கனகச்சுற்றம்
- நாட்டைக்காவல் செய்யும் காவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கடைக்காப்பாளர்
- குதிரைப்படையின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? இவுளிமறவோர்
- நாட்டின் முழு அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? மண்டலம்
- நாட்டின் உட்பிரிவு [பகுப்பு] எவ்வாறு அழைக்கப்பட்டது? கோட்டம்
- கோட்டங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன? கூற்றங்கள் [கோட்டமே கூற்றம் என்றும் கூறுவர்]
- கூற்று ஊராகப் பகுக்கப்பட்டது.
- ஊரில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அமைப்புக்கள் யாவை? மன்றம், பொதியில், அம்பலம், மாசானம்
- குடிமக்களின் தேவைகளை மன்னனிடம் எடுத்துச்செல்லும் அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? மாசானம்
- மாசானம் என்போர் யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி அல்லது பிரதிநிதிகளின் குழு
- ஊர்களில் அமைதிகாக்கும் நிறுவனங்கள் யாவை? பொதியில், மன்றம்
- வரி எவ்வாறு அழைக்கப்பட்டது? இறை
- மக்கள் மகசூலில் எத்தனை பங்கை வரியாக செலுத்தினர்? ஆறில் ஒரு மடங்கு
- மக்கள் வரி செலுத்தும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது? வாரியம்
- பயன்பாட்டில் இருந்த போர் கருவிகள்? அம்பு, வில், வாள், வேல், குந்தகம், கோல், கைக்கோடாரி, எஃகம், முசலம்
- வீரர்கள் தன் உடலைக் காக்க எவற்றைப் பயன்படுத்தினர்? கடுவாத்தோலாம் செய்யப்பட்ட கட்டை, இரும்பு மெய்மறைகள்
- தடுப்புப்போருக்குப் பயன்பட்டவை எவை? கையில் வைத்திருக்கும் கேடயம், கவச உடை
- பயன்பாட்டில் இருந்த தேர் வகைகள் யாவை? தேர், நெடுந்தேர், கொடுவஞ்சித் தேர்
- காலாட்படை வகைகள் யாவை? வாள், வேல், வில் படை, தூசிப்படை, தார் படை, முன்னணிப்படை, கூழைப்படை
- படையின் இறுதியில் வரும் பாதுகாவற் படை எது? கூழைப்படை
- நிறைய தேர் வைத்திருந்த மன்னன் யார்? பல்தேர் இளஞ்சேட் சென்னி
- கடற்கொள்ளையர்களை முறியடித்த மன்னன்யார்? கடற்பிறக்கோட்டிய குட்டுவன்
- ஈழநாட்டின் மீது போரிட்டு வென்ற சோழ மன்னன் யார்? திருமாவளவன் [இரண்டாம் கரிகாற் சோழன்]
- சேர நாட்டின் தலைநகர் - வஞ்சி, கரூர்
- சேர நாட்டின் துறைமுகம் - தொண்டி
- சோழ நாட்டின் தலை நகரம் - உறையூர்
- சோழ நாட்டின் துறைமுகம் - பூம்புகார்
- சோழ நாட்டின் வடக்கிலும் வடமேற்கிலும் எந்நாடு இருந்ததாக புறப்பாடல் காட்டுகின்றது? ஈழன் ஆண்ட ஈழ நாடு
- சேர, பாண்டிய நாட்டின் எல்லையை வரையறுக்கும் நூல் எது? பெருந்தொகை
- சோழ நாட்டின் எல்லை எந்த நூலில் குறிக்கப்பட்டு உள்ளது? சோழ மண்டலச் சதகம்
- சேர நாட்டை ஆண்ட மரபினர் யாவர்? சேரலாதன் மரபினர், பொறையர் மரபினர்
- சேரலை ஆண்டவர்கள் சேரர்கள்.இதில் சேரல் என்பதன் பொருள்? மலை
- வஞ்சியைத் தலைமையகமாகக் கொண்டு ஆண்டவர்கள் எம்மரபினர்? பொறையர்கள்
திறனாய்வியல் வினா வங்கி - 2 [தமிழ்த் திறனாய்வு நூல்கள் சில]
- தொல்காப்பியக் கடலை எழுதியவர் - வ.சு.ப. மாணிக்கம்
- தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் - சோ. கந்தசாமி
- சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள் - ப. ஜீவானந்தம்
- சங்க இலக்கியத்தில் செடி, கொடி விளக்கம் - பி.எல்.சாமி
- சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் - பி.எல். சாமி
- சங்க இலக்கியத்தில் உவமை - ரா. சீனிவாசன்
- சங்க இலக்கியத்தில் கற்பனை - இரா. மாயாண்டி
- சங்க இலக்கியத்தில் நெய்தல் - முத்துக்கண்ணப்பர்
- சங்க இலக்கியத்தில் பாடாண் திணை - நா. செயராமன்
- சங்க இலக்கியத்தில் புறப்பொருள் - கு.வெ. பாலசுப்பிரமணியன்
- சங்க இலக்கியத்தில் சமூகவியல் - கு.வெ.பாலசுப்பிரமணியன்
- பழந்தமிழ் நூல்களில் உயிர் வகைகள் - செ. வேங்கடராம செட்டியார்
- தமிழர் வீரப் பண்பாடு - கதிர்மகாதேவன்
- சங்க கால ஔவையாரும் உலகப் பெண்பாற் புலவர்களும் - பெ.சு.மணி
- ஔவையாரும் நக்கீரரு - மு. கோவிந்தசாமி
- பரிபாடல் திறன் - இரா. சாரங்கபாணி
- திருமுருகாற்றுப்படைத் திறன் - கு. கோதண்டபாணி பிள்ளை
- குறுந்தொகைத் திறனாய்வு - சோ. ந. கந்தசாமி
- திருவள்ளுவர் - சோமசுந்தர பாரதியார்
- திருக்குறள் - அழகும் அமைப்பும் - ச. தண்டபாணி தேசிகர்
- திருக்குறளும் சங்க இலக்கியமும் - மு.வை. அரவிந்தன்
- திருக்குறளும் இந்திய அறநூல்களும் - க. த. திருநாவுக்கரசு
- திருக்குறள் நீதி இலக்கியம் - க.த.திருநாவுக்கரசு
- வள்ளுவரும் சாக்ரடீசும் - பி. ஶ்ரீ
- குறட்செல்வம் - ஒரு திறனாய்வு - குன்றக்குடி அடிகளார்
- காப்பிய புனைதிறன் - ச.வே.சுப்பிரமணியம்
- இளங்கோவின் இலக்கிய உத்திகள் - "
- சிலப்பதிகார ஆராய்ச்சி - ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
- மணிமேகலை அராய்ச்சி - "
- சீவகசிந்தாமணி ஆராய்ச்சி - "
- பெரியபுராண ஆராய்ச்சி - மா. இராசமாணிக்கனார்
- தமிழ்க்காப்பியங்களில் அவல வீரர்கள் - தா. ஏ. ஞானமூர்த்தி
- காப்பியத்திறன் - சோம. இளவரசு
- சிலம்பு வழிச் சிந்தனை - ம. ரா. போ. குருசாமி
- கம்பர் கவிநயம் - அ. கு. ஆதித்தர்
- கவி உலகில் கம்பன் - ச. து. சு. யோகி
- தசரதன் குறையும் கைகேயி நிறையும் - சோமசுந்தர பாரதியார்
- கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி - மு. ராகவ ஐயங்கார்
- சிற்றிலக்கியத் திறனாய்வு - ந. வீ. ஜெயரமன்
- ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை - அ. சீனிவாசராகவன்
திறனாய்வியல் வினா வங்கி-1
- 'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது.
- தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் நுணுக்கம்'
- தொல்காப்பியத்தில் திறனாய்வுக் கொள்கைகளாக இடம்பெறுபவை யாவை? நூலுக்குரிய 10 குற்றங்கள், 32 உத்திகள், செய்யுள் வழக்கு, செய்யுள் வழக்கு
- தமிழின் தொடக்க காலத்தின் திறனாய்வாளர்கள் யார்? உரையாசிரியர்கள்
- உரையாசிரியர்கள் உரையில் உள்ள திறனாய்வு முறைகள் யாவை? விதிமுறைத் திறனாய்வு, பாராட்டு முறைத் திறனாய்வு
- பழந்த்தமிழரின் திறனாய்வுக் கோட்பாடுகளை விளக்கும் கா. மீனாட்சிசுந்தரனார் நூல்? பழந்தமிழரின் சில திறனாய்வு நெறிகள் [ஐந்தாம் உலகத்தமிழ் மானாட்டு மலரில் எழுதப்பட்டுள்ள கட்டுரை]
- திறனாய்வுத்துறை எவ்வாறு வளர்ந்தது? மேனாட்டுத் தொடர்பால்
- திறனாய்வுத்துறையில் தமிழின் வழிகாட்டி நூல் எது? வ.வே.சு ஐயரின் கம்பராமாயண ரசனை [கம்ப ராமாயண எ ஸ்டடி] என்ற ஆங்கில நூல்
- திறனாய்வுத்துறையின் முன்னோடி யார்? மறைமலை அடிகள்
- மறைமலையடிகளின் சிறந்த ஆய்வுகள் யாவை? முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, சாகுந்தல நாடக ஆராய்ச்சி. பட்டினப்பாலை ஆராய்ச்சி
- மகாவித்வான் ர.ராகவ ஐயங்கார் இயற்றிய ஆராய்ச்சி நூல்கள் யாவை? பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, தித்தன், கோசர் குறித்த சிற்றாராய்ச்சி
- நெடுநல் வாடை ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்? கே. கோதண்டபாணி
- டி.கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய ஆய்வு நூல் எது? இதய ஒலி
- பேராசிரியர் ஆ.முத்துசிவன் எழுதிய திறனாய்வு நூல்கள் யாவை? கவிதை, அசோகவனம், அசலும் நகலும்
- அ.ச.ஞானசம்பந்தனின் திறனாய்வு நூல்கள் யாவை? இலக்கியக்கலை, இராவணன் மாட்சியும், வீழ்ச்சியும்
- மார்க்கபந்து சர்மாவின் மேனாட்டு ஆய்வு நோக்கில் அமைந்த நூல் எது? சிலப்பதிகார ரசனை
- டாக்டர் இராசமாணிக்கனார் எழுதிய ஆய்வு நூல்? பெரியபுராண ஆராய்ச்சி
- வெ. சு. சுப்பிரமணியாச்சாரியார் எழுதிய ஆய்வு நூல்? சிலப்பதிகார ஆராய்ச்சி
- மு.வ. எழுதிய ஆய்வு நூல்கள் யாவை? திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், ஓவச்செய்தி, மாதவி, கண்ணகி
- இலக்கியத் திறனாய்வின் சிறப்பினைக் காட்டும் மு.வ.வின் நூல்கள் யாவை? இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறன், இலக்கிய மரபு
- ரா.பி.சேதுப்பிள்ளையின் குறிப்பிடற்குரிய ஆய்வு நூல் எது? ஊரும் பேரும்
- முற்போக்கு சிந்தனையோடு வரலாற்று, மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்தவர் யார்? க. கைலாசபதி
- தலைசிறந்த இலங்கை இலக்கிய ஆராய்ச்சியாளர் யார்? க. கைலாசபதி
- இலக்கிய ஆய்விற்காக ஆராய்ச்சி என்ற இதழை நடத்தியவர் யார்? நா.வானமாமலை
- விஞ்ஞான சோசலிச விமர்சகர் யார்? நா.வானமாமலை
- நா. வானமாமலையின் ஆய்வுப் போக்கு எத்தகையது? தொல்பொருள், வரலாறு, மானிடவியல், சமூகவியல், அறிவியல் எனப்பன்முகத்தன்மை கொண்டது.
- க. நா. சு என அழைக்கப்படும் இலக்கியத் திறனாய்வளர் யார்? க.நா.சுப்பிரமணியம்
- க.நா.சுப்பிரமணியம் ஆசிரியராக இருந்த இதழ்கள் யாவை? இலக்கிய வட்டம், சூறாவளி, சந்திரோதயம், ராமபாணம்
- க.நா.சுவின் இலக்கிய திறனாய்வின் அடிப்படை யாவை? அழகியல், வடிவியல் அணுகுமுறை
- துருவன் என்ற புனைப்பெயரில் இலக்கிய விமர்சனம் செய்தவர் யார்? தி.க.சிவசங்கரன்
- சி.சு. செல்லப்பாவின் திறனாய்வு முறை யாது? ரசனைமுறை, முருகியல் முறை
- சி.சு. செல்லப்பாவின் ஆய்வு நூல்கள் யாவை? தமிழில் இலக்கிய விமர்சனம், தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது
- இலக்கிய விமர்சனம் என்ற நூல் மூலம் தமிழுக்குப் புதுத்திறனாய்வு சிந்தனைகளைத் தந்தவர் யார்? தொ.மு.சி. ரகுநாதன்
- தொ.மு.சி. ரகுநாதனின் திறனாய்வு நூல்கள் யாவை? பாரதியு ஷெல்லியும், பாரதி காலமும் கருத்தும், இளங்கோவடிகள் யார்?
- சிங்களம், வடமொழி, ஆங்கிலம், இலத்தீன் மொழிகளில் பயிற்சி உடைய இலக்கியத் திறனாய்வாளர் யார்? சோ. சிவபாத சுந்தரம்
- சோ. சிவபாத சுந்தரத்தின் ஆய்வு நூல்கள் யாவை? குடியியல், மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், ஒலிபரப்புக்கலை, கௌதமபுத்தர் அடிச்சுவட்டில், சேக்கிழார் அடிச்சுவட்டில்
- சாகித்ய அகாதெமி பரிசு வென்ற வல்லிக்கண்ணனின் நூல் எது? புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- வல்லிக்கண்ணனின் குறிப்பிடற்குரிய திறனாய்வு நூல்கள் யாவை? பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை, காலத்தின் குரல், முத்துக்குளிப்பு, தமிழில் சிறுபத்திரிகைகள்
- தமிழவனின் ஆய்வு நூல்கள் ? இருபதில் கவிதை, அமைப்பியல் வாதம்
- க. முத்துசாமியின் ஆய்வு நூல்கள் யாவை? சிலம்பில் அவலம், உலோச்சனார் பாடல்கள்
- அமைப்பியல் அணுகுமுறையில் இலக்கியங்களைத் திறனாய்வு செய்வதில் வல்லவர் யார்? க. பூர்ணச்சந்திரன்
- க. பூர்ணச்சந்திரன் இயற்றிய ஆய்வு நூல்கள் யாவை? அமைப்புமையவாதமும் பின் அமைப்புமையவாதமும், செய்தித்தொடர்பியல் கொள்கைகள், பத்திரிகை தலையங்கம் கருத்துரை, கவிதை மொழித்தகர்ப்பும் அமைப்பும்
- நவீன இலக்கிய இரட்டையர்களாக விளங்கிய திறனாய்வாளர்கள் யாவர்? சிட்டி. பெ. கோ. சிவபாத சுந்தரம், சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
- சிட்டி சுந்தரராஜன் எந்த இதழ் பரம்பரையைச் சேர்ந்தவர்? மணிக்கொடி
- ஆங்கிலத்தில் எழுதிய சிட்டி சுந்தரராஜனைத் தமிழில் எழுதத் தூண்டியவர் யார்? வ.ரா.
- 1930இல் தோன்றிய சர்ச்சைக்குரிய இலக்கிய விவாதம் என்ன? பாரதி மகாகவியா?
- சிட்டி பெ.கோ. சுந்தர ராஜனின் ஆய்வு நூல் எது? கண்ணன் என் கவி
- கண்ணன் என் கவியை சிட்டி யாருடன் இணைந்து எழுதியவர்? கு.ப.ரா
- சிட்டி தி.ஜ-வுடன் இணைந்து எழுதிய ஆய்வு நூல் யாது? நடந்தாய் வாழி காவேரி'
- சிட்டி பெ.சு. மணியுடன் இணைந்து இயற்றிய நூல் எது? அதிசயப் பிறவி வ.ரா
இலக்கிய இசங்கள் வினா வங்கி 2
- காந்தியை புறநிலை கருத்து முதல்வாதியாக குறிப்பிடுபவர் யார்? ந. பிச்சமூர்த்தி
- புதுக்கவிதைகளில் காந்தியத்தின் தாக்கம் எவ்வாறு உள்ளது? ஏற்பும், எதிர்விளைவும்
- "அத்தனைக்கும் மேலல்லோ அகிம்சை கதைபேசி
- வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்" என்றவர்? புதுமைப்பித்தன்
- இந்திய வரலாற்றுப் பதிவுகள் கொண்ட மு.மேத்தாவின் படைப்பு எது? தேச்ப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி
- காந்தியக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யாவர்? பாரதி, நாமக்கல் கவிஞர், அரங்க சீனிவாசன், இராய. சொக்கலிங்கம், சிந்துப் பாவலர், கவிமணி
- மு.வ.வின் நாவல் இலக்கியக் கொள்கை காந்தியத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற அறிஞர்? ந. பிச்சமுத்து
- காந்தியத்தாக்கம் உள்ள நாவல்கள் யாவை? கல்கியின் அலையோசை, அகிலனின் எங்கே போகிறோம், புதுவெள்ளம், நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் இராகங்கள்
- பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைவது எது? காந்தியத்தின் வெற்றிடம்
- பகுத்தறிவு வாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பெரியாரியம், சீர்திருத்தவாதம்
- பகுத்தறிவு இயக்கத்தின் கவிதைப் போர்வாள் எது? பாரதிதாசன் கவிதைகள்
- பகுத்தறிவுவாதம் வளர்ச்சி அடைய துணை நின்ற இதழ்கள் யாவை? காஞ்சி, ஹோம்லேண்ட்
- பகுத்தறிவு இயக்கத்திற்குக் களம் அமைத்துக் கொடுத்தவை யாவை? பெரியாரின் குடியரசு இதழ், கட்டுரைகள், நூல்கள்
- மனித மனத்தை ஆராயும் உளவியல் போக்கு யாது? பிராய்டிசம்
- பிராய்டிசத்தைத் தொடங்கி வைத்தவர் யார்? சிக்மன் ப்ராய்ட்
- பிராடு படைப்பை எவ்வாறு குறிப்பிடுகிறார்? பகல் கனவு, நனவிலி மனத்தின் வெளிப்பாடு
- தமிழில் பிராய்டிய போக்கில் அமைந்த படைப்புக்கள் யாவை? சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம், நகுலனின் நாய்கள், நினைவுப்பாதை, திஜ. வின் மோகமுள், உயிர்த்தேன், அம்மா வந்தாள், மரப்பசு, செம்பருத்தி, உயிர்த்தேன், ஜெயகாந்தனின் ரிஶி மூலம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், இலக்கணம் மீறிய கவிதை, ஒவ்வொரு கூரைக்கும் கீழே, இந்திரா பார்த்த சாரதியின் குருதிப்புனல், ஆதவனின் காகித மனிதர்கள், எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ, தஞ்சைப் பிரகாசின் மீனின் சிறகுகள்
- பிரெஞ்சு நாட்டுத் தத்துவ அறிஞர் ஜான்பால் ஸார்த்தரால் உருவாக்கப்பட்ட இயக்கம் எது? இருத்தலியல்
- நவீனத்துவத்தின் இறுதியான இசம் எது? இருத்தலியல்
- இருத்தலியலின் அடிப்படை என்ன? மனித வாழ்வின் சாராம்சத்தைக் கேள்வி கேட்பது, அதற்கு அர்த்த்மே இல்லை என்பதும்
- நான் என்னும் நினைப்பி உலகம், வெளி இரண்டிற்கும்தரையாக இருக்கிறது என்றவர் யார்? ஸார்த்தர்
- இருத்தலியலை முன்னெடுப்பதில் முக்கியமான படைப்பாளர்கள் யாவர்? ஆல்பர் காம்யு, சாமுவேல் பெக்கெட்
- இந்தியாவில் இருத்தலியலைக் கையாண்ட படைப்பு - பாதல் சார்த்தரின் நாடகங்கள்
- தமிழில் இருத்தியலியலைச் சார்ந்து எழுந்த இந்திரா பார்த்த சாரதியின் புதினங்கள் யாவை? திரைகளுக்கு அப்பால், வெந்து தணிந்த காடுகள், நிலமென்னும் நல்லாள், பயணம், மாயமான் வேட்டை
- இருத்தலியலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நாடகங்கள்? இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப், போர்வை போர்த்திய உடல்கள், மழை
- இருத்தலியல்வாதத்திற்குச் சான்றாக அமையும் பிற படைப்புகள்? சாரு நிவேதாவின் 'எக்ஸிடெஷியலிஸமும் பேன்சி பனியனும், தமிழவனின் ஏற்கன்வே சொல்லப்பட்ட மனிதர்கள், ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ
- அமைப்பியலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை? அமைப்பியம், அமைப்பு மையவாதம்
- அமைப்பியலை உருவாக்கியவர் யார்? மொழியியல் அறிஞரான பெர்டினாண்ட் சசூர்
- இலக்கியப் பிரதியை உடைத்து மொழியியல் அடிப்படையில் அனுகும் முறையினை செய்யும் இசம் எது? அமைப்பியல்
- அமைப்பியலில் இருந்து பிறந்த இசம் யாது? பின் அமைப்பியல்
- பின் நவீனம் என்ற வார்த்தையை முதன்முதலில் கையாண்டவர் யார்? சோப்மன் என்ற ஓவியர்
- பின் நவீனத்திற்கு அடித்தளம் அமைத்தது எது? டெரிதாவின் நிர்-நிர்மானம்
- ஒரு பிரதியில் இருக்கும் அர்த்தங்கள் பன்மைத்தன்மை வாய்ந்தவை என்பது யாருடைய முடிவு? டெரிடா [தெரிதா]
- ஒரு படைப்பிற்குள் ஆசிரியனின் உள்நோக்கங்கள், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை கண்டறிவது யாது? நிர்-நிர்மானம் கோட்பாடு
- குறிப்பிடத்தகுந்த பின்-நவீனத்துவ வாதிகள்? டெரிடா, மிஷல், ஃபூக்கோ, தாமஸ் பிஞ்சன், கட்டாரி, லாக் லெக்கான்
- மேஜிக்கல் ரியலிசம் தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மாய எதார்த்தவாதம்
- குறிப்பிடத்தகுந்த பின் - நவீனத்துவவாதிகள் யாவர்? ஜார்ஜ் லூயி போர்ஹே, காப்ரியேல் கார்ஸியா, குந்தர் கிராஸ், ஜான்ஃபெனல்ஸ்
- தமிழில் குறிப்பிடற்குரிய பின்-நவீனத்துவப் படைப்புகள் யாவை? எஸ்.ராமகிருஷ்ண்னின் படைப்புகள், சு. வெங்கடேசனின் காவல் கோட்டம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம், கொற்றவை
திங்கள், 21 செப்டம்பர், 2020
இலக்கிய இசங்கள் வினா வங்கி 1
- அழகியல் கோட்பாடு தோன்றிய காலம் எது? 19ஆம் நூற்றாண்டு
- அழகியல் கோட்பாடை உருவாக்கியவர் யார்? கார்ட்டன்
- தமிழில் அழகியல் படைப்புகள் யாவை? மு.வ. அகிலன், நா.பார்த்தசாரதி
- தமிழில் செவ்வியல் கோட்பாட்டை உருவாக்கியோர் யாவர்? வேதநாயகம் பிள்ளை
- இயற்பண்பியல் கோட்பாடு தோற்றம் பெற்ற காலம் எது? 19ஆம் நூற்,
- இயற்பண்பியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
- இயற்பண்பியலைத் தொடங்கி வைத்தவர் யார்? பால்சாக்
- தமிழில் இயற்பண்பியலைக் கையாண்ட படைப்பாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் யார்? ஜெயகாந்தன்
- உள்ளதை உள்ளவாரே காட்டுவது? நடப்பியல்
- நடப்பியல் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? எதார்த்தவாதம்
- நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட பிர்ஞ்சு நாட்டவர்? மாப்பசான்
- நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட ரஷ்ய நாட்டவர்? லியோ டால்ஸ்டாய்
- நடப்பியலைச் சிறப்பாகக் கையாண்ட அமெரிக்கர்? ஹென் ஜேம்ஸ்
- தமிழில் எதார்த்தவாதத்தைச் சிறப்பாகக் கையாண்ட படைப்பாளர்கள்? புதுமைப்பித்தன், ஜெயகந்தன், பொன்னீலன், செல்வராஜ், சு, சமுத்திரம், பூமணி, மேலாண்மை பொன்னுசாமி
- சோசலிச நடப்பியல் எங்கு தோன்றியது? ரஷ்யா
- சோசலிச நடப்பியல் எங்கு தோற்றம் பெற்றது.
- சோசலிச நடப்பியலுக்குச் சிறந்த சான்று? கார்க்கியின் தாய்
- தமிழில் உள்ள சோசலிச நடப்பியல் புதினங்கள்? சிதம்பர ரகுநாதனின் பஞ்சும் பசியும், கனேசலிங்கத்தின் செவ்வானம், டி. செல்வராஜின் மலரும் சருகும், தேனீர், சின்னப்பபாரதியின் தாகம், பொன்னீலனின் கரிசல், சு,சமுத்திரத்தின் ஊருக்குள் ஒரு புரட்சி
- சோச்லிச நடப்பியல் கவிதைகளைப் படைப்போர்? பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார், இன்குலாப்,
- வெளிப்பாட்டியல் எப்போது தோற்றம் பெற்றது? 20 ஆம் நூற்றாண்டு
- தமிழில் யாருடைய சிறுகதை, புதினம் வெளிப்பாட்டியலைக் கொண்டுள்ளது? இந்திரா பார்த்த சாரதி
- தமிழில் வெளிப்பாட்டியலைக் கையாண்ட கவிஞர்கள் யாவர்? அப்துல் ரகுமான், அபி. சிற்பி, வைரமுத்து
- கருத்துப்பதிவியல் இசம் தோன்றக்காரணமாக அமைந்தது எது? பிளடி மோனட் என்பவரின் ஓவியம்
- கருத்துப்பதிவியல் தோற்றம் பெற்ற காலம்? கி.பி. 19ஆம் நூற். பிற்பகுதி
- தமிழில் கருத்துப்பதிவியல் கூறுகள் உள்ள தொன்மை இலக்கியங்கள் யாவை? சங்க இலக்கிய தன்னுணர்ச்சிப் பாக்கள்
- தன்னுணர்ச்சி கோட்பாட்டைக் கையாண்டுள்ள தமிழ்க் கவிஞர்கள் யாவர்? மேத்தா, சிற்பி, குருக்கரம்பை சண்முகம், வைரமுத்து
- புனைவியல் தோற்றம் பெற்ற காலம் எது? 18ஆம் நூற்.
- புனைவியலைக் கையாண்ட ஆங்கிலக் கவிஞர்கள்? வேர்ட்ஸ்வொர்த், சாமுவேல் டெய்லர், பைரன், ஷெல்லி, கீட்ஸ்
- தமிழில் புனைவியலைக் கையாண்ட படைப்பாளர்கள்? கல்கி, அசோக மித்திரன், சாண்டில்யன்,விக்கிரமன், ஜெக சிற்பியன், அகிலன், நா.பார்த்தசாரதி
- மீம்மெய்மையியலின் வேறு பெயர்கள் யாவை? மிகை எதார்த்தவாதம், அடிமன இயல்பியல்
- மீம்மெய்மையியல் எப்போது தோற்றம் பெற்றது? 1920
- மீம்மெய்மையியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
- மீம்மெய்மையியலைச் சிறப்பாகக் கையாண்ட உலகக்கவிஞர்கள்?எலியட், எஸ்.ரா. பவுண்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ்
- தமிழில் மீம்மெய்மையியலுக்குச் சான்றாகும் புதினம்? தந்திரபூமி
- குறியீட்டியலைக் கையாண்ட தமிழின் பண்டை இலக்கியம்? சங்க அகப்பாக்கள்
- குறியீட்டியல் எங்கு தோற்றம் பெற்றது? பிரான்ஸ்
- குறீட்டியல் எப்போது தோற்றம் பெற்றது? 1885
- படிமவியலோடு நெருங்கிய தொடர்புடைய கவிதை வகை? ஹைக்கூ
- படிமவியலை முதலில் அறிமுகம் செய்தவர்? எஸ்.ரா. பவுண்ட்
- படிமவியல் எங்கு தோன்றியது? அமெரிக்கா
- படிமவியல் தோற்றம் பெற்ற காலம்? 1912 -1917க்குள்
- தமிழில் குறிப்பிடத்தகுந்த படிமக்கவிஞர்கள்? நா. காமராசன், இன்குலாப், தணிகைச்செல்வம், மீரா, அபி, சிற்பி, அப்துல் ரகுமான்
- உயர்ந்த எண்ணங்களை, எண்ணம் கொண்ட தலைவனைக்கொண்டு உருவாகும் படைப்புக்களில் கையாளப்படும் கோட்பாடு? குறிக்கோளியல்
- குறிக்கோளியலின் வேறு பெயர்? கருத்து முதல் வாதம்
- தமிழில் குறிக்கோளியலுக்கு மாதிரியாக அமைந்த பண்டை இலக்கியங்கள்? சங்க இலக்கியம், திருக்குள், பெருக்காப்பியங்கள்
- காரல் மார்க்சின் கருத்துக்கோவையாக அமையும் இசம்? மார்க்சியம்
- மார்க்சியத்தைத் திறம்படக்கையாண்ட தமிழ்க் கவிஞர்கள் யாவர்? பாரதியார், பட்டுக்கோட்டையார்
- தமிழின் குறிப்பிடத் தகுந்த மார்க்சிய கவிஞர்கள்? சிற்பி, மீரா, தமிழன்பன், மேத்தா, காமராசன், இன்குலாப், தமிழொளி, சக்திக்கனல், புவியரசன்
- தமிழின் முதல் மார்க்சிய நாவல் எது? தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும்
- குறிப்பிடத்தகுந்த தமிழ் மார்க்சிய நாவல்கள்? அகிலனின் பால்மரக்காடினிலே, பொன்னீலனின் கரிசல், புதிய தரிசனங்கள்,
ஈழத்தமிழ் படைப்பாளர்கள்
- சங்ககால இலங்கைப்படைப்பாளர் யார்? ஈழத்துப் பூந்தேவனார்
- ஈழத்துப் பூந்தேவனார் இயற்றிய பாடல்கள் எத்தனை? ஏழு பாடல்கள் [அகம். 88, 231, 307, குறுந்தொகை 182, 343, 360, நற்றிணை 366]
- பனைமரம் பற்றி புதிய நோக்கில் இயற்றப்பட்ட ஈழ படைப்பு எது? காசினாத புலவர் தல புராணம் [சுப்பையா]
- சுப்பையா பாடிய வேறு புராணம் எது? கனகி புராணம்
- நீதிமன்றம் குறித்து உருவாக்கப்பட்ட ஈழத்து சிற்றிலக்கியம் எது? கோட்டுப்புராணம் [வே.இராமலிங்கம்]
- இலங்கையில் இயற்றப்பட்ட முதல் புதினம் யாது? தி.த. சரவண முத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி
- இலங்கையில் முதல் புதினம் வெளிவந்த ஆண்டு? 1895
- இலன்கையின் முதல் அறிவியல் நாவல் எது? அந்தரத்தீவு
- அந்தரத்தீவின் ஆசிரியர் யார்? கே. எஸ். மகேசன்
- யாழ்ப்பாணத்தில் பிறந்த பதிப்பு முதல்வர் யார்? சி.வை.தாமோதரம்பிள்ளை
- இலங்கையின் இலக்கிய விளக்கு எனப் போற்றப்படுபவர் யார்? ஆறுமுக நாவலர்
- ஆறுமுக நாவலரின் தந்தை யார்? கந்தப்பிள்ளை
- கந்தப்பிள்ளை இயற்றிய நாடகங்கள் எத்தனை 20
- கந்தப்பிள்ளையால் இயற்றப்பட்ட நாடகங்களில் புகழ்பெற்றன யாவை? இராமவிலாசம், சந்திர காசம்
- கோவலன் நாடகத்தை இயற்றியவர் யார்? இணுவிற் சின்னத்தம்பி
- இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோரின் முதல் கவிதைத் தொகுப்பு எது? துருவச் சுவடுகள்
- துருவச்சுவடுகள் எங்கிருந்து வெளிவந்தது? நார்வேயில் உள்ள சுவடுகள் பதிப்பகத்தில் இருந்து
- புலம்பெயர்ந்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் குறிப்பிடத்தகுந்த பெண் படைப்பு எது? மறையாத மறுபாதி
- புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளர்கள் சஞ்சிகையில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு எது? மண்ணைத்தேடும் மனங்கள்
- மண்ணைத் தேடும் மனங்கள் வெளிவந்த ஆண்டு? 1986
- ஈழத்துப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைத்தொகுப்பு எது? புது உலகம் எமை நோக்கி
- இலங்கையில் புனைகதை இலக்கியத்தை வளர்த்தவர்கள் - சிவபாத சுந்தரம், டோமினிக் ஜீவா, டேனியல், எச். பொன்னுத்துரை, செ. கணேசலிங்கம்
உலகத்தமிழ் மாநாடு, உலக இணைய மாநாடு
மொழியியல் வினா வங்கி
- முதன் முதலில் மொழியியற் கருத்துக்களை முன்வைத்தவர் யார்? மாகறல் கார்த்திகேய முதலியார்
- தமிழ் மொழி நூலை எழுதியவர் பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார்
- முனைவர் மு. வ. எழுதிய மொழியியல் நூல்கள் யாவை? மொழி நூல், மொழி வரலாறு, மொழியியற் கட்டுரைகள்
- பரிதிமாற் கலைஞர் இயற்றிய மொழியியல் நூல்? தமிழ் மொழியின் வரலாறு
- ரா.பி.சேதுப்பிள்ளை இயற்றிய மொழி சார் நூல்? சொல்லும் அவற்றின் குறிப்பீடும்
- தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் மொழியியல் நூல் - தமிழ் மொழி வரலாறு
- சோமலே இயற்றிய மொழியியல் நூல் - செட்டிநாடும் தமிழும்
- தமிழில் வெளிவந்த கிளைமொழி பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல்? செட்டிநாடும் தமிழும்
- முனைவர் அகத்திய லிங்கம் எழுதிய மொழி வரலாற்று நூல்? உலக மொழிகள்
- உலகச்செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ் என்ற நூலைப் படைத்தவர்? வ.சே. குழந்தைச் சாமி
- தமிழ்ச் செம்மொழி ஆவணம் என்ற நூலைத் தொகுத்தளித்தவர் யார்? சாலினி இளந்திரையன்
- செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள் என்ற நூலை வெளியிட்டவர்? கலைஞர் மு, கருணாநிதி
- மொழியியல் நோக்கில் பதிற்றுப்பத்தினை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்? ச. அகத்தியலிங்கம்
- ச. அகஸ்திய லிங்கம் எழுதிய மொழியியல் நூல்கள்? உலக மொழியியல், தொல்காப்பிய மொழியியல், language of Tamil inscription, Bibliography of dravidian Linguistics, Generative Grammar of tamil
- Dravidian Nouns- Acomparative study, Aspect of Linguistic devolopment in Tamil உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்? செ.வை.சண்முகம்
- பேச்சொலியன் என்ற நூலை இயற்றியவர்? க. முருகையன்
- மொழியியல் கலைச்சொல் அகராதியை இயற்றியவர்? சு. சக்திவேல்
- மொழியியலில் மாற்றிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? பொற்கோ
- பொற்கோவின் பிற மொழியியல் நூல்கள்? திராவிட மொழி ஒப்பியல், மொழியியல் நோக்கில் மொழி நடை ஆய்வு, குடகு மொழியின் உயிரெழுத்துக்கள்
- தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கருணாகரனின் மொழியியல் நூலகள் யாவை? மொழியியல், சமுதாய மொழியியல், மொழி திட்டமிடுதல், ஆக்கத்தமிழ்
- சு. ராசாராம் எழுதிய மொழியியல் நூல்கள் யாவை? மொழியும் மொழியியலும், ஒலியியல்
- Language of Tamil inscription என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? சே.வை. சண்முகம்
- The Language of kaliththokai என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? க.முருகையன்
- Generative Grammar of Rajapallayam Telugus என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? ந. குமார சாமிராஜா
- A descriptive study of Toda Dialect என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? சு.சக்திவேல்
- A Generative Grammar of modern Literary Tamil என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? இரா. கோதண்ட ராமன்
- Descriptive study of dialect of the kollimlai tribes என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? கி. கிருபாகரன்
- A constructive analysis of Tamil and kannada - A Transformational approch என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் யார்? சு. ராசாராம்
தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றோர்
- கவிஞர் சுரதா - 1978
- எஸ்.டி. சுந்தரம் - 1979
- கவிஞர் வாணிதாசன் - 1980
- பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் - 1981
- கவிஞர் புத்தனேரி சுப்ரமணியம் - 1982
- கவிஞர் வகாப் - 1983
- கவிஞர் நா. காமராசன் - 1984
- கவிஞர் உலகநாதன் - 1985
- கவிஞர் மு. மேத்தா - 1986
- கவிஞர் முடியரசன் - 1987
- கவிஞர் பொன்னிவளவன் - 1988
- கவிஞர் அப்துல் ரகுமன் - 1989
- 21 கவிஞர்கள் [பாவேந்தர் நூற்றாண்டு] - 1990
- 21 கவிஞர்கள் [பாவேந்திர் நூற்றாண்டு] - 1991
- கவிஞர் முத்துலிங்கம் - 1992
- புலவர் பெ. அ. இளஞ்செழியன் - 1993
- கவிஞர் கரு நாகராசன் - 1994
- கவிஞர் மறைமலையான் - 1995
- கவிஞர் வைரமுத்து - 1996
- முனைவர் சரளா இராசகோபாலன் - 1997
- முரசு நெடுமாறன் [மலேசியா] - 1998
- சிலம்பொலி சு. செல்லப்பன் - 1999
- பாவலர் மணிவேலன் - 2000
- கவிஞர் மணிமொழி - 2001
- முனைவர் ச.சு. இராமர் இளங்கோ - 2002
- பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி - 2003
- பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் - 2004
- விருது வழங்கபடவில்லை - 2005
- முனைவர் கா. செல்லப்பன் - 2006
- திருச்சி. எம். எஸ். வெங்கடாச்சலம் - 2007
- தமிழச்சி தங்கப்பண்டியன் - 2008
- கவிஞர் தமிழ்தாசன் - 2009
- முனைவர் இரா இளவரசு - 2010
- கவிஞர் ஏர்வாடி க. இராதாகிருஷ்ணன் - 2011
- முன்னவர் சே. நா. கந்தசாமி - 2012
- முன்னவர் இராதா செல்லப்பன் - 2013
பக்தி இலக்கிய வினா வங்கி 4
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள்
2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்?
பாணபத்திரர்
3. திருவாலவுடையார் இயற்றியது - சேரமானுக்கு இயற்றிய திருமுக பாசுரம்
4. திருமுக பாசுர காலம் எது? கி. பி. ஆறாம் நூற்றாண்டு
5. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன? புனிதவதியார்
6. காரைக்காலம்மையாரின் கணவர் பெயர்? பரமதத்தன்
7. காரைக்கலம்மையார் எங்கு முத்தி பெற்றார்? திருவாலங்காடு
8. காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்து சென்ற இடம் எது? கயிலை
9. காரைக்கால் அம்மையாரின் காலம் - ஆறாம் நூற்றாண்டு
10. 63 நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அடியவர் யார்?
காரைக்கலம்மையார்
11. சைவ சமய பக்திப் பாடல்களில் பழமையானவை யாருடைய பாடல்கள்?
காரைக்கலம்மையார் [திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்,
திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி]
12. கல்லாடர் இயற்றிய நூல் ? திருக்கண்ணப்பர் திருமறம்
13. நக்கீர தேவநாயனார் காலம் எது? கி.பி. ஆறாம் நூற்றாண்டு
14. திருமுருகாற்றுப்படை நீங்கலாக நக்கீரர் இயற்றிய நூல்கள் - 9
15. நக்கீரதேவ நாயனாரும் சங்க கால நக்கீரரும் வேறு எனக் கூறியவர் -
உ.வே.சாமிநாத ஐயர்
16. கபிலதேவ நாயனார் காலம் - கி.பி. 11ஆம் நூற்றாண்டு
17. கபில தேவர் இயற்றிய நூல்கள் எத்தனை? 3 [மூத்தநாயனார் திருவிருட்டை
மணிமாலை, சிவ பெருமான் திருவந்தாதி, சிவபெருமான் திருவிரட்டை
மணிமாலை
18. மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை - யாரைப் பற்றியது? விநாயகர்
19. பரண தேவநாயனாரின் காலம் ? கி.பி 10 ஆம் நூற்.
20. பரண தேவர் நூல் எது? சிவபெருமான் திருவந்தாதி
21. அதிரா அடிகளின் காலம் என்ன? கி.பி. 7ஆம் நூற்
22. மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவையின் ஆசிரியர் யார்?
அதிரா அடிகள்
23. சிவபெருமான் மும்மணிக்கோவை பாடியவர் யார்?எம்பெருமானடிகள்
24. எம்பெருமானடிகளின் வேறு பெயர் என்ன? இளம்பெருமானடிகள்
25. ஐயடிகள் காடவர் கோன் எம்மரபைச் சேர்ந்தவர்? பல்லவர்
26. சேத்திர வெண்பா பாடியவர் யார்? ஐயடிகள்
27. சேரமான் பெருமாள் நாயனாரின் இயற்பெயர்? பெருமாக்கோதையார்
28. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய நூல்கள் எத்தனை? 3 [திருக்கைலாய
ஞான உலா, பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை
29. பட்டினத்தடிகளின் இயற்பெயர் யாது? திருவெண்காடர்
30. பட்டினத்தடிகளின் காலம் - 10 ஆம் நூற்.
31. பதினோரு திருமுறைகளைத் தொகுத்தளித்தவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
32. யாருடைய வேண்டுகோளை ஏற்று நம்பி திருமுறைகளைத் தொகுத்தார்?
இராஜராஜ சோழன்
33. தமிழ் வியாசர் எனப்படுபவர் யார்? நம்பியாண்டார் நம்பி
34. நம்பியாண்டார் நம்பியின் ஊர் எது? திருநாரையூர்
35. பதினோராம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பியின் எத்தனை நூல்கள்
இணைக்கப்பட்டு உள்ளன? 10
36. 63 நாயன்மாரின் வரலாற்றைத் தொகுத்து உருவாக்கப்பட்ட புராணம் எது?
பெரிய புராணம்
37. பெரிய புராணத்தின் ஆசிரியர் - சேக்கிழார்
38. சேக்கிழார் பெரிய புராணத்திற்கு இட்ட பெயர்? திருத்தொண்டர் புராணம்
39. சேக்கிழாரின் இயற்பெயர் என்ன? அருண்மொழித் தேவர்
40. சேக்கிழார் பெற்ற பட்டம் என்ன? உத்தமச்சோழ பல்லவன்
41. சேக்கிழாரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு ஆகும்.
42. சேக்கிழாரை கல்வெட்டு எவ்வாறு குறிக்கிறது? இராமத்தேவர்
43. தொண்டர் சீர் பரவுவார் எனப்பட்டவர் யார்? சேக்கிழார்
44. நாயன்மார் வாழ்வை அடிப்படையாக வைத்து சுந்தரர் பாடிய நூல்?
திருத்தொண்டர் தொகை [11 பாடல்கள் கொண்டது]
45. நம்பியாண்டார் நம்பி இயற்றிய சைவ அடியார் குறித்த நூல் எது?
திருத்தொண்டர் திருவந்தாதி [89 பாடல்கள்]
46. பெரிய புராணம் சார்பு நூல் என்றும், தொகை விரி என்றும்
குறிக்கப்படுகின்றது.
47. பெரிய புராணத்தை சேக்கிழார் மாக்கதை என்று குறிக்கின்றார்.
48. பெரிய புராணத்திற்கு 'உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்தவர் யார்?
இறைவன்
49. பெரிய புராணத்திற்கு காப்பியத்தலைவன் சுந்தரர் என்றவர் யார்? பெரிய
புராணத்திற்கு உரை எழுதிய சி. கே. சுப்பிரமணிய முதலியார்
50. பெரிய புராணம் 13 சருக்கங்களையும், 4286 விருத்தப்பாக்களையும்
கொண்டிருக்கும்.
51. பெரிய புராணம் 63 தனியடியாரையும், 7 தொகையடியாரையும் பாடும்
ஞாயிறு, 20 செப்டம்பர், 2020
பக்தி இலக்கிய வினா வங்கி -3
- எட்டாம் திருமுறை யாருடைய பாடல்களை உள்ளடக்கியது? மாணிக்க வாசகர்
- எட்டாம் திருமுறையில் உள்ள பாடல்கள் யாவை? திருவாசகம், திருக்கோவையார்
- மாணிக்கவாசகரின் ஊர் எது? திருவாதவூர்
- மாணிக்கவாசகரின் காலம்? ஒன்பதாம் நூற்றாண்டு
- மாணிக்க வாசகர் எந்த மன்னனிடம் அமைச்சராக இருந்தார்? அரிமர்த்த பாண்டியன்
- அமைச்சராக மாணிக்கவாசகர் பெற்ற பட்டம்? தென்னவன் பிரம்மராயன்
- மாணிக்கவாசகரின் வேறு பெயர்? வாதவூரார்
- மாணிக்கவாசகருக்கு இறைவன் ஞானாசிரியனாக வந்து ஞானம் தந்த இடம்? திருப்பெருந்துறையின் குருந்த மரத்தடி
- இறைவன் நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி திருவிளையாடல் செய்தது யாருக்காக? மாணிக்கவாசகர்
- மாணிக்கவாசகர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? 32
- திருவாசகத்தின் முதல் பகுதி - சிவபுராணம்
- திருவாசகத்தின் இறுதிப்பகுதி - ஆச்சோப்பதிகம்
- திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 659
- முதல் கோவை இலக்கியம் எது? திருக்கோவையார்
- திருக்கோவையாரில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 400
- திருக்கோவையார் எந்தப் பாவால் ஆனது? கட்டளைக்கலித்துறை
- திருக்கோவையாருக்கு உரை எழுதியவர் யார்? பேராசிரியர்
- 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' - என்றவர் யார்? ஜி.யு.போப்
- திருவாசகத்தை 'ஊண் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே' என்றவர்? வள்ளலார்
- 'மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிப்பு எய்தி' என திருவாசகத்தால் எழும் மெய்ப்பாட்டைப் புகழ்பவர் யார்? சிவப்பிரகாசர்
- மாணிக்க வாசகரின் மார்க்கம் என்ன? சன்மார்க்கம் [ஞான நெறி]
- சன்மார்க்கம் என்பது என்ன? ஆசிரியர் - மாணவர் உறவு
- ஒன்பதாம் திருமுறையைப் பாடியோர் - ஒன்பதின்மர் [திருமளிகைத்தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், பூந்துருத்தி காடவ நம்பி, கண்டராதிதர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சோதிராயர்]
- ஒன்பதாம் திருமுறையில் உள்ளவை? திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
- ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பதிகங்கள் உள்ளன? 29
- ஒன்பதாம் திருமுறையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 301
- ஒன்பதாம் திருமுறையில் அதிகம் சிறப்பிக்கப்படும் ஊர்? சிதம்பரம்
- ஒன்பதாம் திருமுறையின் காலம்? கி.பி. 10/11 நூற்றாண்டு
- திருமளிகைத்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடி உள்ளார்? 4 [45 படல்]
- கருவூர்த்தேவர் எத்தனைப் பதிகங்கள் பாடினார்? 10 [105 பாடல்]
- சேந்தனார் பாடிய மொத்தப் பதிகங்கள் எத்தனை? 4 [47 பாடல்]
- பூந்துருத்தி காடவ நம்பி பாடிய பதிகங்கள் எத்தனை? 2 [12 பாடல்கள்]
- சாளரப்பண் என்ற புதிய பண்ணைப் பாடியவர் யார்? பூந்துருத்தி காடவ நம்பி
- கண்டராதித்தர் பாடிய பாடல்கள் - 10 [தில்லை பற்றியவை]
- வேணாட்டடிகள் பாடிய பாடல்கள் - 10 [சிதம்பரம் பற்றியவை]
- திருவாலி அமுதனார் எத்தனைப் பதிகங்கள் பாடினார்?4 [42 பாடல்கள்]
- புருடோத்தம நம்பி எத்தனைப் பதிகங்கள் பாடினார்? 2 [22 பாடல்கள்]
- சோதிராயர் எத்தனைப் பாடல்களைப் பாடினார்? 10
- பத்தாம் திருமுறையில் இடம் பெறுபவை? திருமந்திரம்
- திருமந்திரத்தை இயற்றியவர்? திருமூலர்
- திருமுறையில் உள்ள இயல்கள் எத்தனை? 9
- திருமுறையில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? 232
- திருமந்திரத்தில் உள்ள பாக்கள் எத்தனை? 3000
- 'அன்பே சிவம்' என்றவர் யார்? திருமூலர்
- 'ஒன்றே குலம் ஒருவனே தேவன் '- இது இடம்பெற்றுள்ள நூல்? திருமந்திரம்
- பதினோராம் திருமுறையை இயற்றியோர் - பன்னிருவர் [திருவாலவுடையார், காரைக்கால் அம்மையார், கல்லாட தேவ நாயனார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரண தேவ நாயணார், அதிரா அடிகள், எம்பெருமான் அடிகள், ஐயடிகள் கடவர்கோன், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி]
- பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்கள் எத்தனை? 40
- பதினோராம் திருமுறை இயற்றியோரில் இறைவன் என நம்பப்படுபவர்? திருவாலவுடையார்
- பன்னிரெண்டாம் திருமுறையாக விளங்கும் நூல்? பெரிய புராணம்
- பெரிய புராண ஆசிரியர்? சேக்கிழார்
பக்தி இலக்கிய வினா வங்கி 2
- 4,5,6 திருமுறைகளைப் பாடியவர் யார்? திருநாவுக்கரசர்
- திருனாவுக்கரசர் திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? திரு நேரிசை, திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம்
- திருநாவுக்கரசர் பிறந்த ஊர்? திருமுனைப்பாடி நாட்டு திருவாமூர்
- திருநாவுக்கரசரின் பெற்றோபெயர் யாது? புகழனார், மாதினியார்
- திருநாவுக்கரசரின் இயற்பெயர் யாது? மருள்நீக்கியார்
- பெற்றோரும், தமக்கைக் கணவர் இறந்ததாலும் நாவுக்கரசர் எம்மதத்திற்கு மாறினார்? சமணம்
- சமணத்தில் நாவுக்கரசரின் பெயர்? தருமசேனர்
- நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவம் மாறக்காரண்மாய் இருந்த நோய்? சூலை நோய்
- நாவுக்கரை சைவத்திற்கு மாற்றிய அவரது சகோதரி பெயர்? திலகவதியார்
- சூலை நீங்க நாவுக்கரசர் பாடிய முதல் பதிகம் 'கூற்றாயினவாறு விலக்கிலீர்'
- நாவுக்கரசர் முதல் பதிகத்தை எங்குப் பாடினார்? திருவதிகை வீரட்டானம்
- உழவாரப்படை கொண்டு கோவில் தோறும் உழப்பணி செய்தவர்? நாவுக்கரசர்
- நாவுக்கரசர் இறைவனை என்ன மார்கத்தில் வணங்கினார்? தாச மார்க்கம்
- தாசமார்க்கம் என்பது - தன்னை பணியாளாகவும் இறைவனை தலைவனாக எண்ணிப்பாடுவது.
- தாசமார்க்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சரியை
- நாவுக்கரசரின் சிறப்புப்பெயர்கள் - வாகீசர், தாண்டக வேந்தன்
- நாவுக்கரசர் சம்பந்தாரால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?அப்பர்
- நாவுக்கரசர் பாடியதாக நம்பப்படும் பாடல்கள் எத்தனை? 49000
- கிடைக்ககூடிய நாவுக்கரசர் பாடல்கள் - 3099
- திருனாவுக்கரசர் பாடல்கள் எத்தனைப் பதிகங்களில் உள்ளன்? 313
- நாவுக்கரசரின் காலம் - கி. பி. ஏழாம் நூற்றாண்டு
- தேவார மூவரில் அதிக காலம் வாழ்ந்தவர் யார்? நாவுக்கரசர்[81 ஆண்டு]
- திருனாவுக்கர்சர் பாம்பு தீண்டி இறந்த யாருடைய மகனை உயிருட எழச்செய்தார்? அப்பூதியடிகள்
- நாவுக்கரசர் எந்த ஆற்றில் மூழ்கி எழுந்து கயிலையைக் கண்டார்? திருவையாறு
- நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதால் அவரைத் துன்புறுத்திய மன்னன் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
- சங்கம் என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? நாவுக்கரசர்
- ஏழாம் திருமுறையைப் பாடியவர் யார்? சுந்தரர்
- சுந்தரரின் இயற்பெயர் யாது? ஆரூரர்
- சுந்தரரைத் தத்தெடுத்த குறுநில மன்னர் யார்? நரசிங்க முனையரையர்
- சுந்தரர் எங்கு பிறந்தார்? திருமுனைப்பாடி நாட்டு திருனாவலூர்
- சுந்தரரின் பெற்றோர் யார்? சடையனார், இசைஞானியார்
- சுந்தரர் யாருடைய மகளை மணக்கவிருக்கையில் தடுத்தாளப்பட்டார்? புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார்
- சுந்தரை இறைவனை எவ்வாறு ஏசினார்? பித்தனே
- இறைவனை வன்மையாகத் திட்டியதால் பெற்ற பெயர்? வன்தொண்டர்
- சுந்தரரின் வேறு பெயர்கள்? வன்தொண்டர், தம்பிரான் தோழர், சேரமான் தோழர், திருநாவலூரார்
- சுந்தரரின் முதல் பதிகம் எவ்வாறு தொடங்கும்? "பித்தா"
- சுந்தரர் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? திருப்பாட்டு
- பெரிய புராணத்திற்கு முதல் நூலாகக் கொள்ளப்படும் சுந்தரரின் நூல்? திருத்தொண்டர் தொகை
- சுந்தரர் எத்தனைப் பாடல்கள் பாடியதாக நம்பப்படுகிறது? 38000
- சுந்தரர் பாடல்களில் இன்று கிடைக்கும் பாடல் எண்ணிக்கை? 1026
- சுந்தரர் பாடல்களில் இடம்பெற்றுள்ள பண்கள்? 18
- சுந்தரரின் காலம்? 7,8 ஆம் நூற்றாண்டு
- சுந்தரரின் மனைவியர்? பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார்
- சுந்தரர் வாழ்ந்த காலம் ? 18 ஆண்டுகள்
- சுந்தரர் இரு கண் பார்வை இழந்தவருக்குப் பார்வை வரச்செய்தது எங்கு? காஞ்சி, திருவாரூர்
- சுந்தரருக்காக இரண்டாகப் பிளந்து ஓடிய ஆறு எது? காவிரி
- சுந்தரரின் மார்க்கம் என்ன? சகமார்க்கம் [யோக நெறி அலல்து தோழமை]
- சுந்தரர் முதலை உண்ட சிறுவ்னை மீட்ட ஊர் எது? அவிநாசி
- சுந்தரர் எந்ததளத்தை மறந்ததால் சிவன் 'என்னை மறந்தனையோ?' எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது? மழப்பாடி
- சுந்தரர் வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் செல்கையில் உடன் சென்றவர் யார்? சேரமான் பெருமாள் நாயனார்.
பக்தி இலக்கிய வினா வங்கி 1
- களப்பிரர்களை எதிர்த்துப் போராடி விரட்டிய பாண்டிய மன்னன் யார்? கடுங்கோன்
- களப்பிரர்களை எதிர்த்துப் போராடி விரட்டிய பல்லவ மன்னன் யார்? சிம்ம விஷ்ணு
- களப்பிரர் காலத்தைத் தொடர்ந்து வந்த பல்லவர்கள் எத்தனை நூற்றாண்டு ஆதிக்கம் செலுத்தினர்? மூன்று
- பல்லவர் காலம் என்பது - கி.பி. 6 முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
- பல்லவர்களை 'மரபுவழி துலங்கா மரபினர்' என்றவர் யார்? கே.கே,பிள்ளை
- பக்தி இலக்கிய காலம் காலம் என்பது - பல்லவர் காலம்
- பக்திப்பாவாக மலர்ச்சி அடைந்த பா எது? விருத்தப்பா
- சைவ வைணவ சமயங்களை ஆதரித்த மன்னர்கள் யாவர்? பல்லவர்கள், பாண்டியர்கள்
- சைவ சமயப் பெரியார்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? நாயன்மார்
- வைணவ சமயப் பெரியார்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஆழ்வார்கள்
- சமண, பௌத்தர்கள் வலியுறுத்துவது? புலனடக்கம், உண்ணா நோன்பு, இன்ப வெறுப்பு
- ஆழ்வார்களும், நாயன்மார்களும் போற்றியது? பக்தி
- சைவ சமய வழிபடு கடவுள் யார்? சிவன்
- சிவம் என்பதன் பொருள் என்ன? செம்மை, நன்மை
- சிவனுக்கு 78 மாடக்கோவில் கட்டியவர் யார்? சோழன் கோச்செங்கணான்
- சிவனுக்குக் கோச்செங்கணான் கோயில் கட்டியதைத் தேவாரத்தில் குறிப்பிட்டவர் யார்? திருநாவுக்கரசர்
- சோழன் கோச்செங்கணான் 70 கோயில் கட்டியதைக் குறிப்பிட்ட வைணவர்? திருமங்கையழ்வார்
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் சமணத்திலிருந்து எம்மதத்திற்கு மாறினார்? சைவம்
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவனைச் சைவத்திற்கு மாற்றியவர் யார்? திருநாவுக்கரசர்
- தீவிர சமணராக இருந்து சைவம் தழுவிய சைவ அடியார்? திருநாவுக்கரசர்
- சைவ, சமண மக்களிடையே பூசல் ஏற்பட வித்திட்டவர்? மகேந்திரவர்மன்
- மகேந்திரவர்மன் எந்த இடத்தில் சமண பள்ளிகளை இடித்து கோயில் கட்டினான்? திருப்பாதிரிப் புலியூர்
- சைவசமய பக்திப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? பன்னிரு திருமுறை
- பன்னிரு திருமுறையை எத்தனைப் புலவர்கள் பாடினர்? 27
- இறைவனைப் பற்றி சைவ அடியார்கள் பாடிய பாடல்கள் - திருமுறைகள்
- பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்? நம்பியாண்டார் நம்பி
- முதல் மூன்று திருமுறைகளை இயற்றியவர்? திருஞானசம்பந்தர்
- ஞானசம்பந்தரின் இயற்பெயர்? ஆளுடைய பிள்ளை
- சம்பந்தர் பிறந்த ஊர் எது? சீர்காழி
- சம்பந்தரின் பெற்றோர் யாவர்? சிவபாத இருதயர், பகவதியார்
- சம்பந்தரின் வேறு பெயர்கள் யாவை? ஆளுடையபிள்ளை, காழி வள்ளல், பரசமய கோளரி
- பரசமய கோளரி என்பதன் பொருள்? பர-பிற, கோளரி - சிங்கம் [பிற சமயத்தவருக்குச் சிங்கம் போன்றவர்]
- ஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்றவர் யார்? ஆதிசங்கரர்
- ஆதிசங்கர் ஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்று குறிப்பிடும் நூல்? சௌந்தரிய லஹரி
- மூன்று வயதில் உமாதேவியால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர்? சம்பந்தர்
- திருஞான சம்பந்தரின் முதல் பதிகம் எது? தோடுடைய செவியன்
- சம்பந்தரை 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்றவர் யார்? சுந்தரர்[திருத்தொண்டர் தொகை]
- முதல் மூன்று நாயன்மார் இயற்றிய ஏழு திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தேவாரம்
- தேவாரத்தின் மற்றொரு பெயர் யாது? திருக்கடைக் காப்பு
- சம்பந்தர் பாடிய பாடல்கள் எத்தனை என நம்பப்படுகின்றது? 16000
- கிடைக்கின்ற ஞான சம்பந்தரின் பாடல்கள்? 4168
- தேவாரம் எத்தனைப் பதிகங்களைக் கொண்டமைகின்றது? 383
- சம்பந்தர் பாடிய புதுமையான இசை? யாழ்முரிப் பண்
- சம்பந்தரின் காலம் எது? கி.பி. ஏழாம் நூற்றாண்டு
- சம்பந்தர் எத்தனைத் தளங்களுக்குச் சென்று வழிபட்டார்? 22
- இறைவனிடமிருந்து முத்துச் சிவிகை பெற்றவர்? சம்பந்தர்
- சம்பந்தருடன் உடன் பயணித்தவர் யார்? திருநீலகண்ட யாழ்ப்பாணர்
- சம்பந்தர் எத்தனை பண்களில் பாடினார்? 23
- சம்பந்தர் இறையருளால் முத்துச்சிவிகை பெற்ற இடம்? திருவாயிலறத்துறை
- சம்பந்தர் இறையருளால் பொற்றாளம் பெற்ற இடம்? திருக்கோலக்கா
- சம்பந்தர் இறையருளால் முத்துப்பந்தர் பெற்ற இடம்? பட்டீஸ்வரம்
- சம்பந்தர் இறையருளால் பொற்கிழி பெற்ற இடம்? திருவாவடுதுறை
- சம்பந்தர் இறையருளால் படிக்காசு பெற்ற இடம்? திருவீழிமிழலை
- சம்பந்தர் திருமறைக்காட்டில் நிகழ்த்திய அற்புதம்? மூடிய கோவில் கதவுகளைப் பாடித் திறக்கச்செய்தார்
- சம்பந்தர் மழவன் மகளில் இளம்பிள்ளைவாதத்தை நீக்கிய இடம் எது? திருப்பாச்சிலாச்சிரமம்
- சம்பந்தர் பாம்பு விடத்தை நீக்கியவர் யார்? திருமருகல்
- ஆண் பனையைப் பெண் பனையாக்கியவர் யார்? திருவோத்தூர்
- சம்பந்தர் சமணரை அணல் வாதம், புனல் வாதத்தில் வென்றவர் யார்? மதுரை
- கூன்பாண்டியனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர் - சம்பந்தர்
- கூன்பாண்டியர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற அவர் பெயர் எவ்வாறு ஆனது? நின்றசீர் நெடுமாறன்
- சம்பந்தர் தன்னை வாதத்திற்கு அழைத்த யாரது தலையைக் கொய்தார்? புத்தநந்தி
- சம்பந்தர் சாம்பலில் இருந்து உயிர்த்தெழச்செய்த பெண் யார்? பூம்பாவை
- பூம்பாவைத் திருப்பதிகம் இறுதி அடி? 'காணாதே போதியோ பூம்பாவாய்'
- சம்பந்தர் பதிகங்ளில் இராவணன் கயிலை மலையை எடுத்துத் துன்புற்றதைச் சுட்டும் பாடல் எத்தனையாவது பாடல் ? 8
- சம்பந்தர் தம் எல்லாப் பதிகங்களில் மாலும் அயனும் காண இயலாத பெருமையை எந்தப்பாடலில் சுட்டுகிறார்? 9
- சம்பந்தர் தம் பதிகங்களில் எத்தனையாவது சமண, பௌத்த சமயம் தரும் துன்பத்தைப் பாடும் பாடல்? 10
- சம்பந்தர் எல்லா பதிக பதினோராவது பாடலில் குறிப்பிடும் கருத்து யாது? தன் பெயரையும், ஊரையும் குறிப்பிடுகிறார்
- இறுதிப்பாடல் காப்பாக அமைவதால் திருக்காப்பு எனப்படும் நூல்? தேவாரம்
- சம்பந்தர் இறைவனை எம்மார்க்கத்தில் வழிபட்டார்? சத்புத்திர மார்க்கம்
- சத்புத்திர மார்க்கம் என்பதன் பொருள் யாது? தந்தை மகன் உறவு
- சத்புத்திர செயலாக்க நெறி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிரியை
- சம்பந்தர் எந்த வயதில் இறைவனுடன் கலந்தார்? 16
- சம்பந்தர் தன் மனைவியுடன் இறைவனுடன் கலந்த நாள்? வைகாசி மூல நாள் [பெருமணநல்லூர் - ஊர்]
- தேவாரத்தில் வரும் சொல்லணிகள் யாவை? யமகம், திரிபு, ஏகபாதம்
- துன்பம் நீங்க இறைவனை வேண்டிப் பாடும் சம்பந்தரின் பதிகமாக சைவர்கள் கொள்ளவது? கோளறு பதிகம்
சங்க இலக்கிய வினா வங்கி - சங்க இலக்கியத்தில் சில செய்திகள்
- அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால்
- நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் என வௌவால் கனவு காணும் அறிவியல் உண்மையைச் சுட்டும் இலக்கியம் நற்றிணை
- வௌவாலை நற்றிணை எவ்வாறு சுட்டுகிறது? வாவல்
- நெடும்பல்லியத்தை என்னும் பெண்பாற் புலவரின் பெயர் உணர்த்துவது? நீண்ட, பல, இசைக்கருவிகள் இசைப்பவள்
- வினை முடித்துத் திரும்பும் தலைவனை ஓரேர் உழவனுடன் ஒப்பிடும் இலக்கியம்- குறுந்தொகை
- பகைவர் தோல்வியைக் குறிக்க புல் மேய்வது போல குப்புற விழச் செய்வதைப் 'பகைவர் புல் ஆர்க' என்னும் அடி இடம்பெற்றுள்ள இலக்கியம் ஐங்குறுநூறு
- பண்டையத்தமிழர் திருமண முறைகள் குறித்த அகநானூற்றின் பாடலைப் பாடியவர் - நல்லாவூர்கிழார்
- திணை உண்ண வந்த யானை குறத்தியின் பாடல் இனிமையில் மயங்கி உறங்கியதாகக் கூறும் இலக்கியம் - அகநானூறு
- அகநானூறு குறிக்கும் தேர்தல் முறை - குடவோலை முறை
- செல்வக்கடுங்கோ வாழியாதன் தன்னை புரோசு மயக்கி எனத் தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டான்
- ஓகத்தூர் என்பதன் பொருள்- ஓத்திர நெல் மிகுதியாக விளையும் ஊர்
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பொருள் ஆட்டத்தில் சிறந்தவன், கவர்ந்து செல்லப்பட்ட வருடை ஆடுகளை மீட்டுக் கொணர்ந்தமையால்
- பதிற்றுப்பத்தில் பாடல் முடிவில் துறை, வண்ணம், தூக்கு, பாடல் பெயர் குறிக்கப்பட்டுள்ளன.
- அந்தாதியின் முன்னோடி இலக்கியங்கள் - ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
- பதிற்றுப்பத்தை பிற்காலத்து நூல் என்றவர்? கே. என்.சிவராசப்பிள்ளை
- பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பத்துப் பாடலின் இறுதியில் அமைந்திருப்பது? பதிகம்
- பதிற்றுப்பத்துப் பதிகங்களின் போக்கு மெய்க்கீர்த்திகளின் போக்கை ஒத்துள்ளதாகக் கூறியவர்? தமிழண்ணல்
- பதிற்றுப்பத்தின் சிறப்புப் பெயர் என்ன? இரும்புக் கடலை
- கைம்பெண்ணை புறநானூறு எவ்வாறு அழைக்கிறது? பருத்திப் பெண்டீர் [ பருத்தி நூற்கும் பெண்]
- பரிபாடலில் குறிக்கப்படும் எண் பெயர்கள் 0 - பாழ்,1/2 - பாகு, 9 - தொண்டு ["பாழ் என கால் என பாகு என ஒன்று என .....தொண்டு என"]
- உன்ன மரம் தழைத்தால் போரில் வெற்றிகிட்டும் எனக் கூறும் இலக்கியம்? பதிற்றுப்பத்து
- ஏறுதழுவல் குறித்துப் பேசும் இலக்கியம்? கலித்தொகை [முல்லைக்கலி]
- "என்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த தேர் அன்னோன்" யார்? அதியமான் நெடுமானஞ்சி [ஔவை]
- "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று உலகத்து இயற்கை" என்றவர் - இடைக்குன்றூர் கிழார்
- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றவர் கனியன் பூங்குன்றனார்
- "பாலொடு வந்து கூழொடு பெயரும் /ஆடுடை இடைமகன்" என பண்டமாற்று முறை குறித்துக்கூறும் பாடல் - குறுந்தொகை
- நண்டின் கண் வேம்பின் அரும்புபோல இருக்கும் எனக் கூறும் நூல் -ஐங்குறுநூறு
- தன் பார்ப்பைத் தானே திண்ணும் விலங்காக ஐங்குறு நூறில் குறிக்கப்படும் விலங்கு - முதலை
- ஐங்குறுநூறில் அந்தாதித்தொடையில் அமைந்த பத்து- தொண்டிப்பத்து
- இமயம், குமரிக்கு இடைப்பட்ட இடத்தை ஆட்சி செய்தவன் - இமயவரம்பன்
சனி, 19 செப்டம்பர், 2020
காப்பிய வினா வங்கி 2
- சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? 3
- சிலப்பதிகாரக் காதைகள் 30
- மணிமேகையின் காதைகள் எத்தனை? 30
- சீவகசிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் ? 13
- சீவகசிந்தாமணியில் உள்ள பாடல்கள் 3145
- வளையாபதியின் பாடல்கள் 72
- சூளாமணியின் சருக்கங்கள் 12
- சூளாமணியின் பாடல்கள் 2131
- நீலகேசியின் சருக்கங்கள் 10
- நீலகேசியின் பாடல்கள் 94
- கம்பராமாயண படலங்கள் 113 [118 என்பாரும் உளர்]
- கம்ப ராமாயண பாடல்கள் 10484
- பெருந்தேவனார் பாரதத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் 1180
- பெரியபுராண சருக்கங்கள் 13
- பெரியபுராண பாடல்கள் 4286
- உத்தர ராமாயண படலங்கள் 17
- உத்தர ராமாயண பாடல்கள் 1528
- நளவெண்பாவின் காண்டங்கள் 3
- நளவெண்பாவின் பாடல்கள் 424
- வில்லிபாரத பருவங்கள் 10
- வில்லிபாரத பாடல்கள் 4351
- கந்தபுராண காண்டங்கள் 6
- கந்தபுராண பாடல்கள் 10345
- உதயண குமார காவிய காண்டங்கள் 6
- உதயண குமார காவிய பாடல்கள் 369
- நாககுமார காவிய சருக்கங்கள் 5
- நாககுமார காவிய பாடல்கள் 170
- திருவிளையாடற் புராண பெரும்பிரிவு 3
- திருவிளையாடற் புராண உட்பிரிவு 64
- திருவிளையாடற் புராண பாடல்கள் 3363
- சீறாபுராண காண்டங்கள் 3
- சீறாபுராண படலங்கள் 92
- சீறாபுராண பாடல்கள் 5027
- தேம்பாவணியின் காண்டங்கள் 3
- தேம்பாவணியின் படலங்கள் 36
- தேம்பாவணியின் பாடல்கள் 3615
- இரட்சணிய யாத்திரிகத்தின் காண்டங்கள் 4
- இரட்சணிய யாத்திரிகத்தின் படலங்கள் 47
- இரட்சணிய யாத்திரிகத்தின் பாடல்கள் 3800
- இரகுவம்ச காண்டங்கள் 3
- இரகுவம்ச படலங்கள் 27
- இரகுவம்ச பாடல்கள் 2444
பதினெண் கீழ்க்கணக்கு வினா வங்கி 1
- பதினெண் கீழ்க்கணக்கு- இதில் உள்ள கணக்கு என்பதன் பொருள் யாது? நூல்
- கீழ் என்பதன் பொருள் யாது? குறைந்த அடி அளவு கொண்டவை
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை 'அடிநிமிர்பில்லாச் செய்யுள்' தொகுதி எனக் குறிப்பது? பன்னிரு பாட்டியல்
- அடி குறைந்த கெழ்கணக்கு நூல்கள் அம்மை என்னும் அழகு பெற்றுவரும் எனக் கூறும் நூல்? தொல்காப்பியம்
- பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்கை முன்வைத்தவர்கள்? பேராசிரியர், மயிலைநாதர்
- அறம் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை? 11
- புறம் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை ? 1
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை? 6
- கருத்துக்கள் எண்ணிக்கை அடிப்படையில் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? 4[நாண்மணிக்கடிகை, திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம்
- பாடல் எண்ணிக்கையால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? 8 [பழமொழியைப் பழமொழி நானூறு எனக் கொண்டால் 9]
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் முந்திய நூல்? திருக்குறள்
- திருக்குறள் எந்தப்பாவால் ஆனது? குறள் வெண்பா
- ஒரு திருக்குறளில் இடம்பெறும் சீர்கள் எத்தனை? 7
- திருக்குறளை இயற்றியவர்? திருவள்ளுவர்
- திருவள்ளுவரின் வேறு பெயர்கள் யாவை? முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர்
- திருவள்ளுவரின் பெற்றோர், மனைவி குறித்துக் கூறும் நூல்? விநோதரசமஞ்சரி
- திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 133
- திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன? 1330
- திருக்குறளில் எத்தனைப் பிரிவுகள் உள்ளன? 3 [அறம், பொருள், இன்பம்]
- அறத்துப்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 38
- பொருள்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 70
- காமத்துப்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 25
- விவிலியத்திற்கு அடுத்து உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல் எது? திருக்குறள்
- திருக்குறளின் வேறு பெயர்கள் யாவை? தமிழ்மறை, பொதுமறை, முப்பால், பொய்யாமொழி, தெய்வநூல், வாயுறை வாழ்த்து, உத்திரவாழ்த்து
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யாவர்? தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், [நிரல்படுத்தப்பட்டது]
- பதின்மரில் உரை கிடைக்கும் ஐவர் யாவர்? மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர்
- ஐவர் உரையையும் இணைத்து உரை வளம் யாரால் வெளியிடப்பட்டது? தருமை ஆதீனம்
- உரைக்கொத்து என்னும் பெயரில் ஆங்கில மொழி பெயர்ப்புடன் திருக்குறள் நூல் வெளியிட்ட அமைப்பு எது? திருப்பனந்தாள் காசி மடம்
- திருக்குறளுக்குப் பாடல் இயற்றியவர்களுள் காலத்தால் முந்தியவர் யார்? பரிமேலழகர்
- திருக்குறளுக்குக் கலைஞர் இயற்றிய காட்சிப்படுத்தலுடன் கூடிய உரை நூல் எது? குறளோவியம்
- திருக்குறளைப் புகழும் பாடற் தொகுப்பு எது? திருவள்ளுவமாலை
- "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்" - யார் கூற்று? ஔவை
- திருவள்ளுவ மாலையில் வள்ளுவத்தைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்? 53
- திருக்குறள் எந்த நூற்றாண்டில் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறாது? கி.பி. 4 [இதற்கு சான்று இல்லை]
- திருக்குறளில் காலமாக இராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுவது? கி.மு.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு
- திருக்குறளின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு எனக் குறிப்பவர் யார்? மறைமலையடிகள்
- திருக்குறள் ஆறாம் நூற்றாண்டினது எனக்கூறுபவர் யார்? வையாபுரி பிள்ளை
- வள்ளுவரின் காலமாக தமிழக அரசு கணிப்பது? கி.மு. 31
- நாலடியாரின் வேறு பெயர் என்ன? நாலடி நானூறு, வேளாண் வேதம்
- நாலடியாரில் எத்தனைப்பாடல்கள் உள்ளன? 400
- நாலடியாரைத் தொகுத்தவர் யார்? பதுமனார்
- நாலடியாரின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்? பதுமனார்
- நாலடியார் எத்தனைப் பால்களாகப் பகுக்கப்பட்டுள்ளது? அறம், பொருள், இன்பம் [12இயல்கள்]
- நாளடியாரில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 40
- நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? ஜி.யு.போப்
- நாலடியாரின் காலம் எது? கி.பி 7ஆம் நூற்றாண்டு
- நாலடியாரின் காலத்தைக் கணிக்க உதவுவது எது? பெருமுத்திரையர்கள் பற்றிய குறிப்பு
- எத்தனை சமண முனிவர்களில் தப்பியவை நாலடியார் என நம்பப்படுகிறது? 8000 சமண முனிவர்கள்
- நாலடியாரை மேற்கோளாகக் கையாண்ட உரையாசிரியர்கள் யாவர்? பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார்
- சமண முனிவர் நக்கீரரால் நாலடியார் இயற்றப்படதாகக் கூறும் நூல் எது? யாப்பருங்கல உரை [இதற்கு சான்று இல்லை. யாரும் இக்கருத்தை ஏற்கவில்லை]
சங்க இலக்கிய வினா வங்கி 4: பத்துப்பாட்டு[ஆற்றுப்படை அல்லாதவை]
- முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்? நப்பூதனார்
- முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது? 103
- முல்லைப்பாட்டு ஆசிரியரின் ஊர் எது? காவிரிப்பூம்பட்டினம்
- முல்லைப்பாட்டு பெயர்க்காரணம் என்ன? முல்லைத் திணையைப் பாடுவது
- முல்லைப்பாட்டின் வேறு பெயர்? முல்லை
- நெஞ்சாற்றுப்படை எனப்படும் நூல் எது? முல்லைப்பாட்டு
- முல்லைப்பாட்டில் திருமாலின் எந்த அவதாரம் காட்டப்படும்? வாமனன்
- யானையைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்திய மொழியாக முல்லைப்பாட்டுக் கூறும் மொழி எது? வடமொழி
- தலைவன் உறங்கும் இடத்திற்குக் காவலாக பேச இயலாதவரை அமர்த்தியதைக் கூறும் நூல்? முல்லைப்பாட்டு
- பாசறையில் பெண்கள் பணி செய்தமையைக் கூறும் இலக்கியம்? முல்லைப்பாட்டு
- குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்? கபிலர்
- குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள அடிகள் எத்தனை? 261
- குறிஞ்சிப்பாட்டு எழுந்ததன் நோக்கம் என்ன? ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவிக்க.
- குறிஞ்சிப்பாட்டு எழுந்த நோக்கம் குறித்துக் கூறும் உரையாசிரியர் யார்? நச்சினார்க்கினியர்
- குறிஞ்சிப்பாட்டின் மற்றொரு பெயர் யாது? பெருங்குறிஞ்சி
- குறிஞ்சிப்பாட்டை பெருங்குறிஞ்சி என்பவர் யார்? நச்சினார்க்கினியர்
- குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர்கள் எத்தனை? 99
- குறிஞ்சிப்பாட்டு 99 மலர்களை எத்தனை அடிகளில் கூறுகிறது? 34
- 'கபிலர் இயற்கையை வர்ணிப்பதில் உலகிலேயே சிறந்தவர் ஆகின்றார்' எனக் கூறியவர் யார்? தனிநாயக அடிகள்
- குறிஞ்சிப்பாட்டிற்கு ஆய்வுரை செய்தோர் யாவர்? எஸ்.ஆர்.மார்க்க பந்து சர்மா, தமிழண்ணல்
- குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள புணர்ச்சி வகைகள்? களிறுதரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி
- கோவை இலக்கியம் தோன்ற வித்தாக அமைந்த நூல்? குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலையை இயற்றியவர் யார்? கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பட்டினப்பாலை எத்தனை அடிகளைக் கொண்டது? 301
- பட்டினப்பாலையில் ஆசிரியப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 138
- பட்டினப்பாலையில் வஞ்சிப்பாவால் ஆன அடிகள் எத்தனை? 163
- பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன? வஞ்சி நெடும்பாட்டு
- பட்டினப்பாலையை வஞ்சிப்பா எனக்குறிப்பவர் யார்? இளம்பூரணர்
- பட்டினப்பாலையில் சிறப்பிக்கப்படும் மன்னன் யார்? கரிகாற்சோழன்
- பட்டினப்பாலையில் அகப்பொருள் கூறும் அடிகள் எத்தனை? 6
- பழந்தமிழர் வணிக அறம், கடல் வாணிகம், துறைமுகச் செயல்பாடு குறித்துக்கூறும் நூல் எது? பட்டினப்பாலை
- பட்டினப்பாலைக்கு சிறந்த ஆய்வுரை எழுதியோர் யாவர்? மறைமலையடிகள், இராகவையங்கார [சாமி சிதம்பரனார் உரையுள்ளது]
- பட்டினப்பாலையைப் பாடியதற்காக உருத்திரங்கண்ணனுக்கு, கரிகாற் பெருவளத்தான் அளித்த பரிசு என்ன? பதினாறு நூறாயிரம் பொற்காசு
- மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் யார்? மாங்குடி மருதனார்
- மாங்குடி மருதன் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? மதுரைக்காஞ்சிப் புலவர், காஞ்சிப் புலவனார்
- மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்? பாண்டியன் நெடுஞ்செழியன்
- மதுரைக்காஞ்சியின் பாடல் அடிகள் எத்தனை? 782
- மதுரைக்காஞ்சியின் மையப்பொருள் என்ன? நிலையாமை
- மதுரைக்காஞ்சி சிறப்புப் பெயர் என்ன? காஞ்சிப்பாட்டு[காஞ்சித்திணை], கூடற்றமிழ்
- மதுரையின் வணிக செயல்பாடுகளைக் கூறுவது? மதுரைக்காஞ்சி
- மதுரைக்காஞ்சியில் நிலையாமை குறித்துப் பேசும் பாடலடிகள் எத்தனை? 428
- தொல்காப்பிய காஞ்சி விளக்கப்பட்டு எனக் குறிக்கப்படுவது எது? மதுரைக்காஞ்சி
- 'ஆறு கிடந்தன்ன அகன் நெடுந்தெரு' என மதுரை நகரத் தெரு குறித்துக் கூறும் நூல் எது? மதுரைக்காஞ்சி
- மதுரை அல்லங்காடியில் எழும் ஓசைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது? கடற் பறவைகளின் ஓசை
- நெடுநல்வாடையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
- நெடுநல் வாடையின் பாட்டுடைத் தலைவனாகக் குறிக்கப்படுபவர் யார்? பாண்டிய நெடுஞ்செழியன்[இது முடிந்த முடிவு அல்ல. இதனைப் புற நூல் என்போர் கருத்து. ஆனால் பலர் இதனை அக நூல் என்றே கூறுகின்றனர். அதனாலே இது அகப்புற நூல் எனப்படுகிறது]
- நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது? 188
- நெடுநல் வாடையை 'சிற்பப்பாட்டு' எனச்சிறப்பித்தவர்? தமிழண்ணல்
- 'நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம். நக்கீரர் கண்ட சுரங்கம். தமிழ்ச்சுரங்கம்' என நெடுநல் வாடையைப் போற்றியவர்? திரு.வி.க.
- நெடுநல்வாடைக்குக் கோதண்ட பாணி இயற்றிய உரையின் பெயர் யாது? புனையா ஓவியம்
- நெடுநல் வாடைக்கு உரை செய்தோர்? கோதண்டபாணி, செ. வெங்கடாச்சலச் செட்டியார்
சங்க இலக்கிய வினாடி வினா - 3: பத்துப்பாட்டு [ஆற்றுப்படை]
- ஆற்றுப்படை இலக்கணம் கூறும் நூல் ? தொல்காப்பியம் [பு.திணையியல்]
- அற்றுப்படுத்துவோர் யார் யார்? கூத்தர், பாணர், பொருநர், விறலி
- ஆற்றுப்படையில் மிக நீண்ட நூல் எது? மலைபடுகடாம் [ 583]
- ஆற்றுப்படையில் சிறிய நூல் எது? பொருநராற்றுப்படை [248]
- ஆற்றுப்படையின் [பத்துப்பாட்டின்] கடவுள் வாழ்த்து? முருகாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் யார்? நக்கீரர்
- திருமுருகாற்றுப்படையின் அடிகள் எத்தனை? 317
- திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர்? முருகு, புலவராற்றுப்படை
- அற்றுப்படுத்தப்படும் தலைவனின் பெயரால் அமைந்த நூல் எது? திருமுருகாற்றுப்படை
- பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள பத்துப்பாட்டு நூல் எது? திருமுருகாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படையின் தலைவன் யார்? முருகன்
- திருமுருகாற்றுப்படை உருவானது குறித்த செவிவழி செய்தி யாது? நக்கீரரைப் புடைத்துத் திண்ண கற்கிமுகி பூதம் சிறைவைக்க அதனிடமிருந்து காக்க முருகனிடம் வேண்டுவது.
- ஒருவரைப்போல வேடமிட்டுப் பாடும் கலைஞர் யார்? பொருநர்
- பொருநர்கள் எத்தனை வகைப்படுவர்? 2[ஏர்க்களம் பாடுபவர், போர்க்களம் பாடுபவர்]
- பரணி பாடும் கலைஞர் யார்? பொருநர்
- பொருநராற்றுப்படையில் குறிக்கப்படும் புலவர்கள் எவற்றைப் பாடுவர்? போர்க்களம் பாடும் பொருநர்
- பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? கரிகாற்பெருவளத்தான்
- பொருநராற்றுப்படையின் ஆசிரியர் யார்? முடத்தாமக்கண்ணியார்
- பொருநராற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது? 248
- ஆசிரியப்பாவோடு வஞ்சியடிகளும் விரவப்பெற்ற ஆற்றுப்படை நூல் எது? பொருநராற்றுப்படை
- பொருநராற்ருப்படையில் எந்தப் போரின் வெற்றி குறிப்பிடப்பட்டுள்ளது? வெண்ணிப் போர்
- தாய்வயிற்றில் இருக்கும்போதே அரசு ஏறிய மன்னன் யார்? கரிகால் பெருவளத்தான்
- பொருநராற்றுப்படையில் பெண்ணின் பாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள உவமை யாது? ஓடிக்கலைத்த நாயின் நாக்கு
- சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
- சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் யார்? நல்லூர் நத்தத்தனார்
- சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளைக் கொண்டது? 269
- பண் பாடுவோ எவ்வாறு அழைக்கப்படுவர்? பாணர்
- பாணார் எத்தனை வகைப்படுவர்? 3 [இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்]
- யாழ்ப்பாணர் எத்தனை வகைப்படுவர்? 2[பேரியாழ்ப் பாணர், சிறிய யாழ்ப்பாணர்]
- சிறுபாணாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படும் பாணர்? சிறுபாண்ர்
- கடையெழு வள்ளல்களின் கொடைத்திறம் பாடும் ஆற்றுப்படை எது? சிறுபாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படையில் இடம்பெரும் ஊர்கள்? வஞ்சி, உறையூர், மதுரை, ஆமூர், வேலூர், மாவிலங்கை
- இமயமலையில் வில் பொறித்த குட்டுவன் வரலாறு கூறும் நூல் எது? சிறுபாணாற்றுப்படை
- "தமிழ்னிலை பெற்ற தாங்கரும் மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" - என மதுரையைப் போற்றும் நூல்? சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணற்றுப்படையின் ஆசிரியர் யார்? கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பெரும்பாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவன் யார்? இளந்திரையன்
- பெரும்பாணற்றுப்படை எத்தனை அடிகள் கொண்டது? 500
- ஐந்நில மக்களின் இயல்பு, விருந்தோம்பல் பேசும் நூல்? பெரும்பாணாறு
- கலங்கரை விளக்கம் குறித்து பேசும் ஆற்றுபடை நூல் யாது? பெரும்பாணாற்றுப்படை [ நீர்ப்பாயல் துறையில் அமைக்கப்பட்டுள்ளது]
- பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படும் ஊர்? காஞ்சி
- மலைபடுகடாமின் ஆசிரியர் யார்? பெருங்குன்றூர் கௌசிகனார்
- மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்? நன்னன்
- மலைபடுகடாமின் பாடல் அடிகள் எத்தனை? 583
- மலைபடுகடாமில் ஆற்றுப்படுத்தப் படும் கலைஞர்? கூத்தர்
- மலைபடுகடாமின் வேறு பெயர்? கூத்தராற்றுப்படை
- மலைபடுகடாம் என பெயர் வரக்காரணம்? மலையில் எழும் ஓசைகளைப் பாடுவதால்
- மலைபடுகடாமில் மலையும், அருவியும் எதனால் உவமிக்கப்படுகிறது? மலை - யானை, அருவி - யானையின் மதநீர்
- கடாம் என்பதன் பொருள் என்ன? ஓசை
- மலைபடுகடாமில் எத்தனை வகையான ஓசைச் சுட்டப்படுகிறது? 20
- இசை மருத்துவம் பற்றிக் கூறும் ஆற்றுப்படை நூல் எது? மலைபடுகடாம்
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...