- அரசன் கோ என்று அழைக்கப்பட்டான்.
- இளவரசன் எவ்வாறு அழைக்கப்பட்டான்? இளங்கோ
- நிலையான புகழைப் பெற்ற மன்னன் அரசன் அழைக்கப்பட்டான்? மன்னன்
- உயர்ந்த நிலையை எட்டியவனை எவ்வாறு அழைத்தனர்? வேந்தன்
- பல வெற்றிகளைப் பெற்றுக் குறுநில மன்னர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவன் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கொற்றவன்
- பேரரசனுக்கு ஒப்பானவன் யார்? கொற்றவன்
- மன்னனின் ஆட்சியாண்டு அவ்வாறு கணக்கிடப்படுகிறது? மன்னன் முடிசூட்டிய நாளிலிருந்து
- மன்னனுக்குரிய சிறப்புச் சின்னங்கள் யாவை? முடி, கொடி, வெண் கொற்றக்குடை, முரசு
- சங்ககாலத்தில் எத்தகைய வாரிசுமுறை பின்பற்றப்பட்டது? தந்தை வழித் தாய முறை
- இளம்வயதில் அரசாட்சி பெற்ற மன்னர்கள் - கரிகாற் சோழன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்
- சங்ககால நிர்வாகத் தலைமையகம் எது? அரசவை
- அரசவையின் வேறு பெயர்கள் யாவை? இருக்கை, ஓலக்கம், வேந்தவை
- அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?ஆலோசகர்கள், காவிதிமாக்கள்
- அரசர்கள் கலந்தாலோசிக்க இருந்த குழுக்கள் யாவை? எண்பேராயம், ஐம்பேராயம்
- எண்பேராய உறுப்பினர்கள் யாவர்? காரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளிமறவோர்.
- ஐம்பேராயத்தில் இடம்பெற்றோர் யாவர்? அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், சாரணர்
- அரசின் பெருங்கணக்கர் கரணத்தியலவர் எனப்பட்டனர்
- அரசின் பொருட்களைப் பாதுகாப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கனகச்சுற்றம்
- நாட்டைக்காவல் செய்யும் காவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கடைக்காப்பாளர்
- குதிரைப்படையின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? இவுளிமறவோர்
- நாட்டின் முழு அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? மண்டலம்
- நாட்டின் உட்பிரிவு [பகுப்பு] எவ்வாறு அழைக்கப்பட்டது? கோட்டம்
- கோட்டங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன? கூற்றங்கள் [கோட்டமே கூற்றம் என்றும் கூறுவர்]
- கூற்று ஊராகப் பகுக்கப்பட்டது.
- ஊரில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அமைப்புக்கள் யாவை? மன்றம், பொதியில், அம்பலம், மாசானம்
- குடிமக்களின் தேவைகளை மன்னனிடம் எடுத்துச்செல்லும் அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? மாசானம்
- மாசானம் என்போர் யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி அல்லது பிரதிநிதிகளின் குழு
- ஊர்களில் அமைதிகாக்கும் நிறுவனங்கள் யாவை? பொதியில், மன்றம்
- வரி எவ்வாறு அழைக்கப்பட்டது? இறை
- மக்கள் மகசூலில் எத்தனை பங்கை வரியாக செலுத்தினர்? ஆறில் ஒரு மடங்கு
- மக்கள் வரி செலுத்தும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது? வாரியம்
- பயன்பாட்டில் இருந்த போர் கருவிகள்? அம்பு, வில், வாள், வேல், குந்தகம், கோல், கைக்கோடாரி, எஃகம், முசலம்
- வீரர்கள் தன் உடலைக் காக்க எவற்றைப் பயன்படுத்தினர்? கடுவாத்தோலாம் செய்யப்பட்ட கட்டை, இரும்பு மெய்மறைகள்
- தடுப்புப்போருக்குப் பயன்பட்டவை எவை? கையில் வைத்திருக்கும் கேடயம், கவச உடை
- பயன்பாட்டில் இருந்த தேர் வகைகள் யாவை? தேர், நெடுந்தேர், கொடுவஞ்சித் தேர்
- காலாட்படை வகைகள் யாவை? வாள், வேல், வில் படை, தூசிப்படை, தார் படை, முன்னணிப்படை, கூழைப்படை
- படையின் இறுதியில் வரும் பாதுகாவற் படை எது? கூழைப்படை
- நிறைய தேர் வைத்திருந்த மன்னன் யார்? பல்தேர் இளஞ்சேட் சென்னி
- கடற்கொள்ளையர்களை முறியடித்த மன்னன்யார்? கடற்பிறக்கோட்டிய குட்டுவன்
- ஈழநாட்டின் மீது போரிட்டு வென்ற சோழ மன்னன் யார்? திருமாவளவன் [இரண்டாம் கரிகாற் சோழன்]
- சேர நாட்டின் தலைநகர் - வஞ்சி, கரூர்
- சேர நாட்டின் துறைமுகம் - தொண்டி
- சோழ நாட்டின் தலை நகரம் - உறையூர்
- சோழ நாட்டின் துறைமுகம் - பூம்புகார்
- சோழ நாட்டின் வடக்கிலும் வடமேற்கிலும் எந்நாடு இருந்ததாக புறப்பாடல் காட்டுகின்றது? ஈழன் ஆண்ட ஈழ நாடு
- சேர, பாண்டிய நாட்டின் எல்லையை வரையறுக்கும் நூல் எது? பெருந்தொகை
- சோழ நாட்டின் எல்லை எந்த நூலில் குறிக்கப்பட்டு உள்ளது? சோழ மண்டலச் சதகம்
- சேர நாட்டை ஆண்ட மரபினர் யாவர்? சேரலாதன் மரபினர், பொறையர் மரபினர்
- சேரலை ஆண்டவர்கள் சேரர்கள்.இதில் சேரல் என்பதன் பொருள்? மலை
- வஞ்சியைத் தலைமையகமாகக் கொண்டு ஆண்டவர்கள் எம்மரபினர்? பொறையர்கள்
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 22 செப்டம்பர், 2020
தமிழ வரலாறும் பண்பாடும் வினா வங்கி - 1[சங்க காலம்]
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக