- பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி
- மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம்
- மொழியின் இலக்கணங்களின் வகைகள் யாவை? மரபு வழி இலக்கணம், மொழியியல் அடிப்படையிலான இலக்கணம்
- தமிழில் தற்போது கிடைக்கும் பழமையான இலக்கண நூல் யாது? தொல்காப்பியம்
- வலமொழியின் பழமையான இலக்கண நூலின் ஆசிரியர் யார்? பாணினி
- தமிழுக்கு இலக்கணம் எழுதிய ஐரோப்பியர்கள் யாவர்? ஆர்டன், போப், பெஸ்கி
- இலக்கிய மொழிக்கு எழுதப்படும் இலக்கணம் யாது? மரபு வழி இலக்கணம்
- பேச்சு வழக்கிலுள்ள மொழிக்கு எழுதப்படும் இலக்கணம் யாது? மொழியியல் அடிப்படையிலான இலக்கணம்
- மொழிப்புலமைக்கு அடிப்படை யாது? இலக்கண அறிவு
- மொழியியலின் அடிப்படைகள் யாவை? ஒலியன், உருபன், தொடரியல்
- ஒலியை ஆராயும் முறையிலுள்ள வகைகள் யாவை? பௌதீக ஒலியியல், கேட்பொலியியல், உச்சரிப்பு ஒலியியல்
- பௌதீக ஒலியியல் என்றால் என்ன? பேச்சொலியின் பௌதீகத் தன்மையை ஆராய்வது
- உச்சரிப்பு ஒலியியல் என்றால் என்ன? ஒலியுறுப்புக்களை அடிப்படையாகக் கொண்டு ஒலியின் பிறப்பை ஆராய்வதாகும்.
- ஒலிப்புமுறை அடிப்படையில் பேச்சு எவ்வாறு பகுக்கப்படும்? உயிர், மெய்
- பேச்சொலிக்குரிய காற்று வாயறையில் தடுக்கப்பட உருவாகும் எழுத்துக்கள் யாவை? மெய்
- பேச்சொலிக்குரிய காற்று வாயறையில் தடுக்கப்படாவிட்டால் உருவாகும் எழுத்துக்கள் யாவை? உயிர்
- மெய் ஒலிகள் எத்தனை வகைப்படும்? அடைப்பொலிகள் அல்லது வெடிப்பொலிகள், உரசொலிகள், மூக்கொலிகள், மருங்கொலிகள், ஆடொலிகள், அரை உயிர்கள்
- தமிழில் மருங்கொலி மெய்யெழுத்துக்கள் யாவை? ல, ள
- தமிழின் வருடொலி மெய்ய்ழுத்து எது? ர
- சொல்லமைப்பு அடிப்படையில் மொழிகள் எத்தனை வகையாகப் பகுக்கப்படுகின்றன? 3 [தனிநிலை மொழிகள், ஒட்டுநிலை மொழிகள், உட்பிணைப்பு மொழிகள்]
- தனிநிலை அமைப்பிலான உலக மொழிகளில் ஒன்று - சீனம்
- ஒட்டுநிலை அமைப்பிலான மொழிகளில் ஒன்று - தமிழ்
- உட்பிணைப்பு நிலை மொழிகளில் ஒன்று - இலத்தீன்
- மொழி ஆராய்ச்சியில் முதன்மையான நாடுகள் யாவை? இந்தியா, கிரேக்கம்
- விளக்க மொழியியல் அடிப்படையில் அமைந்த பழமையான இலக்கணங்கள் யாவை? தொல்காப்பியம், பாணினீயம்
- இக்கால விளக்க மொழியியலின் தந்தை யார்? புளூம்ஃபீல்டு
- தத்துவ அடிப்படையில் மொழியை ஆராய்ந்தவர்கள் யாவர்? கிரேக்க அறிஞர்கள் [ ஹெராகிளிட்டஸ், டெமாகிரிட்டஸ், பிளாட்டோ]
- ஒப்பு மொழியியலுக்கும், வரலாற்று மொழியியலுக்கும் வித்திட்டவர்கள் யாவர்? ராஸ்க், பாப், கிரீம்.
- விளக்க மொழியியலின் பொற்காலம் எது? இருபதாம் நூற்றாண்டு
- வரலாற்று ஒப்பு மொழியியலின் தந்தை யார்? கிரீம்
- மொழியியலில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவராகக் கருதப்படுபவர்? சசூர்
- மார்ஃபாலஜி என்ற நூலின் ஆசிரியர் யார்? நைடா
- மாற்றிலக்கணக் கோட்பாட்டின் தந்தை யார்? சோம்ஸ்கி
- 'கடிசொல் இல்லை காலத்தும் படினே'- என்றவர் யார்? தொல்காப்பியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக