இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 அக்டோபர், 2020

அறுவகைப் பெயர்

 பொருட்பெயர்

    தமன், நமன், நுமன், எமன்,  தமள், நமள், நுமள், எமள், தமர், நமர், நுமர், எமர், ஒருவன், ஒருத்தி, பொன்னன், பொன்னி, அவையத்தான், அவையத்தி

இடப்பெயர்

            குறத்தி, குறவன், எயிற்றி, எயினன், ஆயச்சி, ஆயன், உழவன், உழத்தி, வெற்பன், பொருப்பன், மறவன், இடையன், ஊரன், மகிழ்நன், சேர்ப்பன், துறைவன், சோழியன்,கொங்கன், கருவூரான், மதுரையான், வானத்தான், அகத்தான், புறத்தான், பரத்தி, மலையாட்டி, மலையாட்டி, கருவூரள், கருவூரி, வானத்தாள், அகத்தாள், புறத்தாள்  

காலப்பெயர்

            மூவாட்டையாள், வேனிலாள், பருவத்தாள், ஆதிரையாள், நெருநாலாள், மூவாட்டையான், வேனிலான், காரான், மாசியான், ஆதிரையான், ஓணத்தான், தையான், நெருநலான், காலையான்

சினைப்பெயர்

        திண்தோளன், திணிதோளன், செங்குஞ்சியன், வரைமார்பன், செங்கண்ணன், குழைக்காதன், குறுந்தாளன், நெடுங்கையன், திணிதோளல், சுரிகுழலாள், கார்குழலாள், நெடுமார்பள், தடங்கண்ணாள், குழைக்காதாள்,மூக்கி

குணப்பெயர்

        பெரியள், புலமையாள், பொன்னொளியாள், கூனள், கூனி, கரியள், மானுடத்தி, பார்ப்பினி, மானுடத்தி, மனைத்தலைவி, நல்லள், பெரியன், சிறியன், அறிஞன், புலவன், பொன்னொப்பன், கூனன், குறளன், மணியனையான், கரியன், செய்யன், மானுடத்தன், நல்லன், தீயன்

தொழிற்பெயர்

        ஓதுவான், ஈவான், கணக்கன், தச்சன், ஓதுவாள், ஈவாள், உழவன், உழத்தி


திரி சொல்

 ஒரு பொருள் தரும் பல சொற்கள் 

1. கடல் -பரவை, முந்நீர், ஆழி

2. கிளி - தத்தை, சுகம், கிள்ளை 

3. சூரியன்-ஞாயிறு, கதிரவன், பகலவன், பரிதி

4. சொல் - பதம், மொழி, கிளவி 

5. தவறு  - குற்றம்,  மாசு, பிழை

6. நெருப்பு - தீ, கனல்,  அனல்

7. பெண் - நங்கை,  வனிதை,  மங்கை 

8. வயல்  - கழனி,  பழனம், செய்

9. அரசன்  - மன்னன், கோ, கோன், கொற்றவன்,  காவலன்,  வேந்தன்

10. அழகு - அணி, வனப்பு,  எழில் , கவின்

11. நிலா - திங்கள், சந்திரன், மதி

12. அன்பு - பாசம், நேசம்,  பரிவு

13. குழந்தை - குழவி,  மகவு, மழலை, சேய்

14. உலகம் - அவனி,  ஞாலம்,  பார்,  மண்ணகம்,  மண்ணுலகு,  குவலயம்,  புவி, கூ, பூவுலகு,  அகிலம்,  வையகம்,  மேதினி, தரணி

15. செய்யுள்  - பா, பாடல், கவிதை, யாப்பு 

16. யானை - களிறு,  பிடி,  வாரணம் 

17. மதில் - எயில், அரண்,கோட்டை


பல பொருள் தரும் ஒரு சொல் 

1. மா - மா மரம் (கனி), விலங்கு, குதிரை பெரிய, வண்டு

2. ஆறு  - எண்,  நதி,  ஆறுதல், பாதை 

3. படி - மாடிப்படி,  அளவை,  படித்தல்,  படிதல் 

4. திங்கள்  - நிலா,  மாதம் 

5. அணி - அணிகலன்,  அணிதல்,  அழகு 

6. அரணம் - மதில், கவசம் 

7. ஆசு - சிறுமை, குற்றம்,  விரைவு, கவசம் 

8. குழல்  - மயிர்,  துளை,  இசைக்கருவி 

9. களம்  - மிடறு,  கருமை,  பெருநிலம் 

10. கொண்டல் - மேகம்,  கூதிர்,  கீழைக்காற்று 

11. கூழ் - உணவு, பயிர்,  பொன் 

12. சினை - கரு,  உறுப்பு,  மரக்கோடு 

13. சிலை - கற்சிலை,  வில்,  மலை 

14. செம்மல் - இறைவன்,  பழம்பூ,  வீரர்,  செந்நிறம் 

15. பரி - வருத்தம்,  செலவு,  குதிரை,  பாதுகாப்பு 

16. பாடி  - நகரம்,  நாடு,  படை வீடு

17. பனி- அச்சம்,  துன்பம்,  நடுக்கம்,  குளிர் 

18. மாடு - மணி,  செல்வம்,  நிறை,  பக்கம்,  தனம் 

19. வாரணம் - கோழி, சங்கு, யானை

20. மால்    -    மாயோன், கருமை, வேட்கை, மயக்கம், மேகம், காற்று

21. அரி    -    அரிதல், சிங்கம், திருமால்

22. அரவம்    -    சத்தம், பாம்பு

23. ஆடு    -    ஆடுதல், விலங்கு

24. அன்னம்    -    சோறு, பறவை

25. ஆரம்    -    சந்தனம், மாலை 



திசைச் சொற்கள்

 திசைப் பெயர்

1. பசு           - பெற்றம்        -           தென்பாண்டி நாடு

2. சோறு    -    சொன்றி     -            "

3. தாய்        -    தள்ளை    -            குட்ட நாடு

4. தந்தை    -    அச்சன்    -            குடநாடு

5. வஞ்சகர்    -    கையார்    -    கற்கா நாடு

6. தோட்டம்     - கிழார்            -     வேணாடு

7. சிறுகுளம்    -    பாழி            -    பூழி நாடு

8. வயல்            -    செய்            -    பன்றி நாடு

9. சிறுகுளம்    -    கேணி        -    அருவா நாடு

10. புளி               -    எகின்        -    அருவா வடதலை நாடு

11. தோழன்         -    எலுவன் -    சீதநாடு

12. தோழி            -    இகுளை    -    சீதநாடு

13. நல்ல நீர்        -    வெள்ளம்    -    மலையமானாடு

14. தாய்                -    ஆய்               -     சோழ நாடு

[தமிழ் நாடு தவிர்ந்த 17 நாடுகளில் இருந்து வழங்குபவை]

15. அந்தோ        -    சிங்களம்

16. மாமரம்        -    கொக்கு        -    துளுவம்

17. அகப்படுதல்    -    சிக்குதல்        -    கன்னடம்

18. எருத்து                -    பாண்டில்        -    தெலுங்க நாடு

================================================ 

தமிழ் தவிந்த பதினேழு நாடுகள் [இதை நன்னூலார் குறிக்கிறார்                                                                                                                 தொல்காப்பியர் குறிக்கவில்லை]

சிங்களம்

சோனகம்

சாவகம்

சீனம்

துளுவம்

குடகம்

கொங்கணம்

கன்னடம்

கொல்லம்

தெலுங்கம்

கலிங்கம்

வங்கம்

கங்கம்

மகதம்

கடாரம்

கௌடம்

குசலம்

               

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...