இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 அக்டோபர், 2020

தொல்காப்பியம் - உருபியல்

 உருபியல்

1) அ, ஆ, உ, ஊ, ஏ,  ஔ பெறும் சாரியை ?

                            இன்

2) அகர இறுதி, பன்மை மற்றும் ‘யா’ என்ற வினாவும் பெறும் சாரியை

வற்றுச் சாரியை

பல  -  பலவற்றை

யா  - ‘ஆ’ - வற்று (யாவற்றை)

3) உகரத்தை இறுதியாக உடைய சுட்டெழுத்துப் பெறும் சாரியை ?

‘அன்’  சாரியைப் பெறும்

அது + அன் + ஐ  - அதனை

இது + அன் + ஐ   - இதனை

4) அவை, இவை என்ற ஐகார இறுதியுடைய சுட்டெழுத்து பெறும் சாரியை ?

வற்றுச் சாரியை (அவை, இவை)

5) ஐகார ஈற்று வினாச் சொல் பெறும் சாரியை

வற்று

யாவை+ஐ  -  யாவற்றை

6) நீ எநும் சொல்  னகர ஒற்றைப் பெறும் ?

‘நீ’ என்பது ‘நி’ என ஆக ‘ன’ பெற்று - ‘நின்’

7) ஓகார இறுதி பெறும் சாரியை

‘ஒன்’ எனும் சாரியை

கோனை, கோனோடு  நச் குறிப்பிடுகிறார்

8) அகர ஆகார இறுதி மரப்பெயர் பெறும் சாரியை

அத்துச் சாரியை பெறும்

1) விள + அத்து + கண் - விளவத்துக் கண்

2) பலா + அத்து + கண் - பலவத்துக்கண்

9) ஞ,ங முன் இன்

ஞ,ங என்ற புள்ளி பெறும் சாரியை 

இன்

உரிஞ் + இன் + ஐ -  உரிஞினை 

உரிஞ் + இன் + ஒடு - உரிஞினொடு

10) அவ், இவ் என்ற வகர இறுதிச் சொல் பெறும் சாரியை

அவை + வற்று + ஐ - அவற்றை

இவை + வற்று + ஐ - இவற்றை

11) தெவ் ® என்ற வகரம் பெறும் சாரியை ?

‘இன்’

தெவ்வினை, தெவ்வினொடு

12) மஃகான் புள்ளி பெறும் சாரியை யாது ?

அத்து

மரம் + அத்து +  ஐ - மரத்தை 

மரம் + அத்து +  ஓடு - மரத்தோடு

13) மகரத்தின் இடையில் வரும் சாரியை யாது ?

மகரத்திற்கு அத்து, இன் என்ற இரண்டும் வரும் 

உரும் + இன் + ஐ - உருமினை

உரும் + இன் + ஓடு - உருமினொடு

14) நும் எனும் இறுதி உடைய சொல் பெறும் சாரியை யாது ?

அத்து, இன் எவற்றையும் பெறாமல் இயல்பாக முடியும்.

15) தாம், நாம், யாம் என்னும் சொற்கள் எவ்வாறு வரும் ?

                1) நும் என்னும் மகர இறுதி போல

                2) யாம் - எனும் இறுதிசொல் ஆ, எ ஆகும்

                3) ‘ய’ மெய் கெட்டும்

                4) தாமும் நாமும் முதல் நெடில் குறுகும் 

                    தாம் - தம் + ஆம் 

                    நாம் - நம் + ஆம்

16) எல்லாம் என்பது பெறும் சாரியை ?

அத்து, இன், வற்று, சாரியை பெறும்

அதனோடு ‘உம்’ என்பது பொருந்தும்

எல்லாம் + வற்று + உம் - எல்லாவற்றையும் 

எல்லாவற்றுக் கண்ணும் - எல்லாவற்றதும் - இளம்பூரணர்

17) உயர் திணை பெயர்கள் பெறும் சாரியை யாது ?

‘நம்’ எனும் சாரியைப் பெறும். 

எல்லாம் நம்மையும் எல்லா நம்மொடும்

18) எல்லாரும் - படர்க்கை

எல்லீரும் - முன்னிலை

எல்லாரும் எல்லீரும் என்பவை எல்லாம் எல்லீர் என நிற்கும்.  

        இறுதியில் உம் சேரும். 

  இடையில் தம்மும் நும்மும் அடையும், எல்லாம்,  தம்மையும் எல்லீர்                                        நும்மையும் என முடியும். 

19) தான் - யான் எவ்வாறு திரியும் ?

தான் - தன் எனத் திரியும்

யான் - என் எனத் திரியும்

20) அழன், புழன் பெறும் சாரியை ?

அத்து, இன் சாரியைப் பெறும்

அழன்- குளிர் காய்தற்கு வெப்பக்கங்கு இடப்பட்ட மிரப்பனை

புழன் -  இருபாலும் துளையமைந்த நீர் செல்வடிகுழாய் 

        எகின் என்பது எகினினை, எகினத்தை என்று கூறுவர் இளம்பூரணர்

21) ‘ஏமன்’ என்ற எண்ணுப் பெயர்பெறும் சாரியை ?

‘அன்’ சாரியைத் தோன்றும்

ஏழு + அன் + ஐ -  ஏழனை

22) குற்றியலுகம் பெறும் சாரியை ?

குற்றியலுகரம் இறுதி முன் இன் சாரியை பெறும். 

        நாகினை, நாகினொடு

        வரகினை, வரகினொடு

23) தான் யான் எவ்வாறு வரும் ?

தான் - தன்னை (தன்)

யான் -  என்னை (என்)

24) ஒற்று இரட்டல் வரும் இடங்கள் யாவை ?

1) நெடிலின் பின்னர் குற்றுகரங்களுக்கு இன வொற்று 

2) ஒற்று மிகத் தோன்றாத விடம் கு, சு, து, பு -  இரட்டிப்பு

3) நாடு + ஐ - நாட்டை 

4) ஆறு + ஒடு - ஆற்றொடு 

5) சாரியை இல்லாமலும் இயல்பாக வரும்

6) முயிறு என்பது முயிற்று - இளம்பூரணார் குறிப்பிடுகிறார்

25) எண்ணுப் பெயர் பெறும் சாரியை

‘அன்’  சாரியை

ஒன்றனை, இரண்டனை

26) ஒன்று முதல் எட்டு எண்களில் பத்து சேரும் போது பெறும் சாரியை.

‘ஆன்’ - சாரியை

ஒருபஃது + ஆன் + ஐ -  ஒருபானை 

இருபஃது + ஆன் + ஐ -  இருபானை

27) யாது என்ற குற்றுகர இறுதியும், சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழி 

        குற்றுகர  இறுதியும் பெறும் சாரியை யாது ?

‘அன்’ சரியை

யாது + அன் + ஐ  - யாதனை 

அஃது + அன் + ஐ  -  அதனை

28) ஏழாம் வேற்றுமை உருபு எவ்வாறு வரும் ?

1) ஏழாம் வேற்றுமை உருபு (கண்), திசைப் பெயர்களின் முன்னர்

         ‘இன்’ சாரியைப்   பெற்றும் பெறாமல் இயல்பாய் நிற்கும்.

2)  இயல்பான வழி, திசைப் பெயர் இறுதி ‘உ’கரம் கெடும்

   வடக்கு + இன் + கண் - வடக்கின்கண்

   வடக்கு + கண் - வடக்கண்

29) புள்ளி ஈறு உயிர் ஈற்றுச் சொற்கள் எவ்வாறு வரும் ?

புள்ளி ஈறு, உயிர் ஈற்றுச் சொற்கள் வேற்றுமை உருபுகளுடன் 

        பொருந்தி வரும்போது 

  சாரியைப் பெற்றும் பெறாமலும் வரும்.

கூறாத புள்ளியீறு - ண,ய,ர,ல,ள

உயிர்ரீறு   (மண்ணை) மண்ணினை 

    இவையும் சாரியை பெறாதும் பெற்றும் வரும் 


தொல்காப்பியம் - புணரியல்

 

1) மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துக்கள் எத்தனை ?

                    22

2) மொழி இறுதியில் வரும் தமிழ் எழுத்துக்கள் எத்தனை ? 

                    24

3) [எழுத்தின் அடிப்படையில்] புணர்ச்சி  எத்தனை வகைப்படும் ? 

        4 (உயிர் முன் உயிர், உயிர் முன் மெய், மெய் முன் மெய், மெய் முன் உயிர்)

4) சொல் வகையில் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ? 

                4 (பெயரொடு பெயர், பெயரொடு தொழில், தொழிலொடு பெயர்,                             தொழிலொடு தொழில்)

5) இயல்புப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ? 

        1

6) திரிபுப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ? 

            3 (மெய்திரிதல், மிகுதல், குன்றல்)

7) அடையொடு தோன்றினாலும் புணர் நிலைக்கு உரியவை யாவை ? 

            நிறுத்தல் சொல் குறித்து 

8) மருவுச் சொல் புணர்தலுக்குச் சான்று தருக ? 

                உன் + தந்தை - உந்தை

9) பொருளடிப்படையிலான புணர்ச்சி எத்தனை வகைப்படும் ? 

            2 (வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி)

10) புணர்ச்சியில் இடம் பெறும் வேற்றுமை உருபுகள் எத்தனை? 

                6 (ஐ, ஒடு, கு, இல், அது, கண்)

11. எந்த வேற்றுமை உருபுகள் வருமிடத்தில் ஒற்று மிகும்?

                வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வேற்றுமை உருபுகள் [கு, கண்]

12. ஆறாம் வேற்றுமை உருபு அகர ஈற்று சொல்லொடு புணர்ந்தால் நிகழ்வது?

                அகரம் கெடும்

13. பெயரோடு வேற்றுமை உருபு எங்கு புணரும்?

                பெயரின் பின் வரும்

14. பெயர் சுட்டு நிலைகள் எத்தனை வகைப்படும்? 

                2 [உயர்திணை, அஃறிணை]

15. பெயர், வேற்றுமையோடு வரும் சாரியை எங்கு புணரும்? 

                பெயர் மற்றும் வேற்றுமைக்கு இடையில் சாரியை வரும்.

16. தொல்காப்பியம் குறிப்பிடும் சாரியைகள் எத்தனை?

                 9 [இன்ன பிறவும்]

17. தொல்காப்பியம் குறிப்பிடும் சாரியைகள் யாவை?

                இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன்

18. ஆகார ஈற்று சொல்லோடு இன் சாரியைப் புணர நிகழ்வது என்ன?

                 இன் சாரியையின் இகரம் கெட்டும், கெடாமலும் வரும்.                                                              [ஆ+இன்+ஐ=ஆனை அல்லது ஆனினை]

19.  அளவைக் குறிக்கும் சொல்லை அடுத்து இன் வருகையில் நிகழ்வது யாது?

                 இன் -இல் உள்ள ன் - ற் ஆக மாறும். [பத்து+இன்+உழக்கு = பதிற்றுழக்கு]

20. சுட்டெழுத்து முதலாகிய ஐ முன் வற்றுச் சாரியை வர நிகழ்வது?

                வகர மெய் கெடும். [அவை + வற்று = அவற்று]

21. நான்காம் வேற்றுமை உருபை அடுத்து இன் சாரியை வர நிகழ்வது?

                னகரம் றகரமாக மாறும் [பூவின்+கு = பூவிற்கு]

22. நாள்மீன் [பரணி] க்கும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொல்லின்                     இடையே ஆன் வர நிகழ்வது யாது?

                ஆனில் உள்ள னகரம் றகரம் ஆகும்                                                                                                [பரணி+ஆன்+கொண்டான் = பரணியாற் கொண்டான்]

23. அகர ஈற்றை அடுத்து அத்து சாரியை வர நிகழ்வது யாது?

                அகரம் கெடும். 

24. ஐகாரத்தை ஈறாகக் கொண்ட சொல்லை அடுத்து இக்குச் சாரியை வர

          நிகழ்வது யாது?

                    இகரம் கெடும். 

25. இகரத்தை ஈறாகக் கொண்ட சொல்லை அடுத்து இக்குச் சாரியை வர

          நிகழ்வது யாது?

                    இகரம் கெடும். 

26. வல்லெழுத்தின் முன் அக்குச்சாரிசை வர நிகழ்வது யாது? 

                அக்கு-வில் உள்ள க்கு கெடும் [குன்றம் + அக்கு+ குடி - குன்றக்குடி]

27. அம் சாரியையை அடுத்து க, ச, த வர நிகழ்வது யாது?

                க, ச, த - ங, ஞ, ந ஆக மாறும். [பீர்க்கு+அம்+கொடி-பீர்க்கங்கொட்]

28. அம் சாரியையை அடுத்து மெல்லெழுத்தும், இடையின எழுத்தும் வர நிகழ்வது யாது?

                 அம்-இல் உள்ள ம் கெடும் [புளி+அம்+நுனி=புளியநுனி]

29. இன் சாரியை எந்த வேற்றுமை உருபோடு வராது?  

                    இன் உடன் வராது.

30. சாரியையின் இயல்புகள்

            1. பெயரும் தொழிலும்[வினையும்] பிரிந்து  வருமிடத்தில் சாரியை வரும்.

            2. பெயரும் பெயரும் கூடி வருமிடத்தில் வரும்

            3. வேற்றுமை உருபோடு வரும்.

            4. வேற்றுமை உருபு தொக்கி வருமிடத்தில் வரும்

            5. சொற்களின் இடையே வரும்

            6. சாரியைக்குப் பொருள் கிடையாது.

31. அத்து, வற்று ஈற்றெழுத்து, ஈற்றயல் [இறுதிக்கு முதல்] எழுத்துக் கெட

        நிகழ்வது யாது?

        வருமொழி முதலில் உள்ள வல்லெழுத்து மிகும்

32. எழுத்துச் சாரியைகள் யாவை?

                    காரம், கரம், கான்

33. நெடில் எழுத்துக்களோடு வராத எழுத்துச் சாரியைகள் யாவை?

                    கரம், கான்

34. குறிலுக்கு உரிய எழுத்துச் சாரியைகள் எவை?

                        கரம், காரம், கான்

35. ஐ பெறும் சாரியைகள் யாவை?

                        காரம், கான்

36. நிலை மொழி ஈறு மெய்யாக வருமொழி முதலில் உயிர் வர நிகழ்வது யாது?

                        மெய்யும் உயிரும் கூடி உயிர் மெய் ஆகும்.

37. நிலை மொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிர் வர என்ன நிகழும்?

                        உடம்படு மெய் தோன்றும்

38. புணர்ச்சியில் எழுத்துக்கள் மாறும் போதும் மாறாமல் இருக்கும் போதும்

         நிகழ்வது  யாது? 

                            பொருள் மாறுபடும். [இனியவை பேசு - இனி அவை பேசு]

 







      

                


தொல்காப்பியம் - பிறப்பியல்

  1. எழுத்துக்கள் பிறக்க அடிப்படையான காற்று எங்கிருந்து தோன்றும்?       உந்தி [கொப்பூழ், தொப்பூள்]
  2. காற்று நிலை பெறும் அல்லது பொருந்தும் இடங்கள் யாவை?                             தலை, மிடறு [தொண்டை], நெஞ்சு [உரம்]
  3. எழுத்துப் பிறக்க நிலைக்களன்களாகும் உறுப்புக்கள் யாவை?                  தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நாக்கு, மூக்கு, இதழ்
  4. 'உந்தி முதலா முந்துவளி தோன்றி' - இதில் முந்துவளி என்பது யாது?           வெளிப்படும் ஓசைக்காற்று
  5. எழுத்துப் பிறக்கக் காரணமான் ஓசைக்காற்றின் வேறு பெயர் யாது?   உதாணன்
  6. உயிர் எழுத்துப் பிறக்கக் காற்று எங்கு பொருந்தி ஒலிக்கும்?                            மிடறு
  7. வாயை அங்காத்தலால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                                  அ,ஆ
  8. அண்பல் நா விளிம்புற பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                                           இ, ஈ, எ, ஏ, ஐ [5]
  9. இதழ் குவிந்து பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                                                                 உ, ஊ, ஒ, ஓ, ஔ [5]
  10. அடி அண்ணத்தை நாவின் அடிப் பொருந்திப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                 க, ங
  11. இடை அண்ணத்தை இடை நாப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                 ச. ஞ
  12. அண்ணத்தின் அடிப்பகுதியை நாவின் நுனி பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                              ட, ண
  13. அண்ணத்திற்கு அருகில் உள்ள மேற்பல்லின் அடிப்பகுதியில் நுனி நாக்குப் பொருந்தப் பிறப்பவை? த, ந
  14. நுனி நா அண்ணத்தில் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?                          ற, ன
  15. நுனி நா அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை?           ர, ழ
  16. நாவின்  விளிம்பு மேற்பல்லின் அடியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்து யாது? ல 
  17. நாவின் விளிம்பு மேற்பல்லின் அடியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்து யாது? ள
  18. இதழ்கள் இணைந்து பிறப்பவை யாவை?                                                                     ப, ம
  19. பல்லும் இதழும் இணையப் பிறக்கும் எழுத்து யாது?                                                       வ
  20. யகரம் எவ்வாறு பிறக்கும்? மிடற்றிலிருந்து வெளிவரும் காற்று அண்ணத்தில் பொருந்தப் பிறக்கும் 
  21. மூக்கில் தோன்றிய காற்று ஒலியோடு பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? மெல்லெழுத்துக்கள்
  22.  சார்ந்து வரின் அல்லது தமக்கியல்பு இல்லாதவை எவை? சார்பெழுத்துக்கள்

நன்னூல் - பதவியல்

1. பதம் என்பது யாது?

                      எழுத்து தனித்தோ, எழுத்துக்கள் தொடந்தோ வந்து பொருள் தந்தால் 

                        அது பதம் ஆகும். 

2. பதம் எத்தனை வகைப்படும்?

                         2 [பகுபதம், பகா பதம்]

3. பகுபதம் என்றால் என்ன? 

                            சொல்லைப் பகுத்தால் பொருள் தருவது.

4.பகா பதம் என்றால் என்ன?

                            சொல்லைப் பகுக்க இயலாதது.  பகுத்தால் பொருள் தராதது

5. ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன?

                             ஒரு எழுத்து தனித்து நின்று பொருள் தருவது ஓரெழுத்து ஒரு                                         மொழி ஆகும்.

6. பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை? 

                            42

7. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் உயிர் எழுத்துக்கள் யாவை?

                            6 - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

8. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் மகர வரிசை எழுத்துக்கள் யாவை?

                            6 - மா, மீ, மூ, மே, மை, மோ

9. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் தகர வரிசை எழுத்துக்கள் யாவை?

                            5 - தா, தீ, தூ, தே, தை

10. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் பகர வரிசை எழுத்துக்கள் யாவை?

                            5 - பா, பூ, பே, பை, போ

11. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் நகர வரிசை எழுத்துக்கள் யாவை?

                           5 - நா, நீ, நே, நை, நோ

12. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் ககர வரிசை எழுத்துக்கள் யாவை?

                           4 - கா, கூ, கை, கோ

13. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் வகர வரிசை எழுத்துக்கள் யாவை?

                           4 - வா, வீ, வை, வௌ
14. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் சகர வரிசை எழுத்துக்கள் யாவை?
                           4 - சா, சீ, சே, சோ
15. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் யகர வரிசை எழுத்துக்கள் யாவை?
                            1 - யா
16. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் குறில் எழுத்துக்கள் யாவை?
                            2 - நொ, து
17. தொடர் மொழி என்பது யாது?
                             ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து வந்து பொருள்                                   தருவது தொடர் மொழி
18. பகாபதம் எத்தனை எழுத்துக்கள் கொண்டிருக்கும்?
                            இரண்டு முதல் ஏழு எழுத்துக்கள் 
19. பகுபதம் எத்தனை எழுத்துக்கள் கொண்டிருக்கும்?
                            இரண்டு முதல் ஒன்பது எழுத்துக்கள் கொண்டிருக்கும்
20.  பகாபதமாக வரும் சொற்கள் யாவை? 
                            பகுக்கப் பொருள் தராத இடுகுறியாக வரும் பெயர், வினை,                                         இடை, உரி சொற்கள்.
21. பகுபதமாகும் வினை சொற்கள் எத்தகையவை?
                            பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறின்                                    அடிப்படையாகக் கொண்ட பெயர் சொற்களும்,  தெரிநிலை                                         பெயர் சொற்களும்,  குறிப்பாகக் காலம் காட்டும் வினைச்                                            சொற்கள் [குறிப்பு வினை]
22. பகுபத உறுப்புக்கள் யாவை?
                            பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம், 
23. தத்தம் பகாப்பதங்கள் எவை? 
                            பகுதி
24. பண்புப் பகுபதஙளாக வருபவை யாவை? 
                              செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை,                                                     மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை மற்றும்                                         இவற்றுக்கு எதிரானவை.
25. பண்புப் பெயர்கள் புணரும்போது ஆடையும் விகாரங்கள் யாவை?
              ஈறு போதல் - மை கெடுதல். செம்மை + தமிழில் மை கெடுதல்
              இடையில் நின்ற உகரம் இகரமாகத் திரிதல்.[கருமை + அன் - கரியன்]
             ஆதி நீடல் - செம்மை + அடி - சேவடி ஆதல்
             முதலில் நின்ற அகரம் ஐகாரமாதல்[பசுமை + தளி = பைந்தளிர்]
               தன் நடுவிற் மெய் இரட்டித்தல்
                மெய் திரிதல் - செம்மை + ஆம்பல் - சேதாம்பல்
                இனம் மிகல் - கருமை + கடல் - கருங்கடல்
26. வினைபகுதிகள் எத்தனை? 
                                   24 [ 23 + செய் என்னும் வாய்ப்பாடு]
27. வினைப்பகுதியாகும்  சொற்கள் யாவை?
                   நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,  நொ, போ, வௌ, உரிஞ், உண்,                                பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கோள், அஃகு [23]
28. செய் என்னும் ஏவல் வாய்ப்பாடு எந்த வகை வினை ஆகும்? தன்வினை
29. பிற வினை சொற்கள் எவ்வாறு வரும்? செய் வாய்ப்பாட்டுடன் வி அல்லது 
         பி பெற்று வரும் [செய்வி, நடப்பி]
30. ஈரேவல் சொற்கள் எவ்வாறு எழுதப்படும்?
          இரு வி அல்லது பி சேர்த்து [ வா- வருவி - வருவிப்பி, நட - நடப்பிவித்தான்-                                                     நடப்பிவித்தான்]
31. பகு பத உறுப்பில் முதலில் வருவது யாது? பகுதி
32. பகுபத உறுப்பில் இறுதியில் வருவது யாது? விகுதி
33. வினைமுற்று விகுதிகள் எத்தனை? 37 [இவைபோன்ற பிறவும் எனவும் தரப்பட்டுள்ளது]
34. வினை முற்று விகுதிகள் யாவை? 
                        அன், ஆன்,  அள், ஆள், அர், ஆர், பம்மார், அ, ஆ, கு, டு, து, று, ஏன்,                                 என்,  அல், அள், அன், அம், ஆம், ஏம், ஓம், கும், டும், தும், நும், ஐ, ஆய்,                          இ,  மின், இர், ஈர், ஈயர், க, ய, உம் [37]
35. இடை நிலை என்பது யாது? 
                        பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது.
36. இலக்கியம் கண்டதற்கு இயம்பப்படுவது எது?
                                 இலக்கணம்
37. இடைநிலை பெறும் பெயர் யாது? 
                                                வினையாலனையும் பெயரல்லா பெயர் [கலைஞன் =                                 கலை + ஞ்+ அன் - ஞ்- இடைநிலை]
38. காலம் காட்டும் இடை நிலைகள் எத்தனை வகைப்படும்?     3
39. இறந்த காலஇடை நிலைகள் யாவை?        
                                 த், ட், ற், இன்
40. நிகழ் கால இடை நிலைகள் யாவை?
                         ஆநின்று, கின்று, கிறு
41. எதிர்கால இடைநிலைகள் யாவை? 
                            ப்,வ்
42. இடைநிலை மட்டுமே காலம் காட்டுமா? 
                        இல்லை. விகுதியும் காலம் காட்டும்
43. நிகழ் காலம் காட்டும் விகுதிகள் யாவை?   
                        செய்யும் வாய்ப்பாடு
44. இறந்த காலம் மற்றும் எதிர் காலம் காட்டும் விகுதிகள் யாவை?
                        ற, று, ம், து, தும், டு, டும், ப
45. எதிர்காலம் காட்டும் விகுதிகள் யாவை? 
                        கு, கும், மின்,  ஏவல், வியங்கோள், இ, மார்
46.  மூன்று காலத்தையும் காட்டும் விகுதிகள்? 
                        ஆகார ஈறு
47. வடமொழி உயிர் எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?  
                           அச்சு
48. வட மொழி உயிர் [அச்சு] எழுத்துக்கள் எத்தனை?
                         16
49. வடமொழிக்கும் தமிழுக்கும் பொதுவான உயிர் எழுத்துக்கள் எத்தனை? 
                        10
50. தமிழுக்கும் வடமொழிக்கும்  பொதுவாக அல்லாத உயிர் எழுத்துக்கள்                     யாவை?                     எ,ஓ
51. வடமொழியில் மெய் எழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
                         அல்
52. தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக உள்ள மெய் எழுத்துக்கள்                                     எத்தனை?                         15
53. தமிழ் வடமொழிக்குப் பொதுவான வல்லெழுத்துக்கள் யாவை?
                            க், ச், ட், த், ப்
54. தமிழ் வடமொழிக்குப் பொதுவான மெல்லெழுத்துக்கள் யாவை?
                            ங், ஞ், ண், ந்,  ம்
55.தமிழ் வடமொழிக்குப் பொதுவான இடையின எழுத்துக்கள் யாவை?
                            ய். ர். ய். வ். ள்
56. வடமொழியில் இல்லா தமிழுக்கான சிறப்பு மெய் எழுத்துக்கள் யாவை? 
                            ழ், ற், ன்
57. ரகரத்தை முதலாகக் கொண்ட வட சொல் தமிழில்  எவ்வாறு எழுதப்படும்?
                            அ, இ, உசேர்த்து [அரங்கம், இராமன், உரோமம்]
58. லகரத்தை முதலாகக் கொண்ட வட சொல் தமிழில்  எவ்வாறு எழுதப்படும்?
                            இ, உ சேர்த்து [ இலாபம், உலோகம்]
59. யகரத்தை முதலாகக் கொண்ட வட சொல் தமிழில்  எவ்வாறு எழுதப்படும்?
                            இ [இயமன், இயக்கன் [யக்ஷன்]]
60. ய,ர,ல இணைந்து வரும் வட சொற்கள் தமிழில் எவ்வாறு  எழுதப்படும்?
                            இகரம் சேர்த்து எழுதப்படும் [காவியம் - காவியம், வக்ரம் -                         வக்கிரம், சுக்லம் - சுக்கிலம்]
61. இணைந்து வரும் ம, வ தமிழில் எவ்வாறு எழுதப்படும்? 
                            உகரம் சேர்த்து எழுதப்படும் [பத்மம் - பதுமம், பக்வம் - பக்குவம்]
62. தமிழுக்கு மட்டுமான சிறப்பான சார்பெழுத்துக்கள் யாவை? 
                            உயிர் மெய் அல்லாத எட்டு சார்பெழுத்தும் வட மொழியில்                                             இல்லாத தமிழுக்கான  சார்பெழுத்துக்கள்
63. தமிழுக்கான மொத்த சிறப்பெழுத்துக்கள் எழுத்துக்கள் எத்தனை? 
                                13
64. தற்சமம் என்பது யாது? 
                                தமிழுக்கும் வட மொழிக்கும் உள்ள பொதுவான                                                                    எழுத்துக்களால் எழுதப்படும் வடசொற்கள்
65. தற்பவம் என்பது யாது?
                                வடமொழி சிறப்பெழுத்துக்களால் தமிழில் எழுதப்படும்                                                     வடசொற்கள் [ ஹரி, லக்ஷ்மி, ஜாடை]




































































































































      

                      

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...