இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

பக்தி இலக்கிய வினா வங்கி 2

  1.  4,5,6 திருமுறைகளைப் பாடியவர் யார்? திருநாவுக்கரசர்
  2. திருனாவுக்கரசர் திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?                     திரு நேரிசை, திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம்
  3. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்? திருமுனைப்பாடி நாட்டு திருவாமூர்
  4. திருநாவுக்கரசரின் பெற்றோபெயர் யாது? புகழனார், மாதினியார்
  5. திருநாவுக்கரசரின் இயற்பெயர் யாது? மருள்நீக்கியார்
  6. பெற்றோரும், தமக்கைக் கணவர் இறந்ததாலும் நாவுக்கரசர் எம்மதத்திற்கு மாறினார்? சமணம்
  7. சமணத்தில் நாவுக்கரசரின் பெயர்? தருமசேனர்
  8. நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவம் மாறக்காரண்மாய் இருந்த நோய்? சூலை நோய்
  9. நாவுக்கரை சைவத்திற்கு மாற்றிய அவரது சகோதரி பெயர்? திலகவதியார்
  10. சூலை நீங்க நாவுக்கரசர் பாடிய முதல் பதிகம் 'கூற்றாயினவாறு விலக்கிலீர்'
  11. நாவுக்கரசர் முதல் பதிகத்தை எங்குப் பாடினார்? திருவதிகை வீரட்டானம்
  12. உழவாரப்படை கொண்டு கோவில் தோறும் உழப்பணி செய்தவர்? நாவுக்கரசர்
  13. நாவுக்கரசர் இறைவனை என்ன மார்கத்தில் வணங்கினார்? தாச மார்க்கம்
  14. தாசமார்க்கம் என்பது - தன்னை பணியாளாகவும் இறைவனை தலைவனாக எண்ணிப்பாடுவது.
  15. தாசமார்க்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சரியை
  16. நாவுக்கரசரின் சிறப்புப்பெயர்கள் - வாகீசர், தாண்டக வேந்தன்
  17. நாவுக்கரசர் சம்பந்தாரால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?அப்பர்
  18. நாவுக்கரசர் பாடியதாக நம்பப்படும் பாடல்கள் எத்தனை? 49000
  19. கிடைக்ககூடிய நாவுக்கரசர் பாடல்கள் - 3099
  20. திருனாவுக்கரசர் பாடல்கள் எத்தனைப் பதிகங்களில் உள்ளன்? 313
  21. நாவுக்கரசரின் காலம் -  கி. பி. ஏழாம் நூற்றாண்டு
  22. தேவார மூவரில் அதிக காலம் வாழ்ந்தவர் யார்? நாவுக்கரசர்[81 ஆண்டு]
  23. திருனாவுக்கர்சர் பாம்பு தீண்டி இறந்த யாருடைய மகனை உயிருட எழச்செய்தார்? அப்பூதியடிகள் 
  24. நாவுக்கரசர் எந்த ஆற்றில் மூழ்கி எழுந்து கயிலையைக் கண்டார்? திருவையாறு
  25. நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதால் அவரைத் துன்புறுத்திய மன்னன் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
  26. சங்கம் என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? நாவுக்கரசர்
  27. ஏழாம் திருமுறையைப் பாடியவர் யார்?  சுந்தரர்
  28. சுந்தரரின் இயற்பெயர் யாது? ஆரூரர்
  29. சுந்தரரைத் தத்தெடுத்த குறுநில மன்னர் யார்?  நரசிங்க முனையரையர்
  30. சுந்தரர் எங்கு பிறந்தார்? திருமுனைப்பாடி நாட்டு திருனாவலூர்
  31. சுந்தரரின் பெற்றோர் யார்? சடையனார், இசைஞானியார்
  32. சுந்தரர் யாருடைய மகளை மணக்கவிருக்கையில் தடுத்தாளப்பட்டார்? புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார்
  33. சுந்தரை இறைவனை எவ்வாறு ஏசினார்? பித்தனே
  34. இறைவனை வன்மையாகத் திட்டியதால் பெற்ற பெயர்? வன்தொண்டர்
  35. சுந்தரரின் வேறு பெயர்கள்? வன்தொண்டர், தம்பிரான் தோழர், சேரமான் தோழர், திருநாவலூரார்
  36. சுந்தரரின் முதல் பதிகம் எவ்வாறு தொடங்கும்? "பித்தா"
  37. சுந்தரர் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? திருப்பாட்டு
  38. பெரிய புராணத்திற்கு முதல் நூலாகக் கொள்ளப்படும் சுந்தரரின் நூல்? திருத்தொண்டர் தொகை
  39. சுந்தரர் எத்தனைப் பாடல்கள் பாடியதாக நம்பப்படுகிறது? 38000
  40. சுந்தரர் பாடல்களில் இன்று கிடைக்கும் பாடல் எண்ணிக்கை? 1026
  41. சுந்தரர் பாடல்களில் இடம்பெற்றுள்ள பண்கள்? 18
  42. சுந்தரரின் காலம்? 7,8 ஆம் நூற்றாண்டு
  43. சுந்தரரின் மனைவியர்? பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார்
  44. சுந்தரர் வாழ்ந்த காலம் ? 18 ஆண்டுகள்
  45. சுந்தரர் இரு கண் பார்வை இழந்தவருக்குப் பார்வை வரச்செய்தது எங்கு? காஞ்சி, திருவாரூர்
  46. சுந்தரருக்காக இரண்டாகப் பிளந்து ஓடிய ஆறு எது? காவிரி
  47. சுந்தரரின் மார்க்கம் என்ன? சகமார்க்கம் [யோக நெறி அலல்து தோழமை]
  48. சுந்தரர் முதலை உண்ட சிறுவ்னை மீட்ட ஊர் எது? அவிநாசி
  49. சுந்தரர் எந்ததளத்தை மறந்ததால் சிவன் 'என்னை மறந்தனையோ?' எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது? மழப்பாடி
  50. சுந்தரர் வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் செல்கையில் உடன் சென்றவர் யார்? சேரமான் பெருமாள் நாயனார்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...