இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

இலக்கிய இசங்கள் வினா வங்கி 2

  1. காந்தியை புறநிலை கருத்து முதல்வாதியாக குறிப்பிடுபவர் யார்? ந. பிச்சமூர்த்தி
  2. புதுக்கவிதைகளில் காந்தியத்தின் தாக்கம் எவ்வாறு உள்ளது?                 ஏற்பும், எதிர்விளைவும்
  3. "அத்தனைக்கும் மேலல்லோ அகிம்சை கதைபேசி
  4. வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்" என்றவர்?      புதுமைப்பித்தன்
  5. இந்திய வரலாற்றுப் பதிவுகள் கொண்ட மு.மேத்தாவின் படைப்பு எது? தேச்ப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி
  6. காந்தியக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யாவர்?        பாரதி, நாமக்கல் கவிஞர், அரங்க சீனிவாசன், இராய. சொக்கலிங்கம், சிந்துப் பாவலர், கவிமணி 
  7. மு.வ.வின் நாவல் இலக்கியக் கொள்கை காந்தியத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற அறிஞர்? ந. பிச்சமுத்து
  8. காந்தியத்தாக்கம் உள்ள நாவல்கள் யாவை? கல்கியின் அலையோசை, அகிலனின் எங்கே போகிறோம், புதுவெள்ளம், நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் இராகங்கள்
  9. பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைவது எது? காந்தியத்தின் வெற்றிடம்
  10. பகுத்தறிவு வாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பெரியாரியம், சீர்திருத்தவாதம்
  11. பகுத்தறிவு இயக்கத்தின் கவிதைப் போர்வாள் எது?                           பாரதிதாசன் கவிதைகள்
  12. பகுத்தறிவுவாதம் வளர்ச்சி அடைய துணை நின்ற இதழ்கள் யாவை? காஞ்சி, ஹோம்லேண்ட் 
  13. பகுத்தறிவு இயக்கத்திற்குக் களம் அமைத்துக் கொடுத்தவை யாவை? பெரியாரின் குடியரசு இதழ், கட்டுரைகள், நூல்கள்
  14. மனித மனத்தை ஆராயும் உளவியல் போக்கு யாது? பிராய்டிசம்
  15. பிராய்டிசத்தைத் தொடங்கி வைத்தவர் யார்? சிக்மன் ப்ராய்ட்
  16. பிராடு படைப்பை எவ்வாறு  குறிப்பிடுகிறார்? பகல் கனவு, நனவிலி மனத்தின் வெளிப்பாடு
  17. தமிழில் பிராய்டிய போக்கில் அமைந்த படைப்புக்கள் யாவை?             சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம், நகுலனின் நாய்கள், நினைவுப்பாதை, திஜ. வின் மோகமுள், உயிர்த்தேன், அம்மா வந்தாள், மரப்பசு, செம்பருத்தி, உயிர்த்தேன், ஜெயகாந்தனின் ரிஶி மூலம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், இலக்கணம் மீறிய கவிதை, ஒவ்வொரு கூரைக்கும் கீழே, இந்திரா பார்த்த சாரதியின்  குருதிப்புனல், ஆதவனின் காகித மனிதர்கள், எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ, தஞ்சைப் பிரகாசின் மீனின் சிறகுகள்
  18. பிரெஞ்சு நாட்டுத் தத்துவ அறிஞர் ஜான்பால் ஸார்த்தரால் உருவாக்கப்பட்ட இயக்கம் எது? இருத்தலியல்
  19. நவீனத்துவத்தின் இறுதியான இசம் எது? இருத்தலியல்
  20. இருத்தலியலின் அடிப்படை என்ன? மனித வாழ்வின் சாராம்சத்தைக் கேள்வி கேட்பது, அதற்கு அர்த்த்மே இல்லை என்பதும்
  21. நான் என்னும் நினைப்பி உலகம், வெளி இரண்டிற்கும்தரையாக இருக்கிறது என்றவர் யார்? ஸார்த்தர்
  22. இருத்தலியலை முன்னெடுப்பதில் முக்கியமான படைப்பாளர்கள் யாவர்? ஆல்பர் காம்யு, சாமுவேல் பெக்கெட் 
  23.   இந்தியாவில் இருத்தலியலைக் கையாண்ட படைப்பு -                                       பாதல் சார்த்தரின் நாடகங்கள்
  24. தமிழில் இருத்தியலியலைச் சார்ந்து எழுந்த இந்திரா பார்த்த சாரதியின் புதினங்கள் யாவை?     திரைகளுக்கு அப்பால், வெந்து தணிந்த காடுகள், நிலமென்னும் நல்லாள், பயணம், மாயமான் வேட்டை
  25. இருத்தலியலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நாடகங்கள்?   இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப், போர்வை போர்த்திய உடல்கள், மழை
  26. இருத்தலியல்வாதத்திற்குச் சான்றாக அமையும் பிற படைப்புகள்? சாரு நிவேதாவின் 'எக்ஸிடெஷியலிஸமும் பேன்சி பனியனும், தமிழவனின் ஏற்கன்வே சொல்லப்பட்ட மனிதர்கள், ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ
  27. அமைப்பியலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?      அமைப்பியம், அமைப்பு மையவாதம்
  28. அமைப்பியலை உருவாக்கியவர் யார்? மொழியியல் அறிஞரான பெர்டினாண்ட் சசூர்
  29. இலக்கியப் பிரதியை உடைத்து மொழியியல் அடிப்படையில் அனுகும் முறையினை செய்யும் இசம் எது? அமைப்பியல்
  30. அமைப்பியலில் இருந்து பிறந்த இசம் யாது? பின் அமைப்பியல்
  31. பின் நவீனம் என்ற வார்த்தையை முதன்முதலில் கையாண்டவர் யார்? சோப்மன் என்ற ஓவியர்
  32. பின் நவீனத்திற்கு அடித்தளம் அமைத்தது எது?                                 டெரிதாவின் நிர்-நிர்மானம்
  33. ஒரு பிரதியில் இருக்கும் அர்த்தங்கள் பன்மைத்தன்மை வாய்ந்தவை என்பது யாருடைய முடிவு? டெரிடா [தெரிதா]
  34. ஒரு படைப்பிற்குள் ஆசிரியனின் உள்நோக்கங்கள், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை கண்டறிவது யாது?                            நிர்-நிர்மானம் கோட்பாடு
  35. குறிப்பிடத்தகுந்த பின்-நவீனத்துவ வாதிகள்? டெரிடா, மிஷல், ஃபூக்கோ, தாமஸ் பிஞ்சன், கட்டாரி, லாக் லெக்கான்
  36. மேஜிக்கல் ரியலிசம் தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?  மாய எதார்த்தவாதம்
  37. குறிப்பிடத்தகுந்த பின் - நவீனத்துவவாதிகள் யாவர்? ஜார்ஜ் லூயி போர்ஹே, காப்ரியேல் கார்ஸியா, குந்தர் கிராஸ், ஜான்ஃபெனல்ஸ்
  38. தமிழில் குறிப்பிடற்குரிய பின்-நவீனத்துவப் படைப்புகள் யாவை? எஸ்.ராமகிருஷ்ண்னின் படைப்புகள், சு. வெங்கடேசனின் காவல் கோட்டம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம், கொற்றவை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...