1) வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
8 (விளியோடு எட்டு)
2) வேற்றுமை உருபுகள் யாவை ?
ஐ, ஒடு, கு, இன், அது, கண்
3) எழுவாய் வேற்றுமை என்பது யாது ?
பெயர் வேற்றுமை எழுவாய் வேற்றுமை இரண்டும் ஒன்றே. பெயர் மட்டும் வெளிப்பட்டு நிற்பது எழுவாய் வேற்றுமையாகும்.
4) எழுவாய் வேற்றுமை எதனொடு முடியும் ?
பயனிலை
5) எழுவாய் ஏற்கும் பயனிலைகள் யாவை ?
பொருண்மை சுட்டல், ஏவல் பொருள் கொள்ளல், வினைநிலை கூறல், வினவுதலுக்குப் பொருந்துதல், பண்புணர்த்துவதற்கு வருதல், பெயரையே பயனிலையாகக் கொள்ளுதல்.
6) பொருண்மை சுட்டலுக்குச் சான்று - மரம் உள்ளது.
7) ஏவல் பொருளுக்குச் சான்று - கண்ணே வா
8) வினைநிலை உரைத்தலுக்குச் சான்று - மழை பொழிகிறது.
9) வினவுதலுக்குப் பொருந்துதலுக்குச் சான்று - அது யாது?
10) பண்பு உணர்த்துதலுக்குச் சான்று - நிலா வெள்ளியது
11) பெயரே வயனிலை போதலுக்குச் சான்று - அவள் ராணி
12) பெயர் வேற்றுமையில் தனிப் பெயர் மட்டுமன்றி தொகை நிலைப் பெயரும் வரும் - செவ்வானம் சிவந்தது, மன்னன் சோழன் கலங்கிள்ளி ? பல்யாகசாலை முதுகிடுமிப் பெருவழுதி வெல்க.
13) பெயர் வழுவாது வேற்றுமை சொற்கள் காலம் காட்டுமா ?
காட்டாது ஒன்று தவிர்த்தது
14) காலம் காட்டும் எழுவாய் வேற்றுமை எது ?
தொழில் நிலை (வினையாலணையும் பெயர்)
15) தொல்காப்பியர் எழுவாயை எவ்வாறு குறிக்கிறார் ?
பெயர் நிலைக் கிளவி [எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுகிறார்].
16) இரண்டாம் வேற்றுமை உருபு யாது?
ஐ
17) இரண்டாம் வேற்றுமை உருபு எதைப்பற்றி வரும்?
வினை, வினைக்குறிப்பு [கொடியை நாட்டினான், பொன்னை உடையன்]
18) இரண்டாம் வேற்றுமைப் பொருண்மைகள் எத்தனை?
28 [அன்ன பிறவும்]
19) காப்புப் பொருண்மையில் 2 ஆம் வேற்றுமை - நாட்டைக் காத்தான்
20) ஒப்பல் பொருளில் 2 ஆம் வேற்றுமை - தோல்வியை ஒப்பினான்
21) ஊர்தி " " - தேரை ஊர்ந்தான்
22)இழைத்தல் " - அணிகலன் இழைத்தான்
23) ஓப்பல்[விரட்டல்] " - கிளியை ஓப்பினான்
24) புகழ் " - மன்னனைப் புகழ்ந்தான்
25) பழி " - பகைவரைப் பழித்தான்
26) காதல் " - தலைவியைக் காதலித்தான்
27) வெகுளி " - துரோகியை வெகுண்டாள்
28) செறல் " - தீயாரைச் செற்றான்
29) உவத்தல் " - நண்பரை உவந்தாள்
30) கற்பு [கற்றல்] " - வள்ளுவத்தைக் கற்றாள்
31) அறுத்தல் " - மரத்தை அறுத்தான்
32) குறைத்தல் " - வலியைக் குறைத்தான்
33) தொகுத்தல் " - பாடல்களைத் தொகுத்தான்
34) பிரித்தல் " - நிலத்தைப் பிரித்தான்
31) எண்ணல் " - மரங்களை எண்ணினான்
32) நிறுத்தல் " - பொன்னை நிறுத்தாள்
33) அளத்தல் " - அரிசியை அளந்தாள்
34) ஆக்கல் " - உணவை ஆக்கினான்
35) சார்தல் " - நன்மையைச் சார்ந்தான்
36) செலவு " - ஊரைக் கடந்தாள்
37) கன்றல்[பழகுதல்] - சூதைக் கன்றினான்
38) நோக்கல் " - வெற்றியை நோக்கினாள்
39) அஞ்சல் " - பழியை அஞ்சினாள்
40) சிதைத்தல் " - காட்டைச் சிதைத்தான்
41) மூன்றாம் வேற்றுமை உருபு யாது? ஓடு
42) மூன்றாம் வேற்றுமை எதைப் பற்றி வரும்? கருவி [வினை முதல் கருவி]
43) மூன்றாம் வேற்றுமைக்கான கருவிப் பொருண்மைகள் எத்தனை? 11
44) அதன் தகு கிளவி - உழைப்பால் சிறந்தவர்
45) அதன் வினைப்படல் - வாளால் வெட்டினாள்
46) அதனின் ஆதல் - வணிகத்தால் செல்வனானான்
47) அதனிற் கோடல் - பொன்னால் கிடைத்த நலம்
48) அதனொடு மயங்கல் - பாலொடு தேன் கலந்தது
49) அதனொடு இயைந்த ஒரு வினைக் கிளவி - போரோடு வீரன் வந்தான்
50) அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி - குளத்தொடு கோயில் அமைத்தான்
51) அதனொடு அமைந்த ஒப்பல் ஒப்புரை - பூவோடு சேர்ந்த நார்
52) மூன்றாம் வேற்றுமைக்கான பிற உருபுகள் யாவை? ஆன், இன், ஆல்[இது உலக வழக்கு ஆகும்]
53) நான்காம் வேற்றுமை உருபு யாது? கு
54) நான்காம் வேற்றுமை எப்பொருளில் வரும்? ஏற்றுக் கோடல்
55) நான்காம் வேற்றுமைக்கான பொருட்பாகுபாடுகள் எத்தனை? 10
56) அதற்கு வினையுடைமை - பட்டத்திற்குப் படித்தாள்
57) உடம்படுதல் - தலைமைக்கு உடன்பட்டார்
58) உட்படுதல் - நிலவுக்குத் தண்மை போல
59) திரிந்து அதுவாதல் - கலத்திற்கு மண்
60) பொருத்தமாதல் - பாட்டுக்கு இசைந்த பண்
61) காரணமாதல் - வெற்றிக்கு உழைத்தேன்
62) நட்பாதல் - சோழனுக்கு நண்பன்
63) பகைத்தல் - தீமைக்குப் பகைவன்
64) காதல் - தலைவிக்கு அவன் காதலன்
65) சிறப்பு - புலவருக்குப் புலவர்
66) ஐந்தாம் வேற்றுமை உருபு யாது? இன்
67) ஐந்தாம் வேற்றுமைக்கான பொருள் யாது? இதனைப் போல இது [இதனின் இற்று இது]
68) இன் வேற்றுமைக்கான பொருண்மைகள் எத்தனை? 28
69) ஆறாம் வேற்றுமை உருபு யாது? அது
70) ஏழாம் வேற்றுமை எப்பொருள் உடையது? கிழமைப் பொருள்
71) கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்? 2 [தற்கிழமை, பிறிதின் கிழமை]
72) ஆறாம் வேற்றுமைக்கான பொருண்மைகள் எத்தனை? 17
73) ஏழாம் வேற்றுமை உருபு யாது? கண்
74) ஏழாம் வேற்றுமைக்கான பொருள் யாது? வினை செய் இடம், நிலம், காலம்
75) ஏழாம் வேற்றுமைக்கான பிற உருபுகள் யாவை? கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல், பின், சார், அயல், புடை, தேவகை, எனாஅ, முன், இடை, கடை, தலை, வலம், இடம்.