- பதினெண் கீழ்க்கணக்கு- இதில் உள்ள கணக்கு என்பதன் பொருள் யாது? நூல்
- கீழ் என்பதன் பொருள் யாது? குறைந்த அடி அளவு கொண்டவை
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை 'அடிநிமிர்பில்லாச் செய்யுள்' தொகுதி எனக் குறிப்பது? பன்னிரு பாட்டியல்
- அடி குறைந்த கெழ்கணக்கு நூல்கள் அம்மை என்னும் அழகு பெற்றுவரும் எனக் கூறும் நூல்? தொல்காப்பியம்
- பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்கை முன்வைத்தவர்கள்? பேராசிரியர், மயிலைநாதர்
- அறம் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை? 11
- புறம் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை ? 1
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை? 6
- கருத்துக்கள் எண்ணிக்கை அடிப்படையில் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? 4[நாண்மணிக்கடிகை, திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம்
- பாடல் எண்ணிக்கையால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? 8 [பழமொழியைப் பழமொழி நானூறு எனக் கொண்டால் 9]
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் முந்திய நூல்? திருக்குறள்
- திருக்குறள் எந்தப்பாவால் ஆனது? குறள் வெண்பா
- ஒரு திருக்குறளில் இடம்பெறும் சீர்கள் எத்தனை? 7
- திருக்குறளை இயற்றியவர்? திருவள்ளுவர்
- திருவள்ளுவரின் வேறு பெயர்கள் யாவை? முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர்
- திருவள்ளுவரின் பெற்றோர், மனைவி குறித்துக் கூறும் நூல்? விநோதரசமஞ்சரி
- திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 133
- திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன? 1330
- திருக்குறளில் எத்தனைப் பிரிவுகள் உள்ளன? 3 [அறம், பொருள், இன்பம்]
- அறத்துப்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 38
- பொருள்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 70
- காமத்துப்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 25
- விவிலியத்திற்கு அடுத்து உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல் எது? திருக்குறள்
- திருக்குறளின் வேறு பெயர்கள் யாவை? தமிழ்மறை, பொதுமறை, முப்பால், பொய்யாமொழி, தெய்வநூல், வாயுறை வாழ்த்து, உத்திரவாழ்த்து
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யாவர்? தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், [நிரல்படுத்தப்பட்டது]
- பதின்மரில் உரை கிடைக்கும் ஐவர் யாவர்? மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர்
- ஐவர் உரையையும் இணைத்து உரை வளம் யாரால் வெளியிடப்பட்டது? தருமை ஆதீனம்
- உரைக்கொத்து என்னும் பெயரில் ஆங்கில மொழி பெயர்ப்புடன் திருக்குறள் நூல் வெளியிட்ட அமைப்பு எது? திருப்பனந்தாள் காசி மடம்
- திருக்குறளுக்குப் பாடல் இயற்றியவர்களுள் காலத்தால் முந்தியவர் யார்? பரிமேலழகர்
- திருக்குறளுக்குக் கலைஞர் இயற்றிய காட்சிப்படுத்தலுடன் கூடிய உரை நூல் எது? குறளோவியம்
- திருக்குறளைப் புகழும் பாடற் தொகுப்பு எது? திருவள்ளுவமாலை
- "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்" - யார் கூற்று? ஔவை
- திருவள்ளுவ மாலையில் வள்ளுவத்தைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்? 53
- திருக்குறள் எந்த நூற்றாண்டில் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறாது? கி.பி. 4 [இதற்கு சான்று இல்லை]
- திருக்குறளில் காலமாக இராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுவது? கி.மு.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு
- திருக்குறளின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு எனக் குறிப்பவர் யார்? மறைமலையடிகள்
- திருக்குறள் ஆறாம் நூற்றாண்டினது எனக்கூறுபவர் யார்? வையாபுரி பிள்ளை
- வள்ளுவரின் காலமாக தமிழக அரசு கணிப்பது? கி.மு. 31
- நாலடியாரின் வேறு பெயர் என்ன? நாலடி நானூறு, வேளாண் வேதம்
- நாலடியாரில் எத்தனைப்பாடல்கள் உள்ளன? 400
- நாலடியாரைத் தொகுத்தவர் யார்? பதுமனார்
- நாலடியாரின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்? பதுமனார்
- நாலடியார் எத்தனைப் பால்களாகப் பகுக்கப்பட்டுள்ளது? அறம், பொருள், இன்பம் [12இயல்கள்]
- நாளடியாரில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 40
- நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? ஜி.யு.போப்
- நாலடியாரின் காலம் எது? கி.பி 7ஆம் நூற்றாண்டு
- நாலடியாரின் காலத்தைக் கணிக்க உதவுவது எது? பெருமுத்திரையர்கள் பற்றிய குறிப்பு
- எத்தனை சமண முனிவர்களில் தப்பியவை நாலடியார் என நம்பப்படுகிறது? 8000 சமண முனிவர்கள்
- நாலடியாரை மேற்கோளாகக் கையாண்ட உரையாசிரியர்கள் யாவர்? பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார்
- சமண முனிவர் நக்கீரரால் நாலடியார் இயற்றப்படதாகக் கூறும் நூல் எது? யாப்பருங்கல உரை [இதற்கு சான்று இல்லை. யாரும் இக்கருத்தை ஏற்கவில்லை]
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 19 செப்டம்பர், 2020
பதினெண் கீழ்க்கணக்கு வினா வங்கி 1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக