- களப்பிரர்களை எதிர்த்துப் போராடி விரட்டிய பாண்டிய மன்னன் யார்? கடுங்கோன்
- களப்பிரர்களை எதிர்த்துப் போராடி விரட்டிய பல்லவ மன்னன் யார்? சிம்ம விஷ்ணு
- களப்பிரர் காலத்தைத் தொடர்ந்து வந்த பல்லவர்கள் எத்தனை நூற்றாண்டு ஆதிக்கம் செலுத்தினர்? மூன்று
- பல்லவர் காலம் என்பது - கி.பி. 6 முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
- பல்லவர்களை 'மரபுவழி துலங்கா மரபினர்' என்றவர் யார்? கே.கே,பிள்ளை
- பக்தி இலக்கிய காலம் காலம் என்பது - பல்லவர் காலம்
- பக்திப்பாவாக மலர்ச்சி அடைந்த பா எது? விருத்தப்பா
- சைவ வைணவ சமயங்களை ஆதரித்த மன்னர்கள் யாவர்? பல்லவர்கள், பாண்டியர்கள்
- சைவ சமயப் பெரியார்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? நாயன்மார்
- வைணவ சமயப் பெரியார்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஆழ்வார்கள்
- சமண, பௌத்தர்கள் வலியுறுத்துவது? புலனடக்கம், உண்ணா நோன்பு, இன்ப வெறுப்பு
- ஆழ்வார்களும், நாயன்மார்களும் போற்றியது? பக்தி
- சைவ சமய வழிபடு கடவுள் யார்? சிவன்
- சிவம் என்பதன் பொருள் என்ன? செம்மை, நன்மை
- சிவனுக்கு 78 மாடக்கோவில் கட்டியவர் யார்? சோழன் கோச்செங்கணான்
- சிவனுக்குக் கோச்செங்கணான் கோயில் கட்டியதைத் தேவாரத்தில் குறிப்பிட்டவர் யார்? திருநாவுக்கரசர்
- சோழன் கோச்செங்கணான் 70 கோயில் கட்டியதைக் குறிப்பிட்ட வைணவர்? திருமங்கையழ்வார்
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் சமணத்திலிருந்து எம்மதத்திற்கு மாறினார்? சைவம்
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவனைச் சைவத்திற்கு மாற்றியவர் யார்? திருநாவுக்கரசர்
- தீவிர சமணராக இருந்து சைவம் தழுவிய சைவ அடியார்? திருநாவுக்கரசர்
- சைவ, சமண மக்களிடையே பூசல் ஏற்பட வித்திட்டவர்? மகேந்திரவர்மன்
- மகேந்திரவர்மன் எந்த இடத்தில் சமண பள்ளிகளை இடித்து கோயில் கட்டினான்? திருப்பாதிரிப் புலியூர்
- சைவசமய பக்திப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? பன்னிரு திருமுறை
- பன்னிரு திருமுறையை எத்தனைப் புலவர்கள் பாடினர்? 27
- இறைவனைப் பற்றி சைவ அடியார்கள் பாடிய பாடல்கள் - திருமுறைகள்
- பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்? நம்பியாண்டார் நம்பி
- முதல் மூன்று திருமுறைகளை இயற்றியவர்? திருஞானசம்பந்தர்
- ஞானசம்பந்தரின் இயற்பெயர்? ஆளுடைய பிள்ளை
- சம்பந்தர் பிறந்த ஊர் எது? சீர்காழி
- சம்பந்தரின் பெற்றோர் யாவர்? சிவபாத இருதயர், பகவதியார்
- சம்பந்தரின் வேறு பெயர்கள் யாவை? ஆளுடையபிள்ளை, காழி வள்ளல், பரசமய கோளரி
- பரசமய கோளரி என்பதன் பொருள்? பர-பிற, கோளரி - சிங்கம் [பிற சமயத்தவருக்குச் சிங்கம் போன்றவர்]
- ஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்றவர் யார்? ஆதிசங்கரர்
- ஆதிசங்கர் ஞான சம்பந்தரைத் திராவிட சிசு என்று குறிப்பிடும் நூல்? சௌந்தரிய லஹரி
- மூன்று வயதில் உமாதேவியால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர்? சம்பந்தர்
- திருஞான சம்பந்தரின் முதல் பதிகம் எது? தோடுடைய செவியன்
- சம்பந்தரை 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்றவர் யார்? சுந்தரர்[திருத்தொண்டர் தொகை]
- முதல் மூன்று நாயன்மார் இயற்றிய ஏழு திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தேவாரம்
- தேவாரத்தின் மற்றொரு பெயர் யாது? திருக்கடைக் காப்பு
- சம்பந்தர் பாடிய பாடல்கள் எத்தனை என நம்பப்படுகின்றது? 16000
- கிடைக்கின்ற ஞான சம்பந்தரின் பாடல்கள்? 4168
- தேவாரம் எத்தனைப் பதிகங்களைக் கொண்டமைகின்றது? 383
- சம்பந்தர் பாடிய புதுமையான இசை? யாழ்முரிப் பண்
- சம்பந்தரின் காலம் எது? கி.பி. ஏழாம் நூற்றாண்டு
- சம்பந்தர் எத்தனைத் தளங்களுக்குச் சென்று வழிபட்டார்? 22
- இறைவனிடமிருந்து முத்துச் சிவிகை பெற்றவர்? சம்பந்தர்
- சம்பந்தருடன் உடன் பயணித்தவர் யார்? திருநீலகண்ட யாழ்ப்பாணர்
- சம்பந்தர் எத்தனை பண்களில் பாடினார்? 23
- சம்பந்தர் இறையருளால் முத்துச்சிவிகை பெற்ற இடம்? திருவாயிலறத்துறை
- சம்பந்தர் இறையருளால் பொற்றாளம் பெற்ற இடம்? திருக்கோலக்கா
- சம்பந்தர் இறையருளால் முத்துப்பந்தர் பெற்ற இடம்? பட்டீஸ்வரம்
- சம்பந்தர் இறையருளால் பொற்கிழி பெற்ற இடம்? திருவாவடுதுறை
- சம்பந்தர் இறையருளால் படிக்காசு பெற்ற இடம்? திருவீழிமிழலை
- சம்பந்தர் திருமறைக்காட்டில் நிகழ்த்திய அற்புதம்? மூடிய கோவில் கதவுகளைப் பாடித் திறக்கச்செய்தார்
- சம்பந்தர் மழவன் மகளில் இளம்பிள்ளைவாதத்தை நீக்கிய இடம் எது? திருப்பாச்சிலாச்சிரமம்
- சம்பந்தர் பாம்பு விடத்தை நீக்கியவர் யார்? திருமருகல்
- ஆண் பனையைப் பெண் பனையாக்கியவர் யார்? திருவோத்தூர்
- சம்பந்தர் சமணரை அணல் வாதம், புனல் வாதத்தில் வென்றவர் யார்? மதுரை
- கூன்பாண்டியனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர் - சம்பந்தர்
- கூன்பாண்டியர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற அவர் பெயர் எவ்வாறு ஆனது? நின்றசீர் நெடுமாறன்
- சம்பந்தர் தன்னை வாதத்திற்கு அழைத்த யாரது தலையைக் கொய்தார்? புத்தநந்தி
- சம்பந்தர் சாம்பலில் இருந்து உயிர்த்தெழச்செய்த பெண் யார்? பூம்பாவை
- பூம்பாவைத் திருப்பதிகம் இறுதி அடி? 'காணாதே போதியோ பூம்பாவாய்'
- சம்பந்தர் பதிகங்ளில் இராவணன் கயிலை மலையை எடுத்துத் துன்புற்றதைச் சுட்டும் பாடல் எத்தனையாவது பாடல் ? 8
- சம்பந்தர் தம் எல்லாப் பதிகங்களில் மாலும் அயனும் காண இயலாத பெருமையை எந்தப்பாடலில் சுட்டுகிறார்? 9
- சம்பந்தர் தம் பதிகங்களில் எத்தனையாவது சமண, பௌத்த சமயம் தரும் துன்பத்தைப் பாடும் பாடல்? 10
- சம்பந்தர் எல்லா பதிக பதினோராவது பாடலில் குறிப்பிடும் கருத்து யாது? தன் பெயரையும், ஊரையும் குறிப்பிடுகிறார்
- இறுதிப்பாடல் காப்பாக அமைவதால் திருக்காப்பு எனப்படும் நூல்? தேவாரம்
- சம்பந்தர் இறைவனை எம்மார்க்கத்தில் வழிபட்டார்? சத்புத்திர மார்க்கம்
- சத்புத்திர மார்க்கம் என்பதன் பொருள் யாது? தந்தை மகன் உறவு
- சத்புத்திர செயலாக்க நெறி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிரியை
- சம்பந்தர் எந்த வயதில் இறைவனுடன் கலந்தார்? 16
- சம்பந்தர் தன் மனைவியுடன் இறைவனுடன் கலந்த நாள்? வைகாசி மூல நாள் [பெருமணநல்லூர் - ஊர்]
- தேவாரத்தில் வரும் சொல்லணிகள் யாவை? யமகம், திரிபு, ஏகபாதம்
- துன்பம் நீங்க இறைவனை வேண்டிப் பாடும் சம்பந்தரின் பதிகமாக சைவர்கள் கொள்ளவது? கோளறு பதிகம்
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 20 செப்டம்பர், 2020
பக்தி இலக்கிய வினா வங்கி 1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக