- பொருளொடு பொருள் புணர்த்து ஒப்புமை தோன்றச் செப்புவது என்ன அணி? உவமையணி
- உவமையணி எவற்றின் அடிப்படையில் வரும்? பண்பு, தொழில், பயன்
- உவமையணி எவ்வாறு இயைபுபட வரும்? ஒரு பொருளோடு ஒரு பொருள், ஒரு பொருளோடு பல பொருள், பல பொருளோடு ஒரு பொருள், பல பொருளோடு பல பொருள் என நான்கு வகையில் இயைபுபட வரும்.
- உவமையின் உறுப்புக்கள் யாவை? உவமேயம், உவமம், உவம உருபு, பொதுத்தன்மை [4]
- உவமைகள் எத்தனை வகைப்படும்? 24
- விரி உவமை என்பது யாது? பொதுப்பண்பு, உவம உருபு முதலியன விரிந்து நிற்பது. [பால் போல முகம்]
- தொகையுவமை என்பது யாது? பொதுப்பண்பு, உவம உருபு முதலியன தொக்கி வருவது. [தாமரை முகம்]
- இதரவிதர உவமை என்பது யாது? ஒரே தொடரில் பொருள் உவமையாகவும், உவமை பொருளாகவும் வருவது. [கயல் போல் கண்ணும் , கண் போல கயல் துள்ளும்]
- சமுச்சயவுவமை என்றால் என்ன? ஒன்றை ஒப்பது மற்றொன்றாலும் ஒத்து வரும் என்பது [பால் போல் முகம் என்பது நிறத்தால் மட்டுமன்றி வடிவாலுமொத்து வரும்]
- உண்மை உவமை என்றால் என்ன? உவமையைக் கூறி மறுத்து பின் பொருளைக்கூறி முடிப்பது. [தாமரை அல்ல முகமே இது]
- மறுபொருளுவமை என்றால் என்ன? முன்னர் ஒப்பிட்ட ஒப்புமைக்கு நிகராகப் பிறிதொரு உவமை கூறுவது.
- புகழுவமை என்றால் என்ன? உவமையைப் புகழ்ந்து உவமிப்பது
- நிந்தையுவமை என்றால் என்ன? உவமையைப் பழித்து உவமிப்பது
- நியம உவமை என்றால் என்ன? இதற்கு இதுதான் உவமை என உறுதிபட வருவது.
- அநியம உவமை என்றால் என்ன? நியமித்த உவமை பொருந்தாது என்று மறுத்து உரைப்பது.
- ஐயவுவமை என்றால் என்ன? உவமையை நேரே கூறாமல் பின் ஐயுற்று உரைப்பது ஐயவுவமை.
- தெரிதருதேற்றவுவமை என்றால் என்ன? தான் ஐயப்பட்டதைத் தெளிவாக உரைப்பதாக உவமிப்பது.
- இன்சொல்லுவமை என்றால் என்ன? உவமிக்கும் பொருளை விட உவமைக்குக் கூடுதல் சிறப்பைக் கூறி ஒப்புமையுடையது அல்ல சிறப்புடையது எனல். [இன் -இன்மை]
- விபரீதவுவமை என்றால் என்ன? தொன்றுதொட்டு உவமிப்பதைப் பொருளாக்கி, பொருளை உவமிப்பது.
- இயம்புதல் வேட்கையுடைமை என்றால் என்ன? உவமிக்கப்படும் பொருளை இதைபோன்றது இது என கூறத்துடிக்கும் வேட்கையைக் கூறுவது.
- பலபொருளுவமை என்றால் என்ன? ஒரு பொருளுக்குப் பல உவமை கூறுவது.
- விகார உவமை என்றால் என்ன? ஒரு உவமையை விகாரப்படுத்தி அமைப்பது
- மோகவுவமை என்றால் என்ன? ஒன்றன் மேல் கொண்ட மோகத்தை வெளிப்படுத்துவது போல அமைப்பது.
- அபூதவுவமை என்றால் என்ன? இல்லாத ஒன்றை உவமிப்பது.
- பலவயிற்போலி உவமை என்றால் என்ன? ஒரு தொடராகப் பல உவமைகள் வர ஒவ்வொரு உவ்மைக்கும் உவம உருபு வருவது.
- ஒருவயிற் போலி உவமை என்றால் என்ன? ஒரு தொடரில் பல உவம உவமை வர ஓரிடத்தில் மட்டும் உவம உருபு சேர்ப்பது.
- கூடா உவமை என்றால் என்ன? ஒரு பொருளுக்குக் கூடாததைக் கூடுவதாகச் சொல்லி உவமிப்பது.
- பொது நீங்கு உவமை என்றால் என்ன? உவமையைக் கூறி மறுத்து, உவமிக்கப்படும்பொருளையே உவமை ஆக்குவது. [தனக்குத் தானே உவமை ஆவது]
- மாலையுவமை என்றால் என்ன? ஒரு பொருளுக்குப் பல உவமைகளை மாலை போல அடுக்கிச் சொல்வது.
- உவமையணி வேறு அணிகளோடு கூடி வரும் வகைகள் யாவை? அற்புதவணி, சிலேடையுவமை, அதிசயவுவமை, விரோதவுவமை, ஒப்புமைக்கூட்டவுவமை, தற்குறிப்பேற்றவுவமை, விலக்கவுவமை, ஏதுஉவமை
- உவமையில் நிகழும் பாகுபாடுகள் யாவை? மிகுத, குறைதல், தாழ்தல், உயர்தல், பால்மாறுபடுதல்
- உவம உருபுகள் யாவை? போல, மான, புரைய, பொருவ, நேர, கடுப்ப, நிகர, நிகர்ப்ப, ஏர, ஏய, மலைய, இயைய, ஒப்ப, எள்ள, உறழ, ஏற்ப, அன்ன, அனைய, அமர, ஆங்க, என்ன, இகல, விழைய, எதிர, துணை, தூக்கு, ஆண்டு, ஆங்கு, மிகுதகை, வீழ, இணை, சிவண், கேழ், அற்று, செத்து [35]
- உருவகவணி என்றால் என்ன? உவமை, உவமிக்கப்படும் பொருள் இடையில் வேறுபாடு இன்றி ஒன்றாக இருப்பது.
- உருவகம் எத்தனை வகைப்படும்? 15 [தொகை, விரி, தொகை விரி, இயைபு, இயைபிலி, வியநிலை, சிறப்பே, விரூபகம், சமாதானம், உருவகம், ஏகம், அநேகாங்கம், முற்றே, அவயவம், அவயவி]
- தொகை உருவகம் - சொல்லுருபு தொக்கி வருவது
- விரி உருவகம் - சொல்லுருபு விரிந்து வருவது
- தொகை விரி உருவகம் - உருபு தொக்கியும், விரிந்தும் வருவது
- இயைபு உருவகம் - தொடர்புடையவற்றை உருவகம் செய்வது
- இயைபிலு உருவகம் - தம்முள் இயைபில்லா பொருளை வைத்து உருவகம் செய்வது.
- வியநிலையுருவகம் - ஒரு பொருளின் சில அங்கங்களை உருவகம் செய்தும் வேறு சிலவற்றை உருவகம் செய்யாதும் இறுதியில் அவற்றையுடைய பொருளை உருவகித்து முடிப்பது.
- சிறப்புருவகம் - ஒரு பொருளை எடுத்து, அதற்குச் சிறந்த உருப்புக்களை உருவகம் செய்து பின் அதனையும் உருவகமாக்குவது.
- விரூபகவுருவகம் - ஒரு பொருளுக்கு இது ஆகாது என உணர்த்திப் பலவற்றையும் கூட்டி உருவகம் செய்வது.
- சமாதானவுருவகம் - ஒரு பொருளை உருவகம் செய்து, அது தீங்கு தருவதாகக் கூறி, அந்தத் தீங்கும் அதனால் வருவது இல்லை என விளக்குவது.
- உருவகவுருவகம் - முதலில் ஒன்றை உருவகம் செய்து பின் அதை மாற்றி பிறிதொன்றாக உருவகம் செய்வது.
- ஏகாங்கவுருவகம் - ஒரு பொருளினது அங்கங்கள் பலவற்றுள் ஒன்றை உருவகம் செய்வது.
- அநேகாங்கவுருவகம் - ஒரு பொருளின் அங்கங்கள் பலவற்றை உருவகம் செய்வது.
- முற்றுருவகம் - உறுப்புக்கள், அவ்வுறுப்புக்களையுடைய முதற்பொருள் அனைத்தையும் உருவகம் செய்வது
- அவயவவுருவகம் - உறுப்பை உருவகம் செய்து, அவ்வுறுப்பையுடைய முதலை உருவகம் செய்வது.
- அவயவி உருவகம் - முதலை உருவகம் செய்து தன் உறுப்புக்களை வெறுமனே கூறுவது.
- அவயவம் - உறுப்பு
- அவயவி - முதல்
- உருவகம் பிற அணிகளுடன் கூடி வரும் வகைகள் யாவை? உவமை உருவகம், ஏது உருவகம், வேற்றுமை உருவகம், விலக்கு உருவகம், அவநுதி உருவகம், சிலேடை உருவகம்
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 16 நவம்பர், 2020
பொருளணிகள் -3 [உவம, உருவக அணி]
பொருளணிகள் - 2
- வேற்றுப்பொருள் வைப்பணி என்றால் என்ன? ஒன்றை சொல்லும் போது அதனைச் சொல்லத் தொடங்கி பின் உலகறிந்த வேறொரு செய்தியைச் சொல்லி முடிப்பது.
- வேற்றுப்பொருள் வைப்பணி எத்தனை வகைப்படும்? 8 [முழுதும் சேறல், ஒருவழி சேறல், முரணித் தோன்றல், சிலேடையின் முடித்தல், கூடா இயற்கை, கூடும் இயற்கை, இருமை இயற்கை, விபரீதப்படுத்தல்]
- வேற்றுமையணி என்றால் என்ன?தம்முள் ஒப்புமையுடைய இரு பொருள்களைச் சொல்லி பின் அவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை கூற்றாலும் [வெளிப்படையாக], குறிப்பாலும் விளக்குவது.
- வேற்றுமையணி எத்தனை வகைப்படும் என உரையாசிரியர்கள் கூறுகின்றனர்? 3 [ஒரு பொருள் வேற்றுமைச் சமம், இருபொருள் வேற்றுமைச் சமம், உயர்ச்சி வேற்றுமை]
- வேற்றுமையணி எவற்றோடு கூடி வரும்? குணம், பொருள், சாதி, தொழில்
- விபாவனையணி என்றால் என்ன? ஒன்றைப்பற்றிக் கூற அதற்கு உலகறிந்த காரணத்தால் விளக்காமல் வேறொரு காரணத்தால் விளக்குவது. இது குறிப்பாகவும், வெளிப்படையாகவும் வரும்.
- ஒட்டணி என்றால் என்ன? கவிஞன் கூறக்கருதிய பொருளை மறைத்து அதைப் புலப்படுத்த அதனோடு ஒத்த ஒன்றால் உரைப்பது.
- உவமப்போலி எனப்படும் அணி எது? ஒட்டணி
- ஒட்டணி எத்தனை வகைப்படும்? 4
- அதிசய அணி என்றால் என்ன? உலக நடைகடவாமல், உயர்ந்தோர் வியக்கும் வண்ணம் அமைவது.
- அதிசய அணி எத்தனை வகைப்படும்? 6 [பொருள், குணம், தொழில், ஐயம், துணிவு, தெரிவு]
- தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன? ஒன்றற்கு இயல்பாக உள்ள தன்மையை நீக்கி அதன் மீது தான் கருதும் பிறிதொன்றை ஏற்றிச் சொல்வது
- தற்குறிப்பேற்றம் எத்தகு பொருட்கள் மேல் ஏற்றிச் சொல்லப்படும்? பெயர்பொருள் [அசையும் பொருள்], பெயர் அல் பொருள் [அசையா பொருள்]
- தற்குறிப்பேற்ற அணி உவம உருபுகளோடும் வரும்
- ஏதுவணி என்றால் என்ன? இதனால் இது நிகழ்ந்தது என்று காரணத்தைச் சுட்டிச் சொல்வது ஏதுவணியாகும்.
- ஏது என்பதன் பொருள் யாது? காரணம்
- காரக ஏது அணி என்றால் என்ன? காரகம் என்பது செயலை அடிப்படையாகக் கொண்டது. ஆக்கல், அழித்தல் என்ற இருவகை நிலையில் காரகம் வரும்.
- காரக ஏதுவணி எத்தனை வகைப்படும்? 4 [ கருத்தா காரக ஏது, பொருட்காரக ஏது, கரும காரக ஏது, கருவி காரக ஏது]
- ஞாபக ஏது - காரகத்தில் வராதவை
- அபாவ ஏது - ஒன்று இல்லாமை
- சித்திர ஏது - வியப்பைத் தரும் ஏது அணி
- நிரல் நிறுத்து இயற்றுதல் ------------------- அணியே [நிரல்நிறை]
- நிரல் நிறை அணி என்பது நிரல்நிறைப் பொருல் கோள் சார்ந்தது.
- சுவையணி என்றால் என்ன? உள்ளத்து நிகழும் உணர்வு உடலில் எண்வகை மெய்ப்பாடுகளாக வெளிப்படுவத.
- சுவை அணி எத்தனை வகைப்படும்? 8 [வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை]
- தன் மேம்பாட்டுரை அணி என்றால் என்ன? ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து சொல்வது. [நெடுமொழி கூறல் இதனுடன் ஒத்தது.]
- பரியாயவணி என்றால் என்ன? கருதியதைச் சொல்லாமல் அதை உணர்த்தும் பிரிதொன்றால் உரைப்பது.
- சமாகித அணி என்றால் என்ன? முன்பு கூற முயன்ற சொல்லின் பயன் அதனால் முடிவுறாமல் வேறு ஒன்றால் முடிப்பது.
- சமாகித அணியை கொ. இராமலிங்கத் தம்பிரான் எவ்வாறு குறிப்பிடுகிறார்? துணைப்பேறு
- உதாவத்தணி என்பதன் வேறு பெயர் யாது? வீறுகோளணி
- சிறப்பு, பொருள், குணம் ஆகிய மூன்றால் உண்டாகும் உண்மையை மறுத்து உரைப்பது என்ன அணி? அவநுதியணி
- சிலேடையணி என்றால் என்ன? ஒரு வகை சொற்றொடர் பல பொருள் தருவது.
- சிலேடையணி தமிழில் எவ்வாறு அழைக்கப்படும்? இரட்டுற மொழிதல்
- சிலேடையணி எத்தனை திறப்படும்? 2 [செம்மொழி சிலேடை, பிரிமொழி சிலேடை]
- சிலேடையணி எத்தனை வகைப்படும்? 7 [ஒருவினை, பலவினை, முரண்வினை, நியமம், நியம விலக்கு, விரோதம், அவிரோதம்]
- விசேடவணி என்றால் என்ன? குணம், தொழில், சாதி, பொருள், உறுப்பு இவற்றில் குறைபடும் தன்மையில் அவற்றின் மேம்பாடு தோன்ற உரைப்பது விசேடவணி
- "கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத்து ஒருபொருள் உரைப்பது எது? ஒப்புமைக் கூட்டவணி
- ஒன்றுக்கொன்று முரண்பட்ட சொல்லும் பொருளும் தமக்குள் உள்ள மாறுபடும் தன்மையை வெளிப்படுத்துவது எது? விரோதவணி
- மாறுபடு புகழ் என்றால் என்ன? ஒன்றைப் பழிப்பதற்கு மற்றொன்றைப் புகழ்வது மாறுபடு புகழ்நிலை
- பழிப்பது போல புகழ்வது என்ன அணி? புகழாப் புகழ்ச்சியணி
- நிதரிசனம் என்பதன் பொருள் யாது? கண்ணால் நேரில் காண்பது போன்ற காட்சி
- நிதரிசன அணி எத்தனை வகைப்படும்? புகழ்தோன்றப் பாடுவது, தீமை தோன்றப் பாடுவது என இரு வகைப்படும்
- வினை, பயன் என்னும் இரு பொருளுக்கு ஒரு முடிவு மட்டும் வருவது எந்த அணி? புணர்நிலை அணி
- ஒன்றன் பொருளை மற்றொன்றோடு பரிமாறிக்கொள்வது என்ன அணி? பரிவருத்தனை அணி
- இவருக்கு இது நடக்கட்டும் எனத் தாம் கருதியதைச் சொல்வது என்ன அணி? வாழ்த்தணி
- சங்கீரணவணி என்றால் என்ன? பல அணிகள் தம்முள் பொருந்தி வருவது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...