இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 செப்டம்பர், 2020

தமிழின் தொன்மைச்சிறப்பு

  1. தமிழ் பக்தியின் மொழி என்றவர்? தனிநாயக அடிகள்
  2. தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்ற மொழியறிஞர்? மாக்ஸ்முல்லர்
  3.  ஆற்றல் மிக்கதாகவும், சொல்ல வந்த பல கருத்துக்களை சில சொற்களால் புலப்படுத்துவதாகவும் தமிழ் போல் வேறு எம்மொழியும் இல்லை என்றவர் யார்? பெர்சிவல் பாதிரியார்
  4. வடமொழி, எபிரேயம், கிரேக்கம் ஆகிய உலக இலக்கிய மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதாக கூறியவர்? டேவிஸ் [Rhys Davis]
  5. இந்திய மொழிகள் எவ்வாறு பகுக்கப்படுகின்றது? திராவிட இனம், ஆரிய மொழி இனம்
  6. திராவிட மொழி இனத்தில் உள்ள திருந்திய மொழிகள் எத்தனை?                      6 [தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குடகு, துளு] 
  7. திருந்தா வடதிராவிட மொழிகள் யாவை? பிராகுய், கூர்க், மால்ரோ
  8. திருந்தா மத்திய திராவிட மொழிகள் யாவை? கோலமி- நாய்கி, பார்ஜி, கொண்டி, கோண்டு, குய்-கூவி
  9. திருந்தா தென் திராவிட மொழிகள் யாவை? துளு, கூர்க், துதம், கோதம்
  10. வட, தென், மத்திய திராவிட மொழிகளைப் பகுத்துக் கூறியவர்? பரோ
  11. வட இந்திய மொழிகள் பெரும்பாலானவை எந்த இனத்தைச் சேர்ந்தவை? ஆரியத் திராவிட இனம்
  12. திராவிட மொழி இனத்தின் தாய் மொழி எது? தமிழ்
  13. கால்டுவெல் குறிப்பிடும் திராவிட மொழிகள் எத்தனை? 12
  14. அண்மைக்காலத்தில் குறிக்கப்படும் திராவிட மொழிகளின் எண்ணிக்கை? 20
  15. தமிழும் வடமொழியும் கலந்து வடநாட்டவர் பேசிய மொழி எது? வடகு
  16. தமிழும் வடுகும் கலந்து பிறந்த மொழி என்ன? கன்னடம்
  17. தமிழும் வடுகும் கலந்து கன்னடம் பிறந்ததாகக் குறிக்கும் இலக்கியம் எது? கலிங்கத்துப்பரணி
  18. "மழலைத் திருமொழியிற் சில வடுகும் சில தமிழும்                                                குழறித் தருநாடியார் குறுகிக் கடைதிறமின் - எனும் கலிங்கத்துப்பரணி வரி எம்மொழி குறித்து பேசுகிறது? கன்னடம்
  19. கன்னடத் தொடர்பாலும், கிரந்த எழுத்துக்களின் செல்வாக்காலும் தமிழில் இருந்து பிரிந்த மொழி எது? மலையாளம்
  20. ரிக் வேதத்தில் அயித்ரே பிரமாணத்தில் குறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திராவிட  இனம் எது? ஆந்திரர்
  21. கி.மு.வில் இயற்றப்பட்ட உரோம நாடகத்தில் இருப்பதாகக் கூறப்படும் சொற்கள் எம்மொழிச் சொற்கள்? கன்னடம்
  22. இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் எனக் குறிக்கும் நூல்? பிங்கல நிகண்டு
  23. தமிழ் வையை தண்ணம் புனல் என்னும் பரிபாடல் வரியில்  தமிழ் என்னும் சொல் குறிக்கும் பொருள்? இனிமை
  24. தமிழ் என்பதன் பொருள்கள் யாவை ? இனிமை,  நீர்மை, அழகு, மென்மை
  25. வால்மீகி தமிழை எவ்வாறு குறிக்கிறார்? மதுரமான மொழி
  26. இனிமைத் தமிழ்மொழி எமது - எனக் குறிப்பவர் யார்? பாவேந்தர்
  27. தமிழுக்கு அமுதென்று பேர் - எனப் பாடியவர் யார்? பாவேந்தர்
  28. வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி - எனத் தமிழைச் சிறப்பித்தவர் யார்? மகாகவி பாரதியார்
  29. "குமரி மாந்தன் முதல் மாந்தன். அவன் பேசிய மொழியே முதன்மொழி. அதுவே நந்தம் தாய் மொழியாம் தமிழ்"- என்றவர் யார்? பாவாணர்
  30. செம்மொழிக்குரியதாகச் சொல்லப்படும் பண்புகள் எத்தனை? 16
  31. பிற மொழி தேவையின்றி சொல்வளம், கருத்துவளம், இலக்கணக் கட்டுப்பாடுகள் நிறைந்த மொழி எவ்வாறு அழைக்கப்படும்? தனிமொழி
  32. தனிமொழிகள் யாவை? தமிழ், இலத்தீன், கிரீக், ஹீப்ரு, சமஸ்கிருதம், சீனம்
  33. தமிழில் உள்ள செம்மொழி நூல்கள் எத்தனை? 41 [பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியம், தொல்காப்பியம், இறையனார் களவியல்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...