இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 செப்டம்பர், 2020

சங்க இலக்கிய வினா வங்கி [எட்டுத்தொகை -அகப்பாடல்]

  1. எட்டுத்தொகை நூல்களின் மற்றொரு பெயர் என்ன? எண்பெருந்தொகை
  2. எட்டுத்தொகை நூல்களில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 2352 
  3. எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்து உட்பட பாடல்களின் எண்ணிக்கை? 2358
  4. எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் பற்றியன எத்தனை? 5 [நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு]
  5. எட்டுத்தொகையில் புறம் பற்றிய நூல்கள் எத்தனை? 2[புறனானூறு, பதிற்றுப்பத்து]
  6. அகமும், புறமும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? பரிபாடல்
  7. நானூறு பாடல்கள் கொண்ட எட்டுத்தொகை நூல்கள் எத்தனை?                        4    [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு]
  8. பதிக முன்னோடியாக அமைந்த எட்டுத்தொகை நூல்கள் யாவை? ஐங்குறுநூறு,  பதிற்றுப்பத்து
  9. பாவால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? கலித்தொகை, பரிபாடல்
  10. எண்ணிகையால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 2
  11. ஆசிரியப்பாவால் அமைந்த எட்டுத்தொகை நூல்கள்? 6
  12. முழுமையாகக் கிடைக்கும் எட்டுத்தொகை நூல்கள்  எத்தனை? 4 [நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு]
  13. நானூறு பாடல்கள் அடங்கிய எட்டுத்தொகை நூல்கள் யாவை? 4 [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு] 
  14. முதற்பகுதியும், இறுதியும் கிடைக்காத எட்டுத்தொகை நூல்கள் யாவை?       2 [பதிற்றுப்பத்து, பரிபாடல்]
  15. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்? பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
  16. நற்றிணையைத் தொகுத்தவர் யார்? தெரியவில்லை
  17. குறைவான அடிகளோ அதிக அடிகளோ இல்லாமல் இடைநிகரவான அடிகளைக் கொண்டு இருப்பதால் நற்றிணை எனப்பட்டிருக்கலாம் என்றவர் யார்? டாக்டர் ந. சஞ்சீவி
  18. நற்றிணை பாடல் எண்ணிக்கை எத்தனை? 400+1 [401]
  19. நற்றிணை பாடிய புலவர்களின் எண்ணிக்கை யாது? 187
  20. நற்றிணை அடிவரையறை - 9 - 12
  21. நற்றிணையில் எத்தனை மன்னர்கள் குறிக்கப்படுகின்றனர்? 10 
  22. நற்றிணையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனைபேர்? 5 [கொட்டம்பலவனார், தும்பிசேர்கீரனார், விழிக்கண்பேதைப் பெருங்க் கண்ணனார், தேய்புரிப் பழங்கயிற்றனார், தனிமகனார்]
  23. நற்றிணையில் பாடிய பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை? 9
  24. குறுந்தொகை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு
  25. குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை? 400+1 [401]
  26. குறுந்தொகை அடியெல்லை - 4 - 8
  27. குறுந்தொகையில் 9 அடி உள்ள பாடல் எது? 307
  28. குறுந்தொகையில் பாடல் இயற்றிய புலவர்கள் எத்தனை பேர்? 203
  29. குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்? பூரிக்கோ
  30. குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் யார்? தெரியவில்லை
  31. முதலில் தொகுக்கப்பட்ட நூல் எது? குறுந்தொகை
  32. குறுந்தொகையில் வரலாற்றுப் பதிவுகள் உள்ள பாடல்கள் பாடிய புலவர் யார்? பரணர்
  33. குறுந்தொகையில் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை? 236
  34. திருவிளையாடற் புராணத்தில் தருமி வரலாற்றை அறிய உதவும் பாடல்? குறுந்தொகை -  கொங்குதேர் வாழ்க்கை
  35. குறுந்தொகையில் அதிகப் பாடல் பாடிய பெண்பாற் புலவர்கள்? நன்னாகையார், வெள்ளிவீதியார்
  36. குறுதொகையில் பாடல் இயற்றிய புலவர்களில் ஊர் பெயரோடு பெயர் பெற்றப் புலவர்கள் ? 4 [அள்ளூர் நன்முல்லையார், அரிசில் கிழார், கூடலூர் கிழார், மதுரை நல்வெள்ளியார்]
  37. குறுந்தொகையில் தொழிலால் பெயர் பெற்றப் புலவர்கள் எத்தனை பேர்? 3 [ ஆசிரியன் பெருங்கண்ணனார், கொல்லன் அழிசி, வள்ளுவன் பெருஞ்சாத்தனார்]
  38. குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனை பேர்?       18 [அணிலாடு முன்றிலார், குப்பைக் கோழியார், வில்லக விரலினார், விட்ட குதிரையார், மீனெறி தூண்டிலார், நெடுவெண்ணிலவினார்]
  39. குறுந்தொகையில் வடமொழி பெயர்கொண்ட புலவர்கள்? 6 [உருத்திரன், சண்டிலியன், உலோச்சன், மாதிரத்தன், பவுத்திரன், பிரமந்தன்]
  40. தொடரால் பெயர் பெற்றவர்கள் மிகுதியும் உள்ள நூல் எது? குறுந்தொகை 
  41. ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர் யார்? யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் பெருவழுதி
  42. ஐங்குறுநூறைத் தொகுத்தவர் யார்? கூடலூர் கிழார்
  43. ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை? 500+1 [501]
  44. ஐங்குறுநூறு அடிவரையறை? 3 - 5
  45. ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர்கள்? 5 புலவர்கள்
  46. ஐங்குறுனூறு பதிகம், சதகத்திற்கு முன்னோடி
  47. திணைக்கு ஒரு புலவர் பாடியுள்ளனர்
  48. ஐங்குறுநூற்றில் மருதம் பாடிய புலவர் யார்? ஓரம்போகியார்
  49. ஐங்குறுநூற்றில் நெய்தல் பாடிய புலவர் யார்? அம்மூவனார்
  50. ஐங்குறுநூற்றில் குறிஞ்சி பாடிய புலவர் யார்? கபிலன்
  51. ஐங்குறுநூற்றில் பாலை பாடிய புலவர் யார்? ஓதலாந்தையார்
  52. ஐங்குறுநூற்றில் முல்லை பாடிய புலவர் யார்? பேயனார்
  53. ஐங்குறுநூற்றில் அந்தாதித் தொடையில் அமைந்த பத்து எது?       தொண்டிப் பத்து
  54.  ஐங்குறுநூற்றில் முதல் பத்து எது?  வேட்கைப் பத்து 
  55.  பத்துப்பாடல்களிலும் முதல் அடியும் மூறாவது அடியும் ஒன்றாக இருக்கும் பத்து எது? வேட்கைப்பத்து
  56. தோற்றவர் புல் மேயச் செய்த வரலாற்றைக் காட்டும் நூல்? ஐங்குறுநூறு ["வாழி ஆதன் வாழி அவினி/ பகைவர் புல்ஆர்க: பார்ப்பார் ஓதுக"] 
  57. ஐங்குறுநூற்றில் தொடரால் பெயர் பெற்றவர் யாரும் இல்லை
  58. ஐங்குறுநூற்றில் அதிகம் குறிக்கப்படு ஆதன் என அழைக்கப்பட்டோர் யார்? ஆவியர் குடியினைச் சேர்ந்தவர்கள்
  59. கலித்தொகையைத் தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
  60. கலித்தொகையைச் சிறப்பிக்கும் வரிகள்​ : 'கற்றறிந்தார் ஏத்தும் கலி, கல்விம்வலார் கண்ட கலி, நனிஆர்வம் பொங்கும் கலி
  61. கலித்தொகைப் பாடல் எண்ணிக்கை? 149+ 1 [150]
  62. கலித்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை? 5
  63. கலித்தொகை அடிவரையறை? 11 - 80
  64. கலித்தொகையில் பாலையைப் பாடியவர்? பெருங்ககுங்கோ
  65. கலித்தொகையில் குறிஞ்சித் திணை பாடலைப் பாடியவர் யார்? கபிலன்
  66. கலித்தொகையில் மருதம் பாடியவர் யார்? மருதன் இளநாகனார்
  67. கலித்தொகையில் முல்லைத் திணை பாடியவர் யார்? நல்லுருத்திரன்
  68. கலித்தொகையில் நெய்தல் பாடியவர் யார்? நல்லந்துவனார்
  69. ஓரங்க நாடகம் போன்ற அமைப்பினைக் கொண்ட சங்க இலக்கியம்? கலித்தொகை
  70. அகநானூறைத் தொகுத்தவர் யார்? உருத்திர சன்மனார் 
  71. அகநானூற்றைத் தொகுப்பித்தவர் யார்? பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  72. அகநானூற்றின் பாகுபாடுகள் யாவை? 3 [களிற்றியானைநிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை
  73. அகநானூறு சிறப்புப் பெயர்கள் யாவை? நெடுந்தொகை, அருந்தொகை நானூறு, அகப்பாட்டு
  74. அகநானூற்றுப் பாடல் எண்ணிக்கை? 400+1
  75. அகநானூற்றுப் பாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? 158 
  76. அகநானூற்று அடியெல்லை யாது? 13 - 31
  77. சங்கப் பாடல்களை இயற்றிய புலவர்களின் எண்ணிக்கை? 473                     [30 பெண்பாற் புலவர்கள்]

  78. களிற்றியானைநிரைப் பாடல்களின் எண்ணிக்கை? 1 - 120
  79. மணிமிடைப் பவளம் பாடல்களின் எண்ணிக்கை? 121 - 300
  80. நித்திலக்கோவை பாடல்களின் எண்ணிக்கை? 301 - 400
  81. அகநானூற்றுப் பாலைத்திணை வைப்பு - 1,3,5 [ஒற்றைப்படை]- 200
  82. அக. நா- குறிஞ்சித் திணை வைப்பு - 2, 8, 12, 18,.... [80] 
  83. அகநானூறு முல்லை வைப்பு - 4, 14, 24 [40]
  84. அகநானூறு மருதம் வைப்பு - 6, 16, 26 [40]
  85. அகநானூறு நெய்தல் வைப்பு - 10, 20, 30 [40]
  86. அகநானூற்றின் செம்பாதி எத்திணைப் பாடல்கள் அதிகம்? பாலை
  87. அகநானூற்றில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்? கீரனார், ஊட்டியார்
  88. தமிழரி திருமண முறையைக் காட்டம் பாடல்? அகம் - 86
  89. சங்க காலத்தில் குடவோலை தேர்தல் முறை இருந்ததைக் காட்டும் பாடல்? அகம் - 77
  90. பெண்கள் உப்பிற்கு விலையாக நெல்லை வழங்கியமைக் காட்டும் பாடல்? 140
  91. குறிஞ்சிப்பண் பாடலைக் கேட்ட யானை திணையை உண்ண மறந்து தூங்குதல்
  92. அகநானூற்றில் இடம் பெற்ற புலவர்களின் எண்ணிக்கை? 10 [அஃதை, அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, அத்தி, ஆதிமந்தி, எவ்வி, எழினி, உதியஞ்சேரலாதன்,  கரிகால் வளவன், தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...