- எழுத்ததிகாரத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை? 202
- நன்னாலார் எழுத்திலக்கணத்திற்கு அமைத்த பாகுபாடுகள் எத்தனை? 12
- எழுத்திலக்கண பாகுபாடுகள் யாவை? எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ச்சி
- எழுத்து என்பது யாது? மொழியின் முதற் காரணமான அணுத்திரள் ஒலியால் உருவாவது
- எழுத்து வகைகள் யாவை? முதல், சார்பு
- முதல் எழுத்து எத்தனை வகைப்படும் ? உயிர், மெய்
- முதல் எழுத்துக்கள எத்தனை? 30
- சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 10
- சார்பெழுத்துக்களின் வகைகள் யாவை? உயிர்மெய், ஆய்தம் [முற்றாய்தம்], உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
- சார்பெழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை யாது? 369
- உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை - 216 [12X18 = 216
- முற்றாய்த எழுத்துக்களின் எண்ணிக்கை - 8
- உயிரளபெடை எழுத்துக்களின் எண்ணிக்கை - 21
- ஒற்றளபெடை எழுத்துக்களின் எண்ணிக்கை - 42
- குற்றியலிகர எழுத்துக்களின் எண்ணிக்கை - 37
- குற்றியலுகர எழுத்துக்களின் எண்ணிக்கை - 36
- ஐகாரக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 3
- ஔகாரக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 1
- மகரக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 3
- ஆய்தக்குறுக்க எழுத்துக்களின் எண்ணிக்கை - 2
- பெயரிடுதலின் வகைகள் யாவை? இடுகுறிப்பெயர், காரணப்பெயர் [இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப் பெயர், காரணப் பொதுப் பெயர், காரணச் சிறப்புப் பெயர்]
- உயிர் எழுத்தை நன்னூலார் எவ்வாறு கூறுகிறார்? ஆவி
- சுட்டெழுத்துக்கள் யாவை? அ, இ, உ
- சுட்டு வகைகள் ? அகச்சுட்டு, புறச்சுட்டு [ நன்னூலார் குறிக்கவில்லை]
- முதலில் வரும் வினா எழுத்துக்கள் யாவை? எ, யா
- இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் யாவை? ஆ, ஓ
- முதலிலும், ஈற்றிலும் வரும் வினா எழுத்து யாது? ஏ
- வல்லின எழுத்துக்கள் யாவை? க, ச, ட, த, ப, ற
- மெல்லின எழுத்துக்கள் யாவை? ங, ஞ, ந, ண, ம, ன
- ஐயின் இன எழுத்து யாது? இ
- ஔ - யின் இன எழுத்து யாது? உ
- இன எழுத்து ஆவதற்கு உரிய காரணங்கள்? தானம், முயற்சி, அளவு, பொருள், வடிவு இவற்றில் ஒன்றோ பலவோ ஒத்து அமைவது.
- எழுத்து உருவாக காற்றுப் பொருந்தும் இடம்? உரம் [நெஞ்சு-நுரையீரல்], கண்டம் [கழுத்து], தலை, மூக்கு
- எழுத்து உருவாகத் தொழிற்படும் உறுப்புக்கள் யாவை? இதழ், நாக்கு, பல், மேல் அண்ணம்
- மிடற்றில் [கழுத்து, தொண்டை] உருவாகும் எழுத்துக்கள் யாவை? உயிர், இடையின எழுத்துக்கள்
- மெல்லெழுத்துக்கள் எங்கு பிறக்கும்? மூக்கு
- வல்லெழுத்துக்கள் எங்கு பிறக்கும்? நெஞ்சு [உரம்]
- அங்காத்தலால் [வாயைத் திறத்தல்] பிறக்கும் எழுத்துக்கள் யாவை? அ,ஆ
- மேல் அண்ணத்தின் பல்லை அடி நாக்கின் விளிம்பு பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? இ, ஈ, எ, ஏ, ஐ
- இதழ் குவிவால் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? உ, ஊ, ஒ, ஓ, ஔ
- நாக்கின் அடிப்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? க், ங்
- நாக்கின் இடைப்பகுதி அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள்? ச், ஞ்
- நாக்கின் நுனி அண்ணத்தின் நுனி பொருந்தப் பிறப்பவை? ட், ண்
- அண்பல் [அண்ண அடிப்பகுதி] நா நுனி பொருந்தப் பிறப்பவை? த், ந்
- மீகீழ் [மேல், கீழ்] இதழுறப் பிறப்பவை யாவை? க், ம்
- யகரம் எவ்வாறு பிறக்கும்? அடி நா அடி அண்ணம் பொருந்துதல்
- அண்ணத்தை நுனி நா வருடப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? ர், ழ்
- அண்ணப்பல் அடியில் நாக்கின் விளிம்பு பொருந்தப் பிறப்பது? ல்
- அண்ணத்தை நாக்கின் நுனி வருட பிறப்பது? ள்
- மேற்பல் கீழ் இதழைப் பொருந்தப் பிறப்பது? வ்
- அண்ணத்தை நுனி நா பொருந்தப் பிறக்கும் எழுத்துக்கள் யாவை? ற்,ன்
- சார்பெழுத்தாகிய ஆய்தம் பிறக்கும் இடம் எது? தலை
- ஆய்த எழுத்துப் எவ்வாறு பிறக்கும்? வாயை அங்காத்தல்
- ஆய்தம் தவிர்த்த ஒன்பது சார்பெழுத்துக்கள் எவ்வாறு பிறக்கும்? தம் முதல் எழுத்தைப் போலப் பிறக்கும்
- எழுத்துக்களை ஒலிப்பதில் நிகழும் வேறுபாடுகள் யாவை? எடுத்தல் [உயர்த்தல்], படுத்தல் [குறைத்தல்], நலித்தல் [இடைப்பட்டு ஒலித்தல்]
- ஆய்த எழுத்து சொல்லில் எங்கு வரும்? உயிரெழுத்தின் பின்னும், க்,ச், ட், த், ப், ற் என்ற ஆறு வல்லெழுத்தின் முன்னும் வரும்
- முற்றாய்த வகைகள் எத்தனை? 8
- அளபெடையின் வகைகள் யாவை? உயிரளபெடை, ஒற்றளபெடை
- உயிர் எழுத்து எதற்காக அளபெடுக்கும்? செய்யுளில் இசையை நிறைவு செய்ய
- உயிரளபெடை எவ்வாறு எழுதப்படும்? நெட்டெழுத்தை அடுத்து அதன் இனமான குற்றெழுத்து எழுதப்படும்.
- சொல்லில் எங்கெங்கு உயிர் அளபெடுக்கும்? முதல், இடை, கடை
- அளபெடை வகைகள் எத்தனை? 4
- அளபெடை வகைகள் யாவை? இன்னிசை அளபெடை, இசைநிறை அளபெடை, சொல்லிசை அளபெடை, இயல்பு அல்லது இயற்கை அளபெடை [இவை நன்னூலார் கூறும் வகைகள் அல்ல]
- உயிரளபெடைகளின் எண்ணிக்கை? 21[மொழி முதல், இடை, கடை என மூன்று இடங்களில் 7 நெட்டெழுத்துக்கள் 3X7 = 21]
- ஒற்று சொல்லில் எங்கு அளபெடுக்கும்? இடை, இறுதி
- ஒற்று எச்சூழலில் அளபெடுக்கும்? இசையை நிறைவு செய்ய
- அளபெடுக்கும் ஒற்றெழுத்துக்கள் யாவை? ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள்,
- அளபெடுக்கும் ஒற்று அல்லா எழுத்து எது? ஂஅய்தம்
- ஒற்றளபெடையின் எண்ணிக்கை? 42 [மொழியின் இடை மற்றும் இறுதியில் பதினோரு எழுத்துக்கள் அளபெடுக்கும். தனிக்குறிலை அடுத்தோ, இரு குறிலை அடுத்தோ அளபெடுக்கும்: 2X 2X11= 44 இவற்றில் ஆய்தம் குறிலிணையை அடுத்து அளபெடுக்காது. அவை 2 கழிய 42]
- குற்றியலிகரம் என்பது யாது? குறுகி ஒலிக்கும் இகரம்
- தனிச்சொல்லில் எங்கு இகரம் குறுகி ஒலிக்கும்? மியா எனும் அசைச்சொல்
- புணர் மொழியில் எங்கு உகரம் குறுகி ஒலிக்கும்? குற்றியலுகரத்தை அடுத்து யகரம் வர அவை இணைந்து இகரமாக மாறி குறுகி ஒலிக்கும்
- குற்றியலிகர எண்ணிக்கை? 37
- குற்றியலுகரம் என்பது யாது? குறுகி ஒலிக்கும் உகரம்[சொல் இறுதியில் வல்லெழுத்தை ஊர்ந்து வரும் உகரம் குறுகி ஒலிக்கும்
- குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? 6
- நெடில் தொடர் குற்றியலுகரம் என்பது யாது? தனி நெடிலை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [மாடு, ஆடு]
- ஆய்தத்தொடர் குற்றியலுகரம் என்பது யாது? தனிக்குறிலோடு இணைந்து வரும் ஆய்தத்தை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [அஃது]
- உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்பது என்ன? உயிரைத் தொடர்ந்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [முரசு]
- வன்தொடர்க் குற்றியலுகரம் என்பது யாது? வல்லெழுத்தைத் தொடர்ந்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [எட்டு, பற்று]
- மென்தொடர் குற்றியலுகரம் என்பது யாது? மெல்லெழுத்தை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [சங்கு, நண்டு]
- இடைத்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன? இடையெழுத்தை அடுத்து வரும் வல்லெழுத்தை ஊர்ந்த உகரம் [சார்பு, மார்பு]
- குற்றியலுகர எழுத்துக்களின் எண்ணிக்கை? 36 [6 வல்லெழுத்து, 6 வகை 6X6 = 36]
- குறுகி ஒலிக்கும் சார்பெழுத்துக்கள் எத்தனை? 6
- குறுக்கம் எனக் குறிக்கப்படும் சார்பெழுத்துக்கள் எத்தனை? 4
- ஐகாரக்குறுக்கம் என்பது யாது? ஐகாரம் தன் 2 மாத்திரையில் இருந்துக் குறுகி ஒலிப்பது.
- ஐகாரம் குறுகும் இடங்கள் யாவை? சொல்லின் முதல், இடை, கடை
- ஐகாரக்குறுக்க வகைகள் யாவை? 3
- ஐகாரம், ஔகாரம் குறுகா இடங்கள் யாவை? தன்னைக் குறிக்கும் இடத்திலும், அளபெடையிலும் குறுகாது.
- ஔகாரம் சொல்லின் எவ்விடத்தில் குறுகி ஒலிக்கும்? முதலில்
- ஔகாரக்குறுக்கம் எத்தனை வகைப்படும்? 1
- மகரக்குறுக்கம் என்பது யாது? மகரம் தன் அரை மாத்திரையில் இருந்துக் குறுகி ஒலிப்பது
- மகரம் எப்போது குறுகி ஒலிக்கும்? னகர, ணகரத்தை அடுத்து வருகையில் குறுகும்.
- மகரக்குறுக்க எத்தனை வகைப்படும்? 3
- ஆய்தம் எப்போது குறுகி ஒலிக்கும்? லகர, ளகரத்தை இறுதியாகக் கொண்ட சொற்கள் நிலை மொழியாகிப் புணர்கையில் ல், ள், ஆய்தமாகத் திரியும். அந்த ஆய்தம் கால் மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும்.
- ஆய்தக்குறுக்கம் எத்தனை வகைப்படும்? 2
- புள்ளி பெறும் மெய் அல்லாத எழுத்துக்கள் யாவை? எ, ஒ[குறில்]
- மாத்திரை என்பது யாது? ஒலி அளவைக் குறிப்பது
- உயிரளபெடையின் மாத்திரை யாது? 3
- இரு மாத்திரை பெறும் எழுத்துக்கள் யாவை? நெடில்
- ஒரு மாத்திரை பெறும் எழுத்துக்கள் யாவை? குறில், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், ஒற்றளபெடை
- அரை மாத்திரை பெறுபவை யாவை? மெய் எழுத்துக்கள், குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றாய்தம்
- கால் மாத்திரை அளவு பெறுபவை யாவை? மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம்
- மாத்திரை அளவு யாது? இமைத்தல், நொடித்தல்
- எழுத்துக்கள் மாத்திரை அளவிறந்து ஒலிக்கும் இடங்கள் யாவை? இசை, விளி [அழைத்தல்], பண்டமாற்று [பொருட்களை விற்பனை செய்கையில்]
- மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் யாவை? 12 உயிர், க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங உயிர் மெய்யாக
- வகரம் எப்போது மொழி முதலில் வராது? உ, ஊ, ஒ, ஓ
- ய எவற்றோடு இணைந்து மொழி முதலில் வரும்? அ, ஆ, உ, ஊ, ஒ, ஔ
- ஞகரம் எவற்றோடு இணைந்து மொழி முதலில் வரும்? அ, ஆ, எ
- மொழி இறுதியில் வரும் எழுத்துக்கள் யாவை? 12 உயிர் தனித்தோ மெய்யோடு கூடி உயிர் மெய்யாகவோ வரும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 மெய், குற்றியலுகரம் [24]
- அளபெடையில் மட்டும் மொழி இறுதியில் வரும் உயிர் எழுத்துக்கள் யாவை? அ, இ, உ, எ, ஒ
- எகரம் உயிராக மட்டுமே மொழி இறுதியில் வரும்,
- க், வ்- உடன் இணைந்து மட்டும் மொழி இறுதியில் வரும் எழுத்து எது? ஔ
- மெய்யெழுத்துக்கள் இணைந்து வருவது யாது? மெய் மயக்கம்
- மெய் மயக்கம் எத்தணை வகைப்படும்? 2 [உடனிலை, வேற்று நிலை]
- உடனிலை மெய் மயக்கம் ஆகும் எழுத்துக்கள் யாவை? ர், ழ் தவிர்த்த 16 எழுத்துக்களும் தம்முடன் தாம் மயங்கும்
- வேற்றுநிலை மெய் மயக்கமாகா எழுத்துக்கள் யாவை? க், ச், த், ப்
- ங் - க் - மயங்கும்
- வ் - ய் - மயங்கும்
- ஞ் - ச், ய் - மயங்கும்
- ந் - த், ய் - மயங்கும்
- ட், ற் - க், ச், ப் - மயங்கும்
- ண், ன் - க், ச், ஞ், ப், ம், ய், வ் - மயங்கும்
- ய்,ற்,ழ் - க், த், ந், ப், ம், ச், ஞ், ய், வ், ங் - மயங்கும்
- ல், ள் - க், ச், ப், வ், ய் - மயங்கும்
- ஈரொற்று நிலை என்றால் என்ன? தனி மெய்யுடன் தனி மெய் மயங்குவது [மெய் + மெய் + மெய்]
- ய்,ர்,ழ் - க், ச், த், ப், ங், ஞ், ந், ம் மயங்கும் [வேய்க்குறை, வேர்ச்சிறை]
- போலி என்பது யாது? போல இருப்பது போலி ஆகும்
- போலி எத்தனை வகைப்படும்? 3 [நன்னூல் கூற்று அல்ல]
- போலி வகைகள் யாவை? முதல், இடை, கடை
- மகரம் போலியாகும் போது எந்த எழுத்தாகத் திரியும்? ன்
- ம் - ன் ஆகத்திரியும் இடம் யாது? சொல்லின் இறுதியில்
- எத்தகு சொற்களில் மகர ஈறு ன் ஆகத் திரியும்? அஃறிணைப் பெயர்களில்
- நன்னூல் குறிக்காத போலிகள் சில : குற்றியலுகரம் சில நேரம் அர் பெற்று முடியும் [சுரும்பு -சுரும்பர் ஆகும்] லகர ஈறு ரகர ஈறாக மாறும் [பந்தல் - பந்தர்] மொழி முதலிலும் போலி வரும் [பசல் - பைசல், மயல் - மையல்]
- மொழிக்கு இடையில் எங்கு போலி வரும்? ஐ, ய அடுத்து வரும் நகரம் ஞகரம் ஆகும் [மைந்நின்ற - மைஞ்ஞின்ற, செய்ந்நின்ற - செய்ஞ்ஞின்ற]
- அகரத்தோடு இகரம் அல்லது யகரம் சேரும் போது எப்படி ஒலிக்கும்? ஐ
- அகரத்தோடு உகரம், வகரம் சேரும் போது எப்படி ஒலிக்கும்? ஔ
- எழுத்துச் சாரியை என்பது யாது? எழுத்துக்களை உச்சரிக்க எழுத்தோடு சேர்த்து சொல்லும் சொல் சாரியை
- மெய்யெழுத்துக்களின் சாரியை யாது? கரம் [க் - ககரம்]
- நெட்டெழுத்தின் சாரியை யாது? காரம் [ஆ- ஆகாரம்]
- காரமும், கான் -உம் பெறும் உயிர் எழுத்துக்கள் யாவை? ஐ, ஔ
- உயிர்க் குறிலுக்கான சாரியைகள் யாவை? கரம், கான்
- உயிர் மெய் பெறும் சாரியைகள் யாவை? கரம், காரம், கான்
- எழுத்துக்கள் இணைந்து சொல்லாக மாறினாலும் எழுத்து தன் இயல்பில் இருந்து மாறாது.
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 11 அக்டோபர், 2020
நன்னூல் எழுத்ததிகாரம்- எழுத்தியல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக