- நன்னூல் எழுத்ததிகாரத்தில் உள்ள இயல்கள் எத்தனை? 5
- எழுத்ததிகார இயல்கள் யாவை? எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல்
- நன்னூல் ஆசிரியர் யார்? பவணந்தி / பவணந்தி முனிவர்
- பவணந்தி முனிவர் தந்தைப் பெயர்? அனுமதி
- பவணந்தி முனிவரின் சமயம்? சமயம்
- பவணந்தி முனிவரின் ஊர்? சனகை, சனகாபுரம் (மைசூர்)
- நன்னூலைச் தெரிவித்தவர்? சீயகங்கன்
- நன்னூலுக்கு முதன் முதலில் உரை செய்தவர் யார்? மயிலை நாதர்
- நன்னூலுக்கு விருத்தி உரை செய்தோர்? மயிலை நாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞான முனிவர்
- நன்னூலுக்கு கண்டிகை உரை செய்தவர்? ஆறுமுக நாவலர்
- நன்னூலின் காலம்? 12 ஆம் நூற்
- நன்னூல் நூற்பா எண்ணிக்கை? 462
- பவணந்தியின் சிறப்புப் பெயர்? பல்கலைக் குரிசில்
- நன்னூல் கடவுள் வாழ்த்து எந்தக் கடவுளுக்கு இயற்றப்பட்டது? அருகக் கடவுள்
- நன்னூல் கூறும் பாயிர வகைகள்?2 (பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம்)
- பாயிரத்திற்கான பெயர்கள் எத்தனை? 7
- பாயிரப் பெயர்கள் யாவை? முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, புனைந்துரை, தந்துரை
- பாயிரத்தில் கூறப்படும் வரலாறு? நூல் வரலாறு, ஆசிரியர் , நூல் கற்பித்தல் , மாணாக்கர் வரலாறு, நூல் கற்றலின் வரலாறு
- நூல் வகைகள் எத்தனை? 3 (முதல் நூல், வழி நூல், சார்பு நூல்
- சார்பு நூலின் வேறு பெயர்? புடை நூல்
- முதல் நூல் என்றால் என்ன? இறைவன் அல்லது இறை அருள பெற்ற சான்றோர் படைப்பது
- வழி நூல் என்றால் என்ன? முதல் நூலை அடியொற்றி எழுதப்படுவது.
- சார்பு நூல் என்பது என்ன? முதல் நூல், வழி நூல் இரண்டையும் சார்ந்து, இரண்டிலிருந்தும் பல வகையில் முரண்பட்டு இருப்பது.
- நூல் பயன் யாவை? அறம், பொருள், இன்பம், வீடு
- நன்னூல் பாயிரம் மதம் எனக் குறிப்பது? மதம்
- மதங்கள் எத்தனை? 7
- பாயிரம் குறிப்பிடும் நூற் குற்றங்கள் எத்தனை? 10
- நூலுக்கான அழகுகள் எத்தனை? 10
- உத்திகள் எத்தனை? 32
- நூலின் உறுப்புகள் எத்தனை? 2
- நூலின் உறுப்புகள் யாவை? ஓத்து, படலம்
- ஓத்து என்பது யாது? ஒரே இன மணியை அடுக்கி வைத்தது போல ஒரே பொருன்மை சார்ந்தவற்றை அடுக்கிச் சொல்வது.
- படலம் என்றால் யாது? ஒரே பொருண்மையாக அன்றி மாறுபட்ட செய்திகளைத் தொகுத்தளிப்பது.
- சூத்திரம் என்பது யாது? சில்வகை எழுத்தால் பல்வகைப் பொருளை அடுக்கி இனிதாகத் தருவது.
- சூத்திரத்திற்கு நன்னூலார் தரும் உவமை யாது? கண்ணாடி
- சூத்திர நிலை எப்படி இருக்கவேண்டும்? ஆற்றொழுக்கு, சிங்கத்தின் பார்வை, தவளைப் பாய்ச்சல், இரை நோக்கிப் பாயும் பருந்து போல இருக்க வேண்டும்.
- சூத்திரம் எத்தனை வகைப்படும்? 6
- சூத்திர வகைகள் யாவை? பிண்டச் சூத்திரம், தொகைச் சூத்திரம், வகைச் சூத்திரம், குறிச் சூத்திரம், செய்கைச் சூத்திரம், புறனடைச் சூத்திரம்
- நூலுக்கான உரை எத்தனை வகையாக உரைக்கப்படும்? 14
- உரை வகைகள் யாவை? காண்டிகை உரை, விருத்தி உரை
- காண்டிகை உரை உறுப்புகள் யாவை ? கருத்துரை, பதவுரை, சான்று, வினா விடையோடு ஐந்தும் காண்டிகை உரை உறுப்புகள் (இது ஐங்காண்டிகை எனப்படும். ஆறுமுக நாவலர் செய்த உரை)
- முக்காண்டிகை உரை என்றால் என்ன? கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு மட்டும் அமைந்த உரை. (மயிலை நாதர் செய்த உரை)
- காண்டிகை உரை என்பது யாது? சுருங்கச் சொல்வது.
- விருத்தி உரை என்பது யாது? மெய்ப்பொருளை விரித்துரைப்பது.
- நூலுக்கான பெயர்க்காரணம் யாது? சொல் பஞ்சாக, செய்யுள் இழையாக புலவன் நூற்கும் பெண், வாய் கையாக , அறிவு கதிராகக் கூடி உருவாக்கப்பட்டது.
- ஆசிரியர் பொருள்? ஆசு- குற்றம், இரிதல்- நீக்குதல் (குற்றத்தை நீக்குபவர்)
- ஆசிரியனுக்கு அளிக்கப்படும் பிற பெயர்கள்? நுவல்வோன், சொல்லுவோன்
- நல்லாசிரியருக்குக் கூறப்படும் உவமைகள் யாவை? நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர்
- ஆசிரியர் ஆகாதவருக்குத் தரப்பட்டுள்ள உவமைகள் யாவை? கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு
- மாணாக்கர் (மாணவர்கள்) வகைகள் எத்தனை? 3 தலை மாணாக்கர், இடை மாணாக்கர், கடை மாணாக்கர்
- தலை மாணாக்கர் எதைப் போன்றவர்கள்? அன்னம், பசு(ஆ)
- இடை மாணாக்கர் எதைப் போன்றவர்கள்? மண், கிளி
- கடை மாணாக்கர் எதைப் போன்றவர்கள்?ஓட்டைக் குடம், ஆடு, எருமை, பன்னாடை
- ஆசிரியர் மாணவர் உறவு எதைப் போன்று இருக்க வேண்டும்? தீக்காய்வார் போல.
- நூலுக்குப் பெயரிடுதல் எத்தனை வகைப்படும் ? 8 (படைப்பார் (ஆக்கியோன்) பெயர், நூல் வந்த வழி, நூல் படைக்கப்பட்ட இடம் (எல்லை), நூலின் பெயர், யாப்பு, நூலின் பொருண்மை , கேட்போர், நூலால் விளையும் பயன்)
- நூலுக்கான பெயரிடலுக்குக் பிற காரணம்? காலம், நூல் அரங்கேறிய இடம்(களம்), காரணம், முதல் நூல், பெரும்பாண்மையாகப் பேசப்பட்ட செய்செய்வித்தோன் (நூல் உருவாகப் பொருளுதவி செய்த புரவலன்), நூலின் தன்மை, நிமித்தம், இடுகுறி
- ஆக்கியோன் பெயரால் பெயர் பெற்ற நூல் - தொல்காப்பியம்
- அளவால் பெயர் பெற்ற நூல் - நாலடியார், அகநானூறு, திணை மொழி ஐம்பது
- முதல் நூலால் பெயர் பெற்ற நூல் - பாரதம், இராமாயணம்
- மிகுதிப் பொருளால் பெயர் பெற்ற நூல் - களவியல், இன்னா நாற்பது
- பொருளால் பெயர் பெற்ற நூல்- நம்பி அப்பொருள், புறப்பொருள் வெண்பா மாலை
- செய்வித்தோன் பெயரால் பெயரிடப்பட்ட நூல் - வீரசோழியம்
- நூலின் தன்மையால் பெயர் பெற்ற நூல் - நற்றிணை, நன்னூல்
- இடத்தால் பெயர் பெற்ற நூல்- களவழி நாற்பது
- காலத்தால் பெயர் பெற்ற நூல்- கார் நாற்பது
- நூல் இயற்றியவரின் ஆசிரியர் பெயரால் பெயர் பெற்ற நூல் - நேமிநாதம்
- உவமையால் பெயர் பெற்ற நூல் - திரிகடுகம்
- பாடல் முதல் வரியால் பெயர் பெற்ற நூல் - ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்
- யாப்பால் பெயர் பெற்ற நூல்- திருக்குறள், புறப்பொருள் வெண்பா மாலை
- வழி நூலின் வகைகள் எத்தனை? (தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழி பெயர்ப்பு)
- பாயிரம் இயற்றுதலுக்கு உரியோர்? படைப்பாளியின் ஆசிரியர், உடன் கற்றவர், மாணவர், உரையாசிரியர்
- தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள் எத்தனை ?4
- பாயிரத்தின் சிறப்பிற்குச் சுட்டப்படும் உவமைகள் யாவை? (3) மாளிகைக்குச் சித்திரம் போல, மாநகரத்திற்குக் கோபுரம் போல, நல்ல பெண் அணியும் நகைகள் போல நூலுக்குப் பாயிரம்
- பாயிரத்தின் இன்றியமையாமையை உணர்த்தும் வரி? "ஆயிரம் முகத்தால் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவலன்றே "
- நன்னூல் கடவுள் வணக்கம் - "பூமலி யசோகின் புனை நிழல் அமர்ந்த நான் முகற் தொழுது நன்கியம்புவனெழுந்தே "
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 11 அக்டோபர், 2020
நன்னூல் - பாயிரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக