திசைப் பெயர்
1. பசு - பெற்றம் - தென்பாண்டி நாடு
2. சோறு - சொன்றி - "
3. தாய் - தள்ளை - குட்ட நாடு
4. தந்தை - அச்சன் - குடநாடு
5. வஞ்சகர் - கையார் - கற்கா நாடு
6. தோட்டம் - கிழார் - வேணாடு
7. சிறுகுளம் - பாழி - பூழி நாடு
8. வயல் - செய் - பன்றி நாடு
9. சிறுகுளம் - கேணி - அருவா நாடு
10. புளி - எகின் - அருவா வடதலை நாடு
11. தோழன் - எலுவன் - சீதநாடு
12. தோழி - இகுளை - சீதநாடு
13. நல்ல நீர் - வெள்ளம் - மலையமானாடு
14. தாய் - ஆய் - சோழ நாடு
[தமிழ் நாடு தவிர்ந்த 17 நாடுகளில் இருந்து வழங்குபவை]
15. அந்தோ - சிங்களம்
16. மாமரம் - கொக்கு - துளுவம்
17. அகப்படுதல் - சிக்குதல் - கன்னடம்
18. எருத்து - பாண்டில் - தெலுங்க நாடு
================================================
தமிழ் தவிந்த பதினேழு நாடுகள் [இதை நன்னூலார் குறிக்கிறார் தொல்காப்பியர் குறிக்கவில்லை]
சிங்களம்
சோனகம்
சாவகம்
சீனம்
துளுவம்
குடகம்
கொங்கணம்
கன்னடம்
கொல்லம்
தெலுங்கம்
கலிங்கம்
வங்கம்
கங்கம்
மகதம்
கடாரம்
கௌடம்
குசலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக