இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 அக்டோபர், 2020

திரி சொல்

 ஒரு பொருள் தரும் பல சொற்கள் 

1. கடல் -பரவை, முந்நீர், ஆழி

2. கிளி - தத்தை, சுகம், கிள்ளை 

3. சூரியன்-ஞாயிறு, கதிரவன், பகலவன், பரிதி

4. சொல் - பதம், மொழி, கிளவி 

5. தவறு  - குற்றம்,  மாசு, பிழை

6. நெருப்பு - தீ, கனல்,  அனல்

7. பெண் - நங்கை,  வனிதை,  மங்கை 

8. வயல்  - கழனி,  பழனம், செய்

9. அரசன்  - மன்னன், கோ, கோன், கொற்றவன்,  காவலன்,  வேந்தன்

10. அழகு - அணி, வனப்பு,  எழில் , கவின்

11. நிலா - திங்கள், சந்திரன், மதி

12. அன்பு - பாசம், நேசம்,  பரிவு

13. குழந்தை - குழவி,  மகவு, மழலை, சேய்

14. உலகம் - அவனி,  ஞாலம்,  பார்,  மண்ணகம்,  மண்ணுலகு,  குவலயம்,  புவி, கூ, பூவுலகு,  அகிலம்,  வையகம்,  மேதினி, தரணி

15. செய்யுள்  - பா, பாடல், கவிதை, யாப்பு 

16. யானை - களிறு,  பிடி,  வாரணம் 

17. மதில் - எயில், அரண்,கோட்டை


பல பொருள் தரும் ஒரு சொல் 

1. மா - மா மரம் (கனி), விலங்கு, குதிரை பெரிய, வண்டு

2. ஆறு  - எண்,  நதி,  ஆறுதல், பாதை 

3. படி - மாடிப்படி,  அளவை,  படித்தல்,  படிதல் 

4. திங்கள்  - நிலா,  மாதம் 

5. அணி - அணிகலன்,  அணிதல்,  அழகு 

6. அரணம் - மதில், கவசம் 

7. ஆசு - சிறுமை, குற்றம்,  விரைவு, கவசம் 

8. குழல்  - மயிர்,  துளை,  இசைக்கருவி 

9. களம்  - மிடறு,  கருமை,  பெருநிலம் 

10. கொண்டல் - மேகம்,  கூதிர்,  கீழைக்காற்று 

11. கூழ் - உணவு, பயிர்,  பொன் 

12. சினை - கரு,  உறுப்பு,  மரக்கோடு 

13. சிலை - கற்சிலை,  வில்,  மலை 

14. செம்மல் - இறைவன்,  பழம்பூ,  வீரர்,  செந்நிறம் 

15. பரி - வருத்தம்,  செலவு,  குதிரை,  பாதுகாப்பு 

16. பாடி  - நகரம்,  நாடு,  படை வீடு

17. பனி- அச்சம்,  துன்பம்,  நடுக்கம்,  குளிர் 

18. மாடு - மணி,  செல்வம்,  நிறை,  பக்கம்,  தனம் 

19. வாரணம் - கோழி, சங்கு, யானை

20. மால்    -    மாயோன், கருமை, வேட்கை, மயக்கம், மேகம், காற்று

21. அரி    -    அரிதல், சிங்கம், திருமால்

22. அரவம்    -    சத்தம், பாம்பு

23. ஆடு    -    ஆடுதல், விலங்கு

24. அன்னம்    -    சோறு, பறவை

25. ஆரம்    -    சந்தனம், மாலை 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...