இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 நவம்பர், 2020

பாடாண் திணை

     1. பாடாண் எதன் புறத்திணை?

        கைக்கிளை

    2. பாடாண் என்பது யாது?

        பாடு+ஆண் - பாடாண்/ பாடப்படும் ஆண்மகனின் ஒழுக்கம், புகழ், 

        வலிமை, கொடை, இரக்கம் ஆகியவற்றைப் பாடுதல்

    3. பாடாண் திணை வகைகளாகத் தொல்காப்பியம் குறிப்பவை யாவை?

        எட்டு: வெட்சிப்பாடாண், வஞ்சிப்பாடாண், உழிஞைப் பாடாண், தும்பைப் 

        பாடாண், காஞ்சிப் பாடாண், புரைதீர்க்காமம் [தலை மகனைப் பெண் 

        காமுற்றதாகக் கற்பனையில் பாடுதல்], புல்லிய வகை [கடவுளர் 

        மானிடரிடம் கொண்ட காதல்]

    4. செந்துறைப்பாடாண் என்றால் என்ன?

        வழிபடுதல், வாழ்த்தல் முறையில் உலக வழக்கு, இலக்கிய வழக்கைட் 

        தழுவிப் பாடும் பாடாண் செந்துறை வண்ணப்பகுதி எனப்படும்.

    5. காமப்பகுதி கடவுளும் வரையார் - கடவுளரும் காமத்திற்கு உரியோர்

    6. 'குழவி மருங்கினும் கிழவதாகும்' என்பது எதன் முன்னோடியாகக் 

        குறிக்கப்படுகிறது? பிள்ளைத் தமிழ்

    7. 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப'  எதன் முன்னோடி?

        உலா

    8. கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருபவை யாவை?

        கொடிநிலை, கந்தழி, வள்ளி

    9. கொற்றவள்ளை என்பது யாது?

            வெற்றி பெற்ற மன்னனின் சிறப்பை கொற்றவள்ளையாகப் பாடுவது 

            பாடாண் திணையாகும்.

    10.  பாடாண் திணையின் துறைகள் யாவை?

       தொல்காப்பியம் - 22

          புறப்பொருள் வெண்பாமாலை -  47

    11. வாயில் நிலை:

            மன்னனைக் காணச் சென்றப் புலவன் தான் வந்ததை அரசனிடம் கூற

            வாயில் காவலனிடம் உரைப்பது.

    12. கடவுள் வாழ்த்து:

            சிவன், திருமால், பிரம்மன் என்னும் முக்கடவுளரில் அரசரால் 

            வணங்கப்படும் கடவுளின் பெருமையைப் புகழ்ந்து வாழ்த்துதல்.

    13. பூவை நிலை:

            காயாம் பூவைத் திருமாலின் நிறத்தோடு ஒப்பிட்டுக் கூறுவது.

    14. பரிசில் துறை:

            இரவலன் அரசரிடம் போரில் வென்ற யானையைப் பரிசாகக் கேட்பது.

    15. இயன்மொழி வாழ்த்து:

            [இயன்மொழி - இயல்+ மொழி]. அரசரின் தன்மையை உள்ளது 

            உள்ளவாறு  [இயல்பாக] கூறுவது.

    16. கண்படை நிலை:

            போரில் வென்ற நிறைவோடு உறங்கும் மன்னரின் உறக்கத்தைப் பாடல்.

    17. துயிலெடை நிலை:

            பல நாட்டு மன்னர்கள் திரை செலுத்தக் காத்திருப்பதாகக் கூறி, அரசரை 

            உறக்கத்தில் இருந்து எழுப்புதல்.

    18.  மங்கலநிலை:

            துயில் எழுந்த அரசரின் முன் சென்று மங்கலப் பாடல்களைப் பாடல்.

    19. விளக்குநிலை:

            விளக்குச்சுடர் வலப்புறம் சுழன்று நன்மைப் பெருகட்டும் என மன்னரின் 

            அரண்மனைத் திருவிளக்கைப் போற்றிப் பாடல்.

    20. கவிலைக்கண்ணிய புண்ணிய நிலை:

            கபிலைப் பசுக்களை அரசர் அந்தணர்க்குத் தானமாக அளிப்பதை 

            பாடுவது.

    21. வேள்வி நிலை:

            அரசன் அறம் பொருட்டு நிகழ்த்தும் வேள்வியைப் பாடுதல்

    22. வெள்ளி நிலை:

            அரசரின் நல்லாட்சியால் வெள்ளிக்கோள் நன்னிலை அடைந்து நாடு 

            சிறக்கும் எனப்பாடுவது.         

    23. நாடு வாழ்த்து:

            மாதம் மும்மாரிப் பொழிந்து நாடு செழிக்கவெனப் பாடுவது.

    24. கிணை நிலை:

            கிணை [தடாரி] இசைக்கருவியை இசைக்கும் கிணையன் தன் வறுமை 

            நீங்க அரசன் செய்த நன்மைகளைக் கூறுவது.

    25. களவழி வாழ்த்து:

            மன்னன் போரால் பெற்ற பெருஞ்செல்வத்தைப் பாணன் போற்றிப் 

            பாடுவது.

    26. வீற்றினிருந்தப் பெருமங்கலம்:

            வெற்றியில் சிறந்த மன்னன் தனக்கு ஒப்பானவர்க்ளும், தன்னை விட 

            மிக்கானவர்களும் இல்லை என்னும் பெருமிதத்தோடு அரியணையில்

            வீற்றிருக்கும் சிறப்பைப் புகழ்வது.

    27. குடுமி களைந்த புகழ்சாற்று நிலை:

            குடுமி என்பது மன்னனின் மணி முடியைக் குறிப்பது. பகை நாட்டின் மீது 

            போரிட்டு, அவனைத் தோற்கடித்து, அவன் சூடி இருந்த முடி களைந்து 

            அடிமைப்படுத்தியதைப் பாடுவது. 

    28. மணமங்கலம்:

            அரசர் மகளிரை மணம் புரிவதைக் கூறுவது.

    29. பொலிவு மங்கலம்:

             அரசர் மகனின் பிறப்புப் பொலிவைப் பாடுவது.

    30. நாள்மங்கலம்:

            மன்னன் பிறந்த நாளைச் சிறப்பித்துப் பாடல்

    31. பரிசில் நிலை:

            மன்னன் பிறந்த நாளில் அனைவருக்கும் பரிசளிக்கும் சிறப்பை எடுத்து 

            உரைப்பது.

    32. பரிசில்விடை:

            இரவலருக்கு குதிரை, யானை, தேர் முதலானவற்றைக் கொடுத்து 

            அவர்களை அன்போடு வழியனுப்புதல்

    33. ஆள்வினை வேள்வி:

            தன்னை நாடிவருவோருக்கு விருந்தெனும் வேள்வியளிக்கும் மன்னனின் 

            சிறப்பைப் பாடுதல்.

    34. பாணாற்றுப்படை:

            மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லும் பாணன் வழியில் சந்திக்கும் 

            வறிய பாணனை மன்னன் பால் ஆற்றுப்படுத்துதல்.

    35. கூத்தராற்றுப்படை  

            மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லும் கூத்தர் வழியில் சந்திக்கும் 

            வறிய கூத்தரை மன்னன் பால் ஆற்றுப்படுத்துதல்.

    36. பொருநராற்றுப்படை

            மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லும் பொருநனை வழியில் சந்திக்கும் 

            வறிய பொருநனை மன்னனிடம் ஆற்றுப்படுத்துதல்.

    37. விறலியாற்றுப்படை:

            மன்னனிடம் பரிசில் பெற்றுச் செல்லும் விறலி வழியில் சந்திக்கும் 

            வறிய விறலியை மன்னனிடம்  ஆற்றுப்படுத்துதல்.

    38. வாயுறை வாழ்த்து:

            சான்றோர் வாக்கிற்கு இணங்க நடந்தால் நன்மை கிட்டும் எனக் கூறி

            அரசனை வாழ்த்துதல்

    39. செவியறிவுறூஉ:

            மெய்ப்பொருளையும் நன்னெறியையும் எடுத்துரைத்து அதன்படி நடக்க

            மன்னனை அறிவுறுத்துதல்.

    40. குடைமங்கலம்:

            மன்னனின் வெண்கொற்றக் குடை அதை நாடி, அதன் கீழ் உள்ளோருக்கு

            திங்கள் போல் குளிர்ச்சியையும், அதன் கீழ் வாராதோருக்கு சூரியன் 

            போல் வெம்மையையும் வழங்கும் சிறப்பைப் பாடுவது.

    41. வாள்மங்கலம்:

            அரசரின் வாளைப் புகழ்ந்துப் பாடுவது.

    42. மண்ணுமங்கலம்:

            மன்னன் நீராடும் சிறப்பைப் பாடுவது. [மண்ணுதல் - கழுவுதல்]

    43. ஓம்படை:

            இதைச் செய்தால் இது நிகழும் எனக் கூறி மன்னனுக்குக் காப்புப் 

            பாடுதல். [ஓம்புதல் - காத்தல்]

    44. புறநிலை வாழ்த்து:

            குறைவற்ற [குற்றமற்ற] செல்வத்தோடு வழி வழியாய் சிறந்து வாழ

            அரசனை இறைவன் காக்க வேண்டும் என வேண்டிப் பாடுதல்.

    45. கொடிநிலை:

            சிவன், திருமால், பிரம்மன் என்னும் முக்கடவுளரில் ஒருவரின் 

            கொடியோடு, மன்னரின் கொடியை உவமித்துப் பாடுவது.

    46. கந்தழி:

            திருமால் அசுரர்களின் அரணான சோ என்னும் அரணை அழித்ததைப் 

            பாடுவது.

    47. வள்ளி:

            முருகனுக்காக மகளிர் ஆடும் கூத்து வள்ளிக்கூத்து ஆகும்.

    48. புலவராற்றுப்படை:

            இறையருள் பெற்ற புலவர் இறை அருளைப் பெறத்தக்க மற்றொரு 

            புலவரை இறைவனிடம் ஆற்றுப்படுத்துதல்.

    49. புகழ்ந்தனர் பரவல்:

            தனக்கு வேண்டிய பேறுகளை வேண்டி இறைவனைப் பரவுதல்

    50. பழிச்சினர் பணிதல்:

            உலக இன்பங்களை அடைய இடைவனிடம் வேண்டி அவனைப் பணிதல்

    51. கைக்கிளை:

            தலைவன் மீது காதல் கொண்ட பெண் அவனிடம் மாலை வேண்டுதல்

    52. பெருந்திணை: பொருந்தாக்காமம்

    53. புலவிப் பொருளா தோன்றிய பாடாண்பாட்டு:

            தலைவன் மார்பைத் தானே தழுவுவேன் எனக் கூறி தலைவி தன் 

            வேட்கையை வெளிப்படுத்துதல்.

    54. கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டீர் நயந்த பக்கம்:

            அலைமகள், கலைமகள்,  மலைமகள் என்னும் கடவுள் பெண்டிர் தம் 

            கணவராம் கடவுளரை நயந்தமையைக் கூறல்

    55. கடவுள் மாட்டு மனிதப் பெண்டிர் நயந்த பக்கம்:

            மனிதப் பெண் இறைவனை விரும்புதலைக் கூறுதல்.

    56. குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி:

            தலைவனைக் குழந்தையாகப் பாவித்து அவனை விரும்புவதாகப் பாடல்

    57. ஊரின் கண் தோன்றியக் காமப்பகுதி:

            காதல் கொண்ட ஆணும் பெண்ணும், தம் காதல் தோன்ற 

            நிலைக்கலனாக இருக்கும் ஊரைப் புகழ்ந்து பாடுதல். 








     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...