இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 அக்டோபர், 2020

இடைச்சொல்

 1. இடைச்சொல்லின் இயல்பு யாது? 

            பெயரோடும், வினையோடும் இணைந்து இயங்கும் [நடைபெற்றியலும்] 

            இயல்புடையது. தமக்கென இயல்பற்றது [தமக்கியல்பிலது].

2. இடைச்சொல் சொல்லில் எங்கு வரும்?

            சொல்லின் இடையில், முன்னில், பின்னால் வரும்.

3. மன் உணர்த்தும் பொருள்:

            கழிவு, ஆக்கம், ஒழியிசை [3]

4. தில் உணர்த்தும் பொருள்:

        விழைவு, காலம், ஒழியிசை [3]         

5. கொன் உணர்த்தும் பொருள்:

        அச்சம், பயன் இன்மை, காலம், பெருமை [5]

6. உம் உணர்த்தும் பொருள்:

        எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் [8]

7. ஓ உணர்த்தும் பொருள்:

        பிரினிலை, வினா, எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலை, சிறப்பு [6]

8. ஏ உணர்த்தும் பொருள்:

        தேற்றம் [தெளிவு], வினா, பிரிநிலை, எண், ஈற்றசை [5]

9. என உணர்த்தும் பொருள்:

        வினை, குறிப்பு, இசை, பண்பு, எண், பெயர் [6]

10. என்று உணர்த்தும் பொருள்:

        வினை, குறிப்பு, இசை, பண்பு, எண், பெயர் [6]

11. தில் உணர்த்தும் பொருள்:

        விழைவு [தன்மைப் பொருளில் மட்டும் வரும்], காலம், ஒழியிசை

12. அளபெடுத்தல் ஓசையுடைய ஏ பொருள்:

        சிறப்பு

13. அளபெடுத்தல் ஓசையுடைய ஓ பொருள்:

        மிகுதி

14. மற்று இடைச்சொல் உணர்த்தும் பொருள்:

        வினைமாற்று, அசைநிலை

15. எற்று உணர்த்தும் பொருள்:

         கழிந்ததை உணர்த்தும்

16. மற்றையது உணர்த்தும் பொருள்:

        முன் குறித்தது ஒழிய  அதன் இனமான மற்றொன்றைக் குறிப்பது.

17. மன்ற உணர்த்தும் பொருள்:

        தெளிவு [உறுதி]

18. தஞ்சம் உணர்த்தும் பொருள்:

        எளிது [எளிமை]

19. அந்தில் உணர்த்தும் பொருள்:

        அங்கு என்னும் பொருளிலும், அசைநிலையாகவும் வரும்

20. கொல் உணர்த்தும் பொருள்:

        ஐயப்பொருள்

21. எல் உணர்த்தும் பொருள்:

        விளக்கம்

22. ஆர் உணர்த்தும் பொருள்:

        பலர்பால் இறுதிநிலை [விகுதி], அசைநிலை

23. ஏ, குறை உணர்த்தும் பொருள்:

        இசைநிறை, அசைநிலை

24. மா உணர்த்தும் பொருள்:

        வியங்கோளில்  அசையாக வரும்.

25. முன்னிலை அசைச்சொற்கள் யாவை?

        மியா, இக, மோ, மதி, இகும்,  இசின் [இகும், இசின் முன்னிலையில்                             மடுமின்றி ஏனைய தன்மை, படர்க்கை இடச்சொற்களிலும் வரும்]

26. அம்ம பொருள்:    படர்க்கையோரைத் தன்முகமாக்கித் தான் சொல்வதைக் 

        கேட்கச் செய்வது. 

27. ஆங்கு உணர்த்தும் பொருள்:    உரையாடலில் உரையசை

28. போலி உணர்த்தும் பொருள்: ஒப்புமை இன்றி வரும் போலும் உரையசை

29. அசைநிலைச் சொற்கள் : யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது [7]

28. பிரிவில் அசைநிலைகள் : ஆக, ஆகல், என்பது, அளபெடை ஔ

29. ஏ, ஓ எங்குக் குறிப்புப் பொருள் தரும்: ஏ - நன்று, அன்று உடன் இணைந்து,             ஓ - அந்து, அன் உடன் இணைந்து குறிப்புப் பொருள் உணர்த்தும்.

30. எச்ச உம்மைக்கு உரிய சொல் உம் இல்லாமல் எழுதப்படுவது செஞ்சொல் ஆகும். [மாவும், பலாவும், வாழையும் என்றின்றி மா, பலா, வாழை என வருவது செஞ்சொல் கிளவி ஆகும்.

31. உம், என என்னும் எண்ணிடக் சொற்கள் இறுதியில் தொகைச்சொல் பெற்றோ, பெறாமலோ வரலாம்.

32. எண்ணிக்கையைக் குறிக்கும் ஏகார இடைச்சொல் இறுதியில் மட்டும் வந்தாலும் ஏற்க உரியதே. [நிலமே, பொழுதே -வ்எனவும் வரலாம்.  அவ்வாறின்றி நிலம், பொழுதே எனவும் வாரலாம்]

33. எனா, என்றா எவ்வாறு வரும்?

    எனவும் - எனா, என்று - என்றா ஆகும். இவை தொகுத்துச் சொல்லும் எண்ணிக்கையின் இறுதியில் மட்டுமே வரும்.

34. எண்ணிக்கை இறுதியில் தொகை பெற்றும், பெறாமலும் வருவதற்கு உரிய இடைச்சொற்கள் யாவை? எனா, என்றா, செவ்வெண், ஏ [அறம் பொருள் இன்பம் - என்றும் வரலாம், அறம் , பொருள், இன்பம் மூன்றும் எனத் தொகுத்தும் வரலாம்.

35. உம் சில இடங்களில் தொக்கி வரும். சில இடங்களில் உந்து ஆகும்.

36. எண்ணிக்கையை அடுக்கிச்சொல்லும் தொடரில் என்று, என, ஒடு  சில இடங்களில் எல்லாப்பொருளோடும் வாராம்ல் தொக்கி வருவதுண்டு. [அன்பொடு, அருளொடு, அறனொடு எனவும்  வரலாம். அன்பு, அருள், அறனொடு எனவும் வரலாம்]

        












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...