இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 நவம்பர், 2020

பொருளணிகள் -3 [உவம, உருவக அணி]

  1. பொருளொடு பொருள் புணர்த்து ஒப்புமை தோன்றச் செப்புவது என்ன அணி? உவமையணி
  2. உவமையணி எவற்றின் அடிப்படையில் வரும்? பண்பு, தொழில், பயன்
  3. உவமையணி எவ்வாறு இயைபுபட வரும்? ஒரு பொருளோடு ஒரு பொருள், ஒரு பொருளோடு பல பொருள், பல பொருளோடு ஒரு பொருள், பல பொருளோடு பல பொருள் என நான்கு வகையில் இயைபுபட வரும்.
  4. உவமையின் உறுப்புக்கள் யாவை? உவமேயம், உவமம், உவம உருபு, பொதுத்தன்மை [4]
  5. உவமைகள் எத்தனை வகைப்படும்? 24
  6. விரி உவமை என்பது யாது? பொதுப்பண்பு, உவம உருபு முதலியன விரிந்து நிற்பது. [பால் போல முகம்]
  7.  தொகையுவமை என்பது யாது? பொதுப்பண்பு, உவம உருபு முதலியன தொக்கி வருவது. [தாமரை முகம்]
  8. இதரவிதர உவமை என்பது யாது? ஒரே தொடரில்  பொருள் உவமையாகவும், உவமை பொருளாகவும் வருவது. [கயல் போல் கண்ணும் , கண் போல கயல் துள்ளும்]
  9. சமுச்சயவுவமை என்றால் என்ன? ஒன்றை ஒப்பது மற்றொன்றாலும் ஒத்து வரும் என்பது [பால் போல் முகம் என்பது நிறத்தால் மட்டுமன்றி வடிவாலுமொத்து வரும்]
  10. உண்மை உவமை என்றால் என்ன? உவமையைக் கூறி மறுத்து பின் பொருளைக்கூறி முடிப்பது. [தாமரை அல்ல முகமே இது]
  11. மறுபொருளுவமை என்றால் என்ன? முன்னர் ஒப்பிட்ட ஒப்புமைக்கு நிகராகப் பிறிதொரு உவமை கூறுவது. 
  12. புகழுவமை என்றால் என்ன? உவமையைப் புகழ்ந்து உவமிப்பது
  13. நிந்தையுவமை என்றால் என்ன? உவமையைப் பழித்து உவமிப்பது
  14. நியம உவமை என்றால் என்ன? இதற்கு இதுதான் உவமை என உறுதிபட வருவது.
  15. அநியம உவமை என்றால் என்ன? நியமித்த உவமை பொருந்தாது என்று மறுத்து உரைப்பது.
  16. ஐயவுவமை என்றால் என்ன?  உவமையை நேரே கூறாமல் பின் ஐயுற்று உரைப்பது ஐயவுவமை.
  17. தெரிதருதேற்றவுவமை என்றால் என்ன? தான் ஐயப்பட்டதைத் தெளிவாக உரைப்பதாக உவமிப்பது.
  18. இன்சொல்லுவமை என்றால் என்ன? உவமிக்கும் பொருளை விட உவமைக்குக் கூடுதல் சிறப்பைக் கூறி ஒப்புமையுடையது அல்ல சிறப்புடையது எனல். [இன் -இன்மை]
  19. விபரீதவுவமை என்றால் என்ன? தொன்றுதொட்டு உவமிப்பதைப் பொருளாக்கி, பொருளை உவமிப்பது.
  20. இயம்புதல் வேட்கையுடைமை என்றால் என்ன?  உவமிக்கப்படும் பொருளை இதைபோன்றது இது என கூறத்துடிக்கும் வேட்கையைக் கூறுவது.
  21. பலபொருளுவமை என்றால் என்ன? ஒரு பொருளுக்குப் பல உவமை கூறுவது.
  22. விகார உவமை என்றால் என்ன? ஒரு உவமையை விகாரப்படுத்தி அமைப்பது
  23. மோகவுவமை என்றால் என்ன? ஒன்றன் மேல் கொண்ட மோகத்தை வெளிப்படுத்துவது போல அமைப்பது.
  24. அபூதவுவமை என்றால் என்ன? இல்லாத ஒன்றை உவமிப்பது.
  25. பலவயிற்போலி உவமை என்றால் என்ன? ஒரு தொடராகப் பல உவமைகள் வர ஒவ்வொரு உவ்மைக்கும் உவம உருபு வருவது.
  26. ஒருவயிற் போலி உவமை என்றால் என்ன? ஒரு தொடரில் பல உவம உவமை வர ஓரிடத்தில் மட்டும் உவம உருபு சேர்ப்பது.
  27. கூடா உவமை என்றால் என்ன? ஒரு பொருளுக்குக் கூடாததைக் கூடுவதாகச் சொல்லி உவமிப்பது.
  28. பொது நீங்கு உவமை என்றால் என்ன? உவமையைக் கூறி மறுத்து, உவமிக்கப்படும்பொருளையே உவமை ஆக்குவது. [தனக்குத் தானே உவமை ஆவது]
  29. மாலையுவமை என்றால் என்ன? ஒரு பொருளுக்குப் பல உவமைகளை மாலை போல அடுக்கிச் சொல்வது.
  30. உவமையணி வேறு அணிகளோடு கூடி வரும் வகைகள் யாவை? அற்புதவணி, சிலேடையுவமை, அதிசயவுவமை, விரோதவுவமை, ஒப்புமைக்கூட்டவுவமை, தற்குறிப்பேற்றவுவமை, விலக்கவுவமை, ஏதுஉவமை
  31. உவமையில் நிகழும் பாகுபாடுகள் யாவை? மிகுத, குறைதல், தாழ்தல், உயர்தல், பால்மாறுபடுதல்
  32. உவம உருபுகள் யாவை? போல, மான, புரைய, பொருவ, நேர, கடுப்ப, நிகர, நிகர்ப்ப, ஏர, ஏய, மலைய, இயைய, ஒப்ப, எள்ள, உறழ, ஏற்ப, அன்ன, அனைய, அமர, ஆங்க, என்ன, இகல, விழைய, எதிர, துணை, தூக்கு, ஆண்டு, ஆங்கு, மிகுதகை, வீழ, இணை, சிவண், கேழ், அற்று, செத்து [35]
  33. உருவகவணி என்றால் என்ன? உவமை, உவமிக்கப்படும் பொருள் இடையில் வேறுபாடு இன்றி ஒன்றாக இருப்பது.
  34. உருவகம் எத்தனை வகைப்படும்?  15 [தொகை, விரி, தொகை விரி, இயைபு, இயைபிலி, வியநிலை, சிறப்பே, விரூபகம், சமாதானம்,  உருவகம், ஏகம், அநேகாங்கம், முற்றே, அவயவம், அவயவி]
  35. தொகை உருவகம் - சொல்லுருபு தொக்கி வருவது
  36. விரி உருவகம்          - சொல்லுருபு விரிந்து வருவது 
  37. தொகை விரி உருவகம் - உருபு தொக்கியும், விரிந்தும் வருவது
  38. இயைபு உருவகம்   -  தொடர்புடையவற்றை உருவகம் செய்வது
  39. இயைபிலு உருவகம் - தம்முள் இயைபில்லா பொருளை வைத்து உருவகம் செய்வது.
  40. வியநிலையுருவகம்   -  ஒரு பொருளின் சில அங்கங்களை உருவகம் செய்தும் வேறு சிலவற்றை உருவகம் செய்யாதும் இறுதியில் அவற்றையுடைய பொருளை உருவகித்து முடிப்பது.
  41. சிறப்புருவகம்    -  ஒரு பொருளை எடுத்து, அதற்குச் சிறந்த உருப்புக்களை உருவகம் செய்து பின் அதனையும் உருவகமாக்குவது.
  42. விரூபகவுருவகம்  -  ஒரு பொருளுக்கு இது ஆகாது என உணர்த்திப் பலவற்றையும் கூட்டி உருவகம் செய்வது.
  43. சமாதானவுருவகம்   -  ஒரு பொருளை உருவகம் செய்து, அது தீங்கு தருவதாகக் கூறி, அந்தத் தீங்கும் அதனால் வருவது இல்லை என விளக்குவது.
  44. உருவகவுருவகம்  -  முதலில் ஒன்றை உருவகம் செய்து பின் அதை மாற்றி பிறிதொன்றாக உருவகம் செய்வது.
  45. ஏகாங்கவுருவகம்  -  ஒரு பொருளினது அங்கங்கள் பலவற்றுள் ஒன்றை உருவகம் செய்வது.
  46. அநேகாங்கவுருவகம் - ஒரு பொருளின் அங்கங்கள் பலவற்றை உருவகம் செய்வது.
  47. முற்றுருவகம்   -   உறுப்புக்கள், அவ்வுறுப்புக்களையுடைய முதற்பொருள் அனைத்தையும் உருவகம் செய்வது
  48. அவயவவுருவகம்   -  உறுப்பை உருவகம் செய்து, அவ்வுறுப்பையுடைய முதலை உருவகம் செய்வது.
  49. அவயவி உருவகம்   -  முதலை உருவகம் செய்து தன் உறுப்புக்களை வெறுமனே கூறுவது.
  50. அவயவம் - உறுப்பு
  51. அவயவி   -  முதல்
  52. உருவகம் பிற அணிகளுடன் கூடி வரும் வகைகள் யாவை? உவமை உருவகம், ஏது உருவகம், வேற்றுமை உருவகம், விலக்கு உருவகம், அவநுதி உருவகம், சிலேடை உருவகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...