- அணிகள் சொல்லணி பொருளணி என இரு வகைப்படும்'
- சொல்லால் அணி செய்வது சொல்லணி
- பொருளால் அணி செய்வது பொருளணி
- பொருளணிகள் எத்தனை வகைப்படும்? 35
- தன்மையணி என்றால் என்ன? ஒரு பொருளை உண்மைத் தன்மையை உள்ளது உள்ளவாறு விளக்குவது.
- தன்மையணியின் வேறு பெயர்கள் யாவை? தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி
- தன்மையணி எத்தனை வகைப்படும்? 4 [பொருள், குணம், சாதி, தொழில்]
- உவமையணி என்பது யாது? ஒப்புமைத் தோன்ற வருவது
- தீவக அணி என்றால் என்ன? ஓரிடத்தில் நின்ற சொல் அல்லது பொருள் செய்யுள் முழுதும் மீண்டும் மீண்டும் பொருந்திப் பொருள் தருவது.
- தீவக அணியில் உள்ள தீவகம் என்பது யாது? விளக்கு அணி
- தீவக அணியின் வேறு பெயர் யாது? விளக்கு அணி
- தீவக அணி எவற்றைக் குறித்து வரும்? குணம், தொழில், சாதி, பொருள்
- தீவக அணி எவ்விடங்களில் பொருந்தி வரும்? முதல் நிலை, இடை நிலை, கடை நிலை
- தீவக அணி எத்தனை வகைப்படும்? 12
- தீவக அணி எவற்றோடு நடைபெற்றியலும்? மாலை, விருத்தம், ஒரு பொருள், சிலேடை
- பின் வரு நிலையணி என்றால் என்ன? சொல்லோ பொருளோ செய்யுள் முழுதும் மீண்டும் மீண்டும் வருவது
- பின்வரு நிலையணி எத்தனை வகைப்படும்? 2 - சொற்பின் வரு நிலையணி, பொருட் பின்வரு நிலையணி, சொற் பொருட்பின் வரு நிலை அணி
- முன்ன விலக்கணி என்றால் என்ன? ஒரு பொருளைக் குறிப்பால் உணர்த்துவது
- முன்ன விலக்கணி எக்காலம் சார்ந்து வரும்? முக்காலம் சார்ந்து 3 வகைப்பம் [இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம்]
- முன்ன விலக்கணி எத்தனை வகைப்படும்? 4 [பொருள், குணம், காரணம், காரியம்]
- முன்ன விலக்கணியின் விரிவான பாகுபாடுகள் எத்தனை? 13 [ வன்சொல், வாழ்த்து, தலைமை, இகழ்ச்சி, துணை செயல், முயற்சி, பரவசம், உபாயம், கையறல், உடன்படல், வெகுளி, இரங்கல், ஐயம்]
- விலக்கணி எவற்றோடு விலங்கித்தோன்றும்? வேற்றுப்பொருள், சிலேடை, ஏது என்னும் மூன்றோடு விளங்கித் தோன்றும்.
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 15 நவம்பர், 2020
பொருளணிகள் -1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
-
எட்டுத்தொகை நூல்களின் மற்றொரு பெயர் என்ன? எண்பெருந்தொகை எட்டுத்தொகை நூல்களில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 2352 எட்டுத்தொகை நூல்களில் கடவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக