இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 அக்டோபர், 2020

மெய்யீற்றுப் புணர்ச்சி 2 [தொல்காப்பியம்]

  1. னகரம் றகரமாகும் இடங்கள்
                1. வேற்றுமையில் வருமொழி முதலில் கசதப வர றகரமாகும்.                                               [பொன்+குடம் = பொற்குடம்]
                2. மன், சின், ஆன், ஈன், பின், முன் - வருமொழி முதலில் க, ச, த, ப, வர                             ன- ற ஆகும். [மன்+கொண்கன்]
                3. வினையெச்ச னகரத்தை அடுத்து கசதப வர ன்-ற் ஆகும்.                                                   [வரின்+காண்பேன்=வரிற் காண்பேம்]
                4. சுட்டு முதலைத் தொடர்ந்து வரும் வயின் - யில் உள்ள ன-ற ஆகும்.
                     [அவ்வயின்+பார்க்கலாம்=அவ்வயிற் பார்க்கலாம்]
                5. வினா எழுத்தாம் எகரத்தை அடுத்து வரும் வயின் - யில் உள்ள ன-ற                             ஆகும். [எவ்வயின்+பார்க்கலாம்=எவ்வயிற் பார்க்கலாம்]
        2. குயின் என்ற சொல் இயல்பாகப் புணரும் [குயின்+கூட்டம்=குயின்கூட்டம்]
        3. எகின் என்ற மரப்பெயர் அம் சாரியை பெற்று வரும். [எகினங்கோடு]
        4. எகின் என்ற பறவைப்பெயர் அகரச்சாரியைப் பெற்று வலிமிகும்.                                        [எகின்+கால்=எகினக்கால்]
        5. னகர ஈற்று இனப் பெயர்கள் இயல்பாகப் புணரும்.                                                                         [எயின்+குடி=எயினக்குடி]
         6. மீன் அடுத்து வல்லெழுத்து வர உறழும் [இயல்பு - மீன்+கண்= மீன்கண்],                           [திரிபு - மீன் + கண் = மீற்கண்]
          7. தேன் அடுத்து வல்லெழுத்து வர உறழும்
                                 [இயல்பு - தேன்+குடம்-தேன்குடம்]
                                 [ன்-ற் ஆதல் - தேன்+குடம்-தேற்குடம்]
                                 [னகரம் கெட, வல்லெழுத்து மிகும் - தேன்+குடம்-தேக்குடம்]
                                 [மெல்லெழுத்து மிகும் - தேன்+குடம் - தேங்குடம்]
         8. தேன் அடுத்து மெல்லெழுத்து வர உறழும்
                                [இயல்பு : தேன்+மொழி- தேன்மொழி]      
                                [ன -கெடும்: தேன்+மொழி - தேமொழி]
          9. தேன் அடுத்து இறால் வர இயல்பாகப் புணரும். 
                                [தேன்+இறால்-தேன் இறால்]
         10. தேன் அடுத்து இறால் வர தகர ஒற்று வருதல் உண்டு.
                                [தேன்+இறால்-தேன்த்திறால்]
        11. மின், பின், பன், கன் நான்கும்  உகரம் பெற்றுப் புணரும்
                                [மின்+கடிது-மின்னுக்கடிது, மின்+நீண்டது-மின்னுநீண்டது]
        12. வேற்றுமையில் கன் சொல் அ- சாரியையுடன்  வல்லொற்று வலி மிகும்                                      [கன்+குடம்- கன்னக்குடம்]
        13. னகர ஈற்று இயற்பெயர் முன் தந்தை முறைப்பெயர் வந்தால் னகர மெய்
                                தகரத்தோடு கெடும். [சாத்தன்+ தந்தை-சாத்தந்தை]
        14. ஆதன், பூதன் பெயர்கள் போன்ற சொற்கள் முன் தந்தை வர னகர ஈறு,                                     அதன் முன் உள்ள தகரம் கெடும் [ஆதன்+தந்தை-ஆந்தை]
        15. இயற்பெயர் அடையோடு வர இயல்பாகப் புணரும்.
                                    [பெருஞ்சாத்தன் + தந்தை- பெருந்தாத்தன்தந்தை
        16. னகர ஈற்று மக்கள் இயற்பெயர் புணர்ச்சியில் அன் கெட்டு, அம்                                                         தோன்றும். [சாத்தன்+கொற்றன்- சாத்தங் கொற்றன்]
        17. தான், பேன், கோன் என்னும் இயற்பெயர்கள் முறைப்பெயரோடு                                           புணர்கையில் னகர ஒற்றுக் கெடாது. [தான்கொற்றன்]
        18. வேற்றுமையில் தான், யான் என்னும் பெயர் நெடுமுதல் [தா-த, யா-ய]                                 குறுகும், யகரம் -   எகரமாக மாறும். [தான்+கை-தன்கை,                                                யான்+கை-என்கை] இயல்பாகப் புணர்தலும் உண்டு.
        19. அழன் என்னும் சொல்லின் இறுதி கெட்டு னகர ஒற்று கெட்டு                                                  வல்லெழுத்து மிகும். [அழன்+குடம்- அழக்குடம்]
        20. முன் அடுத்து இல் வர இடையில் றகர ஒற்றுத் தோன்றும்.                                                          [முன்+இல்முன்றில்]             
        21. வேற்றுமையில் யகர இறுதியை அடுத்து வல்லெழுத்து வர வலி மிகும்.
                           [நாய்+செவி-நாய்ச்செவி]
        22. தாய் அடுத்து வல்லெழுத்து வந்தாலும் இயல்பாகப் புணரும்.
                            [தாய்+செவி-தாய்செவி]
        23. மகனோடு தாயை இணைத்து வருகையில் வருமொழி முதலில் உள்ள
                        கசதப மிகும். [மகன்தாய்+பரிவு-மகன்தாய்ப்பரிவு]
        24. யகர ஈற்றுச் சொல்லின் சில இடங்களில் வல்லொற்று மிகுதல், 
                        மெல்லொற்று மிகுதல் இரண்டும் உறழ்தல் உண்டு. 
                        [வேய்+குறை - வேய்க்குறை, வேய்ங்குறை]
        25. அல்வழியில் யகர இறுதி இயல்பாகப் புணரும். [காய்+சிறிது-காய்சிறிது]
        
        26. ரகர இறுதி யகர இறுதியைப் போல வலி மிகும் [ஊர்+குளம்-ஊர்க்குளம்]

        27. ஆர், வெதிர், சார், பீர் ஆகிய சொற்களில் மெல்லெழுத்து மிகும். 
                         [ஆர்+கோடு-ஆர்ங்கோடு, பீர்+கொடி-பீர்ங்கொடி]
        28. சார் அடுத்து காழ் வர வலி மிகும். [சார்+காழ்-சார்க்காழ்]

        29. பீர் சொல் அம் சாரியைப் பெற்றுப் புணரும். [பீர்+கொடி-பீரங்கொடி]

        30. லகர இறுதியை சொல் னகர ஈற்றைப் போல ல-ற ஆக மாறும்.
                           [பல்+பொடி-பற்பொடி]
        31.லகர ஈற்றை அடுத்து மெல்லெழுத்து வர லகரம் னகரமாகும்.
                            [கல்+மலை-கன்மலை]
        32. லகர ஈற்றுச்சொற்கள் அல்வழியில் உறழும்.
                            [இயல்பு - பல்+பெரிது - பல் பெரிது]
                            [திரிபு - பல்+பெரிது - பற் பெரிது]
        33. லகர இறுதியை அடுத்து  தகரம் வர லகரம் ஆய்தமாகத் திரிதலும்                                         உண்டு.  [ பல்+தொடை - பஃறொடை, கல்+தீது- கஃறீது]
        34. நெடிலை அடுத்து வரும் லகரம் திரிதலும், இயல்பாதலும் உண்டு. 
                            [கால்+படி -கால் படி, காற்படி]
        35. அல்வழியிலும், வேற்றுமையிலும் நெல், செல், கொல், சொல் நான்கும்
                             லகரம் றகரமாகத் திரியும். [நெல்+ பெருகிற்று- நெற்பெருகிற்று]
        36. இல் என்னும் சொல் 
                                1. இயல்பாகப் புணரும் - இல்+பொருள் - இல்பொருள்
                                2. ஐ இடையில் வரும் - இல்+ பொருள் - இல்லைப்பொருள்
                                3. ஆகாரம் வரும் - இல்+பொருள் - இல்லாப்பொருள்
        37. வல் என்னும் சொல் உகரம் பெற்று வருமொழியில் வல்லினம் வர                                             வலிமிகும். [வல்+கடிது-வல்லுக்கட்து], வருமொழியில் 
                            மெல்லினம்  வரின் இயலாகப் புணரும் [வல்ஞான்று]
        38. பூல், வேல், ஆல்  மூன்றும் அம் சாரியைப் பெறும். 
                                [ஆல்+காடு-ஆலங்காடு]
        39. வெயில் மழையைப் போல் அத்து, இன் சாரியைப் பெறும்
                     [வெயில்+சென்றான்-வெயிலத்துச் சென்றான், வெயிலிற்சென்ரான்]
        40.  சுட்டு முதலான வகர ஈற்றுச்சொல்
                              வேற்றுமையில்  வற்றுச் சாரியைப் பெறும். 
                                    [அவ்+செயல்-அவற்றுச்செயல்]
                              அல்வழியில்  வகரம் ஆய்தமாகும்.
                                    [அவ்+கடிது-அஃகடிது]
                             வருமொழியில் மெல்லெழுத்து வர வகரம் மெல்லெழுத்தாகும்.
                                    [அவ்+ஞான்று- அஞ்ஞான்று]
                              உயிர் அல்லது இடையினத்தோடு இயல்பாகப் புணரும்
                                    [அவ்+உடல் - அவ்வுடல்]
        41.  சுட்டெழுத்து அல்லாமல் பிற வகரங்கள் உகரச்சாரியைப் பெறும்.
                                    [தெவ்+கண்டான்- தெவ்வுக்கண்டான்]
        42. ழகர ஈற்றுச்சொல்லில் வலி மிகும்
                                     [ஊழ்+பயன் - ஊழ்ப்பயன்]
        43. தாழ் கோலோடு புணர அக்குச்  சாரியை பெறும். 
                                      [தாழ்+கோல் - தாழக்கோல்]
        44. தமிழ் என்ற சொல் வலி மிகுதலும் உண்டு, அக்குச் சாரியைப் பெறுதலும்                                  உண்டு. [தமிழ் + கல்வி - தமிழ்க்கல்வி, தமிழக்கல்வி]
        45. குமிழ் என்னும் மரப்பெயர் மெல்லெழுத்து மிகுந்தோ, அம் சாரியைப்
                              பெற்றோ வரும். [குமிழ்+கோடு-குமிழ்ங்கோடு, குமிழங்கோடு]
        46. பாழ் என்னும் சொல் [வல்லெழுத்து அல்லது மெல்லெழுத்து மிகுந்து]                                             உறழ்ந்து வரும் [பாழ்+கிணறு- பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு]
        47. ஏழ் என்னும் சொல் அன் சாரியைப் பெறும்
                                       [ஏழ்+பொருள்-ஏழன் பொருள்]
        48. ஏழ்- அடுத்து அளவைப் பெயர்கள் வர நெடுமுதல் குறுகி, உகரம் சேரும்
                                       [ஏழ்+கழஞ்சு-எழுகழஞ்சு]
        49. ஏழ் அடுத்து 
                            1. பத்து வர அளவைப் பெயருக்கு உரிய மாற்றங்களோடு
                                        பத்தில் உள்ள த் - ஃ ஆகும். [எழுபஃது]
                            2. ஆயிரம் வர உகரம் சேராது [ஏழ்+ஆயிரம்-ஏழாயிரம்]
                            3. நூறாயிரம் வர இயல்பாகும் [ஏழ்+நூறாயிரம்- ஏழ் நூறாயிரம்]
                            4. பேரெணோடு புணர இயல்பாகும் [ஏழ் தாமரை, ஏழ் ஆம்பல்]
                            5. உயிரெழுத்தை முதலாகக் கொண்ட அளவுப் பெயர் வர
                                        இயல்பாகப் புணரும். [ஏழ்+அரை- ஏழரை]
        50. கீழ் உறழ்ந்து புணரும் [கீழ்+கரை - கீழ்கரை, கீழ்க்கரை]
        51. ளகர ஈறு
                                1. வேற்றுமையில் ளகரம் டகரமாகும் 
                                        [புள்+பெயர்-புட்பெயர்]
                                2. வருமொழியில் மெல்லெழுத்து வர ணகரமாகும்
                                        [கள்+ நீர்- கண்ணீர்]
                                3. அல்வழியில் உறழும்
                                        [முள்+ கடிது -முள்கடிது, கட்டீது]
                                4. வருமொழியில் தகரம் வர ஆய்தம் பெறவும் செய்யும்
                                         [முள்+தீது -முள்தீது, முட்டீது, முஃடீது]
                                5. நெடிலை அடுத்து இயல்பாகும் [கோள்+கடிது- கோள்கடிது]
                                6. தொழிற் பெயர்கள் உகரம் பெறும்.
                                            [துள்+சிறப்பு -துள்ளுச் சிறப்பு]
          52. இருள் அத்துச் சாரியைப் பெறும்
          53. புள், வள் உகரம் பெறும்
          54. மக்கள் தக்க இடத்தில் ள்-ட் ஆகும் [மக்கட்பண்பு]
          








2 கருத்துகள்:

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...