- திராவிட மொழி ஒப்பியல் ஆய்வுக்கு வலுவான அடித்தளமிட்டவர் யார்? கால்டுவெல்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தின் ஆசிரியர் யார்? கால்டுவெல்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவந்த ஆண்டு? 1856
- 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இடையே உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியவர் யார்? எல்லிஸ்
- கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் அடிப்படையாகக் கொண்ட திராவிட மொழிகள் எவை? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
- கால்டுவெல்லின் நூலை 'தென் திராவிட' மொழிகளின் என்றே கூறலாம் என்றவர் யார்? தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
- திராவிட ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தியர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்? எல்.வி. ராமசாமி ஐயர்
- திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பை எழுதியவர் யார்? யூல்ஸ் ப்ளாக்
- திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு நூல் வெளியான ஆண்டு எது? 1946
- கோலமி சொற்களை, பிற திராவிட மொழி சொற்களோடு ஒப்பிட்டுக் காட்டியவர் யார்?யூல்ஸ் ப்ளாக்
- திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதியை வெளியிட்டோர் யாவர்? எமனோ, பர்ரோ
- கூர்க், துளு மொழிகளை ஆராய்ந்தவர் யார்? ராபர்ட்ஸ்
- ராபர்ட்ஸ் கூர்க், துளு குறித்திக் கூறிய ஆண்டு? 1798
- தோதர் மொழி அறியப்பட்ட ஆண்டு எது? 1837
- ப்ராகூய் கண்டறியப்பட்ட ஆண்டு? 1838
- கோண்டி[டு] மொழி அறியப்பட்ட ஆண்டு? 1849
- 'லெட்சுமா ஜி' எம்மொழிக்கு இலக்கணம் தந்தார்? கூய்
- கூய் மொழிக்கு இலக்கணம் வெளியிடப்பட்ட ஆண்டு? 1853
- கோலமி கண்டறியப்பட்ட ஆண்டு? 1866
- மால்டோ அறியப்பட்ட ஆண்டு எது? 1884
- பார்ஜி மற்றும் பிற திராவிட மொழிகள் பற்றிக் குறிப்பிடுவது எது? இந்திய மொழிகளின் கணக்கீடு
- கோண்டா, கதபா மொழிகள் கண்டறியப்பட்ட ஆண்டு? 1956
- இருளா எத்தகு மொழி? கிளை மொழி
- இருளா எதன் கிளை மொழி? திராவிட மொழிகளின் கிளை மொழி
- இருளா வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? குறவா, எருக்கலா
- 1961 ஆம் ஆண்டு எத்தனைத் திராவிட மொழிகள் இருந்ததாக தெ. பொ.மீ கூறுகிறார்? 25
- 1961 ஆம் ஆண்டுப்படி எவ்வளவு மக்கள் திராவிட மொழிகள் பேசுவதாக தெ. பொ.மீ குறிப்பிடுகிறார்? சுமார் 10 கோடி
- இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் திராவிட மொழி எது? பிராகூய்
- பிராகூய் எங்கு பேசப்படுகிறது? பலுசிஸ்தான்
- திருந்திய திராவிட மொழி பேசுவோர் வாழும் பகுதி - தென்னிந்தியாவன் கடற்கரை, உள்நாட்டுப் பகுதி, இலங்கையின் வட பகுதி
- திருந்தா திராவிட மொழி பேசப்படும் இடம்? பலுசிஸ்தான் பீட பூமி, வட இந்தியாவிற்கும், தக்காணத்திற்கும் இடைப்பட்ட பகுதி, தென்னிந்திய மலைப் பகுதி
- மங்களூரில் பேசப்படும் கன்னடம் அல்லா மொழி? துளு
- கூர்க் மக்களின் தாய் மொழி யாது? குடகு
- நீலகிரியில் பேசப்படும் மொழிகள் யாவை? படகா [படுகா], கோட்டா, தோதா
- மகாநதி சமவெளி பீடபூமியில் பேசப்படும் திராவிட மொழி? கூய், கோண்டா
- மத்தியப் பிரதேசத்தில் பேசப்படும் திராவிட மொழி? கோலமி [ஹைதிராபாத்திலும் பேசப்படும்]
- கோலமிக்கு அண்டை மொழி எது? பார்ஜி
- சோட்டானாக்பூர் [சோட்டானாகபுரி] பீடபூமியில் பேசப்படும் திராவிட மொழிகள் யாவை? கதபா, குருக், ஒரோன்
- மேற்குப்பாகிஸ்தான் மலைப் பகுதியில் பேசப்படும் மொழி? ப்ராகூய்
- மூலதிராவிட மொழியின் அமைப்பை மீட்டுருவாக்கத்தால் விளக்குபவர் யார்? எமனோ
- திராவிட மொழிகளில் உயிர் நீட்சி எத்தகையது? ஒலியன் தன்மையது
- சேர, சோழ, பாண்டியர் பற்றி பேசும் வடநாட்டுக் கல்வெட்டு யாது? அசோகர் கல்வெட்டு
- பாண்டு பெயரில் இருந்து பாண்டியன் என்ற சொல் வந்ததாகக் கூறும் நூல் எது? வரருசி [கருத்துமாறுபாட்டிற்கு உட்பட்டது]
- மூல திராவிட மொழி எத்தனைக் கிளைகளாகப் பிரிந்தது? 3
- மூல திராவிட மொழியின் கிளை மொழிகள் யாவை? வட திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள், தென் திராவிட மொழிகள்
- வடதிராவிட மொழிகள் யாவை? பிராகூய், மால்டோ, குரூக்
- பாகிஸ்தானில் பேசப்படும் வடதிராவிட மொழி? பிராகூய்
- வங்காளம், ஒரிசாவில் பேசப்படும் வட திராவிட மொழி - மால்டோ, குரூக்
- மத்திய திராவிட மொழிகள் பேசப்படும் மொழிக்ள் பேசப்படும் இடங்கள் யாவை? மத்தியப்பிரதேசம், ஆந்திராவிற்கு வடக்குப் பகுதி, ஆந்திராவிற்குள் சில பகுதிகள்
- தென்திராவிட மொழிகள் யாவை? கன்னடம், தமிழ், மலையாளம், துளு, படகா, தோடா, கோட்டா, குடகு
- மத்திய திராவிட மொழியோடு நெருந்தியத் தொடர்புடைய தென் திராவிட மொழி? தெலுங்கு
- நீலகிரிப் பழங்குடியினரின் தென் திராவிட மொழி ? படகா, தோடா, கோட்டா
- தென்திராவிட மொழியில் உள்ள உப்பு பிற திராவிட மொழியில் எவ்வாறு உள்ளது? சுப்பு
- தென்திராவிட மொழியில் உள்ள 'ஈ' பிற திராவிட மொழியில் எவ்வாறு குறிக்கப்படுகிறது? சீ
- இரண்டு என்பது ரெண்டு ஆவது - ஒலி இடம்பெயர்தல்
- திணை, பால், எண், இடம், காட்டும் விகுதிகள் பிற்காலத்திய வளர்ச்சி என்றவர் யார்? யூல் பிளாக்
- செய்யும் வாய்ப்பாடு முக்காலத்திற்கும் உரியது என்றவர் யார்? கால்டுவெல்
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 4 அக்டோபர், 2020
திராவிட மொழி வரலாறு - வினா வங்கி 1 [தெ.பொ.மீ - மொழி வரலாறு அடிப்படையில்]
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
நன்றி மேம்
பதிலளிநீக்குமொழியின் வடிவம்
நீக்கு