- மொழியின் வகைகள் யாவ? ஒருமொழி, தொடர் மொழி, பொதுமொழி
- பொதுமொழிக்குச் சான்று தருக? தாமரை
- வழக்கு எத்தனை வகைபடும்? 3
- வழக்குகள் யாவை? இயல்பு, தகுதி, செய்யுள் வழக்கு
- இயல்பு வழக்கு வகைகள் எவை? இலக்கணமுடையது, இலக்கணப்போலி. மரூஉ
- இலக்கணப்போலிக்கு சான்றுதருக. முன்றில், சதை
- சபையில் கூறக்கூடாதவற்றை வேறு சொல்லால் குறிப்பது? இடக்கரடக்கல்
- பொற்கொல்லர் தங்கத்தைப் பறி என்று அழைப்பது? குழூஉக்குறி
- தகுதி வழக்குகள் யாவை? இடக்கர் அடக்கல், மங்கலம், குழூஉக்குறி
- விளக்கை அணைப்பது- மங்கல வழக்கில் எவ்வாறு குறிப்பிடப்படும்? விளக்கைக்குளிரவைப்பது
- மூவிடம் யாவை? தன்மை, முன்னிலை, படர்க்கை
- வாரணம்- இது உணார்த்தும் பொருட்கள் யாவை? யானை, சேவல்
- பண்டைத்தமிழ் நாட்டின் நிலங்கள் எத்தனை? 12
- தற்சமம் என்பது? தமிழ் எழுத்துக்களால் ஆன வடசொல்
- வட எழுத்துக்களால் எழுதப்படும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்? தற்பவம்
- வட மொழியின் உயிர் எழுத்துக்கள் எத்தனை? 16
- வடமொழியின் மெய் எழுத்துக்கள் எத்தனை? 37
- தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாய் உள்ள எழுத்துக்கள்? 25
- காலம்காட்டும் பெயர்? வினையாலனையும் பெயர்
- அறுவகைப் பெயர்கள்? பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்
- பொதுப்பெயர்கள் எத்தனை? 12
- ஒருமைப் பொதுப்பெயர் யாவை? தான், யான், நான், நீ
- பன்மைப்பொதுப்பெயர் எத்தனை? 8
- உயர்திணை ஆண்பால் பெயர் ஈறு- அன்
- உயர்திணைப் பெண்பால் பெயர் ஈறு- இ, அள்
- உயர்திணை பலர்பால் பெயர் ஈறு- ர், அர், ஆர், மார்
- ஒன்றன்பால் பெயர் ஈறு- து
- பலவின்பால் பெயர் ஈறு -வை, ன
- ஆகுபெயர் வகைகள் எத்தனை? 16
- அளவை ஆகுபெயர்கள் எத்தனை? 4
- பால் பகா பெயர் என்பது -ஆண் பாலா?பெண் பாலா?எனப் பகுக்க முடியாது
- தன்மைப் பெயர்கள் ? யான்,யாம்,நான்,நாம்
- முன்னிலைப் பெயர்கள் ?எல்லீர்,நீயீர்,நீவீர்,நீர்,நீ
- ஒருமை தன்மைப் பெயர்கள்?தான்,யான்
- ஒருமை முன்னிலை பெயர் ?நீ
- பன்மை தன்மைப் பெயர்?யாம்,நாம்
- பன்மை தன்மைப் பெயர்கள்?எல்லீர்,நீயிர்,நீர்,நீவீர்
- முதற் பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆவது எது ?பொருளாகு பெயர்
- ஒரு இடத்தின் பெயர் தூங்கு வாழும் மக்களுக்கு ஆகி வருவது?இடவாகு பெயர்
- காலத்தின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது ?காலவாகு பெயர்
- ஒரு உறுப்பின்{சினையின்}பெயர் முழு பொருளுக்கும் ஆகி வருவது?சினையாகு பெயர்
- தொழிலின் பெயர் அதனோடு தொடர்புடையபொருளுக்கு ஆகி வருவது ?தொழிலாகு பெயர்
- அளவையின் பெயர் அதில் அளக்கப்படும் பொருளுக்கு ஆகி வருவது ?அளவையாகு பெயர்
- அளவையால் வரும் ஆகுபெயர்கள்? 4{எண்ணல் அளவை,எடுத்தல் அளவை,முகத்தல் அளவை,நீட்டல் அளவை}
- சொல்லாகு பெயர் என்றால் என்ன?சொல்லின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது.
- தானியாகு பெயர் என்றால் என்ன?இடத்தில் உள்ள பொருளின் பெயர் இடத்திற்கு ஆகி வருவது.
- கருவியாகு பெயர் என்றால் என்ன?கருவியின் பெயர் அந்த கருவியால் நிகழ்ந்த செயலுக்கு ஆகி வருவது
- காரியவாகு பெயர் என்றால் என்ன?காரியத்தின் பெயர் அதனைச் செய்த கருவிக்கு ஆகி வருவது
- கருத்தாவாகு பெயர்?செய்தவர் பெயர் அவரால் செய்யப்பட்ட செயலுக்கு ஆகி வருவது
- உவமையாகு பெயர்?உவமையின் பெயர் உவமித்த பொருளுக்கு ஆகி வருவது
- வேற்றுமை என்றால் என்ன?ஒரு பெயர்ச் சொல் பயனிலை கொண்டு முடியும் பொழுது பொருளுக்கு ஏற்ப அந்த தொடரின் அமைப்பில் ஏற்படும் வேற்றுமை ஆகும்
- வேற்றுமை எத்தனை? 8
- உருபு ஏற்கும் வேற்றுமைகளின் எண்ணிக்கை- 6
- தனி உருபு இல்லா வேற்றுமைகள்- 2
- முதல் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படும்?எழுவாய் வேற்றுமை
- எழுவாய் வேற்றுமையின் வேறு பெயர்கள்? பெயர் வேற்றுமை, கருத்தா வேற்றுமை
- முதல் வேற்றுமை ஏற்கும் பயனிலைகள்?3{வினா பயனிலை,பெயர் பயனிலை, வினைப் பயனிலை }
- இரெண்டாம் வேற்றுமை உருபு? ஐ
- செய்யப்படு பொருளை ஏற்று வரும் வேற்றுமை ? இரண்டாம் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை எந்தெந்த பொருளில் வரும்?ஆக்கல்,அழித்தல்,அடைதல்,நீத்தல்,ஒத்தல்,உடைமை
- மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை?ஆல்,ஆன்,ஒரு,ஓடு
- மூன்றாம் வேற்றுமை எந்தெந்த பொருளில் வரும்?கருவி,கருத்தா,உடன் நிகழ்ச்சி
- நான்காம் வேற்றுமை உருபு?கு
- நான்காம் வேற்றுமை எந்தெந்தப் பொருளில் இடம்பெறும்?கொடை,பகை,நட்பு{நேர்ச்சி}தகவு,அதுவாதல்,பொருட்டு,முறை
- நான்காம் வேற்றுமைக்கான வேறு உருபுகள்?ஆக,பொருட்டு,நிமித்தம்
- ஐந்தாம் வேற்றுமை உருபுகள்?இல்,இன்
- நான்காம் வேற்றுமைக்கான சொல்லுருபுகள்?பொருட்டு,நிமித்தம்
- ஐந்தாம் வேற்றுமைக்கான சொல்லுருபுகள்?நின்று,இருந்து
- ஐந்தாம் வேற்றுமை ஏந்தெந்த பொருளில் வரும்?நீங்கள்,ஒப்பு,எல்லை,ஏது,பொருள்
- ஆறாம் வேற்றுமை எப்பொருளில் வரும்?கிழமை
- ஒருமைக்கான வேற்றுமை உருபு ?அது,ஆது
- பன்மைக்கான ஆறாம் வேற்றுமை உருபு ? அ
- ஆறாம் வேற்றுமையில் கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும் ? 2 {தற்கிழமை,பிறிதின் கிழமை}
- ஆறாம் வேற்றுமையில் தற்கிழமைகள்-5 வகைப்படும் {பண்பு ,உறுப்பு ,ஒன்றன் கூட்டம், பலவின் ஈட்டம் ,திரிபின் ஆக்கம் }
- ஆறாம் வேற்றுமையில் பிறதின் கிழமை வகைகள் -3{பொருள்,இடம், காலம்}
- ஏழாம் வேற்றுமை எந்தப் பொருளில் வரும் ? இடப்பொருள்
- ஏழாம் வேற்றுமை உருபுகள் யாவை ? கண் ,இல்
- ஏழாம் வேற்றுமைக்கான பிற உருபுகள்? கால் ,கடை ,இடை ,தலை ,வாய், திசை, முன் ,சார், உடலின் முன்,வலம் ,இடம் ,மேல் ,கீழ் ,புடை ,முதல் ,பின் ,பாடு ,உழை ,விழி ,ஊழி ,உளி ,உள் ,அகம் ,புறம்
- எட்டாம் வேற்றுமை -விளி வேற்றுமை
- விளி என்பதன் பொருள் -அழைத்தல் {விளித்தல் }
- படர்க்கைப் பொருளை முன்னிலைப்படுத்தி அழைத்தல் பொருளை கொண்ட வேற்றுமை ? எட்டாம் வேற்றுமை
- எட்டாம் வேற்றுமையின் உருபு? ஏதுமில்லை
- பெயர்கள் விளி ஏற்கையில் பெயரில் நிகழும் மாற்றங்கள் ? 5 {இயல்பாதல் ,ஈறு குன்றுதல் ,ஈறு மிகுதல் ,ஈறு திரிதல் ,ஈற்றயல் திரிதல் }
- எல்லா இடத்திலும் விளியேற்கும் சொல் ஈறுகள்{இறுதி }எத்தனை?19
- மொழி இறுதியில் வரும் எழுத்துக்களில் விளி ஏலாஎழுத்துக்கள்?
- அளபெடையில் மட்டுமே விளி ஏற்கும் எழுத்துக்கள் யாவை ? எ,ஒ,ஒள,ந
- ஐகார இறுதி பெயர் விளி ஏற்கையில் எவ்வாறு திரியும்?ஆ,ஆய் {அன்னாய் ,அம்மா - அம்மை என்பது அம்மாவாக திரியும்}
- ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை எந்த சொல்லைக் கொண்டு நிறைவுபெறும் ? பெயர்
- ஐந்தாம் ஆறாம் தவிர்த்த பிற வேற்றுமைகளில் நிறைவு சொல்லாய் வருபவை ? வினை
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 3 ஜூலை, 2020
சொல்லிலக்கணம் - வினாவங்கி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்'- எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது? ஆய்வு குறித்தது. தொல்காப்பியர் ஆய்வை எவ்வாறு கூறுகிறார்? உள்ளதன் ...
-
ஆகுபெயர் என்பது யாது? குறிப்பால் பொருள் தருவது. ஒன்றன் பெயர் அதைச் சார்ந்த மற்றொன்றுக்கு ஆகி வருவது. ஆகுபெயர் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியலி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக