தோழி செவிலியின் மகள்.
2. தோழி எதனால் சிறப்படைவாள்?
சூழ்தல், உசாத்துணை இவற்றால் சிறப்படைவாள் [பொலிவடைவாள்]. சூழ்தல் என்பது களவில் தலைவிக்காக தானே அனைத்தையும் சூழ்ந்து [சிந்தித்து] செயல்படுவது. உசாத்துணை என்பது தலைவி எடுக்கும் முயற்சிகளை ஏற்று அவளுக்கு இடைவிடா துணையாக இருப்பது.
3. களவில் தோழிக் கூற்று நிகழும் இடங்கள்?
நாற்றம் முதல் வன்புறை வரை உள்ள [நாலெட்டு] 32 இடங்களில் தோழிக்கூற்று நிகழும்.
4. மதியுடம்படுத்தல் என்பது என்ன?
தலைவன், தலைவியின் மதியுடன் தன் மதியை உடன்படுத்தல். அதாவது
அவர்களின் களவை ஏற்று உடன்படல்.
5. மதியுடம்படுதலின் வகைகள்? 3
குறையுற உணர்தல் - தலைவன் தன் குறையை தோழியிடம் கூறல்.
முன்னுரை உணர்தல் - தலைவியிடம் ஏற்படும் மாற்றங்களால் அறிதல்.
இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல்
6. முன்னுற உணர்வது எப்படி?
தலைவியிடம் ஏற்படும் மாற்றங்களான நாற்றம், தோற்றம், ஒழுக்கம்
இவற்றால் தோழி தலைவியின் களவொழுக்கத்திக் குறிப்பாய் உணர்வாள்.
7. நாற்றம் என்பது என்ன?
தலைவனைத் தனியிடத்தில் சந்தித்ததால், தலைவன் தந்த தழையாடை
மலர் சூடியமையால் ஏற்படும் மாறுபட்ட நாற்றம்.
8. தோற்றம் என்பது?
களவு காலத்து உண்ணாமை முதலியவற்றால் உடல் மெலிதல், பசலை பாய்தல் போன்ற மாற்றங்கள்.
9. ஒழுக்கம் என்பது?
தலைவி தோழி முதலானோரைத் தவிர்த்து தனியிடத்து செல்லுதல். தன்
செயல்களை மறைத்தல்.
10. மதியுடம்படுதலின் சிறப்பு?
மதியுடம்படுதல் அல்லாமல் தோழி களவில் எவ்வித முயற்சியும் எடுக்கமாட்டாள்.
11. செவிலிக்கூற்றுக்கான இடங்கள்?
களவு அலராதல் தொடங்கி இருபாற் குடிபொருள் இயல்பு வரையுள்ள 13
12. களவு அலராதல் என்பது.
அலர் என்பது அலர்தல். களவு குறித்த செய்தி ஊரார் மத்தியில் பேசப்படுதல்.
13. கிழவன் அறியா அறிவினள் யார்?
தலைவி [தலைவன் அறியா அறிவினை உடைய தலைவி 1 முக்காலத்தையும் ஆராயும் மயக்கமற்ற அறிவினை உடையவள்
தலைவி. ஆனாலும் தலைவனால் மயக்கமுறுவது கண்டு பிறர் ஐயுறுவர்.
14. ஐயக்கிளவி யாருக்கு உரியது?
செவிலி, நற்றாய்க்கு உரியது.
15. செவிலி தாயெனப்படக் காரணம்?
'ஆய்பெரும் சிறப்பின் அருமறைக் கிளத்தல்' - சிறப்புடைய . அறிதற்கு
அறிய மறைப்பொருள் அனைத்தையும் கூறும் கடமையுடையவள்.
16. தலைவனிடம் களவில் நிகழாதது எது?
தலைவன் செல்லும் வழியின் [ஆறின்] அருமையும், அழிவும், அச்சமும்
தலைவனிடம் நிகழாது.
17. தலைவியின் களவொழுக்கத்தை முன்னதின் [குறிப்பால்] உணர்வோர்
யாவர்?
தந்தையும், தன்னையும்[சகோதரனும்]
18. தாய் அறிவுறுதல் செவிலியோடு ஒக்கும்?
களவினை அறியும் தாய் செவிலியைப் போல் அதனை ஏற்பாள். [செவிலி களவை வெகுளாமல், கோபமடையாமல் ஏற்பாள்]
19. பிறருக்குக் களவினை வெளிப்படுத்துபவை எவை?
அலர், அம்பல்
20. அலர், அம்பல் வெளிவரக் காரணம் யார்?
தலைவன்
21. வரைதல் வகைகள் யாவை?
வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல்
22. வெளிப்பட வரைதல் என்பது?
களவு வெளிப்பட்ட பின்னர் வரைவது.
23. வெளிப்படாமை வரைதல் என்பது?
களவு வெளிப்படும் முன்னர் வரைவது.
24. வரைவு என்பது? - திருமணம்
25. களவு வெளிப்பட்டால் எதனோடு ஒக்கும்? - கற்பு
26. களவில் நிகழும் பிரிவு?
பொருள்வயிற் பிரிதல்
27. களவில் வாரா பிரிவு?
ஓதல், பகை, தூது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக