- தென்மாவட்டங்களில் காணப்படும் சமணர் குகைக் கல்வெட்டுக்கள் எந்த நாட்டுக் குகைக் கல்வெட்டுக்களை ஒத்திருக்கும்? இலங்கை
- தென் தமிழக சமணர் குகை கல்வெட்டு எழுத்துக்கள் எத்தகு வரி வடிவின? பிராமி வரி வடிவ தென்னக வகை
- முன்னர் அறியப்படாத புதிய வரி வடிவத்தை ஆராய்ந்து அறிவது எத்தகு பணி என தெ.பொ.மீ கூறுகிறார்? துப்பறிதல்
- தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொதுவான எழுத்துக்கள்? 25
- தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொதுவான உயிர் எழுத்துக்கள்? 10
- தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொதுவான மெய் எழுத்துக்கள்? 15
- மாற்றிலக்கணத்தின் தந்தை யார்? நோம் காம்ஸ்கி
- இந்தியாவில் இந்திக்கு அடுத்து அதிகமானோர் பேசும் மொழி? தெலுங்கு
- தமிழுக்கும் மலையாளாத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்றவர் யார்? எமனோ
- இந்திய வரி வடிவங்களின் தாய் எது? பிராமி
- பிராகிருத்தத்தை அரசு மொழியாகவும், வட மொழியை ஆதரவு மொழியாகவும் கொண்டவர்கள் யார்? பல்லவர்கள்
- களப்பிரர்கள் போற்றிய மொழி எது? பாலி
- களப்பிரர் தமிழை எப்படி எழுதினர்? பிராமி வடிவில்
- பல்லவர்கள் தமிழை எப்படி எழுதினர்? கிரந்தத்தில்
- சங்க காலத்து எழுத்து யாது? வட்டெழுத்தது
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 29 டிசம்பர், 2020
திராவிட மொழிகளில் தமிழ் வினா வங்கி
வியாழன், 17 டிசம்பர், 2020
நாடகம்
- தமிழ் நாட்டில் கிடைக்கும் முதல் நாடகம் எது? பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் [வடமொழி]
- சோழர்காலத்தில் இயற்றப்பட்ட நாடகங்கள் யாவை? இராசராசேச்சுர நாடகம், குலோத்துங்க சோழன் நாடகம், பூம்புலியூர் நாடகம்
- சோழர் காலத்தில் திருவிழாக்களில் நடிக்கும் உரிமை பெற்றிருந்தவள் யார்? உய்யவந்தாள் யசோதை
- மாரிமுத்துப் புலவர் இயற்றிய நாடகம் யாது? திருக்கச்சூர் நொண்டி நாடகம்
- இராமநாடகம் / இராமநாடகக் கீர்த்தனை யாரால் இயற்றப்பட்டது? அருணாச்சலக் கவிராயர்
- மாரிமுத்துப் பிள்ளை இயற்றிய நாடகம் யாது? அநீதி நாடகம்
- காசி விசுவநாத முதலியார் இயற்றிய நாடங்கள் யாவை? டம்பாச்சாரி நாடகம், தாசில்தார் நாடகம், பிரம்மசமாஜ நாடகம்
- அப்பாவுப்பிள்ளை இயற்றிய நாடகம் யாது? அரிச்சந்திர விலாசம்
- இராமச்சந்திர கவிராயர் இயற்றிய நாடகங்கள் யாவை? சகுந்தலை விலாசம், தாருக விலாசம்
- சிறுதொண்டர் விலாசத்தை இயற்றியவர் யார்? பரசுராமக் கவிராயர்
- ஒட்ட நாடகத்தை இயற்றியவர் யார்? கோவிந்த கவிராயர்
- காராளர் கார் காத்த நாடகத்தை இயற்றியவர் யார்? கிருஷ்ணசாமி செட்டியார்
- சோகி நாடகத்தை இயற்றியவர் யார்? சுப்பராயலு முதலியார்
- சோழர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகம் யாது? சோழ விலாசம்
- தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தில் இயற்றப்பட்ட பாரத கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள் யாவை? கீசகவிலாசம், தரும விலாசம், பாரத விலாசம்
- புகழேந்திப் புலவர் இயற்றிய நாடகங்கள் யாவை? நளவிலாசம், தமயந்தி நாடகம்
- தமிழ் நாடகத் தாத்தா யார்? கோவிந்தசாமி ராவ் [இன்றைய நாடகங்களின் முன்னோடி]
- இஸ்லாமிய நாடகங்களில் குறிப்பிடத்தக்கன யாவை? அப்பாசு நாடகம், அல்லி பாதுஷா நாடகம்
- கிறித்தவ நாடகங்களில் குறிப்பிடத்தக்கன யாவை? ஞான சௌந்தரியம்மாள் நாடகம், ஞானத்தச்சன் நாடகம்
- தமிழ் நாடகப்பேராசிரியர் யார்? தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
- சங்கரதாஸ் சுவாமிகள் எத்தனை நாடகங்கள் இயற்றியுள்ளார்? 40
- சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களில் குறிப்பிடத்தக்கன யாவை? அபிமன்யு சுந்தரி, அல்லி அர்ஜுனா, இலங்கா தகனம், கோவலன், சதி அனுசுயா, சத்தியவான் சாவித்திரி, சதி சுலோச்சனா, சிறுதொண்டர், சிந்தாமணி, பவளக்கொடி, பக்த பிரகலாதா, நல்ல தங்காள், மணிமேகலை
- சங்கரதாஸ் சுவாமிகள் மொழிபெயர்த்த வடமொழி நாடகம் யாது? மிருச்சகடிகா
- சங்கரதாஸ் சுவாமிகள் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் யாவை? ரோமியோ ஜூலியட், சிம்பலைன் [சிம்பலின்]
- பெ. சுந்தரம்பிள்ளை இயற்றிய நாடகம் யாது? மனோன்மணியம்
- மனோன்மணியத்தின் மூல நூல் எது? லிட்டன் பிரபுவின் இரகசிய வழி
- வி. கோ. நாராயண சாஸ்திரியார் எழுதிய நாடக இலக்கண நூல் யாது? நாடகவியல்
- வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இயற்றிய பாடல் கலந்த நாடக நூற்கள் யாவை? ரூபாவதி, கலாவதி, மானவிஜயம்
- பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக சபை யாது? சுகுணவிலாச சபை
- பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் எத்தனை? 80 [80க்கும் மேல்]
- பம்மல் சம்பந்த முதலியாரின் குறிப்பிடத்தக்க நாடகங்கள் யாவை? மனோகரா, சபாபதி, வேதாள உலகம், காதல் கண்கள், பொன் விலங்கு, சுலோச்சனா சதி, கள்வர் தலைவன், இரு நண்பர்கள், சதிசக்தி, வைகுண்ட வைத்தியர், புத்த அவதாரம், கலையோ காதலோ, விஜயரங்கம்
- இலட்சுமண பிள்ளை இயற்றிய நாடகங்கள் யாவை? விழா நாடகம், ரவிவர்மா நாடகம்
- கிருஷ்ணசாமிப் பாவலர் அமைத்த நாடக சபை யாது? பால மனோகர நாடக சபா
- கிருஷ்ணசாமிப் பாவலர் இயற்றிய புராண நாடகங்கள் யாவை? அரிச்சந்திரன், கோவலன், வள்ளித்திருமணம், தேசிங்குராஜன்
- கிருஷ்ணசாமிப் பாவலர் இயற்றிய தேசிய உணர்வு மிக்க நாடகங்கள் யாவை? கதிரின் வெற்றி, தேசியக் கொடி, பம்பாய் மெயில்
- டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக சபை யாது? ஸ்ரீபாலசண்முகானந்த சபா
- டி. கே. எஸ். சகோதரர்கள் இயற்றிய நாடகங்கள் யாவை? குமாஸ்தாவின் பெண், அந்தமான் கைதி, முள்ளில் ரோஜா
- நவாப் ராஜமாணிக்கம் தோற்றுவித்த நாடக சபா யாது? மதுரை தேவபால விநோத சங்கீத சபை
- நவாப் ராஜமாணிக்கம் சபையை இயற்றிய நாடகங்கள் யாவை? சம்பூர்ண ராமாயணம், கிருஷ்ணலீலா, பக்த ராமதாஸ், மனோகரா, சக்திலீலா, ஏசுநாதர், ஞான சௌந்தரி, பிரபல சந்திரா, பிரேம குமாரி, குமார விஜயம், சபரிமலை ஐயப்பா
- நவாப் ராஜமாணிக்கம் பெற்ற பட்டங்கள் யாவை? நாடகக் கலாநிதி, நாடகயோகி
- எஸ்.வி. சகஸ்ரநாமம் தோற்றுவித்த நாடக அமைப்பு யாது? சேவா ஸ்டேஜ்
- எஸ்.வி. சகஸ்ரநாமம் இயற்றிய நாடகங்கள் யாவை? பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், மல்லியம் மங்களம், தேரோட்டி மகன், போலீஸ்காரன் மகள், வடிவேலு வாத்தியார், நாலுவேலி நிலம், பாஞ்சாலி சபதம், ஜீவனாம்சம்
- அவ்வை தி. க. சண்முகம் இயற்றிய நாடகம் குறித்த நூல்கள் யாவை? தமிழ் நாடகத் தலைமையாசிரியர், நாடகக் கலை, நெஞ்சு மறக்குதில்லையே, எனது நாடகக் கலை
- பேரறிஞர் அண்ணா இயற்றிய நாடகங்கள் யாவை? நீதிதேவன் மயக்கம், சந்திரமோகன், வேலைக்காரி, கலிங்க ராணி
- கலைஞர் கருணாநிதி இயற்றிய நாடகங்கள் யாவை? ஒரே முத்தம், தூக்கு மேடை, விமலா அல்லது விதவையின் கண்ணீர், மந்திரி குமாரி, மணி மகுடம், நச்சுக்கோப்பை, வாழ முடியாதவர்கள், நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதய சூரியன், பரப்பிரம்மம், காகிதப்பூ, சிலப்பதிகாரம்
- கே. பாலச்சந்தர் இயற்றிய நாடகங்கள் யாவை? நாணல், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், சதுரங்கம்
- கோமல் சுவாமிநாதன் இயற்றிய நாடகங்கள் யாவை? பெருமானே சாட்சி, தண்ணீர் தண்ணீர், ஒரு இந்தியக் கனவு, அனல் காற்று, யுத்த காண்டம், குமார விஜயம், ராஜபரம்பரை, பாலூட்டி வளர்த்தகிளி
- ஏ. என். பெருமாள் இயற்றிய நாடகங்கள் யாவை? பனிமொழி, பால்மதி, பீலிவளை, மானசீகை
- ஏ. என் பெருமாள் எழுதிய நாடகத் திறனாய்வு நூல்கள் யாவை? தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ் நாடகம் ஓர் ஆய்வு, உலக அரங்கில் நாடகம்
- புராண நாடக வேந்தர் யார்? ஆர். எஸ். மனோகர்
- ஆர். எஸ். மனோகர் தோற்றுவித்த நாடக அமைப்பு யாது? நேஷனல் தியேட்டர்ஸ்
- ஆர். எஸ். மனோகர் இயற்றிய நாடகங்கள் யாவை? இன்பநாள், உலகம் சிரிக்கிறது, இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், காடக முத்தரையன், மாலிக்கபூர், சுக்கிராச்சாரியார், பரசுராமன், துரோணர், விசுவாமித்திரர், நரகாசுரன், சூரபத்மன், இந்திரஜித், சிசுபாலன்
- நிஜநாடக இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்? மு. இராமசாமி [1977ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கியது]
- நிஜநாடக இயக்கத்தின் குறிப்பிடத்தகுந்த நாடகங்கள் யாவை? வெத்து வேட்டு, ஸ்பார்டகஸ்
- பரீட்சா இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்? ஞாநி
- பரீட்சா நாடக இயக்கத்தின் குறிப்பிடத் தகுந்த நாடகங்கள் யாவை? ஏன், நாற்காலிக்காரர், காலம் காலமாக, போர்வை போர்த்திய உடல்கள், மூட்டை, மூர்மார்க்கெட், மனுஷா, வயிறு
- கூத்துப்பட்டறை யாரால் தொடங்கப்பட்டது? ந. முத்துசாமி
- கூத்துப்பட்டறையின் குறிப்பிடத்தகுந்த நாடகங்கள் யாவை? கீசகவதம், சுவரொட்டிகள்
- துளிர் இயக்கம் எங்கு இயங்குகிறது? தஞ்சை
- சுதேசிகன் இயக்கம் எங்கு இயங்குகிறது? மதுரை
- சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளி எங்கு இயங்குகிறது? புதுவை
புதன், 16 டிசம்பர், 2020
உரைநடை - 2 [கடித இலக்கியங்கள்]
1. நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள்
2. கடித முறையில் எழுதப்பட்ட நாவல் எது? மறைமலையடிகள் எழுதிய கோகிலாம்பாள் கடிதங்கள்
3. சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய மடல் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? முடங்கல்கள்
4. தமிழில் கடித இலக்கியத்தை தனித்த இலக்கியமாக வளர்த்தவர்கள் யாவர் யாவர்? மு. வரதராசனார். அறிஞர் அண்ணா, கலைஞர்,
5. மு. வரதராசனார் எத்தனை கடித இலக்கியங்கள் எழுதியுள்ளார்? 4[ அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பருக்கு]
6. அண்ணாவின் கடித இலக்கியம் யாருக்கு எழுதப்பட்டது?
தம்பிக்கு [திராவிட தொண்டர்களுக்கு]
7. அண்ணாவின் தம்பிக்கு எந்த இதழில் தொடர்ந்து வெளிவந்தது? திராவிடநாடு
8. கலைஞர் கருணாநிதியின் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதங்கள் எந்த இதழில் வெளிவந்தன? முரசொலி
9. இரா. செழியன் எந்த காலத்தில் கடிதங்கள் எழுதினார்? அவசரநிலை முடிவுற்ற அவசர நிலை காலத்தில்
10. கீ. ராஜநாராயணன் எழுதிய கடிதங்கள் யாவை? கரிசல் காட்டுக் கடுதாசி, கு . அழகிரிசாமி கடிதங்கள்
செவ்வாய், 15 டிசம்பர், 2020
உரைநடை இலக்கியங்கள் ( பயண இலக்கியங்கள்
- தமிழின் முதல் பயண இலக்கியம் எது? காசியாத்திரை
- காசியாத்திரையை இயற்றியவர் யார்? வீராசாமி
- காசியாத்திரை இயற்றப்பட்ட காலம் எது? 1832
- நரசிம்மலுநாயுடு எழுதிய பயண இலக்கியம் யாது? தேசயாத்திரை [1885]
- துரைசாமி மூப்பனார் இயற்றிய பயண இலக்கியம் யாது? கங்கா யாத்ராப்ரபாவம் [1887]
- கொ. சண்முகசுந்தர முதலியார் எழுதிய பயண இலக்கியம் எது? காசிராமேஸ்வர யாத்திரை [1903]
- அயல்நாட்டுப் பயணம் குறித்த முதல் பயண இலக்கியம் யாது? பிரதாப சங்கிரகம் [1986]
- எனது இலங்கைச் செலவு என்ற பயண இலக்கியத்தை இயற்றியவர் யார்? திரு.வி.க
- சி. சுப்பிரமணியன் இயற்றிய பயண இலக்கியம் யாது? நான் கண்ட சிலநாடுகள், உலகம் சுற்றினேன்
- க. ராசாராம் இயற்றிய பயண இலக்கியம் யாது? தென்கிழக்கு ஆசியாவில்
- கவியோகி சுத்தானந்த பாரதி இயற்றிய பயண இலக்கியம் யாது? நான் கண்ட ரஷ்யா
- சு. ந. சொக்கலிங்கம் இயற்றிய பயண இலக்கியம் யாது? ஜப்பானில் நான் கண்டதும் கேட்டதும்
- பாரதி இயற்றிய பயணக் கட்டுரை யாது? எங்கள் காங்கிரஸ் யாத்திரை
- ஏ. கே. செட்டியார் இயற்றிய பயண இலக்கியம் யாது? குடகு, அண்ணல் அடிச்சுவட்டில், தமிழ்நாடு
- சோமலே இயற்றிய பயண இலக்கியங்கள் யாவை? அமெரிக்காவைப் பார், ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம், பிரயாண நினைவுகள், பிரயாணம் ஒரு கலை, இமயம் முதல் குமரி வரை, நான் கண்ட விழாக்கள், உலக நாடுகள் வரிசை, ஆப்பிரிக்க நாடுகள் வரிசை
- க. ப. அறவாணன் இயற்றிய பயண இலக்கியங்கள் யாவை? பயண அனுபவங்களின் பாதை வெளிச்சங்கள்
- சாலை இளந்திரையன் இயற்றிய பயண இலக்கியம் யாது? எங்கள் பயணங்கள்
- எஸ். ஆர். சண்முகம் இயற்றிய பயண இலக்கியம் யாது? அதிசய நாடு அமெரிக்கா
- சிவசங்கரி இயற்றிய பயண இலக்கியம் யாது? அனுபவங்கள் தொடர்கின்றன
- மு.வ. இயற்றிய பயண இலக்கியம் யாது? யாம் கண்ட இலங்கை
- நடந்தாய் வாழி காவிரியை இயற்றியவர்கள் யாவர்? தி. ஜானகிராஜன், சிட்டி
- கேரளம் கண்டேன் இயற்றியவர் யார்? செந்தில் துறவி
- சாவி இயற்றிய பயண இலக்கியங்கள் யாவை? இங்கே போயிருக்கிறீர்களா? நவகாளி யாத்திரை
- விக்கிரமன் இயற்றிய பயண இலக்கியங்கள் யாவை? வாதாபி விஜயம்
- சிட்டி சிவபாதசுந்தரம் இயற்றிய பயண இலக்கியம் யாது? அடிச்சுவட்டில்
- அவிநாசிலிங்கம் இயற்றிய பயண இலக்கியம் யாது? திருக்கேதாரம்
- ராய. சொக்கலிங்கம் இயற்றிய பயண இலக்கியம் யாது? திருத்தலப் பயணம்
- நரசய்யா இயற்றிய பயண இலக்கியங்கள் யாவை? கடலோடியின் கம்போடியா நினைவுகள், கடலோடி, மதராசாப்பட்டினம்
- வாமனன் - கல்கத்தா
- சுப்ரபாரதி மணியன் - மண்புதிது
- ஈரோடு தமிழன்பன் - வால்ட்விட்மன் நேற்று உன் வீட்டிற்கு வந்திருந்தேன்
- கல்கி - கண்டேன் இலங்கையை
- தமிழ்வாணன் - சிகாகோவில் தமிழ்வாணன்
- குமரி அனந்தன் - உலக நாடுகள் சில குறிப்புகள்
- லேனா தமிழ்வாணன் - கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு, ஒரு பத்திரிகையாளனின் கீழை நாட்டு மற்றும் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள்
- திலகபாமா - திசைகளின் தரிசனங்கள்
- வேங்கடம் - அடேங்கப்பா அமெரிக்கா
- இயேசு சுப்பிரமணி - இன்னொரு யுகசந்தி
- தா. பாண்டியன் - கண்டேன் சீனாவை
- அசலெப்பை அப்துல்லா - துபாயில் இனிய அனுபவங்கள்
- சௌந்தரிய நாயகி வயிரவர் - சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை
- வைரமுத்து - வால்காவிலிருந்து
- செ. மாதவன் - சில நாடுகள் சில நாட்கள்
- சுஜாதா - 60 அமெரிக்க நாடுகள்
- மணியன் - இங்கிலாந்து பேசுகிறது, இதயம் பேசுகிறது
- ம. பொ. சி - மலேசியாவில் ஒரு மாதம், மாஸ்கோவிலிருந்து இலண்டன் வரை, மொரிஷியஸ் தீவில் ஒருவாரம், அமெரிக்காவில் மூன்று வாரம்
- நிர்மலா சுரேஷ் - திசைகளின் நடுவே
- எஸ். ராம் கிருஷ்ணன் - அது அந்தக்காலம், வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்
- காஞ்சனா தாமோதரன் - புல்வெளி தேசம்
- அ. கா. பெருமாள் - சிவாலய ஓட்டம்
சனி, 12 டிசம்பர், 2020
புதினம் 1
செவ்வாய், 8 டிசம்பர், 2020
புதுக்கவிதை வினா வங்கி - 1
- முதல் கட்டுப்பாடற்ற கவிதை எது? புல்லின் இதழ்கள்
- புல்லின் இதழ்கள் யாரால் இயற்றப்பட்டது? வால்ட்விட்மன்
- முதன்முதலில் கட்டற்ற கவிதை எங்கு எழுதப்பட்டது? அமெரிக்கா
- கட்டற்ற கவிதை எவ்வாறு எழுதப்பட்டது? யாப்பிலிருந்து விடுபட்டது என்னும் பொருளில் [Free verse]
- இங்கிலாந்தில் இயற்றப்பட்ட முதல் கட்டற்ற கவிதை நூல் யாது? பாழ் நிலம் [Waste Lan]
- பாழ் நிலத்தின் ஆசிரியர் யார்? டி. எஸ். எலியட்
- பாழ் நிலம் பெற்ற பரிசு யாது? நோபல் பரிசு
- தமிழில் முதன் முதலில் இயற்றப்பட்ட கட்டற்ற கவிதையை எழுதியது யார்? மகாகவி பாரதியார்
- பாரதியார் யாரால் தாக்கம் பெற்று கட்டற்ற கவிதை எழுதினார்? வால்ட் விட்மன்
- முதன் முதலில் சோதனை முயற்சியாக புதுக்கவிதை எழுதியவர் யார்? ந. பிச்சமூர்த்தி
- ந. பிச்சமூர்த்தி புதுக்கவிதை எழுதிய ஆண்டு யாது? 1934
- மணிக்கொடி காலம் என்பது யாது? 1930 - 1945
- மணிக்கொடி கவிஞர்கள் யாவர்? ந. பிச்சமூர்த்தி, தூரன், ரகுநாதன், கா. சுப்பிரமணியன்
- மணிக்கொடி காலத்தில் கவிதை வெளியிட்ட இதழ்கள் யாவை? கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜிமலர்
- எழுத்து காலம் யாது? 1945 - 1970
- எழுத்துக் கவிஞர்கள் யாவர்? தருமு சிவராம், பசுவையா, ஞானக்கூத்தன், சி.சு. செல்லப்பா, வைத்தீஸ்வரன், சி. மணி
- எழுத்து இதழைத் தொடங்கியவர் யார்? சி.சு. செல்லப்பா
- எழுத்துக்காலத்தில் கவிதை வெளியிட்ட இதழ்கள் யாவை? சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற
- வானம்பாடிக் காலம் யாது? 1970 - 1980
- வானம்பாடி இதழில் இயற்றிய கவிஞர்கள் யாவர்? அப்துல் ரகுமான், மீரா, மேத்தா, அபி, தமிழன்பன், புவியரசு, கங்கைகொண்டான், சக்திக் கனல்
- வர்க்கப்போராட்ட இயக்கக் கவிஞர்கள் யாவர்? இன்குலாப், வெண்மணி, செம்மலர்ச் செல்வன், நவபாரதி, தமிழ் நாடன், கந்தர்வன், அக்னிபுத்திரன்
- புதுக்கவிதையின் தந்தை யார்? ந. பிச்சமூர்த்தி
- தமிழின் முதல் கவிதை யாது? காதல்
- தமிழின் முதல் கவிதைத் தொகுப்பு யாது? புதுக்குரல்
- ந. பிச்சமூர்த்தி யாவருடைய தாக்கத்தால் கவிதை இயற்றினார்? வால்ட் விட்மன், தாகூர், பாரதி
- ந. பிச்சமூர்த்தியின் புதுக்கவிதை நூல்கள் யாவை? புதுக்குரல்கள் [1962], பிச்சமூர்த்திக் கவிதைகள், கிளிக்குஞ்சு, காட்டுவாத்து, கிளிக்கூண்டு, பூக்காரி, வழித்துணை
- கவிக்கோ அப்துல் ரகுமான் எங்கு பிறந்தார்? மதுரை
- அப்துல் ரகுமான் எப்போது பிறந்தார்? 1937
- அப்துல் ரகுமான் 1999 ஆம் ஆண்டு எந்த கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கினார்? ஆலாபனை
- அப்துல் ரகுமான் நடத்திய இதழ் யாது? கவிக்கோ
- கவிக்கோ பெற்ற விருதுகள் யாவை? தம்ழன்னை விருது, அட்சரா, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, முரசொலி அறக்கட்டளை விருது
- அப்துல் ரகுமான் பெற்ற சிறப்புப் பெயர்கள் யாவை? வின்மீன்களிடையே ஒரு முழுமதி, வானத்தை வென்ற கவிஞன், சூரியக் கவிஞன், தமிழ்நாட்டு இக்பால்
- கவிஞர் மீரா எங்கு பிறந்தார்? சிவகங்கை
- கவிஞர் மீரா எப்போது பிறந்தார்? 1938
- கவிஞர் மீராவின் பெற்றோர் யாவர்? மீனாட்சி சுந்தரம், லட்சுமி அம்மாள்
- கவிஞர் மீராவின் இயற்பெயர் யாது? மீ. ராசேந்திரன்
- கவிஞர் மீராவின் புதுக்கவிதைத் தொகுப்புகள் யாவை? கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள், ஊசிகள்
- கவிஞர் மீராவின் மரபுக்கவிதைத் தொகுப்புகள் யாவை? இராசேந்திரன் கவிதைகள், மூன்றும் ஆறும்
- மு. மேத்தா எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி எழுதினார்? 'ஆகாசத்துக்கு அடுத்த வீடு'
- ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் யாது? ஜெகதீசன்
- ஈரோடு தமிழன்பன் எந்த ஆண்டு பிறந்தார்? 1940
- ஈரோடு தமிழன்பன் எங்கு பிறந்தார்? ஈரோட்டிற்கு அருகில் உள்ள சென்னிமலை
- ஈரோடு தமிழன்பனின் பெற்றோர் யாவர்? நடராஜா, வள்ளியம்மாள்
- ஈரோடு தமிழன்பன் சாகித்திய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக விளங்கியுள்ளார்.
- ஈரோடு தமிழன்பனின் 'தமிழன்பனின் மரபுக்கவிதைகள்' என்ற மரபுக்கவிதை நூல் பெற்ற விருது யாது? தமிழக அரசின் பரிசு
- ஈரோடு தமிழன்பனின் நூல்கள் யாவை? தோணி வருகிறது, தீவுகள் கரையேறுகின்றன, சூரியப் பறவைகள், விடியல் விழுதுகள், நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம், காலத்திற்கு ஒரு நாள் முந்து, சிலிர்ப்புகள் பொதுவுடைமைப் பூபாளம் என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
- நா. காமராசனின் கவிதைத் தொகுப்புகள் யாவை? கறுப்பு மலர்கள், மலையும் ஜீவநதிகளுயும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும், பொம்மைப் பாடகி
- மு. மேத்தா எங்கு பிறந்தார்? பெரியகுளம்
- மு. மேத்தா பிறந்த ஆண்டு யாது? 1945
- மு. மேத்தாவின் தமிழக அரசின் விருது பெற்ற மரபுக் கவிதை நூல் யாது? ஊர்வலம்
- மு. மேத்தாவின் சாகித்ய அகாடமி விருது வென்ற நூல் யாது? ஆகாயத்திற்கு அடுத்த வீடு
- மு. மேத்தா சாகித்ய அகாடமி விருது வென்ற ஆண்டு எது? 2006
- மு. மேத்தாவின் படைப்புக்கள் யாவை? கண்ணீர் பூக்கள், ஊர்வலம், மனச்சிறகு, முகத்துக்கு முகம், மனிதனைத் தேடி, திருவிழாவைல் ஒரு தெருப்பாடகன், காத்திருந்த காற்று
- மு. மேத்தாவின் கவிதைகள் எந்தெந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன? ஆங்கிலம், இந்தி, மலையாளம்
- இன்குலாப்பின் இயற்பெயர் யாது? ஷாகுல் அமீது
- இன்குலாப் பிறந்த இடம் எது? ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை
- இன்குலாப்பின் கவிதைத் தொகுப்புகள் யாவை? இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு, கூக்குரல், சூரியனைச் சுமப்பவர்கள்
- சிற்பி பாலசுப்பிரமணியம் எங்கு பிறந்தார்? பொள்ளாச்சி
- சிற்பி பாலசுப்பிரமணியம் பிறந்த ஆண்டு எது? 1946
- சிற்பி பாலசுப்பிரமணியத்தின் இயற்பெயர் யாது? நடராச பாலசுப்பிரமணியம் சேது ராமசாமி
- பாலசுப்பிரமணியத்தின் புனைப்பெயர் யாது? சிற்பி
- பாலசுப்பிரமணியம் மொழிபெயர்ப்பு நூல்கள் யாவை? 4 மலையாள நூல்கள்
- சாகித்ய அகாடமி விருது வென்ற சிற்பி பாலசுப்பிரமணியத்தின் மொழிபெயர்ப்புப் படைப்பு யாது? அக்னிசாட்சி [2000]
- சாகித்ய அகாடமி விருது வென்ற சிற்பிபாலசுப்பிரமணியத்தின் கவிதை நூல் யாது? ஒரு கிராமத்து நதி [2002]
- இருமுறை சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழ்க் கவிஞர் யார்? சிற்பிப் பாலசுப்பிரமணியம்
- பாலசுப்பிரமணியம் எந்த நூலுக்காக தமிழக அரசின் பரிசு வென்றார்? மௌன மயக்கங்கள் என்ற புதுக்கவிதை காப்பியம்
- சிற்பி பாலசுப்பிரமணியத்தின் படைப்புக்கள் யாவை? சிரித்த முத்துக்கள், ஒளிப்பறவை, சர்ப்பயாகம், புன்னகை பூக்கும் பூனைகள், நிலாப்பூ, சூரிய நிழல்
- சிற்பி பாலசுப்பிரமணியம் குழந்தைகளுக்காக இயற்றிய நூல் எது? வண்ணப் பூக்கள்
- கவிஞர் வைரமுத்து பிறந்த ஆண்டு? 1953
- வைரமுத்து பிறந்த ஊர் யாது? தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள மேட்டூர்
- வைரமுத்துவின் பெற்றோர் யாவர்? இராமசாமி, அங்கம்மா
- புதுக்கவிதையின் புதையல் எனப் புகழப்பட்ட வைரமுத்து படைப்பு யாது? திருத்தி எழுதிய தீர்ப்புகள்
- தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் எனப் பாராட்டப் பெற்ற வைரமுத்துவின் நூல் யாது? தண்ணீர் தேசம் [1996]
- வைரமுத்துவின் படைப்புக்கள் யாவை? இன்னொரு தேசிய கீதம், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, கொஞ்சம் தேனீர் நிறைய வானம், மூன்றாம் உலகப் போர் [கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்]
திங்கள், 7 டிசம்பர், 2020
புகழ் பெற்றப் புலவர்கள் - 2
- திருக்குருகைப் பெருமாள் கவிராயர் எங்கு பிறந்தார்? ஆழ்வார் திருநகரி
- திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றிய இலக்கண நூல்கள்? மாறன் அகப்பொருள், மாறன் அலங்காரம், மாறன் பாப்பாவினம்
- திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் படைப்புக்கள் யாவை? குருமகாத்கியம், திருப்பதிக்கோவை, கிளவி மணிமாலை, நம்பெருமாள் மும்மணிக்கோவை
- திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் காலம் யாது? கி.பி. 16ஆம் நூற்.
- அந்தகக்கவி வீரராகவ முதலியார் எங்கு பிறந்தார்? தொண்டை நாட்டுக் களத்தூர்
- அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்.
- அந்தகக்கவி வீரராகவ முதலியார் வசைபாடுவதில் வல்லவர்
- அந்தகக்கவி வீரராகவ முதலியார் தனிப்பாடல் திரட்டில் எத்தனைப் பாடல்கள் பாடியுள்ளார்? 20
- அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் படைப்புக்கள் யாவை? சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்ற மாலை, திருக்கழுக்குன்றப் புராணம், சந்திரவாணன் கோவை, திருவாரூர் உலா
- வீரகவிராயர் எங்கு பிறந்தார்? பாண்டிய நாட்டு நல்லூர்
- வீரகவிராயர் இயற்றிய புராணம் யாது? அரிச்சந்திர புராணம்
- அரிச்சந்திர புராணத்திற்கு முதல் நூலாக இருந்தவை யாவை? அரிச்சந்திர வெண்பா, அரிச்சந்திர சரிதம்
- அரிச்சந்திர புராணம் இயற்றப்பட்ட காலம் யாது? கி.பி. 1524ஆம் ஆண்டு
- அரிச்சந்திர புராண காண்டங்கள் எத்தனை? 10 காண்டம்
- அரிச்சந்திர புராண பாடல்கள் எத்தனை? 1225 செய்யுட்கள்
- முனைப்பாடியார் எச்சமயத்தைச் சார்ந்தவர்? சமணம்
- முனைப்பாடியார் இயற்றிய அறநூல் யாது? அருங்கலச் செப்பு
- அருங்கலச்செப்பு எப்பொருளைப் பேசுகிறது? காட்சி, ஒழுக்கம், ஞானம்
- அருங்கலச்செப்பு எத்தனைப் பாக்களைக் கொண்டது? 222
- அருகனை சிவன் என்று கூறும் புலவர் யார்? முனைப்பாடியார்
- முனைப்பாடியாரின் காலம் யாது? கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
- கவிராட்சதர் எனப்படும் புலவர் யார்? கச்சியப்ப முனிவர்
- கச்சியப்ப முனிவர் இயற்றிய நூல்கள் யாவை? விநாயக புராணம், தணிகைப் புராணம்
- கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எங்கு பிறந்தார்? கும்பகோணம் மாவட்ட கொட்டையூர்
- சிவக்கொழுந்து தேசிகரின் காலம் யாது? கி.பி. 19ஆம் நூற்றாண்டு
- சிவக்கொழுந்து தேசிகரின் தந்தை யார்? தண்டபாணி தேசிகர்
- சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்தவர் யார்? தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் [அவரது அவைக்களப் புலவராக இருந்தார்]
- சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல்கள் யாவை? சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி கவிதை நாடகம், திருவிடைமருதூர் புராணாம், திருமறை நல்லூர் புராணம், கொட்டையூர் உலா, கோடீச்சுரக் கோவை
- தஞ்சைக் கோயில் அஷ்டக்கொடி விழாவில் நடைபெறும் நாடகம் யாது? சரபேந்திர பூபாலக் குறவஞ்சி கவிதை நாடகம் [இது அஷ்டக்கொடிக் குறவஞ்சி எனப்படும்]
- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எங்கு பிறந்தார்? திருவரங்கம்
- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? அஷ்டப் பிரபந்தம்
- அஷ்டப்பிரபந்தத்தில் உள்ள இலக்கியங்கள் யாவை? திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து அந்தாதி, அழகர் அந்தாதி, திருவேங்கட அந்தாதி, திருப்பதி அந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவேங்கட மாலை, திருவரங்கத்து ஊசல்
- அஷ்டப்பிரபந்தத்தில் உள்ள செய்யுள்கள் எத்தனை? 790
- அஷ்டப்பிரபந்தத்தில் பாடப்படுபவை யாவை? திருமாலின் சிறப்பு, 108 திருப்பதிகள்
- படிக்காசுப் புலவர் எங்கு பிறந்தார்? தொண்டை மண்டலக் களத்தூர்
- படிக்காசுப் புலவரின் வேறு பெயர் யாது? படிக்காசுத் தம்பிரான்
- படிக்காசுப் புலவர் எங்கு அரசவைக் கவிஞராக இருந்தார்? இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் அரசவைக் கவிஞர்
- படிக்காசுப் புலவரை ஆதரித்தவர் யார்? வள்ளல் சீதக்காதி
- படிக்காசுப் புலவரின் படைப்புக்கள் யாவை? தொண்டைமண்டலச் சதகம், சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ், புள்ளிருக்கு வேளுர்க் கலம்பகம், பாம்பலங்காரர் வருக்கக் கோவை, உமைப்பாகர் பதிகம்
- படிக்காசுப் புலவரை தனிப்பாடல் எவ்வாறு பாராட்டுகிறது? "பண்பாகப் பகர் சந்தம் படிக்காசு"
- படிக்காசுப் புலவரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
- இராமச்சந்திர கவிராயரின் காலம் யாது? கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
- இராமச்சந்திர கவிராயரின் படைப்புக்கள் யாவை? பாரத விலாசம், சகுந்தலை நாடகம், தாருக விலாசகம்
- நல்லாப்பிள்ளையின் படைப்புக்கள் யாவை? நல்லாபிள்ளை பாரதம், தேவயானைப் புராணம்
- நிரம்பவழகிய தேசிகரின் படைப்புக்கள் யாவை? சேதுபுராணம், திருவருட்பயன் உரை, திருப்பரங்க்கிரிப் புராணம், குருஞானசம்பந்தர் மாலை, சிவஞான சித்தியார் சுபக்க உரை
- நிரம்பவழகிய தேசிகரின் ஒருசாலை மாணாக்கர் யார்? பரஞ்சோதி முனிவர்
- நிரம்பவழகிய தேசிகரின் ஆசிரியர் யார்? கமலை ஞானப்பிரகாசம்
- நிரம்பவழகிய தேசிகரின் மாணவர்கள் யாவர்? அதிவீரராம பாண்டியர், வரதுங்கராம பாண்டியர்
- கடிகைமுத்துப் புலவரின் படைப்புக்கள் யாவை? சமுத்திர விலாசம், காமரசமஞ்சரி, மதனவித்தார மாலை
- கடிகைமுத்துப் புலவரின் சீடர் யார்? உமறுபுலவர்
- அபிராமிப்பட்டரின் படைப்பு யாது? அபிராமி அந்தாதி
- சீர்காழி அருணாசலக் கவிராயர் படைப்புக்கள் யாவை? சீர்காழித் தலபுராணம், சீர்காழிக்கோவை, சீர்காழிப் பள்ளு, அனுமார் பிள்ளைத்தமிழ், அசோமுகி நாடகம், இராமநாடக்க் கீர்த்தனை
ஞாயிறு, 6 டிசம்பர், 2020
புகழ்பெற்ற புலவர்கள் -1
- ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்கள் யாவர்? வ்க்கிரம சோழன், இரண்டாம் குலோத்தங்கன், இரண்டாம் இராசராச சோழன்
- ஒட்டக்கூத்தரின் ஊர் யாது? மலரி
- ஒட்டக்கூத்தர் இயற்றிய பரணி? தக்கயாகப் பரணி
- ஒட்டக்கூத்தர் இயற்றிய பிள்ளைத் தமிழ்? இரண்டாம் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்
- ஒட்டக்கூத்தர் இயற்றிய பிள்ளைத் தமிழ் யாது? மூவருலா
- ஒட்டக்கூத்தர் இயற்றிய கோவை நூல் யாது? காங்கேயன் நாலாயிரக்கோவை
- ஒட்டக்கூத்தரின் சமகாலப் புலவர்கள் யாவர்? கம்பர், புகழேந்திப் புலவர்
- ஒட்டக்கூத்தர் இயற்றிய பிற நூல்கள் யாவை? ஈட்டியெழுபது, அரும்பைத் தொள்ளாயிரம், இராமாயண உத்தர காண்டம்
- உத்தர காண்டம் - கம்பராமாயணத்தில் கம்பர் இயற்றாத காண்டமான உத்தர காண்டத்தை ஒட்டக்கூத்தர் இயற்றினார். இது இராமன் பட்டாபிஷேகத்திற்குப் பின் உள்ள நிகழ்வுகளைக் கூறும்.
- அதிவீரராம பாண்டியர் பாண்டிய அரச மரபில் தோன்றியவர்
- அதிவீரராம பாண்டியரின் இயற்பெயர் யாது? அழகர் பெருமாள்
- அதிவீரராம பாண்டியரின் சிறப்புப் பெயர்கள் யாவை? ஸ்ரீ வல்லபன், வீரமாறன், இராமன், பிள்ளைப் பாண்டியன்
- அதிவீரராம பாண்டியரின் படைப்புக்கள் யாவை? நைடதம், காசிக்காண்டம், கூர்ம புராணம், இலிங்க புராணம், நறுந்தொகை, மகா புராணம், திருக்குருவை பதிற்றுப்பத்தந்தாதி
- நைடதம் எத்தனை பாக்களைக் கொண்டது? 1772
- நைடதம் எதைப் பற்றியது? நள தமயந்திக் கதையைக் கூறுவது.
- அதிவீரராம பாண்டியனின் மொழிபெயர்ப்பு நூல் யாது? இலிங்க புராணம்
- நறுந்தொகையின் வேறு பெயர் யாது? வெற்றிவேற்கை
- கரிவலம் வந்த நல்லூரில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பட்ட நூல் எது? திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி [குட்டித் திருவாசகம்]
- அதிவீரராம பாண்டியரின் சகோதரரான புலவர் யார்? வரதுங்கராம பாண்டியர்
- வரதுங்கப்பாண்டியர் வடமொழியில் இருந்து மொழிபெயர்த்த நூல் எது? கொக்கோகம்
- வரதுங்கப்பாண்டியரின் பிற நூல் யாது? பிரம்மோத்தர காண்டம்
- நைடதம் 'நாய் விரைந்தோடி இளைத்தாற் போன்ற தன்மையுடைத்து' என்றவர் யார்? வரதுங்கராம பாண்டியரின் மனைவி
- பட்டினத்தார் பிறந்த ஊர் யாது? காவிரிபூம்பட்டினம்
- பட்டினத்தாரின் பெற்றோர் யாவர்? சிவநேச குப்தர், ஞானக்கலை
- பட்டினத்தாரின் இயற்பெயர் யாது? திருவெண்காடர்
- இரு பட்டிணத்தார் உண்டு என்று கூறுவது உண்டு. இரண்டாம் பட்டினத்தாரின் காலம் யாது? கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
- பட்டினத்தாரின் படைப்புக்கள் யாவை? கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவிடை மருதூர் மும்மணிக் கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவெர்றியூர் ஒருபா ஒருபஃது [இவ்வைந்தும் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளவை
- குமரகுருபரர் எங்கு பிறந்தார்? திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீ வைகுண்டம்
- குமரகுருபரர் பெற்றோர் பெயர்? சண்முக சிகாமணிக் கவிராயர், சிவகாம சுந்தரி
- பிறந்தது முதல் ஐந்தாண்டு காலம் பேசாமல் இருந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம் யார்? குமரகுருபரர்
- பேசும் திறன் பெற்றதும் திருச்செந்தூர் முருகன் மீது பாடப்பட்ட யாது? கந்தர் கலிவெண்பா
- குமரகுருபரரின் படைப்புக்கள் யாவை? கயிலைக் கலம்பகம், மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, பண்டார் மும்மணிக் கோவை, காசிக் கலம்பகம், சகலகலவல்லி மாலை, இரட்டை மணிமாலை, செய்யுட்கோவை
- குமரகுருபரர் திருமலை நாயக்கர் வேண்டுகோளுக்கு இனங்க இயற்றிய நூல் யாது? நீதிநெறி விளக்கம்
- குமரகுருபரரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
- சிவப்பிரகாசரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
- கற்பனைக் களஞ்சியம் யார்? சிவப்பிரகாசர்
- சிவப்பிரகாசர் ஊர் யாது? தொண்டை நாட்டு, துறை மங்கலம்
- சிவப்பிரகாசரின் குரு யார்? தருமபுர ஆதீன வித்துவான் வெள்ளியம்பலத் தம்பிரான்
- நீரோட்ட யமக அந்தாதியை இயற்றியவர் யார்? சிவப்பிரகாச சுவாமிகள்
- சிவப்பிரகாசர் இயற்றிய நூல்கள் யாவை? திருவெங்கைக் கோவை, திருவங்கைக் கலம்பகம், நன்னெறி, நாலவர் நான்மணிமாலை, பிரபுலிங்க லீலை, நால்வர் நான்மணி மாலை
- வீரசைவத்தை சிறப்பித்து எழுதப்பட்ட சிவப்பிரகாசரின் காப்பியம் யாது? பிரபுலிங்க லீலை
- நால்வர் நான்மணி மாலை யார் குறித்தது? சைவ சமயக் குரவர் நால்வர்
- சிவப்பிரகாசரால் இயற்றத் தொடங்கி அவரது தம்பிகள் கருணைப் பிரகாசர், வேலைய சுவாமிகள் நிறைவு செய்த புராண நூல் யாது? திருக்காளத்திப் புராணம்
- சிவப்பிரகாசர் இயற்றிய நூல்கள் யாவை? 23 நூல்கள்
- அருணகிரிநாதர் பிறந்த ஊர் யாது? திருவண்ணாமலை
- அருணகிரிநாதரைத் தாயுமானவர் எவ்வாறு அழைத்தார்? கருணைக்கு அருணகிரி, வாக்கிற்கு அருணகிரி
- அருணகிரி நாதருக்கு முருகனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட வார்த்தை யாது? முத்தைத்தரு பத்தித்திருநகை [திருப்புகழ்]
- திருப்புகழில் இடம்பெற்ற பாடல்கள் எத்தனை? 1307 [16000 பாடல்கள் இயற்றியதாகக் கூறுவர்]
- திருப்புகழில் கலந்துள்ள முகமதிய சொற்கள் யாவை? சலாம், சபாஸ், ராவுத்தன்
- திருப்புகழில் இடம்பெற்றுள்ள சந்த வேறுபாடுகள் எத்தனை? 1088
- அருணகிரிநாதரின் காலம் யாது? கி.பி. 15 ஆம் நூற்றாண்டு [முற்பகுதி]
- அருணகிரி நாதரின் படைப்புகள் யாவை? கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், திருவகுப்பு, வேல்விருத்தம், மயில் விருத்தம், கந்தர் அநுபூதி
- சைவ சமய மந்திர நூலாகக் கருதப்படும் நூல் யாது? திருவகுப்பு
- திருவகுப்பில் இடம் பெற்ற வகுப்புகளும், சந்த விருத்தங்களும் எத்தனை? 18
வெள்ளி, 4 டிசம்பர், 2020
பக்தி இலக்கிய வரிகள்
"தோடுடைசெவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பூசியென் உள்ளம்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே"
[திருஞானசம்பந்தர் - முதல் பாடல்]
"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே"
[திருஞானசம்பந்தர் - கோளறு பதிகம்]
"கூற்றாயினவாறு விலக்ககலீர்
கொடுமை பல செய்தன நானறிவேன்"
[திருநாவுக்கரசர் - முதல் பாடல்]
"மாசில்வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"
[திருநாவுக்கரசர் - சுண்ணாம்புக்காளவாசலில் வீசப்பட்ட போது]
"சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றூணைப் பூட்டியோர் கடலிலே பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே"
[திருநாவுக்கரசர்- கல்லில் கட்டி கடலில் வீசப்பட்ட போது]
"தலைகொள் நஞ்சமுதாக விளையுமே
தழல்கொள் நீறுதடாகமது ஆகுமே
கொலைசெய் யானை குனிந்து பண்யுமே
கோளரா வின்கொடு விடம் தீருமே"
[திருநாவுக்கரசர் - பல்லவ மன்னனால் அடைந்த துன்பங்கள்]
"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டா:
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"
[திருநாவுக்கரசர் - அகத்துறைப் பாடல்]
"பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தாய்! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே"
[சுந்தரர் - முதல் பாடல்]
"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் சென்சட மேல்மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே"
[சுந்தரர்]
"பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனுடை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உவப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்த ருளுவது இனியே"
[மாணிக்கவாசகர்]
"தேனுக்குள் இன்பம் சிவப்போ? கறுப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!"
[திருமூலர்]
"ஒன்றே குலமே ஒருவனே தேவன்"
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
"நன்றே நினைமின் நமனில்லை"
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
[திருமூலர்]
"எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே யாம்"
"அறிவானும் தானே: அறிவிப்பான் தானே:
அறிவாய் அறிகின்றான் தானே; விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்"
[காரைக்கால் அம்மையார்]
"வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று"
[பொய்கையாழ்வார்]
"இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழில் நல்வேன் பெரிது"
"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்"
[பூதத்தாழ்வார்]
"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"
[பேயாழ்வார்]
"மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி
ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையமளந்தானே! தாலேலோ!
[பெரியாழ்வார்]
"கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவள செவ்வாய்தான் தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழிவெண் சங்கே"
[ஆண்டாள்]
வைணவ இலக்கியம் -3
- பெரியாழ்வார் எங்கு பிறந்தார்? திருவில்லிப்புத்தூர்
- பெரியாழ்வார் எப்போது பிறந்தார்? ஆனி மாத, சுவாதி நாள்
- பெரியாழ்வாரின் இயற்பெயர் யாது? விஷ்ணு சித்தர்
- பெரியாழ்வாரின் சிறப்புப்பெயர் யாது? பட்டர்பிரான்
- பெரியாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 நூற்றாண்டு
- பெரியாழ்வார் படைப்புக்கள் யாவை? திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
- கண்ணனைக் குழந்தையாக்கிப் பாடிய, பிள்ளைத் தமிழுக்கு முன்னோடி ஆனவர் யார்? பெரியாழ்வார்
- பன்னிரு ஆழ்வார்களில் பெண்பால் ஆழ்வார் யார்? ஆண்டாள்
- பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்? ஆண்டாள்
- ஆண்டாள் பிறந்த நாள் யாது? ஆடி மாத பூர நாள்
- ஆண்டாள் யாருடைய அம்சமாகத் தோன்றினாள்? பூமாதேவி
- ஆண்டாளின் இயற்பெயர் யாது? கோதை
- ஆண்டாளின் சிறப்புப்பெயர் யாது? சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி, கோதை நாச்சியார்
- ஆண்டாளின் நூல்கள் யாவை? திருப்பாவை, நாச்சியார் திருமொழி
- ஆண்டாளின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
- தொண்டரடிப் பொடியாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டு, திருமண் குடி
- தொண்டரடிப் பொடியாழ்வார் என்று பிறந்தார்? மார்கழி மாத கேட்டை நாள்
- திருமாலின் வனமாலையின் அம்சமாகப் பிறந்தவர் யார்? தொண்டரடிப் பொடியாழ்வார்
- தொண்டரடிப் பொடியாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
- தொண்டரடிப் பொடியாழ்வாரின் இயற்பெயர் யாது? விப்ரநாராயணன்
- தேவதேவி என்னும் பரத்தையிடம் மனதைப் பறிகொடுத்தவர் யார்? தொண்டரடிப் பொடியாழ்வார்
- தொண்டரடிப் பொடியாழ்வாரை சிறை மீட்டவர் யார்? திருவரங்கத்தான்
- தொண்டரடிப் பொடியாழ்வாரின் நூல்கள் யாவை? திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
- திருப்பள்ளி எழுச்சியில் உள்ள பாடல்கள் எத்தனை? 10
- திருமாலையில் உள்ள பாடல்கள் எத்தனை? 45
- திருமங்கையாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டுத் திருமங்கையில் திருவாலி திருநகரிக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.
- திருமங்கையாழ்வார் எப்போது பிறந்தார்? நள ஆண்டு கார்த்திகை மாதம்
- திருமங்கையாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் வில்லின் அம்சம்
- திருமங்கையாழ்வாரின் சிறப்புப் பெயர்கள் யாவை? நீலன், பரகாலன்
- நீலன் எனப்படக் காரணம் யாது? அவரது உடலின் நிறம் நீலமாக இருப்பதால் [அவரது தந்தையின் பெயர் யாது நீலி]
- பரகாலன் எனப்படக் காரணம் யாது? திருமங்கையாழ்வார் சோழ மன்னனின் படைத்தலைவனாக இருந்த போது பகைவரை வென்றார். எனவே அவரது வீரத்தைப் போற்றி பரகாலன் எனப்பட்டார் [பின் திருமங்கை நாட்டின் அரசராக்கப்பட்டார்]
- திருமங்கையாழ்வாரின் மனைவி பெயர் யாது? குமுதவல்லி
- வைணவ அடியாருக்கு உதவ கொள்ளையனாக மாறிய ஆழ்வார் யார்? திருமங்கையாழ்வார்
- திருடிய திருமங்கையாழ்வாரை திருத்த திருமால், திருமகள் வந்தனர். அப்போது அவரைத் திருத்திய பின் இறைவன், "ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார்.
- நாகை பௌத்த விகாரங்களைக் கொள்ளையடித்து திருவரங்க மூன்றாம் மதிலுக்குத் திருப்பணி செய்தவர் யார்? திருமங்கையாழ்வார்
- திருமங்கையாழ்வாரின் படைப்புக்கள் யாவை? பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்
- நம்மாழ்வாரின் நான்கு வேதத்திற்கு ஆறு அங்கமாகத் திகழ்வன் யாவை? திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்கள்
- திருமங்கையாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
- சங்கம் குறித்துத் திருமங்கையாழ்வார் கூறுவன யாவை? "சங்கமுகத்தமிழ் மாலை", "சங்கமலித்தமிழ் மாலை"
- திருப்பாணாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டு உரையூர்
- திருப்பாணாழ்வார் எப்போது பிறந்தார்? கார்த்திகை மாத உரோகிணி நாள்
- திருப்பாணாழ்வார் பாணர்குடியுல் பிறந்ததால் பாணாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்
- குளத்தைத் தீட்டுப்படுத்தியதாக அந்தனர்களால் தாக்கப்பட்டார் திருப்பாணாழ்வார். அந்த அந்தணர்களின் தவறை உணர்த்த அவரது உடலில் உள்ள இரத்தத்தைத் தன் உடலில் காட்டினர் திருமால்.
- திருப்பாணாழ்வாரை அடித்து, பின் திருமால் ஆணையால் அவரைத் தோளில் சுமந்த அந்தணர் தலைவர் யார்? லோகசாரங்கன்
- திருப்பாணாழ்வார் பாடிய பாசுரங்கள் - அமலனாதிபிரான் [10 பாசுரம்]
- திருப்பாணாழ்வார் காலம் - கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
புதன், 2 டிசம்பர், 2020
வைணவ இலக்கியங்கள் - 2
- மதுரகவியாழ்வார் எங்கு பிறந்தார்? திருக்குருகூருக்கு அருகில் உள்ள திருக்கோளூர்
- மதுரகவியாழ்வார் எப்போது பிறந்தார்? ஈசுவர ஆண்டு சித்திரை நாள்
- நம்மாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் கருடத்தாழ்வார்
- மதுரகவியாழ்வார் - பெயர்க்காரணம் யாது? மதுரமான [இனிய] கவிகளைப் பாடுபவர்.
- நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார ஒளிப்பிழம்பு அழைத்துச் சென்ற நிகழ்வு நடைபெற்ற இடம் எது? அயோத்தி
- மதுரகவியாழ்வாரின் ஞானாசிரியர் யார்? நம்மாழ்வார்
- திருமாலின் தொண்டரை வணங்கிப் பாடியவர் யார்? நம்மாழ்வார்
- பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக நம்மாழ்வார் சேர்க்கப்படாமைக்கான காரணம் யாது? திருமாலைப் பாடாமல் திருமால் அடியாரைப் பாடியது.
- நம்மாழ்வார் மீது பாடிய 11 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? கண்ணி நுண் சிறுதாம்பு
- நம்மாழ்வாரின் பாடல்களை எழுதித் தொகுத்தவர் யார்? மதுரகவியாழ்வார்
- திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரை தன் கடவுளாக எவ்வளவு காலம் வழிபட்டார்? 50 ஆண்டுகள்
- சேர அரச மரபில் தோன்றியவர் யார்? குலசேகர ஆழ்வார் [திருமால் மீது கொண்ட பற்றால் அரசைத் துறந்தார்]
- குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது? திருவஞ்சைக்களம்
- குலசேகர ஆழ்வாரின் தந்தை யார்? திருடவரதன் என்னும் மன்னன்
- குலசேகராழ்வாரின் வேறு பெயர்கள் யாவை? கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன், பெருமாள்
- குலசேகர ஆழ்வார் தமிழில் பாடிய நூல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? பெருமாள் திருமொழி
- குலசேகர ஆழ்வார் வடமொழியில் பாடிய நூல் பெயர் - முகுந்தமாலை
- பெருமாள் திருமொழி பாடப்பட்ட தளங்கள் யாவை? திருவரங்குஅம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு
- ஆலயப்படியாய்த் தன்னை எண்ணிப் பாடிய குலசேகர ஆழ்வாரின் பெயரால் குலசேகரப்படி என்று அழைக்கப்பெற்ற படியுடைய தலம் எது? திருவேங்கடம்
- குலசேகர ஆழ்வார் மங்களா சாசனம் செய்த தலங்கள் யாவை? திருவரங்கம், திருக்கண்ண புரம், தில்லை
- குலசேகர் ஆழ்வார் எந்த ஆலயத்தின் மூன்றாம் மதிலைக் கட்டினார்? திருவரங்கம்
- குலசேகர ஆழ்வார் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை எவ்வாறு அழைக்கிறார்? 'ஆடிப்பாடி தொண்டரடிப் பொடி ஆழ்வார்'
- குலசேகர ஆழ்வாரின் காலம் எது? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
வைணவ ஆழ்வார்கள் - 1
- பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார்.
- பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்
- பொய்கையாழ்வார் பிறந்த நாள் யாது? ஐப்பசி திங்கள் திருவோண நாள்
- பொய்கையாழ்வாரின் காலம் யாது? கி.பி. 6/8 ஆம் நூற்றாண்டு
- திருமாலின் சங்கின் பெயர் யாது? பாஞ்சசன்னியம்
- பாஞ்சசன்னியத்தின் அவதாரமாகத் தோன்றிய ஆழ்வார் யார்? பொய்கையாழ்வார்
- பொய்கையாழ்வார் பாடல்கள் முதல் திருவந்தாதி
- முதல் திருவந்தாதியின் பாடல் எண்ணிக்கை யாது? 100
- பொய்கையாழ்வாரும் களவழி நாற்பதைப் பாடிய பொய்கையாரும் ஒருவரே என்றவர் யார்? மு. இராகவையங்கார்
- பொய்கையாழ்வார் எந்தெந்தத் தலங்களில் உறையும் திருமாலின் பெருமைகளைப் பாடுகிறார்? திருவரங்கம், திருவிண்ணகரம், திருவேங்கடம், திருவெஃகா, திருக்கோவிலூர்
- இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்? பூதத்தாழ்வார்
- பூதத்தாழ்வார் பெயர்க் காரணம் யாது? திருமாலை கடல் வண்ணன் பூதம், மற்த்திரு மார்பன் அவன் பூதம் எனப் பாடியமையால் பூதத்தாழ்வார் எனப்பட்டார்
- பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்? திருக்கடல் மல்லையூர் எனப்பட்ட மாமல்லபுரம்- குருக்கத்திப் பந்தரில் குருக்கத்தி மலரில் பிறந்தார்
- பூதத்தாழ்வார் பிறந்த நாள் எது? ஐப்பசித் திங்கள் அவிட்டநாளில் [பொய்கையாழ்வார் பிறந்த மறுநாள்1]
- பூதத்தாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் அம்சமாகத் தோன்றினார்
- பூதத்தாழ்வார் பாடிய தலங்கள் யாவை? திருவேங்கடம், திருவரங்கம், திருப்பாடகம், திருவத்தியூர், திருக்குடமூக்கு
- மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்? பேயாழ்வார்
- பேயாழ்வார் - பெயர்க்காரணம் யாது? திருமாலின் மீது கொண்ட பக்தியால் அழுது, சிரித்து, ஆடிப்பாடி பேய்பிடித்தவர் போல் பாடியதால் பேயாழ்வார் எனப்பட்டார்.
- பேயாழ்வார் எங்கு பிறந்தார்? மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கிணற்றில் செவ்வல்லிப் பூவில் பிறந்தார்.
- பேயாழ்வார் எப்போது பிறந்தார்? ஐப்பசி மாத சதய நாள் [பூதத்தாழ்வார்]
- திருமாளின் வாளின் பெயர் என்ன? நாந்தகம்
- நாந்தகத்தின் அம்சமாகப் பிறந்தவர் யார்? பேயாழ்வார்
- பேயாழ்வாரின் காலம் யாது? கி.பி. ஆறாம் நூற்றாண்டு
- திருமாலோடு சிவனையும் இணைத்துப் பாடிய ஆழ்வார் யார்? பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வார் எங்கு பிறந்தார்? தொண்டை நாட்டின் பூவிருந்தவல்லி அருகில் உள்ள திருமழிசையில் பிறந்தார்
- திருமழிசை ஆழ்வார் எப்போது பிறந்தார்? தைமாதம் மக நட்சத்திரம்
- திருமாலின் சுதர்சனச்சக்கரத்தின் அம்சமாகத் தோன்றியவர் யார்? திருமழிசை ஆழ்வார்
- திருமழிசை ஆழ்வாரின் வேறுபெயர் யாது? பத்திசாரர்
- பிற சமயத்தவரை சாடிய, வீரவைணவர் என்று அழைக்கப்பட்டவர் யார்? திருமழிசை ஆழ்வர்
- திருமழிசை ஆழ்வாருக்கு தத்துவ உபதேசம் செய்தவர் யார்? பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வாரின் சீடன் யார்? கணிக்கண்ணன்
- திருமால் பாம்புப்பாயைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டது யாருடன்? திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன்
- நம்மாழ்வார் எங்கு பிறந்தார்? பாண்டிய நாட்டில் உள்ள திருக்குருகூர்
- நம்மாழ்வாரின் பெற்றோர் யாவர்? காரியார், நங்கையார்
- நம்மாழ்வார் எப்போது பிறந்தார்? பிரமாதி ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்தார்
- ஆதிசேஷன் அவதாரமான புளியமரத்தடியில் அமர்ந்து 16 ஆண்டு தவம் செய்து இறை அருளால் பேசும் வரம் பெற்ற ஆழ்வார் யார்? நம்மாழ்வார்
- நம்மாழ்வார் சடகோபன் என்று அழைக்கப்படக் காரணம் யாது? சடம் என்ற வாய்வை அடக்கியதால்
- பிறசமயம் என்னும் யானைக்கு அங்குசமாகத் திகழ்ந்தமையால் நம்மாழ்வார் எவ்வாறு அழைக்கப்பட்டார்? பராங்குசர்
- நம்மாழ்வாரின் சிறப்புப்பெயர்கள் யாவை? சடகோபர், பராங்குசர், மாறன், திராவிடசிசு, வைணவத்து மாணிக்கவாசகர், வகுளாபரணர்
- ஆழ்வாரில் தலைமையானவர் யார்? நம்மாழ்வார் [ அவர் அவயவி, பிற ஆழ்வார் அவயவம்]
- நம்மாழ்வார் எழுதிய நூல்கள் யாவை? திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி
- நம்மாழ்வாரின் நான்கு நூல்களும் வைணவர்களால் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நான்கு வேதமாகப் போற்றப்படுகிறது.
- நம்மாழ்வார் நூல்களின் சிறப்புப் பெயர்கள் யாவை? திராவிட வேதம், செந்தமிழ் வேதம், ஆன்றதமிழ் மறைகள் ஆயிரம்
- தென்கலை வைணவர்கள் மந்திரமாகக் கருதுவது யாது? திருவாய் மொழி
- திருவாய் மொழிக்கு தத்வார்த்த விளக்க உரை எழுதியவர் யார்? பெரியவாச்சான் பிள்ளை
- பெரிய திருவந்தாதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது? 87 வெண்பா
- திருவிருத்த பாடல் எண்ணிக்கை - 100 கட்டளைக்கலித்துறை பா
- திருவாசிரிய பாடல் எண்ணிக்கை - 7 ஆசிரியப்பா
- நம்மாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
Featured Post
மொழி வரலாறு - 2
பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...
-
அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால் நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் எ...
-
1. திருவாலவுடையார் யார்? மதுரை சொக்கநாத பெருமாள் 2. சொக்கலிங்கப் பெருமான் யாருக்கு உதவ பாடல் இயற்றினார்? பாணபத்திரர் 3. திருவாலவுடையா...
-
இளமைப் பெயர்கள் யாவை? பார்ப்பு, பறள், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி [9] ஆண்பாற் பெயர்கள் எத்தனை? 15 [எருது, ஏற்று,ஒருத்தல்...