இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 நவம்பர், 2020

பதினெண் கீழ்கணக்கு நூல்கள் - அக நூல்கள்

  1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை? 6
  2. கார்நாற்பதின் ஆசிரியர் - மதுரை கண்ணங்கூத்தனார்
  3. கார்நாற்பதின் பாடல்கள் - 40
  4. கார்நாற்பது திணை - முல்லை
  5. கார்நாற்பதின் காலம் - கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
  6. கார்நாற்பது காட்டும் கடவுளர்கள் - திருமால், பலராமன், சிவன்
  7. கார்நாற்பதில் காட்டப்படும் விழா - கார்த்திகை விழா
  8. ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் யார்? மாறன் பொறையனார்
  9. ஐந்திணை ஐம்பதின் காலம் - கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
  10. ஐந்திணை ஐம்பது பாடல் எண்ணிக்கை - 50 
  11. ஐந்திணை ஐம்பதை மேற்கோளாகக் எடுத்தாண்டுள்ள உரையாசிரியர்கள் யாவர்? பேராசிரியர், நச்சினார்க்கினியர்
  12. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
  13. ஐந்திணை எழுபதின் பாடல் எண்ணிக்கை - 70 [5X14]
  14. ஐந்திணை எழுபதின் திணை வைப்பு முறை - குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
  15. ஐந்திணை எழுபதில் தற்போது கிடைப்பவை? 66 [முல்லை-2, நெய்தல்-2 கிடைக்கவில்லை]
  16. ஐந்திணை எழுபதில் வாழ்த்தப்படும் கடவுள் - விநாயகர்
  17. திணைமொழி ஐம்பதின் ஆசிரியர்  - கண்ணஞ்சேந்தனார்
  18. திணைமொழி ஐம்பதின் காலம்  கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  19. திணைமொழி ஐம்பதின் திணை வைப்புமுறை - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
  20. திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியர் யார்? கணிமேதாவியார்
  21. திணைமாலை நூற்றைம்பதின் பாடல் எண்ணிக்கை - 153+1 [1-பாயிரம்]
  22. திணைமாலை நூற்றைம்பதின் வைப்புமுறை - குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
  23. கைந்நிலையை இயற்றியவர் யார்? புல்லங்காடனார்
  24. புல்லங்காடனார் யாருடைய மகன் - மாறோகத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகன்
  25. கைந்நிலை பாடல்கள் எண்ணிக்கை - 60 [5 X 12]
  26. கைந்நிலையின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  27. கைந்நிலை -யில் கை என்பது குறிப்பது - ஒழுக்கம், நிலை - ஒழுக்கம்
  28. கைந்நிலையில் இடம்பெறும் வடசொற்கள் - பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம்,  உத்தரம்















ஞாயிறு, 29 நவம்பர், 2020

பதினெண்கீழ்க் கணக்கு வினாவங்கி - 2

  1.  நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்? விளம்பி நாகனார
  2.  நான்மணிக்கடிகையின் காலம் யாது? கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
  3.  நான்மணிக்கடிகையின் பாடல் எண்ணிக்கை? 2+ 104 
  4.  நான்மணிக்கடிகையின் பாவகை? வெண்பா
  5.  கடிகை என்பதன் பொருள் யாது? கடகம் என்பதே கடிகை ஆயிற்று. கடகம் என்பது தோளில் அணியும் தோள்வளை ஆகும்.
  6. நான்மணிக்கடிகை என்பதம் பெயர்காரணம் யாது? நான்கு மணிகள் பதிக்கப்பட்ட தோள்வளை போல நான்கு நீதி மணிகளால் ஆன பாடல்களைக் கொண்ட நூல்
  7. நான்மணிக்கடிகையின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் வாழ்த்தும் கடவுள் யார்? திருமால் [இரு பாடல்கள்]
  8. நான்மணிக்கடிகை நான்கு நான்கு பாடல்கள் அமைத்துப் பாடுவது என்ன வனப்பைச் சார்ந்தது? அம்மை
  9. இன்னா நாற்பதின் ஆசிரியர் யார்? கபிலர்
  10. இன்னா நாற்பதின் காலம் யாது? கி.பி. 50 - கி.பி. 125 
  11. இன்னா நாற்பதின் பாடல்கள் எத்தனை? 1+40
  12. இன்னா நாற்பதின் பா யாது? வெண்பா
  13. இன்னா நாற்பது கடவுள் வாழ்த்தில் வணங்கப்படுவோர் யாவர்? சிவன், பலராமன், திருமால், முருகன்
  14. இன்னா நாற்பதின் வனப்பு யாது? அம்மை
  15. இனியவை நாற்பதின் ஆசிரியர் யார்? பூதஞ்சேந்தனார்
  16. இனியவை நாற்பதின் காலம் யாது? கி.பி. 5ஆம் நூற்றாண்டு
  17. இனியவை நாற்பதின் பாடல் எண்ணிக்கை யாது? 1+40
  18. இனியவை நாற்பதில் வணங்கப்படும் கடவுளர் யாவர்? சிவன், திருமால், பிரம்மன்
  19. திரிகடுக ஆசிரியர் யார்? நல்லாதனார்
  20. திரிகடுக காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  21. திரிகடுக பாடல்கள் எத்தனை? 1+100
  22. திரிகடுக பாவகை யாது? வெண்பா
  23. திரிகடுக பெயர் காரணம் யாது? சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றும் நோய் நீக்கும் மருந்து. அவை போல மனத்தின் நோயை நீக்கி வாழ்விற்கு நலமளிக்கும் மூன்று அறக்கருத்துக்களை எடுத்துரைப்பதால் திரிகடுகம்.
  24. திரிகடுகத்தின் வனப்பு யாது? ஏன்? அம்மை [அனைத்துப்பாடல்களிலும் மூறாம் அடிய்ன் நான்காம் சீரில் இம்மூன்றும், இம்மூவர் என்னும் சொற்கள் தொடர்ந்து வருவதால்]
  25. ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்? பெருவாயில் முள்ளியார்
  26. ஆசாரக்கோவையின் காலம் யாது? கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
  27. ஆசாரக்கோவையின் பாடல்கள் எத்தனை? 100
  28. ஆசாரக்கோவையின் பாவகை யாது? பல்வேறு வெண்பா
  29. ஆசாரக்கோவை பெயர்க்காரணம் யாது? ஆசாரம் என்றால் ஒழுக்கம். வாழ்க்கைக்குத் தேவையான ஆசாரங்களைக் கோவையாக அடுக்கிக் கூறும் நூல் ஆசாரக்கோவை
  30. ஆசாரத்தை எவ்வகையில் குறிக்கிறார் ஆசிரியர்? கொள்ளத்தக்க ஆசாரம், தள்ளத்தக்க ஆசாரம் என இரு வகை
  31. ஆசாரக்கோவை எவற்றின் சாரமாக விளங்குகிறது? வடமொழி நூல்களான சுக்ர ஸ்மிருதி, போதாயன தர்ம சூத்திரம், கௌதம சூத்திரம் 
  32. சார்பு நூல்  வகைக்கு ஆசாரக்கோவையை எடுத்துக்காட்டாகக் கூறியவர் யார்? இலக்கண விளக்க உரையாசிரியர்
  33. வடநூலார் வகுத்த நெறிமுறைகளை அறிவதற்கு ஆசாரக்கோவை துணை செய்யும் என்றவர் யார்? டாக்டர். பூவண்ணன்
  34. பழமொழியின் ஆசிரியர் யார்? முன்றுறையரையனார்
  35. பழமொழியின் காலம் எது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  36. பழமொழியின் பாடல்கள் எத்தனை? 400
  37. பழமொழியின் பாவகை யாது? வெண்பா
  38. பழமொழியின் பிரிவுகள் எத்தனை? 5
  39. பழமொழியின் இயல்கள் எத்தனை? 34
  40. கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றிய இயல்கள் எத்தனை? 9
  41. சான்றோர், நட்பின் இயல்பு பற்றிய இயல்கள் எத்தனை? 7
  42. முயற்சி, பொருள் பற்றிய இயல்கள் எத்தனை? 8
  43. அரசர், அமைச்சர், படை பற்றிய இயல்கள் எத்தனை? 6
  44. இல்வாழ்க்கை, உறவினர், வீட்டு நெறி பற்றியது? 4 இயல்கள்
  45. பழமொழியில் உள்ள வரலாற்றுச் செய்திகள் யாவை? மனுநீதிச் சோழன் மகனைத் தேர்காலில் இட்டது, பாலைக் கௌதமனார்க்கு பல்யானைச் செல்கெழு குட்டுவன்  வீடு தந்தது, தொடித்தோள் செம்பியன் தூங்கும் எயிலை அழித்தது, பொற்கைப் பாண்டியன் தன் கையைக் குறைத்தது.
  46. பழமொழியில் உள்ள புராணச் செய்திகள் யாவை? பஞ்ச பாண்டவர்களும் கௌரவர்களும் பணயமாகப் பொருள் வைத்துச் சூதாடியமை.
  47. முன்றுரை அரையனார் யார்? முன்துறை என்னும் ஊரின் அரசன் [அரையன் - அரசன்]
  48. சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் யார்? காரியாசான்
  49. சிறுபஞ்ச மூலத்தின் பாடல்கள் எத்தனை? 102+3 [1-கடவுள் வாழ்த்து, 2-பாயிரங்கள்]
  50. சிறுபஞ்ச மூலம் பெயர்க் காரணம் யாது? ஐந்து வேர்கள் கலந்த மருந்து சிறுபஞ்ச மூலம். அது உடலுக்கு மருந்து ஆவது போல வாழ்க்கைக்கு மருந்தாகும் கருத்துக்களைக் கொண்டது.
  51. சிறுபஞ்ச மூலத்தில் உள்ள வேர்கள் யாவை? சிறுவழுதுணை[கத்திரிக்காய்], கண்டங்கத்திரி, சிறுமல்லி, நெருஞ்சி, பெருமல்லி
  52. பெரும்பஞ்ச மூலத்தின் வேர்கள் யாவை? வில்வம், பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை
  53. பெரும்பஞ்ச மூலம் எங்கு குறிக்கப்பட்டு உள்ளது? பதார்த்த குண சிந்தாமணி, பொருள்தொகை நிகண்டு
  54. காரியாசானின் ஒருசாலை மாணாக்கர் யார்? கணிமேதாவியார்
  55.  முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார்? கூடலூர் கிழார்
  56. முதுமொழிக் காஞ்சியின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  57. முதுமொழிக் காஞ்சியின் பாடல்கள் எத்தனை? 100
  58. முதுமொழிக் காஞ்சியின் அதிகாரங்கள் எத்தனை? 10 [அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள்] 
  59. முதுமொழிக்காஞ்சியின் பாவகை யாது? குறள் தாழிசை
  60. முதுமொழிக் காஞ்சியின் அதிகாரங்கள் எவ்வாறு தொடங்குகின்றன? அதிகாரங்களின் முதல் பாடலின் முதல் வரி 'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' எனத் தொடங்குகின்றது. [இது அம்மை வனப்பின் பாற்பட்டது]
  61. ஐங்குறுனூற்றைத் தொகுத்த கூடலூர் கிழாரே முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் என்று கூறுதலும் உண்டு.
  62. ஏலாதியின் ஆசிரியர் யார்? கணிமேதாவியார்
  63. ஏலாதியின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  64. ஏலாதியின் பாவகை யாது? வெண்பா
  65. ஏலாதியின் பாடல்கள் யாவை? 80+2 [பாயிரம்-1, தற்சிறப்புப் பாயிரம் -1]
  66. ஏலாதியின் மருந்துகள் யாவை? ஏலம்-1 பங்கு, இலவங்கம்-2, நாககேசர-3, மிளகு-4, திப்பிலி-5, சுக்கு-6 பங்கு கலந்த மருந்து ஏலாதி. அம்மருந்து உடலுக்கு நலம் தருவது போல மனதிற்கு நலம் தரும் கருத்துக்களை உரைப்பது.
  67. ஒன்பதை ஏலாதி எவ்வாறு குறிக்கிறது? தொண்டு



















வியாழன், 26 நவம்பர், 2020

சிற்றிலக்கியம் - 3

  1. சதகம் என்பதன் பொருள் யாது? சதம் என்பது 100 எனப் பொருள்படும். 100 பாடல்களைக் கொண்டது. சத்+அகம் எனப் பகுக்க, சத் - உண்மை. உண்மையை உட் பொருளாகக் கொண்டது.
  2. முதல் சதக நூல் யாது? திருச்சதகம்
  3. திருச்சதகத்தின் ஆசிரியர் யார்? மாணிக்க வாசகர்
  4. திருச்சதகத்தின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  5. கார்மண்டல சதகத்தின் காலம் யாது? கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
  6. கார்மண்டல சதகத்தின் ஆசிரியர் யார்? ஆறைக் கிழார்
  7. இலக்கண விளக்கம் சதகத்திற்கு வகுக்கும் விளக்கம் யாது?            "விழையும்  ஒரு பொருள்மேல் ஒருநூறு/  தழைய உரைத்தல் சதகம் என்ப"
  8. சோழமண்டல சதகத்தின் ஆசிரியர் யார்? ஆத்மநாத தேசிகர்
  9. தொண்டை மண்டல சதகத்தின் ஆசிரியர் யார்? படிக்காசுப் புலவர்
  10. துயிலெடை என்பதன் வேறுபெயர்கள் யாவை? பள்ளியெழுச்சி, திருப்பள்ளி எழுச்சி
  11. "சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்" என்னும் குறிப்புத் தொல்காப்பியத்தில் உள்ளது.
  12. திருப்பள்ளி எழுச்சியை மாணிக்கவாசகரும், தொண்டரடி பொடியாழ்வாரும் பாடியுள்ளனர். இவையே முதல் த்ருப்பள்ளி எழுச்சி
  13. மாணிக்கவாசகர்  திருப்பள்ளியெழுச்சிப் பாடிய காலம் யாது? 9ஆம் நூற்.
  14. பாரதியார் பாடிய திருப்பள்ளி எழுச்சி யாது? பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி
  15. குறிசொல்கின்ற மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட சிற்றிலக்கியம் யாது? குறவஞ்சி
  16. குறவஞ்சி பெயர்க்காரணம் யாது? குறி சொல்லும் வஞ்சி[பெண்]யை மையமாகக் கொண்ட இலக்கியம்
  17. குறவஞ்சியின் வேறுபெயர்கள் யாவை? குறம், குறத்திப்பாட்டு
  18. முதல் குறவஞ்சி இலக்கியம் யாது? திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி
  19. திருக்குற்றாலக் குறவஞ்சியின் காலம் யாது? கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
  20. குமரகுருபரர் இயற்றிய குறவஞ்சி - மீனாட்சியம்மைக் குறம்
  21. திரிகூட ராசப்பக் கவிராயர்  - திருக்குற்றாலக் குறவஞ்சி
  22. சிவக்கொழுந்து தேசிகர் - சரபேந்திர பூபால குறவஞ்சி, பிரகதீசுவரர் குறவஞ்சி
  23. குமரகுருபர தேசிகர் -  ஞானக் குறவஞ்சி
  24. பாவநாச முதலியார்  -  கும்பேசர் குறவஞ்சி
  25. வேதநாயக சாஸ்திர்யார்  -  பெத்தலெகம் குறவஞ்சி












புதன், 25 நவம்பர், 2020

சிற்றிலக்கியம் - 2

  1. கலம்பகம் என்றால் என்ன? பல்வேறு உறுப்புக்கள் கலந்த இலக்கிய வகை
  2. கலம்பகம் பெயர் காரணம் யாது? கலம் + பகம் - [கலம் - 12, பகம் - 6] பதினெட்டு உறுப்புக்களைக் கொண்ட, கலந்த இலக்கிய வகை.
  3. பதினெட்டு வகைகள் யாவை?   புயம், தவம், வண்டு, அம்மானை, பாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், கலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார்
  4. கலம்பகத்திற்கான பாவகைகள் யாவை? ஒருபோகு வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியம் வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம், வெண்டுறை வெண்பா, மருட்பா, கலிப்பா
  5. இறைவன் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 100
  6. முனிவர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 95
  7. மன்னர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 90
  8. அமைச்சர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 70
  9. வணிகர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 50
  10. ஏனையோர் பாட்டுடைத் தலைவனாக வர எவ்வளவு பாடல்கள் கொண்டு அமைக்கப்படும்? 30
  11. காலத்தால் முந்திய கலம்பகம் எது? நந்திக் கலம்பகம்
  12. நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார்? தொள்ளாறு எறிந்த பல்லவ மன்னன் நந்தி போத்தரையன் [மூன்றாம் நந்திவர்மன்]
  13. நந்திக்கலம்பக காலம் யாது? கி.பி. எட்டாம் நூற்றாண்டு
  14. நந்திக்கலம்பகம் நந்தி வர்மன் மீது அறம் வைத்துப் பாடப்பட்டது. அறம் வைத்துப் பாடியதில் நந்திவர்மன் இறந்தார்
  15. "நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்" என்ற வரி இடம் பெற்ற இலக்கியம் எது? சிவஞான சுவாமிகள் சோமேசர் முதுமொழி வெண்பா
  16. நந்திக் கலம்பகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? 99 /110
  17. கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் யாவர்? இரட்டைப் புலவர்கள் [கண்பாயக் கலம்பகத்திற்கு இரட்டையர்கள்]
  18. மதுரைக்கலம்பகத்தின் ஆசிரியர் யார்? குமரகுருபரர்
  19. தில்லைக் கலம்பகம், திருவாமாத்துர்க் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? இரட்டைப் புலவர்கள்
  20. திருவரங்கக் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  21. சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? சிவப்பிரகாச சுவாமிகள்
  22. அம்பலவாண தேசிகர் கலம்பகத்தின் ஆசிரியர் யார்? மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  23. உலா என்றால் என்ன? உலா வருகின்ற தலைவனைக் கண்ட ஏழு பருவப் பெண்டிரும் மயங்குவதாகக் கூறப்பெறுவது உலா இலக்கியம்
  24. உலாவின் வேறு பெயர்கள் யாவை? பெண்பாற் கைக்கிளை, உலாப்புறம்
  25. ஏழு பருவ பெண்கள் யாவர்? பேதை [5 -7], பெதும்பை [8 -11], மங்கை [12 -13],  மடந்தை [14 - 19], அரிவை [20 - 25], தெரிவை [26 - 32], பேரிளம் பெண் [33 - 40]
  26. உலாவின் வித்து யாது? 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' என்ற தொல்காப்பிய புறத்திணை பாடாண் திணை நூற்பா
  27. உலாவிற்கான பாவகை யாது? கலிவெண்பா
  28. உலாவின் பாடுடைத் தலைவனுக்கான வயதுவரம்பு யாது? 48 வயதிற்குள்
  29. உலாவின் பிரிவுகள் யாவை? முன்னெழு நிலை, பின்னெழு நிலை என இரு பிரிவுகள்
  30. முன்னெழு நிலை வகையுள் அடங்குவன யாவை? குடிச்சிறப்பு, மரபு, நீதி, ஈகை, தலைவனை நீராட்டுதல், நல்லணி பூட்டுதல், தலைவன் உலா புறப்பாடு
  31. பின்னெழு நிலையுள் அடங்குவன யாவை? ஏழு பருவ பெண்கள் தலைவனைக் காணல்,  காதல் கொள்ளல், அவர்களின் செயல்பாடுகள்
  32. முத்தொள்ளாயிரத்தின் பத்துப் பாடல்கள் உலா அமைப்பில் வருவன
  33. உலா ஒரு கூறாக இடம்பெற்ற காப்பியங்கள் யாவை? பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்
  34. முதல் உலா நூல் யாது? சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கயிலாய ஞானவுலா
  35. திருக்கயிலாய ஞானவுலாவின் வேறு பெயர்கள் யாவை? ஆதியுலா, தெய்வ உலா
  36.  திருக்கயிலாய ஞானவுலாவின் காலம் யாது? கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
  37. ஒட்டக்கூத்தர் இயற்றிய உலா நூல் யாது? மூவருலா
  38. உலா பாடுவதில் வல்லவர் யார்? ஒட்டக்கூத்தர் [கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்]
  39. மூவருலா என்பது யாது? விக்கிரம சோழன், குலோத்துங்கச் சோழன், இராசராசச் சோழன் ஆகிய மூவரையும் பற்றியது.
  40. நம்பியாண்டார் நம்பி இயற்றிய உலா நூல்? ஆளுடைப் பிள்ளையார் திருவுலா
  41. சொக்கநாதருலா யாரால் இயற்றப்பட்டது? அ. கு. ஆதித்தர்
  42. காமராசர் உலா யாரால் இயற்றப்பட்டது? அ. கு. ஆதித்தர்
  43. கலைஞர் உலாவின் ஆசிரியர் யார்? பாவலர் ஏறு ச. பாலசுந்தரனார்
  44. பெரியார் உலாவின் ஆசிரியர் யார்? மறையரசனார்
  45. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உலாவை இயற்றியவர் யார்? முத்துலிங்கம்


















செவ்வாய், 24 நவம்பர், 2020

சிற்றிலக்கியம் - 1

  1.  அந்தாதி என்றால் என்ன? அந்தத்தை ஆதியாகத் தொடுப்பது. ஒரு பாடலின்  இறுதி அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்தப் பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவது அந்தாதி ஆகும். 
  2. அந்தாதி என்ன பாவால் பாடப்படும்? வெண்பா, கலித்துறை
  3. "அந்தம் முதலா தொடுப்பது அந்தாதி" - என்று குறிக்கும் நூல் எது? யாப்பருங்கலக் காரிகை
  4. "வெண்பா கலித்துறை வேண்டிய பொருளில்/ பண்பாய் உரைப்பது அந்தாதித் தொகையே" - என்று கூறும் நூல் யாது? பன்னிருபாட்டியல்
  5. அந்தாதி இலக்கிய முன்னோடியான சங்க இலக்கியம் யாது? ஐங்குறுநூற்று தொண்டிப்பத்து, பதிற்றுப்பத்தின் 4 ஆம் பத்து
  6. முதல் அந்தாதி இலக்கியம் எது? அற்புதத் திருவந்தாதி
  7. அற்புதத் திருவந்தாதி என்ற நூலின் ஆசிரியர் யார்? காரைக்காலம்மையார்
  8. பொய்கையாழ்வார் பாடிய அந்தாதி - முதல் திருவந்தாதி
  9. பூதத்தாழ்வார் பாடிய அந்தாதி - இரண்டாம் திருவந்தாதி
  10. பேயாழ்வார் பாடிய அந்தாதி - மூன்றாம் திருவந்தாதி
  11. நம்பியாண்டார் பாடிய அந்தாதி - திருத்தொண்டர் திருவந்தாதி
  12. கம்பர் பாடிய அந்தாதி - சடகோபரந்தாதி
  13. அபிராமிபட்டர் பாடிய அந்தாதி - அபிராமி அந்தாதி
  14. வெண்பா அந்தாதி என்றால் என்ன? 100 வெண்பாக்களால் ஆன அந்தாதி
  15. கலித்துறை அந்தாதி என்றால் என்ன? 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது.
  16. பதிற்றந்தாதி என்றால் என்ன? வெண்பாவாலோ, கலித்துறையாலோ ஆன 10 பாடல்களைக் கொண்டது.
  17. நூற்றந்தாதி என்றால் என்ன? வெண்பாவாலோ, கலித்துறையாலோ ஆன 100 பாடல்களைக் கொண்டது.
  18. பதிற்றுப்பத்தந்தாதி என்றால் என்ன? 100 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பத்துப் பாடலும் ஒவ்வொரு சந்தத்தில் அமைவது.
  19. பதிற்றுப்பத்தந்தாதியின் மற்றொரு பெயர் யாது? பல்சந்தமாலை
  20. கலியந்தாதி என்றால் என்ன?   பாடல்தோறும் 32 கலைவைப்பு அமைய 30 பாடல்களைக் கொண்டது.
  21. சிலேடையந்தாதி என்றால் என்ன? இருபொருள் அமைய 100 பாடல்களால் பாடுவது.
  22. யமக அந்தாதி என்றால் என்ன? வந்த சொல்லும் பொருளும் மீண்டும் மீண்டும் வந்து ஒவ்வொரு அடியிலும் பொருள் மாறுபடுவது.
  23. நீரோட்டக யமக அந்தாதி என்றால் என்ன? உதடுகள் இரண்டும் ஒட்டாமல் பாடும் 100 பாடல்களைக் கொண்டது.
  24. ஒலியந்தாதி என்றால் என்ன? ஓரடிக்கு 16 கலை என்று 4 அடிக்கு 64 கலைகள் அமைவது. சந்தம், வண்ணம் நிறைந்து வருவது. 30 பாடல்கள் கொண்டது.
  25. திரிபந்தாதி என்றால் என்ன? ஒரு பாடலில் 4 அடிகளில் முதல் எழுத்து மட்டும் மாறி பிற எழுத்துக்கள் மாறாமல் ஒத்து அமைவது.
  26. கோவை என்றால் என்ன? தலைவன் தலைவி களவு வாழ்க்கையில் ஈடுபட்டு, பின் கற்பில் இல்லறம் நடத்தும் நிகழ்ச்சியைக் கோர்வையாகக் கூறுவது.
  27. கோவையின் வேறு பெயர்? அகப்பொருட் கோவை, ஐந்திணைக் கோவை
  28. "ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ/ முந்திய கலித்துறை நானூறென்ப"  எனக் கோவைக்கு இலக்கணம் கூறும் நூல் எது? பன்னிருபாட்டியல்
  29. கோவைக்கான பாவகை யாது? கட்டளைக் கலித்துறை  [400 பாடல்களால் ஆனது.]
  30. கோவையின் பிரிவுகள் யாவை? 33 கிளவிகளையும், பல துறைகளையும் கொண்டது.
  31. கோவையின் வகைகள் யாவை? ஒரு துறைக் கோவை, பலதுறைக் கோவை
  32. முதல் கோவை நூல் யாது? பாண்டிக்கோவை
  33. பாண்டிக்கோவையில் பாண்டி என்பவர் யார்? நின்றசீர் நெடுமாறன்
  34. பாண்டிக்கோவை எந்த இலக்கண நூலுக்கான எடுத்துக்காட்டாக உள்ளது? இறையனார் அகப்பொருள்
  35. பாண்டிக்கோவையின் காலம் யாது? எட்டாம் நூற்றாண்டு
  36. மாணிக்க வாசகர் பாடிய கோவை நூல் யாது? திருக்கோவையார் [திருச்சிற்றம்பலக் கோவை] இதனை முதல் கோவை என்போரும் உண்டு.
  37. நம்பியகப்பொருளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்த கோவை நூல் யாது? தஞ்சைவாணன் கோவை
  38. தஞ்சைவானன் கோவையின் ஆசிரியர் யார்? பொய்யாமொழித்தேவர்
  39. ஒட்டக்கூத்தர் இயற்றிய கோவை நூல்? குலோத்துங்கன் கோவை
  40. திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய கோவை நூல்? திருக்குற்றாலக் கோவை
  41. மீனாட்சி  சுந்தரம்பிள்ளை இயற்றிய கோவை நூல் எது? திருவாரூர்க் கோவை













திங்கள், 23 நவம்பர், 2020

சமயக்காப்பியங்கள் - 2

  1. தேம்பாவணியின் ஆசிரியர் யார்? வீரமாமுனிவர்
  2. வீரமாமுனிவரின் இயற்பெயர் யாது? கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி
  3. வீரமாமுனிவருக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் அளித்த பெயர் யாது? தைரியநாதன் [இதைத் தமிழ்ப்படுத்தியே வீரமாமுனிவர் என மாற்றினார்]
  4. தேம்பாவணி எந்த சமயக் காப்பியம்? கிறித்தவம்
  5. தேம்பாவணியின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  6. தேம்பாவணியின் பாவகை? விருத்தப்பா
  7. தேம்பாவணியின் பாடல்கள் எத்தனை? 3615
  8. தேம்பாவணியின் பெயர் காரணம் யாது? தேம்பா+ அணி - வாடாத மாலை, தேம்+பா+அணி - தேன் ஒத்த பாக்களால் ஆன நூல்
  9. தேம்பாவணியின் காண்டங்கள் எத்தனை? 3
  10. தேம்பாவணியின் படலங்கள் எத்தனை? ஒவ்வொரு காண்டத்திற்கும் 12 வீதம் 36 படலங்கள்
  11. தேம்பாவணியின் காப்பியத் தலைவன் யார்? வளன் [சூசை]
  12. தேம்பாவணியை புறநிலைக் காப்பியம் என்றவர் யார்? வீரமாமுனிவர்
  13. கம்பராமாயணத்தில் பாடப்படாத பொருள் யாது? இன்பம்
  14. இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் யார்? ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப்பிள்ளை
  15. இரட்சணிய யாத்திரிக பாடல்கள் எண்ணிக்கை? 3766
  16. இரட்சணிய யாத்திரிக பாக்கள் யாவை? கலிப்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, வஞ்சிப்பா
  17. இரட்சணிய யாத்திரிகம் இயற்றி முடிக்க ஆன காலம்? 14 வாரம்
  18. இரட்சணிய யாத்திரிகம் எழுதி முடிக்கப்பட்ட ஆண்டு? 1891
  19. இரட்சணிய யாத்திரகத்தின் எதன் தழுவல் நூல்? ஜான் பன்யன் எழுதிய 'தி பில்கிரிம்ஸ் புரோக்ரஸ்' என்பதன் தழுவல்
  20. இரட்சணிய யாத்திரிகத்தின் தலைவன், தலைவி யார்? கிறித்தவன், ஆன்மா
  21. இரட்சணிய யாத்திரிகம் நாயகன் நாயகி பாவத்தில் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
  22. இயேசு காவியத்தின் ஆசிரியர் யார்? கண்ணதாசன்
  23. இயேசு காவியத்தின் காலம் யாது? 1981
  24. இயேசு காவியம் எத்தனை பாகம் கொண்டது? 5
  25. இயேசு காவிய தலைப்புகள் எத்தனை? 149
  26. சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்? உமறுபுலவர்
  27. உமறுபுலவரை ஆதரித்த வள்ளல் யார்? சீதக்காதி
  28. சீறாப்புராணத்தின் காலம் யாது? 17 ஆம் நூற்றாண்டு
  29. சீறாப்புராணத்தின் பா யாது?  விருத்தப்பா
  30. சீறாப்புராண படலங்கள் யாவை? 92
  31. சீறாப்புராண பாடல்கள் எத்தனை? 5027
  32.  சீறாப்புராண காண்டங்கள் எத்தனை? 3 [விலாதத்துக் காண்டம், நுபுல்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம்]
  33. சீறாப் புராண கதைத்தலைவன் யார்? நபிகள் நாயகம்
  34. முகியித்தீன் புராணத்தின் வேறு பெயர் யாது? குத்பு நாயகம்
  35. முகியித்தீன் புராண ஆசிரியர் யார்? சேகுனாப் புலவர்
  36. முகியித்தீன் புராணத்தின் காலம் யாது? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
  37. முகியித்தீன் புராண காண்டங்கள் எத்தனை? 2
  38. முகியித்தீன் புராண பாடல்களின் எண்ணிக்கை? 1343
  39. மருமக்கள் வழி மான்மியத்தின் ஆசிரியர் யார்? கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  40. மருமக்கள் வழி மான்மியத்தின் காலம்? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
  41. பாண்டியன் பரிசை இயற்றியவர் யார்? பாரதிதாசன்
  42. பாண்டியன் பரிசு  வெளியான ஆண்டு எது? கி.பி. 1943
  43. பூங்கொடியின் ஆசிரியர் யார்? முடியரசன் 
  44. பாரதசக்தி மகாகாவியத்தின் ஆசிரியர் யார்? சுத்தானந்த பாரதியார்
  45. பாரதசக்தி மகாகாவியத்தின் காலம் யாது? கி.பி. 20 ஆம் நூற்றாண்டு














சமய காப்பியங்கள் -1

  1. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் சமண, பௌத்த சமயக் காப்பியங்கள்  
  2. பெருங்கதை எந்த சமய காப்பியம்? சமணம்
  3. பெருங்கதை எக்காப்பியத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது? பிருகத்கதா [பிருகத் - பெரிய]
  4. பிருகத்கதா எம்மொழியில் இயற்றப்பட்டது? பைசாச
  5. பிருகத்கதா யாரால் இயற்றப்பட்டது? குணாட்டியார்
  6. பெருங்ககை எவ்வாறு அழைக்கப்படும்? உதயணன் கதை, கொங்குவேளிர் மாக்கதை
  7. பெருங்கதையின் காலம்? கி.பி. ஏழாம் நூற்றாண்டு
  8. பெருங்கதை எந்தப் பாவால் ஆனது? ஆசிரியப்பா
  9. முதல் சமணக் காப்பியம் எது? பெருங்கதை
  10. பெருங்கதையின் ஆசிரியர் யார்? கொங்குவேள் [கொங்குவேளீர்]
  11. பெருங்கதை எத்தனை அடிகளைக் கொண்டது? 16,230
  12. பெருங்கதையின் காண்டங்கள் எத்தனை? 5 [உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகதக் காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம்]
  13. பெருங்கதையில் கிடைக்காத பகுதி யாது? உஞ்சைக் காண்டத்தில் முதல் 31 தலைப்புக்களில் உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை.
  14. பெருங்கதையில் கிளைக் கதைகள் மிகுந்துள்ளதால் அதனைக் கதைக் கடல் என்றவர் யார்? உ.வே. சாமிநாதையர்
  15. விம்பிசாரக்கதை எந்த சமயக் காப்பியம்? பௌத்தர்
  16. விம்பிசாரக் கதை யாது? கௌதம புத்தர் அருளால் பௌத்தராக மாறிய விம்பிசாரன் என்ற மகத நாட்டு மன்னனின் வரலாறு கூறும் காப்பியம்.
  17. ஸ்ரீபுராணம் எந்த சமய நூல்? சமண சமய நூல்
  18. ஸ்ரீபுராணம் எதன் மொழிபெயர்ப்பு நூலாகும்? வடமொழி மகாபுராண சங்கிரகத்தின் மொழிபெயர்ப்பு  
  19. மேருமந்திர புராணம் எந்த சமயக் காப்பியம்? சமணம்
  20. மேருமந்திர புராணத்தின் ஆசிரியர்? வாமனாச்சாரியார்
  21. வாமனாச்சாரியார் உரை எழுதிய காப்பியம் யாது?  நீலகேசி
  22. சமணர்களின் 'சமயச் சாரம்' என்று அழைக்கப்படும் காப்பியம்? மேருமந்திர புராணம்
  23. மேருமந்திர புராணம் மேரு, மந்திரா என்ற இரு உடன்பிறந்தோரின் வரலாற்றைக் கூறும்
  24. மேருமந்திர புராணத்தின் முதல் நூல் எது? ஸ்ரீபுராணம் 
  25. மேருமந்திர புராணத்தின் சருக்கங்கள் எத்தனை? 13
  26. மேருமந்திர புராணத்தின் பாடல்கள் எத்தனை? 1405
  27. மேருமந்திர புராணத்தின் காலம் யாது? கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
  28. பாரத கதை கூறும் நூல்கள் யாவை? பாரத வெண்பா, நளவெண்பா, வில்லிபாரதம், நைடதம், வசு சரித்திரம், நல்லாப்பிள்ளை பாரதம், பாரதியின் பாஞ்சாலி சபதம்
  29. பாரத வெண்பாவின் ஆசிரியர் யார்? பெருந்தேவனார்
  30. பாரத வெண்பாவின் காலம் யாது? 9 ஆம் நூற்றாண்டு
  31. பாரத வெண்பாவில் கிடைத்துள்ள பருவங்கள் எத்தனை? 3 [உத்தியோக பருவம், பீஸ்ம பருவம், துரோண பருவம்]
  32. பாரத வெண்பாவில் கிடைத்துள்ள மொத்த பாடல்கள் எத்தனை? 830
  33. கலி ஒருவனைப் பிடித்தால் நடப்பவை எவை எனக்கூறும் காப்பியம் யாது? நளவெண்பா
  34. நளவெண்பாவின் ஆசிரியர் யார்? கவிச்சக்கரவர்த்தி புகழேந்திப் புலவர்
  35. நளவெண்பாவில் உள்ள காண்டங்கள் யாவை? 3 [சுயம்வர காண்டம், கலி தொடர் காண்டம், கலி நீங்கு காண்டம்]
  36. நளவெண்பாவில் உள்ள பாடல்கள் எத்தனை? 410
  37. வில்லி பாரதத்தை இயற்றியவர் யார்? வில்லி புத்தூரார்
  38. வில்லி புத்தூராரை ஆதரித்த மன்னன் யார்? வரபதி
  39. வில்லிபுத்தூரார் காலம் யாது? கி.பி. 15 ஆம் நூற்றாண்டு
  40. வில்லி பாரத படலங்கள் எத்தனை? பாரத கதை முழுவதையும் பேசாமல் 18 படலங்களில் 10 படலங்கள் மட்டுமே இயற்றி உள்ளார்
  41. வில்லி பாரத பாடல்களின் எண்ணிக்கை யாது? 4351
  42.  நைடதத்தின் ஆசிரியர் யார்? அதிவீரராம பாண்டியர்
  43. நைடதத்தின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
  44. நைடதம் என்ன பாவால் ஆனது? விருத்தப்பா
  45. நைடதத்தில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 1172
  46. நைடதத்தைச் சிறப்பிக்கும் பழமொழி யாது? "நைடதம் புலவர்க்கு ஔடதம்"
  47. வசு சரித்திரம் யாரால் இயற்றப்பட்டது? அம்பலத்தாடும் ஐயன்
  48. வசு சரித்திரத்தின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
  49. வசு சரித்திரத்தின் பா யாது? விருத்தப்பா
  50. வசு சரித்திரத்தின் படலங்கள் யாவை? 32
  51. வசு சரித்திரத்தின் பாடல்கள் எத்தனை? 1003
  52. வசு சரித்திரத்தின் மூல கதை யாது? மகாபாரதத்தின் ஆதி பருவ வசுவின் கதை
  53. நல்லாப்பிள்ளை பாரதத்தின் காலம் யாது? கி.பி.18ஆம் நூற்றாண்டு
  54. நல்லாப்பிள்ளை பாரதத்தின் வருவம் எத்தனை? 18 பருவம்
  55. நல்லாப்பிள்ளை பாரதத்தின் பாடல்கள் எத்தனை? 15300
  56. பாரதியின் பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது? 5 சருக்கம் கொண்ட குறுங்காவியம் ஆகும்
  57. கம்பராமாயணத்தின் காலம் யாது? 9 அல்லது 12 ஆம் நூற்றாண்டு
  58. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்? சடையப்ப வள்ளல்
  59. கம்பராமாயண பா வடிவம் யாது? மொத்தம் 8 வகை பாக்கள் கலந்தது. அவற்றில் கலிவிருத்தம் மிகுதியாக உள்ளது.
  60. கம்ப ராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? 6 [பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்]
  61. கம்பராமாயண படலங்களின் எண்ணிக்கை? 118
  62. கம்பராமாயண பாடல்களின் எண்ணிக்கை? 10,500
  63. கம்பராமாயணத்தில் பயின்றுள்ள சந்த வேறுபாடுகள் எவ்வளவு? 460
  64. கம்பர் எழுதிய பிற நூல்கள் யாவை? ஏர் எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி [நம்மாழ்வார் குறித்த நூல்] 
  65. கம்பரைச் சிறப்பிக்கும் சொற்றொடர்கள் யாவை? கல்வியில் பெரியவர் கம்பர், கம்பனாரிடைப் பெருமையுள்ளது, கம்பன் வீட்டுள் ஒரு சிறுபுன் கட்டுத்தறியும் கவி செய்யும், கவிச்சக்கரவர்த்தி கம்பர், விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்.
  66. வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் காப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார் என்றவர் யார்? மு. இராகவையங்கார்
  67. கம்பராமாயணம் இலியாது, ஏனீது, துறக்கநீக்கம், மகாபாரதம் முதலானவற்றை வெல்லும் சிறப்புடையது என்பது மட்டுமன்றித் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும் என்றவர் யார்? வ.வே.சு. ஐயர்
  68. கம்பன்மொழி, செந்தமிழின் கவித்திறத்தின் காட்சி என்றவர் யார்? பாகவதம்
  69. உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை என்றவர் யார்? எஸ். மகாராஜன்
  70. "கம்பனைப்போல்  வள்ளுவன்போல் இளங்கோவைப் போல் பூமிதனில்  யாங்கனுமே பிறந்ததில்லை" என்றவர் யார்? பாரதியார்
  71. "கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" - என்றவர் யார்? பாரதியார்
  72. "வெய்யிற் கேற்ற நிழலுண்டு/ வீசும் தென்றல் காற்றுண்டு/ கையில் கம்பன் கவியுண்டு" - என்றவர் யார்? கவிமணி
  73. "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்" என்றவர் யார்?  திருத்தக்க தேவர் 
  74. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் யாது? இராமாவதாரம்
  75. கம்பராமாயணம் வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தின் தழுவல் நூலே.
  76. வால்மீகி எழுதாத கம்பராமாயணத்தில் உள்ள படலங்கள் யாவை? இரணியன் வதைப்படலம், மாயாசனகப் படலம்
  77. கம்பர் எத்தனை நாட்களில் இராமாயணத்தைப் பாடியவர் யார்? பதினைந்து நாட்கள்
  78. இராமாயணத்தோடு தொடர்புடைய  நூட்கள் யாவை? இரகுவம்சம், இராமாயண் வெண்பா, இராவண காவியம் 
  79. இரகுவம்சத்தின் ஆசிரியர் யார்? அரசகேசரி
  80. அரச கேசரி யாருடைய மகன்? இலங்கை மன்னன் பரராச்சேகரன் மகன் 
  81. அரசகேசரியின் ஊர் எது? இலங்கையில் உள்ள நல்லூர்
  82. இரகுவம்சத்தின் காலம் யாது? கி.பி. 15 [அல்லது] 17 ஆம் நூற்றாண்டு
  83. இரகுவம்சத்தின் பாடல்கள் எத்தனை? 2500 [காப்பு - 1, பாயிரம் - 8]
  84. இரகுவம்சம் எதன் தழுவல் நூல்? காளிதாசர் எழுதிய இரகுவம்சம் [பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல் என்றும் கூறுதற்கு உரியது]
  85. இராமாயண் வெண்பாவின் ஆசிரியர் யார்? சுப்பிரமணிய ஐயர்.
  86. இரவண காவியத்தின் ஆசிரியர் யார்? புலவர் குழந்தை
  87. இராவண காவியம் வெளியான ஆண்டு எது? கி.பி. 1946
  88. அரிச்சந்திர புராணத்தின் ஆசிரியர் யார்? வீரகவிராயர்
  89. கூர்மபுராணம், காசிக் காண்டத்தின் ஆசிரியர் யார்? அதிவீரராம பாண்டியர்

ஞாயிறு, 22 நவம்பர், 2020

காப்பிய வினாக்கள்

1.     சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்

2.     சிலப்பதிகாரத்தின் காலம் எது? கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

3.     சிலப்பதிகாரத்தின் பா யாது? நிலைமண்டில ஆசிரியப்பா

4.     சிலப்பதிகாரத்தின் சமயம் யாது? சமணம்

5.     சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் எத்தனை? 3 [புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்]

6.     சிலப்பதிகாரத்தின் காதைகள் எத்தனை? 30 [புகார்க்காண்டம் - 10 காதைகள், மதுரைக்காண்டம் - 13, வஞ்சிக்காண்டம் - 7காதைகள்]

7.     சிலபதிகார, கூறும் மூன்று உண்மைகள் யாவை? அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்]

8.     சிலப்பதிகாரத்தில் பதிகத்தை அடுத்து இடம்பெற்றுள்ள பகுதி யாது? உரைபெறு கட்டுரை [வெற்றிவேற் செழியன், கொங்கிளங்கோசர், கயவாகு மன்னன், சோழன் பெருங்கிள்ளி ஆகியோர் குறித்தக் கருத்துக்கள் இடம்பெற்று உள்ளன.

9.     உரைபெறு கட்டுரை உரைநடையால் ஆனது. இதனால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பெயராயிற்று.

10. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வடமொழியில்  எவ்வாறு அழைக்கப்படும்? சம்பு காவியம்

11. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இசைசார் பகுதிகள்? மங்கல வாழ்த்து, அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, வாழ்த்துக் காதை

12. அரங்கேற்றுக் காதையில் மாதவி ஆடிய நடனங்கள் எத்தனை? 11

13. சிலப்பதிகாரத்தில் போற்றப்படுபவை யாவை? திங்கள், ஞாயிறு, மாமழை, பூம்புகார்

14. அரங்கேற்றுக்காதையில் திரை எவ்வாறு அழைக்கப்படும்? எழினி

15. அரங்கேற்று காதையில் இடம்பெறும் திரை வகைகள் யாவை? ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்து வரல் எழினி

16. ஒருமுக எழினி என்றால் என்ன? ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்குச் செல்லும் திரை

17.   பொருமுக எழினி என்றால் என்ன? இரு ஓரங்களில் இருந்தும் மேடையின் நடுவில் வந்து பொருந்தும் எழினி

18. கரந்து வரல் எழினி என்றால் என்ன? மேலே இருந்து கீழே இறங்கி வரும் எழினி

19. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சதகர்ணிகள் என்போர் யாவர்? மகத நாட்டு நூற்றுவர் கன்னர்

20. சிலப்பதிகாரம் வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படும்? நூபுர காவியம், நூபுர கதா

21. கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைத்த நாள்? ஆடி மாத வெள்ளிக்கிழமை [எனவே பெண்கள் ஆடி வெள்ளியைக் கொண்டாடுவதாக மு. வரதராசனார்]

22. சிலப்பதிகாரம் என அழைக்கப்பட காரணம் யாது? ஊழ்வினை சிலம்பு காரணமாக நாட்டுதும் யானோர் பாட்டுடைச் செய்யுள் என இளங்கோவடிகள் கூறுகிறார்.

23. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் யாவை? முதல் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், முத்தமிழ்க் காப்பியம், முதன்மைக் காப்பியம், பத்தினிக் காப்பியம், நாடகக்காப்பியம், குடிமக்கள் காப்பியம், புதுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், தம்ழ்த்தேசியக் காப்பியம், மூவேந்த காப்பியம், வரலாற்றுக் காப்பியம், போராட்ட காப்பியம், புரட்சிக் காப்பியம்   

24. முத்தமிழ்க் காப்பியம் என்றால் என்னஇயல் இசை நாடகம் அமைந்தமையால்

25. சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் என்றவர் யார்? தெ. பொ. மீ

26. சிலப்பதிகாரத்தில் ஐந்திணைக் கூறுகள் - குறிஞ்சி - குன்றக்குரவை, முல்லை - ஆய்ச்சியர் குரவை, மருதம் - நாடிகாண் காதை, நெய்தல் - கானல் வரி, பாலை - வேட்டுவவரி

27. சிலப்பதிகாரக் காலம் கி.பி. 8 ஆம் நூற் என்றவர் - வையாபுரிபிள்ளை

28. சிலம்பின் காலம் 2 ஆம் நூற்றாண்டு என்பதற்குக் காரணம்? கண்ணகி கோவிலுக்கு இலங்கை மன்னன் வந்தமை [அவனது காலம் கி.பி. 2 என மகாவம்சம் குறிக்கிறது.

29. மணி மேகலையின் ஆசிரியர்? மதுரை கூல வணிகன் சீத்தலை சாத்தனார்

30. மணிமேகலை பாடல் அடிகள் - 4286

31. மணிமேகலை காதை - 30

32. மணிமேகலையின் வேறு பெயர்? மணிமேகலைத் துறவு

33. மணிமேகலை குறித்து மது.. விமலானந்தம் உரைப்பவை? திருவள்ளுவரைப் பெய்யில் புலவன் என்றும், திருக்குறளை பொருளுர என்றும் போற்றும் முதல் பனுவம்

34. மணிமேகலை குறித்தி துறைமங்கலம் கூறுவது யாது? கொந்தார் குழல் மணிமேகலை நூல்நுட்பம் கொள்வது எங்ஙன்

35. காப்பியங்களைத் தமிழ் அன்னையின் ஆபரணங்களாகக் காட்டியவர் யார்? சுத்தானந்த பாரதியார்

36. மணிமேகலை எத்தகுப் பாவகையால் இயற்றப்பட்டது? நிலைமண்டில ஆசிரியப்பா

37. முதல் சமயக்காப்பியம் யாது? மணிமேகலை

38. மணிமேகலையை .வே.சா. எவ்வாறு குறிக்கிறார்? சமயக் கலைச்சொல் காப்பியம்

39. மணிமேகலை கதைக்களஞ்சியக் காப்பியம் என அழைக்கப்படக் காரணம் யாதுமிகுதியான கிளைக்கதைகள் உள்ளதால்

40. "மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே" என்று குறிப்பிடும் இலக்கியம்? அம்பிகாபதிக் கோவை

41. "திருநாகரும், தரும பாலரும் கண்ட தருக்க நெறியின் மொழிபெயர்ப்புகள் மணிமேகலையின் இடைச்செருகல்" என்றவர்? தெ. பொ.மீ

42. "வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்றும் திருக்குறளைப் பொருளுரை என்றும் முதன் முதல் காப்பியத்தில் வைத்துப் போற்றும் முதல் பனுவல் என மணிமேகலையைக் குறிப்பவர்? மது.. விமலானந்தம்

43. சிலப்பதிகாரம், மணிமேகலையில் ஒத்தமையும் செய்யுள்கள்?        "பசியும் பிணியும் பகையும் நீங்கி / வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி"  "வச்சிரக் கோட்டத்து மண்ங்கெழு முரசம்/ கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்ற"

44. சிலப்பதிகாரத்தில் சீவகன் பின்பற்றும் நெறி யாது? சாவக நோன்பி

45. சிலப்பதிகாரம் காட்டும் வைதீக நெறியினர் யார்? மாடலமறையோன் 

46. சிலப்பதிகாரம் காட்டும் சமணத்துறவி யார்? கவுந்தி அடிகள்

47. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி மணிமேகலை என்பதைக் குறிப்பது யாது? "மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்" என்னும் சிலம்பின் இறுதியில் வரும் தொடர் மூலம் அறியலாம்

48. மணிமேகலையில் பௌத்த நெறி உரைக்கும் காதைகள் யாவை? சமயக்கணக்கர் தம் திறம் கேட்டக் காதை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்டக்காதை, பவத்திறம் அறுகென பாவ நோற்ற காதை

49. மணிமேகலையை 'சமுதாய சீர்திருத்தங்களின் களஞ்சியம்" எனப்பாராட்டியவர் யார்? . சுப. மாணிக்கம்

50. சீத்தலை சாத்தனாரை இளங்கோவடிகள் எவ்வாறு குறிக்கிறார்? தண்டமிழாசான் சாத்தனார்

51. மணிமேகலையின் முதல் காதை யாது? விழாவறைக் காதை

52. விழாவறைக்காதை சுட்டும் விழா யாது? இந்திரவிழா [28 நாள் நடக்கும்]

53. மணிமேகலையின் இறுதிக் காதை  யாது? பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

54. மாதவியின் தாய் யார்? சித்திராபதி

55. மணிமேகலையின் தோழி யார்? சுதமதி

56. மணிமேகைலை மலர்ப்பறிக்கச் சென்ற வனம் யாது? உவவனம்

57. உவவனத்தில் உதயனனிடம் இருந்து தப்ப மணிமேகலை எங்கு ஒளிந்தாள்பளிக்கறை

58. மணிமேகலையை மணிமேகலா தெய்வம் எங்கு தூக்கிச்சென்றது? மணிபல்லவத்தீவு

59. மணிபல்லவத்தீவில் மணிமேகலைக்குப் பழம் பிறப்பு உணர்த்தியது யாது? புத்தபீடிகை

60. மணிமேகலைக்கு அமுத சுரபி கிடைக்கும் வகை கூறியது யார்? தீவதிலகை

61. மணிமேகலை அமுத சுரபியில் முதன்முதலில் உணவு பெற்ற பத்தினி யார்? ஆதிரை

62. மணிமேகலையால் யானைத்தீ[பசிநோய் நீங்கியவள் யார்? காயசண்டிகை

63. உதயகுமரனைக் கொன்ற காயசண்டிகையின் கணவன் பெயர் யாது? விஞ்சையன்

64. மணிமேகலையை சிறையிலிட்ட உதயகுமரனின் தாய் யார்? சோழமாதேவி

65. மணிமேகலை பவத்திறம் அறுகென பாவை நோற்ற இடம் யாது? காஞ்சி

66. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்? திருத்தக்கத் தேவர்

67. திருத்தக்கத் தேவர் எச்சங்கத்தச் சேர்ந்தவர்? மதுரைத் திரமிள சங்கம்

68. சீவக சிந்தாமணியின் காலம் யாத்? கி.பி 5ஆம் நூற்றாண்டு

69. சீவக சிந்தாமணி எச்சமயக் காப்பியம்? சமணம்

70. சீவக சிந்தாமணி எப்பாவால் ஆனது? விருத்தப்பா

71. சீவக சிந்தாமணியின் பாடல்கள் எத்தனை? 3147

72. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது? 13

73. சீவக சிந்தாமணியின் வேறு பெயர் யாது? மணநூல்

74. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்? திருத்தக்கத்தேவர்

75. திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக்கு இட்ட பெயர்? சிந்தாமணி [சிந்தாமணி சரிதம் சிதர்ந்தேன்]

76. திருத்தக்கத்தேவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? திருத்தகு மாமுனிகள், திருத்தகு மகா முனிவர், திருத்தகு முனிவர், திருத்தக்க மகாமுனிகள்

77. சீவகன் பிறந்த போது அவனது தாய்/ அசரிரி எவ்வாறு வாழ்த்தினாள்? சீவ

78. சீவகன் எத்தனை மணங்கள் புரிந்தான்? 8

79. சீவகன் யாழிசையில் வென்று மணம் செய்தது? காந்தருவதத்தை

80. சீவகன் மத யானையை அடக்கி மணம் செய்தது யாரை? குணமாலை

81. சீவகன் பாம்பு நஞ்சை நீக்கி மணம் செய்தது யாரை? பதுமை

82. சீவகன் காதல் கொண்டு திருமணம் செய்தது யாரை? கேமசரி, விமலை

83. சீவகன் வில்வித்தைக் கற்பித்து மணந்தது யாரை? கனகமாலை

84. சீவகன் கிழவன் வேடம் பூண்டு காதலித்து மணந்தது யாரை? சுரமஞ்சரி

85. சீவகன் மணந்த மாமன் மகள் யார்? இலக்கணை

86. சீவகன் கோவிந்தனுக்கு யாரை மணம் செய்து வைத்தான்? கோவிந்தை

87. திருத்தக்கத்தேவரின் ஆசிரியர் யார்அச்சணந்தி

88. திருத்தக்கத்தேவர் சீவகசிந்தாமணிக்கு முன் பாடிய இலக்கியம் யாது? நரிவிருத்தம்

89. சீவகனின் தந்தைப் பெயர் யாது? சச்சந்தன்

90.  சச்சந்தன் எந்த நாட்டு மன்னன்? ஏமாங்கத நாடு

91. சீவகனின் தாய் பெயர் என்ன? விசையை

92. சச்சந்தனுக்கு எதிராக சூழ்ச்சி செய்த அமைச்சர் யார்? கட்டியங்காரன்

93. சீவகனின் வளர்ப்புத் தந்தை யார்? கந்துக்கடன்

94. சீவகன் யாரிடம் கல்வி பயின்றார்? அச்சணந்தி

95. விருத்தப்பாவால் ஆன முதல் காப்பியம் யாது? சீவகசிந்தாமணி

96. சிலப்பதிகாரத்தின் எப்பகுதி விருத்தப்பாவால் ஆனது? கானல் வரி

97. சீவகன் கதைத்தழுவி இயற்றப்பட்ட வடமொழி நூல்கள் யாவை? ஷத்திர சூடாமணி, ஶ்ரீ புராணாம், கத்ய சிந்தாமணி

98. "சிந்தாமணியில் ஓர் அகப்பை முகந்துகொண்டேன் என்றவர் யார்? கம்பன்

99. சிந்தாமணியில் கண்டி என்னும் புலவர் தம் பாடல்களை இடைச்செருகலாகச் சேர்த்தார் எனக்கூறுபவர் யார்நச்சினார்க்கினியர்

100.                    "தமிழ் மொழிக்கு இலியட்டும் இதுவே ஒடிசியும் இதுவே" எனப்புகழ்ந்தவர் யார்? ஜி.யு.போப்

101.                    திருத்தக்கத்தேவர் குறித்தக் குறிப்புக் காணப்படும் கல்வெட்டு யாது? மைசூர் அருகில் 'சிரவண பெலகோலாக் கல்வெட்டு'

102.                    வளையாபதியின் காலம் யாது? 9ஆம் நூற்றாண்டு

103.                    வளாயாபதி சீவகசிந்தாமணிக்கு முற்பட்டது எனக் கூறும் அறிஞர் யார்? தெ.பொ.மீ

104.                    வளையாபதியில் கிடைத்துள்ள பாடல்கள் எத்தனை? 73

105.                    வளையாபதி செய்யுட்கள் எங்கிருந்து திரட்டப்பட்டு உள்ளன? புறத்திரட்டு, யாப்பெருங்கல விருத்தியுரை, சிலப்பதிகார உரை, தொல்காப்பிய உரை

106.                    'கவியழகு வேண்டி' வளையாபதியை நினைத்தவர் யார்? ஒட்டக்கூத்தர்

107.                    வளையாபதி கதை காணப்படும்  வடமொழி இலக்கியம் யாது? வைசிய புராணத்தின் 35 ஆம் அத்தியாயம்

108.                    குண்டலகேசியின் ஆசிரியர் யார்? நாதகுத்தனார்

109.                    குண்டலகேசியின் காலம் யாது? 8 ஆம் நூற்றாண்டு

110.                    குண்டலகேசி பாடல்களில் இன்று கிடைப்பவை? 19 பாடல்கள்

111.                    குண்டலகேசியின் சமயம் யாது? பௌத்தம்

112.                    குண்டலகேசியின் கதைத் தலைவியின் பெயர்? பத்திரை

113.                    குண்டலகேசியின் பெயர்க்காரணம் யார்? சுருண்ட கூந்தலை உடையவள்

114.                    பத்திரையின் கணவன் பெயர் யாது? காளன் 

115.                    குண்டலகேசியை தருக்க நூல் எனக்குறிப்பிடும் இலக்கணம் யாது? யாப்பருங்கல விருத்தி

116.                    ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை? நீலகேசி, சூளாமணி, யசோதரகாவியம், உதயண குமார காவியம், நாககுமார காவியம்

117.                    நீலகேசியின் காலம் யாது? கி.பி. 5/6

118.                    நீலகேசியின் சருக்கங்கள் எத்தனை? 10

119.                    நீலகேசியின் பாடல்கள் யாவை? 894

120.                    நீலகேசி என்பதன் பொருள் யாது? கரிய கூந்தலை உடையவள்

121.                    நீலகேசியின் வேறு பெயர்கள் யாவை? நீலகேசி தெருட்டு, நீலகேசி திரட்டு

122.                    நீலகேசியின் உரை நூல் யாது? சமய திவாகர வாமன முனிவரால் செய்யப்பட்ட சமய திவாகரம்

123.                    காளிக்கு உயிர்பலி தருவதைத் தடுத்த முனிவர் யார்? முனிச்சந்திரர் என்னும் சமண முனிவர்

124.                    முனிச்சந்திரரின் தவத்தைக் கெடுக்க காளி யாரை காமலோகையாக அனுப்புகிறது? பழையனூர் நீலி

125.                    நீலகேசியால் சமய வாதத்தால் வெல்லப்பட்டவர்கள் யாவர்குண்டலகேசி, அர்த்த சுந்தரர், ஆசீவகர், சாங்கியர்

126.                    கேசி என்னும் பெயரால் ஆன சமய வாத நூல்கள் யாவை? குண்டலகேசி, அஞ்சனகேசி, காலகேசி, நீலகேசி

127.                      நீலகேசியை நீலம் என அழைக்கும் நூல் யாது? யாப்பருங்கல விருத்தியுரை

128.                    நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக எழுந்தது? குண்டலகேசி

129.                    நீலகேசி உரையாசிரியர் வாமன முனிவரின் வேறு பெயர்கள் யாவை? வாமனாச்சாரியார், மல்லிசேனாசாரியார்

130.                    சூளாமணியின் ஆசிரியர் யார்? தோலாமொழித்தேவர்

131.                    சூளாமணியின் காலம் யாது? கி.பி 7 - 10 ஆம் நூற்றாண்டு

132.                    சூளாமணியின் சருக்கங்கள் யாவை? 12 

133.                    சூளாமணி பாடல்களின் எண்ணிக்கை? 2131/ 2330

134.                    சூளாமணியின் கதைத்தலைவன் யார்? திவிட்டன்

135.                     சூளாமணி எதைத் தழுவி இயற்றப்பட்டது? ஶ்ரீ புராணம், ஆருகத புராணம்

136.                    விருத்தப்பாவைக் கையாள்வதில் சூளாமணி ஆசிரியர் சிந்தாமணி ஆசிரியரை மிஞ்சிவிட்டார் என்றவர் யார்மு..

137.                    பாகவதம் சூளாமணியோடு கதைப்போக்கில் ஒத்துள்ளன எனக் குறிப்பிடுபவர் யார்? தமிழண்ணல்

138.                    சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி என்றவர் யார்? கி.வா. ஜகன்னாதன்

139.                    சிந்தாமணியிலும்கூட இத்தகைய ஓட்டமும் இனிமையும் இல்லை என்றவர் யார்? தெ. பொ. மீ

140.                    விசயனும், திவிட்டனும் எவர்களைப் போல சித்திரிக்கப்பட்டுள்ளனர்? கண்ணன், பலராமன்

141.                   
யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்? வெண்ணாவலூர் உடையார் வேள்

142.                    யசோதர காவியத்தின் காலம் யாது? கி.பி. 13 ஆம் நூற்றாண்டு

143.                    யசோதர காவியத்தின் பாடல்களின் அளவு? 320 [5 சருக்கங்கள்]

144.                    யசோதர காவியம் காட்டும் உதய நாட்டு மன்னர் யார்? மாரிதத்தன்

145.                    மாரிதத்தன் பலிகொடுக்க அழைத்து வந்த இரட்டையர்கள் யாவர்? அபயருசி, அபயமதி

146. அவந்தி நாட்டு மன்னன் மாரிதத்தனின்  மகன் யார்? யசோதரன்

147. யசோதரனின் மனைவி பெயர் என்ன? அமிர்தமதி

148. அமிர்தமதி மயங்கிய இசை யாது? மாளவப்பஞ்சமம் 

149. அமிர்தமதி யாரை நஞ்சிட்டுக் கொன்றாள்? கணவன் யசோதரன், மாமியார் சந்திரமதி

150. யசோதரனும், சந்திரமதியும் மறுபிறவியில்  யாராகப் பிறந்தனர்? அபயருசி, அபயமதி 

151. யசோதர காவியத்தின் கதை இடம்பெற்றுள்ள வடமொழி நூல் யாது? குணபத்திரர் எழுதிய உத்தரபுராணம்

152. யசோதர காவியம் எதைத் தழுவி இயற்றப்பட்டது?  புட்பதந்தர் எழுதிய யசோதர சரிதம்

153. யசோதரக்காவியம் எத்தகு உத்தியில் இயற்றப்பட்டது?  பின்னோக்கு உத்தி

154. உதயண குமாரத்தின் ஆசிரியர் யார்? கந்தியார் [பெண் துறவி]

155. உதயண குமாரத்தின் காலம் ? கி.பி. 15 நூற்றாண்டு

156. உதயண குமார காவித்தின் காலம் 15 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பவர் யார்? மது. ச. விமலானந்தம்

157. வத்தவ நாட்டு மன்னன் பெயர் யாது? உதயணன்

158. உதயண குமார காவியத்தின் காண்டங்கள் எத்தனை? 6

159.  உதயண குமார காவியத்தின் பாடல்கள் எத்தனை? 369

160. உதயண குமார காவியத்திற்கு உரை எழுதியவர் யார்? பொ.வே. சோமசுந்தரனார்

161. நாக குமார காவியத்தின் காலம் யாது? கி. பி. 16ஆம் நூற்றாண்டு

162. நாககுமார காவியத்தின் பாடல்கள் எத்தனை? 170

163. நாககுமார காவியத்தின் சருக்கங்கள் எத்தனை? 5

164. மகத நாட்டு மன்னன் யார்? சிரோணிகன்

165. சிரோணிகனின் மனைவி யார்? சாலினி

166. சிரோணிகனுக்கு நாகபஞ்சமி பற்றி  உரைத்தவர் யார்? வரவீரநாத முனிவர்

167. நாககுமாரனின் இயற்பெயர் யாது? பிரதாபந்தன்

168. நாககுமார காவியத்தின் மூலத்தைத் தந்தவர் யார்? வட ஆர்க்காடு மாவட்ட சமண அறிஞர் ஜெ. சின்னசாமி நயினார்

169. நாக குமார காவியம் எதில் வெளியானது? தமிழாய்வு

170. நாக குமார காவியத்தைப் பதிப்பித்தவர் யார்? மு. சண்முகம் பிள்ளை

171. நாககுமார காவியம் வெளியிடப்பட்ட ஆண்டு யாது? 1973

172. காப்பியம் எனது எதன் திரிபு? காவ்யா என்ற வட சொல்லின் இயல்பு

173. காப்பிய இலக்கணம் கூறும் நூல் யாது? தண்டியலங்காரம்

174. ஐம்பெரும் காப்பியங்கள் என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? மயிலைநாதர் [நன்னூல் உரை]

175. ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயரைக் குறிப்பிடுபவர் யார்? கந்தப்ப தேசிகர்

176. ஐஞ்சிறு காப்பியங்கள் எப்பாவால் ஆனவை? விருத்தப்பா

177. ஐஞ்சிறு காப்பியங்கள் எச்சமயம் சார்ந்தவை? சமணம்

178. இளங்கோவடிகள் துறவு பூண்டு அமர்ந்த இடம் எது? குணவாயில் கோட்டம்

179.  சிலப்பதிகாரம் காட்டும் மதுரையின் காவல் தெய்வம் யார்? மதுராபுரி தெய்வம்

180. கண்ணகி மதுரையை எரித்ததாக நம்பப்படும் காலம்  யாது? ஆடி மாதம், கிருஷ்ண பட்சம் எட்டாம் நாள், கார்த்திகையும் வெள்ளியும் சேர்ந்திருந்த வெள்ளிக்கிழமை
















 

 





Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...