1.பிரிக்கப் பிரியாது தொக்கி வரும் உறவுப் பெயர்கள் யாவை?
த, ந, நு, எ - இவற்றை முதலாகக் கொண்ட தமன், தமர், நமன், நமர், நுமன்,
நுமர், எமன், எமர், தாய், தந்தை, ஞாய் போன்ற சொற்கள்
2. தொகை போல அடுக்கி வருவன யாவை?
இசைநிறை [ஏஏ ஏஏ அம்பல் மொழிந்தனள்],
அசைநிலை [அன்றன்றே]
பொருளொடு புணர்தல் [பாம்பு பாம்பு]
3. தொகைமொழிகள் எத்தனை வகைப்படும்? ஆறு
4. தொகைமொழிகள் யாவை?
வேற்றுமைத்தொகை, உவமத் தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை
5. வேற்றுமைத்தொகை என்றால் என்ன?
வேற்றுமைத் தொடர்களில் வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது. உருபுகளோடு கூடிய ஆறு வேற்றுமைகள்ம் தொக்கிவரும்.
[நிலம் கடந்தான், பொற்குடம், கரும்பு வேலி, கருவூர்க்கோவில், முருகன் கோயில், மன்றப் பெண்ணை]
6. உவமத்தொகை என்றால் என்ன?
உவமைத் தொடரில் உவம உருபு தொக்கி வருவது. [புலிகொற்றன், மழைக்கை. பொன்மேனி]
7. வினைத்தொகை என்றால் என்ன?
வினைத்தொடரில் காலம் மறைந்து வருவது.
[ஆடரங்கு, நாய்க்கடி, பாய்புனல்]
8. பண்புத்தொகை என்றால் என்ன?
வண்ணம், வடிவம், அளவு, சுவை போன்றவையும் பிறவும் அதன் பண்பை உணர்த்தி இத்தன்மை உடையது எனக்கூறுவது ஆகும்.
[செவ்வானம், வட்டக்கல், நெடுங்கோல், இன்சொல்]
இருபெயரொட்டாய் வருவனவும் பண்புத்தொகையாகக் கொள்ளப்படும். [பனைமரம், மார்கழித்திங்கள்]
9. உம்மைத்தொகை என்றால் என்ன?
உம் தொக்கி வருவது உம்மைத் தொகை எனப்படும். [காய்கறி, காய்கனி]
10. உம்மைத் தொகைப் பொருந்தி வரும் இடங்கள் யாவை?
இரு பெயர்கள் : காய்கறி
பல பொருள்கள்: அறம் பொருளின்பம்
முகத்தல் அளவுகள்: தூணிப்பதக்கு
எண்ணும் பெயரும்: பதினைவர்
நிறுத்தலளவைப் பெயர்: தொடியரை
எண் பெயர்: பதினைந்து
11. அன்மொழித்தொகை என்றால் என்ன?
பண்புத்தொகை, உம்மைத்தொகை, வேற்றுமைத் தொகையை அடுத்து இறுதியில் பிற சொற்கள் தொக்கி வருவது. [குறுந்தொடிவந்தாள்]
12. தொகைச்சொற்களில் பொருள் சிறந்து வரும் இடங்கள் யாவை?
முன்மொழியில், பின் மொழியல், அவ்விரு மொழிகளிலும், இரண்டிலும்
அல்லாது வேறு மொழி.
13. எல்லாத்தொகையும் ஒரு சொல் நடையினை உடையவை.
14. உம்மைத்தொகையில் உயர்திணைச் சொற்கள் பலர்பால் முடிவு உடையவை. [கபிலபரணன் - கவிலபரணர்]
15. ஒருசொல் அடுக்கு எத்தனை வகைப்படும் [ இசைநிறை, அசைநிலை,
பொருளோடு புணர்த்தல்].
16. இசை நிறை எத்தனை அடுக்கு வரை அடுக்கி வரும்?
இரண்டு முதல் நான்கு வரை. [ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்குமே]
17. விரைவு சொல் அடுக்குதற்கு உரிய வரம்பு யாது? 3 [தீ தீ தீ]
18. வினாவோடு வரும்போது அசைநிலையாக வரும் வினைச்சொற்கள்
யாவை? கண்டீர்.கொண்டீர், சென்றீர், போயிற்று என்னும் நான்கு
வினைப்பொருளை உணர்த்தவில்லை எனின் அவை அசைநிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக