1. வழக்கு எத்தனை வகைப்படும்? 2 [இயல்பு, தகுதி]
2. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்? 3 [இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ]
3. இலக்கணமுடையது என்பது யாது? இலக்கண நெறிப்படி அமைவது
4. இலக்கணப்போலி என்பது யாது? இலக்கண விதிகளில் இருந்து மாறுபட்டு இருந்தாலும் காலம் காலமாக வழங்கி வந்து, இலக்கணம் போல ஏற்கப்பட்டது.
5. மரூஉ என்பது யாது? ஒரு சொல் காலப்போக்கில் எழுத்துக்கள் கெட்டோ, தோன்றியோ தன் வடிவில் திரிந்து வழங்குவது.
இலக்கணம் உரியது மரூஉ
அருமருந்தன்ன பிள்ளை அருமந்த பிள்ளை
மலையமானாடு மலாடு
சோழனாடு சோணாடு
தொண்டைமானாடு தொண்டைநாடு
மரவடி மராடி
குளவாம்பல் குளாம்பல்
யாவர் ஆர்
எவன் என்
தஞ்சாவூர் தஞ்சை
6. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்? இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி
7. இடக்கரடக்கல் என்றால் என்ன? பொது இடத்தில் உபயோகிக்கக் கூடாத சொற்களை வேறு சொல்லால் உணர்த்துவது. [கால் கழுவி வந்தான், பீயை அப்பீ எனக்கூறல்]
8. மங்கலம் என்றால் என்ன? மங்கலமல்லாதவற்றை மங்கலமாகக் கூறுதல். [இறந்தார் என்பதை துஞ்சினார், இயற்கை எய்தினார், செய்வபதவி அடைந்தா எனல்.]
9. குழூஉக்குறி என்றால் என்ன? ஒரு கூட்டத்திற்கு மட்டுமான சொல்
10. செய்யுள் வழக்கு என்றால் என்ன? பலவகைத் தாதுக்களால் உயிருக்கு இடமாக உடல் இருப்பது போல [பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போல] நால்வகை சொற்களால் பொருளுக்கு இடமாக கல்வியில் சிறந்தோரால் உருவாக்கப்பட்டது.
11. குறிப்பு மொழி எத்தனை வகைப்படும்? 9
ஒன்றொழி பொதுச்சொல் - மக்கள் பொருதினார் [ மக்கள் பொதுப்
பெயர் என்றாலும் போர் என்பதால் பெண் ஒழித்து ஆணை மட்டும் குறிக்கும்]
விகாரம் - மரை மலர் [ மரை என விகாரமாகி உள்ளது. பின் உள்ள மலர்
என்பது தாமரை எனக் காட்டுகிறது] தகுதி , ஆகுபெயர் - ஒன்றன் பெயர்
மற்றொன்றுக்கு ஆகி வருவது. அன்மொழித் தொகை, வினைக்குறிப்பு ,
முதற் குறிப்பு , தொகைக்குறிப்பு, பிற குறிப்பு
12. சொல் வகைகள் யாவை? இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
13. இயற்சொல் என்றால் என்ன? செந்தமிழினின்று திரியாமல் இயல்பாக
இருப்பது.
14. திரிசொல் என்றால் என்ன? ஒரு பொருள் குறிக்கும் பல சொல்லாகியும்,
பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லாகியும் கற்றவர்களால் மட்டுமே
அறிந்து கொள்ள இயலும் பொருள் கொண்டது.
கிளி - கிள்ளை, சுகம், தத்தை - ஒரு பொருள் தரும் பல சொல்
வாரணம் - யானை, கோழி, சங்கு, - பல பொருள் தரும் ஒரு சொல்
15. திசைச்சொல் என்பது யாது? செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த 12 நிலங்களிலும்,
18 மொழிகளுள் தமிழ் நிலம் ஒழிந்த 17 மொழி பேசும் நிலத்திலும் இருந்து
செந்தமிழில் வந்து வழங்கும் சொற்கள்.
16. வடசொல் என்பது யாது? வடதிசையில் இருந்து செந்தமிழ் நிலத்தில் வந்து
வழங்கும் சொல் வடசொல்.
17. வடசொல் எத்தனை வகைப்படும்? 3 [தமிழுக்கும் வட மொழிக்குமான பொது
எழுத்தால் அமைந்தவை[கமலம்] , சிறப்பெழுத்தால் அமைந்தவை [ரோஜா]
ஈரெழுத்தாலும் அமைந்தவை[ஹரி, அரி] .
18. பெயர் சொல் வகைகள் யாவை? இடுகுறி பெயர், காரணப் பெயர்,
இடுகுறிக் காரணப்பெயர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக