இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

அருளு பகுதி -4

 

    சாமிநாதனும் ஐயாவும் உள்ளே வருவதைப் பார்த்ததும் அதுவரை தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த அனைவரும் பேச்சை நிறுத்தி எதிர்பார்ப்போடு இருவரையும் பார்த்தனர். ஐயா தன் முகத்தில் எதையும் காட்டிக்கொளாமல் அமைதியாக தன் இடத்தில் சென்று அமர்ந்தார். என்ன நடக்கிறது எனப் புரியாமல் விழித்த சவரிமுத்துவைப் பார்த்து ஏல எல்லாம் பேசியாச்சு. ஐயா கலியானத்துக்கு ஒப்புக்கிட்டாக. ஒனக்கு சந்தோசந்தானே என்றார் சாமிநாதன். இது நடக்காது என்று நம்பிக்கை இழந்து சோர்ந்து போயிருந்த சவரி இதைக் கேட்டதும் உற்சாகமாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டே, என்னவிட எம்பொஞ்சாதிக்கு தான் ரொம்ப வருத்தமாப் போச்சு. இதக் கேட்டா பூரிச்சுப் போவா என்றான். அப்புறம் என்னடா ஒம்பொஞ்சாதிய வெரசா கூட்டியா. இல்லாட்டி அந்தப் பச்ச மண்ண அடிச்சே நொறுக்கிப்புடும். என சாமிநாதன் சொன்னதும் கோபம் ஏறியக் குரலோடு ...ம்... எம்மவ கஷ்டப்பட்டு வளக்குறா, வயித்துல நெருப்பக் கட்டுனாப்புல வீட்டுல பொட்டப்புள்ளய வச்சுக்கிட்டு அல்லாடுறா. அதுனால ஆத்திரத்துல ரெண்டடி வச்சிருப்பா. இத ஒரு கொறயுன்னு சபையில சொல்லனுமா? சோறு போட்டு வளக்குறவளுக்கு கை நீட்ட உருத்தில்லயா? என படபடக்கத் தொடங்கினாள். சூழல் மாறுவதைப் புரிந்து கொண்ட ஐயாவின் பங்காளி, சரி இப்ப வழவழன்னு பேச்சு என்னாத்துக்கு தட்டு மாத்தனும் மத்த சங்கதியெல்லாம் பேசனும். ஏப்பா சவுரி மசமசன்னு ஒக்காந்து கெடக்க பொம்பளயாளக் கூப்புடுப்பா. சட்டுபுட்டுன்னு அடுத்த கதயப்பாப்போம். என சொல்லவும் சவரி முத்து வேகமாக உள்ளே சென்று செய்தியைச் சொல்லி இரக்கத்தை அழைத்து வருகிறான். இதுவரை எப்படியோ திருமணம் நின்றுவிட்டது என்ற மகிழ்ச்சியிலிருந்த உபகாரத்திற்கு மனம் வாடிப் போனது. ஆனாலும் எம்பேத்திக்கு நடக்குற நல்ல காரியம். நாம இல்லாட்டி எப்புடி. இது தலையுல எழுதுனத யாரால அழிக்கமுடியும்? நடக்கறது நடக்கட்டும். என எண்ணிக் கொண்டே முகத்தைப் புடவைத் தலைப்பால் துடைத்து, சண்டையால் கலைந்திருந்த தலையை அவிழ்த்து இரு கூறாக பிரித்து, கைவிரல்களாலே வாரி இரு கையாலும் அள்ளி முடிந்து கொண்டாள். சேலை மாராப்பை சரி செய்து கொண்டு கூடத்திற்கு வந்தாள். கூடத்தில் இரக்கத்தின் அம்மா ஐயாவைப் பார்த்து சரி சரி அதான் பேசி முடிச்சு தட்டு மாத்துறதுன்னு ஆச்சு. அப்புறம் இன்னும் காப்பிய குடுக்காம இருந்தா எப்புடி? என்றதும் குடிப்பதற்காக காப்பியை எடுத்தார் ஐயா. உள்ளே நுழைந்து இடைமறித்த உபகாரம் ஐயா செத்த இருங்கையா. ஏத்தா எரக்கம் எப்ப குடுத்த காப்பி இது. ஆறி அளண்டு போனதப்போயி பெரிய மனுசனக் குடிக்க விடலாமா. கங்குல தானே பாலிருக்கு புதுசா காப்பி போட்டுக் குடு என்றாள். உபகாரம் அதிகாரமாக பேசியது கோபத்தைத் தந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே சென்று புதிதாக காப்பி போட்டு எடுத்து வந்தாள். இந்த முறை காப்பியைக் கீழே வைக்காமல் குடித்து முடித்தார் ஐயா. ஒரு வழியாக பத்து நாட்களில் திருமணம் என்றும், சீர் என எதுவும் செய்ய வேண்டாம் எனவும் இரக்கம் ஆசைப்பட்டது போலவே பேசிமுடித்து தட்டும் மாற்றிக் கொண்டனர்

இந்தத் திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்றாலும் வீட்டிற்கு பெரிய மனுசி என்ற முறைக்கு பாக்கு வெற்றிலை மாற்றும் வரை பக்கத்தில் நின்றுமாப்பிள்ளை வீட்டார் கிளம்பியதும் தன்னைத் தானே நொந்துகொண்டு திண்ணையில் வந்து அமர்ந்தாள் உபகாரம்உள்ளே இரக்கத்திற்கும் அவள் அம்மாவிற்கும் ஏதோ பெரிய சாதனை நடத்தியது போல ஏகப்பட்ட சந்தோசம்நடப்பது எதுவும் தெரியாமல் எதார்த்தமாக வந்தது போல் பாவலா செய்தாள் இரக்கத்தின் அம்மாசரி புள்ளைகள ஒருவாரம் வீட்டுல வச்சுக்கலாம்னு கூட்டிட்டுப் போனா மறாநாத்தே ஆத்தா ஆத்தான்டு ஆயிதுக பக்கிங்கஅதான் கூட்டியாந்தேன். என்றவளிடம் ஏத்தா ஒனக்கு காது கீது எதும் நொள்ளையாஅதுக ஆத்தாண்டு சொல்லீருக்காது அத்தஅத்தைன்னு மறுகிருக்குங்கஏல பெரியவனே நாஞ்சொல்றது சரிதானே என நக்கலாக கேட்டாள் உபகாரம்அவனும் சரி என்பது போல தலையாட்டிவிட்டு தன் தங்கையை இழுத்துக்கொண்டு அத்தையிடம் ஓடினான்“அப்பப்பாஎன்ன இந்த மனுசரு இம்புட்டு வீம்பா இருக்காருஇரண்டாந்தாரமா கட்டுறதுக்கு இம்புட்டு பவுசு பாக்கனுமாதோதுபட்ட நாள்ல கழுத்துல தாலியக்கட்டி கூட்டிப் போறதுக்கு இம்புட்டு ரோசனை பன்றாருநல்ல வேளம்மா நீ இங்கிட்டு வந்த இல்ல இது கூட தட்டிருக்கும்எப்புடியோ பத்து நாள்ல தேதி வச்சாச்சுசரி வா சாப்பாடுஆக்கிட்டா வந்து சாப்புடு என அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்அதுவரை அவர்கள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த இருதயம் வெளியே வந்து திண்ணையிலிருந்த தூணில் சாய்ந்தபடி அமர்ந்தான்.

இருதயம் அருளின் இரண்டாவது அண்ணன்தான்ஆனாலும் இதுவரை நடந்தவைக்கும் தனக்கும் ஏதும் சம்பந்தமில்லா அந்நியன் போல எதிலும் ஒட்டாமல் இருந்தான்அவனைப் பார்க்கவும் உபகாரத்தம்மாளுக்கு ஆத்திரம் பீறிட்டு வந்ததுஆனாலும் அமைதியாகவே பேச்சைத் தொடங்கினாள்ஏன்டா இருதயம் ஒன்னுக்கு மூனு அண்ணெங்க இருந்தும் இந்த அருளுக்குட்டிய இப்புடி கொண்டுபோயி தள்ளலாமாடாநீ ஒரு வார்த்த கேக்கக் கூடாதாடாஎன்றதும் அதெல்லாம் நாங்கேக்க முடியுமாமதினிக்கு எல்லாந் தெரியும்அவுக ஏதும் தப்பா செய்ய மாட்டாகஉனக்கு இப்ப என்ன வந்துச்சுவயசான காலத்துல நசநசண்டு,  சும்மா கெட என்றான்    இருதயம்சரிடா எளவட்டம் நாங்கெளட்டுச் சிறுக்கிதான்நீங்க யாருக்கோ கட்டிக் குடுங்க நான் வேண்டாங்களஆனா இம்புட்டு நெலங்கர வச்சுக்கிட்டு பொம்பலப்புள்ளைக்கு நாலு நகநட்டு போட வேண்டாமாஅட ஒங்க சொந்த காசுல போட வேண்டாம்ஒம்ம அப்பஞ் சொத்தையும் எழுதி வெக்க வேண்டாம்உங்க அம்மாகாரி காதுலயும் கழுத்துலயும் கையிலயும்போட்டு இருந்தாளேஅதையாச்சும் போட்டுக் கட்டிக் குடுக்கக்கூடாதா? எனக் கேட்டதும் அதெல்லாந் தெரியது மதினி என மதினி புகழ் பாடத் தொடங்கியதும் அவளுக்குக் கோபம் தலைக்கு ஏறஏய் போதுண்டா ஒம்மதினி பெருமஅவ பங்காளி பொண்ண ஒங்கண்ணுல காட்டி ஒன்ன கட்டிப்போட்டு வச்சுருக்காநீயேஅண்ணெ எப்ப சாவான்திண்ண எப்ப காலியாகுன்ற கணக்கா அவள கட்டிக்குடுத்து அனுப்புனா நீ சீக்கிரம்  கட்டிக்கலாம்னு கணக்குப் பாக்குறஒங்கிட்ட போயி பேசுறேன் பாரு” எனச் சொல்லிவிட்டு திண்ணையை விட்டு இறங்கி தன் குடிசைக்குப் போக காலெடுத்து வைத்தவள் ஏதோ மறந்து போனது போல நின்று சிந்தித்து இருதயத்திடம் வந்தாள்ஐயாராசாஉங்க தங்கச்சி கலியாணம் நீங்க எப்புடி நடத்துறிகளோ அது உங்க இஷ்டம்.   ஆனாஅந்த சூசமுத்து பயலுக்கு மட்டும் சேதி அனுப்பி அவனையும் வர வச்சு செய்யுங்கய்யா.அவனும் அந்த அருளுக் குட்டிக்கு அண்ணந்தானேமூனுபேரும் நின்னு கட்டிக் குடுக்காட்டி நல்லாவா இருக்கும்அவனுக்கு சேதி அனுப்புங்கப்பா எனக் கெஞ்சலாக கேட்டாள்இதையெல்லாம் உள்ளே நின்று கவனித்தபடி இருந்த இரக்கம் விறுவிறு என இறங்கி வந்துஇந்தாபாரு கெழவிபரதேசத்துக்குப் போனவுகளும் பட்டாளத்துக்குப் போனவுகளும் ஒன்னுதான்அவுக இப்ப எங்க இருக்காகளோஎப்புடி இருக்காகளோஅவுகளத் தேடி கூட்டியாந்து அப்புறம் கலியானம் நடத்துறதெல்லாம் நடக்குற காரியமாஒம்பேரன்ட்ட சொல்லி காயிதம் எழுதிப் போடச் சொல்றேன்வந்தா பாக்கலாம் எனச் சொல்லி முடிக்கும் போதே உபகாரத்திற்கு விளங்கிவிட்டது அவள் கடிதம் அனுப்பமாட்டாள் என்றுசூசை மீது அருளுக்கும் அருளு மீது சூசைக்கும் அலாதி பிரியம்அவளுக்குத் தெரியும்தான் அவன் இங்கிருந்தால் இந்த கல்யாண ஏற்பாடே நடைபெற்றிருக்காது என்றுமதினி தன் தங்கையைக் கொடுமைப்படுத்துவதை தாங்க முடியாமல் எதிர்த்து கேட்டு அவளுக்காக அண்ணன் சவரியோடு சன்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியவன் பட்டாளத்தில் சேர்ந்துவிட்டான்இப்போது தகவல் தெரிந்தால் எப்படியாவது திருமணத்தை நிறுத்திவிடுவான்யார் மூலமாவது சூசைக்கு கடிதம் அனுப்பிவிட வேண்டும் என்றத் தீர்மானத்தோடு, எப்போதோ அவன் தன் முகவரியோடு அனுப்பிதான் பத்திரப்படுத்தி வைத்திருந்த கடிதத்தைத் தேடி தன் குடிசைக்குள் சென்றாள் உபகாரம்.

………….………………தொடரும்.…………………   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...