உலகில் தோன்றிய மனிதன் இயற்கையோடு போராட தொடங்கியது முதலே இவ்வுலகில் போர் தொடங்கிவிட்டது. முதலில் தன்னைத் தாக்க வரும் விலங்குகலோடு போரிட்டு தன்னை, தன் வாழ்வைத் தக்க வைத்துக் கொண்டான். பின் இனக்குழுவாக வாழத்தொடங்கிய பின் தன் இனத்தை காக்க போரடினான். நிலவுடைமை தோன்றிய பின்னர் தன் நிலப்பரப்பை விரிவு செய்ய, அண்டை நிலத்தாரோடு போரிடத்தொடங்கினான். மனிதன் மண் மேல் கொண்ட ஆசையால் உருக்கொண்ட போர்கள் இன்றளவும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
இன்று நிலம் மட்டுமின்றி அதிகாரத்திற்காகவும், ஆசைக்காகவும், மதத்தின் பெயராலும் பற்பல போர்கள் நடந்துகொண்டுள்ளன. இன்றைய காலத்திலேயே இச்சூழல் எனில் வீரயுகம் எனப் புகழப்படும் சங்க காலத்தில் எண்ணிறந்த போர்கள் நடைபெற்றன. அக்காலத்தில் போர் நடைபெற காரணமாக இருந்தவை இங்கு பட்டியலிடப்படுகின்றன.
1. கால் நடைகளான ஆடு, மாடுகளை கவரவும், காக்கவும் போர் நடைபெற்றது.
2. எல்லையை விரிவு படுத்தவும், காக்கவும் போர் நடத்தப்பட்டது.
3. பிற நாட்டு வளத்தைக் கவர நடத்தப்பட்டது.
4. தன் தன்மானத்தி காக்க போர் நடைபெற்றது.
5. சிற்றரசுகளைக் கவர போர் நடந்தது,
6. அரசாட்சியைக் கைப்பற்ற போர் நடைபெற்றது.
7. ஒரு அரசரின், சிற்றரசரின் மகளை மணம் முடிக்க முயற்சித்து போர் நடந்தது.
7. ஒரு அரசரின், சிற்றரசரின் மகளை மணம் முடிக்க முயற்சித்து போர் நடந்தது.
இணைப்பு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக