இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஏப்ரல், 2021

புதின இலக்கிய வினாவங்கி

  1. முதல் ஆங்கில நாவல் எந்த ஆண்டு வெளியானது? 1740
  2. இந்தியாவின் முதல் புதினம் எது? துர்க்கேஷ நந்தினி
  3. இந்தியாவில் முதல் புதினம் வெளியான ஆண்டு யாது? 1865
  4. மலையாள முதல் புதினம்வெளியான ஆண்டு யாது? 1887
  5. தமிழின் முதல் புதினம்  யாது? பிரதாப முதலியார் சரித்திரம்
  6. தமிழின் முதல் புதினம் வெளியான ஆண்டு யாது? 1879
  7. தமிழின் முதல் புதினத்தை எழுதியவர் யார்? மாயூரம் வேதநாயகம்
  8. கமலாம்பாள் சரித்திரத்தை எழுதியவர் யார்? பி.ஆர். ராஜம் ஐயர்
  9. கமலாம்பாள் சரித்திரம் வெளியான ஆண்டு? 1896
  10. கமலாம்பாள் சரித்திரம் எந்த இதழில் தொடராக வெளிவந்தது?  விவேக சிந்தாமணி
  11. தீனதயாளு புதினத்தின் ஆசிரியர் யார்? நடேச சாஸ்திரி
  12. முத்து மீனாட்சியின் ஆசிரியர் யார்? அ. மாதவையா
  13. தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் யாது? மோகனாங்கி
  14. தமிழின் முதல் வரலாற்றுப் புதினத்தின் ஆசிரியர் யார்? தி.த.சரவணமுத்துப் பிள்ளை
  15. நாவல் ராணி யார்? கோதைநாயகி அம்மாள்
  16. சுகுணசுந்தரியின் ஆசிரியர் யார்? மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  17. சுகுண சுந்தரி வெளியான ஆண்டு யாது? 1887
  18. மோகனாங்கி வெளியான ஆண்டு யாது?1895
  19. தமிழின் முதல் துப்பறியும் புதினத்தை எழுதியவர் யார்? எம்.எஸ்.நடேச சாஸ்திரி
  20. தானவன் எந்த ஆண்டு வெளியானது?1894
  21. கமலாக்ஷி சரித்திரத்தை இயற்றியவர் யார்? பொன்னுசாமி பிள்ளை
  22. தி.ம.பொன்னுசாமிப் பிள்ளை எழுதிய புதினங்கள் யாவை? கமலாக்ஷி, ஞானாம்பிகை, சிவஞானம், விஜயசுந்தரம், ஞானசம்பந்தம், ஞானப்பிரகாசம்
  23. மாதவையா எழுதிய புதினங்கள் யாவை? பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்துமீனாட்சி
  24. எஸ்.ஏ. இராமேஸ்வரி எழுதிய புதினம் யாது? 
  25. மங்கம்மாள் புதினத்தை எழுதியவர் யார்? 
  26. முதல் இரு வரலாற்றுப்புதினங்களும் யாருடைய வரலாற்றைப் பேசுகிறது? ராணி மங்கம்மாள்
  27. அயல் மாநிலக்கதைக்களத்தை மையமாகக் கொண்ட முதல் தமிழ் புதினம் யாது? அதை எழுதியவர் யார்?
  28. மொழிபெயர்ப்புப் புதினங்களை அதிகமாக மொழிபெயர்த்தவர்கள் யாவர்? ஆரணி குப்புசாமி, ஜே.ஆர். ரங்கராஜூ, வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
  29. மறைமலை அடிகள் எழுதிய தழுவல் நாவல் யாது? 
  30. மதிவானனை எழுதியவர் யார்?
  31. ந.பலராமையர் எழுதிய புதினம் யாது?
  32. மீனாட்சி சுந்தரம்மாள் எழுதிய புதினங்கள் யாவை?
  33. 26 ஆண்டுகளில் 29 முறைப் பதிப்பிக்கப்பட்ட ராஜாம்பாளை இயற்றியவர் யார்?
  34. புதுமைப்பித்தனின் எழுத்துலக வாரிசு யார்? ஜெயகாந்தன்
  35. ரிஷிமூலம் எழுதியவர் யார்? ஜெயகாந்தன்
  36. சிறுகதையாக எழுதப்பட்டுப் புதினமாக வளர்ந்த ஜெயக்காந்தனின் புதினம் யாது? சிலநேரங்களில் சில மனிதர்கள்
  37. வாழ்க்கை அழைக்கிறது யாருடைய புதினம்? ஜெயகாந்தனின் முதல் புதினம்
  38. தி. ஜானகி ராமனின் புதினங்கள் யாவை? அம்மா வந்தாள், மரப்பசு, மோகமுள்
  39. திரைப்படமான தி.ஜாவின் புதினம் யாது? மோகமுள்
  40. இராஜம் கிருஷ்ணனின் புதினங்கள் யாவை? குறிஞ்சித்தேன், கரிப்புமணிகள், அலைவாய்கரையினிலே, சேற்றில் மனிதர்கள். கூட்டுக்குஞ்சுகள்
  41. இராஜம் கிருஷ்ணன் பிறந்த ஆண்டு யாது? 1925
  42. மலைவாழ் மக்களின் சிக்கலைப் பேசும் இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது?குறிஞ்சித்தேன்
  43. குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்த இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது?கூட்டுக்குஞ்சுகள்
  44. கடற்கரைச் சார்ந்த மக்களின் வாழ்வியல் குறித்துப் பேசும் இராஜம் கிருஷ்ணனின் புதினம் யாது? அலைவாய் கரையினிலே, கரிப்புமணிகள்
  45. தோப்பில் முதமது மீரான் எங்கு பிறந்தார்? தேங்காய்ப்பட்டணம்
  46. தோப்பில் முதமது மீரானின் புதினங்கள் யாவை? ஒருகடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வுநாற்காலி
  47. தோப்பில் முதமது மீரான் எந்த புதினத்திற்காக சாகித்ய அகாதெமி விருது வென்றார்? சாய்வு நாற்காலி
  48. கல்கியின் இயற்பெயர் யாது? இரா. கிருஷ்ணமூர்த்தி
  49. கல்கியின் முதல் புதினம் யாது? விமலா
  50. கல்கியின் தொடக்ககால புனைப்பெயர் யாது? தேனீ
  51. கல்கியின் முதல் புதினம் எந்த இதழில் தொடராக வந்தது?
  52. கல்கியின் முன்னோடிகள் யாவர்?
  53. கல்கியின் புதினங்கள் யாவை?
  54. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் யார்? கல்கி
  55. கல்கி எந்தப் புதினத்திற்காக சாகித்ய அகாதெமி விருது வென்றார்? அலையோசை
  56. நிறைவு பெறாத கல்கியின் புதினம் யாது?
  57. அகிலனின் இயற்பெயர் யாது? அகிலாண்டம்
  58. அகிலனின் புதினங்கள் யாவை? பெண், வேங்கையின்  மைந்தன், கயல்விழி, வெற்றித்திருநகர், புதுவெள்ளம், வாழ்வு எங்கே?, பால்மரக்காட்டினிலே, சித்திரப்பாவை, பாவைவிளக்கு, துணைவி, நெஞ்சின் அலைகள், சிநேகிதி, எரிமலை, சக்திவேல், நிலவினிலே, இன்பநினைவு
  59. அகிலனின் வரலாற்றுப் புதினங்கள் யாவை?  வேங்கையின்  மைந்தன், கயல்விழி, வெற்றித்திருநகர்
  60. சின்னச்சாம்பு யாருடைய படைப்பு? தேவன்
  61. கோதைத்தீவு யாருடைய புதினம்? தேவன்
  62. ஆரணி குப்புசாமியின் இரத்தினபுரி ரகசியம் எத்தனை பாகங்களைக் கொண்டது? 9
  63. முதல் முழு தேசிய இயக்க நாவல் எது? தேசபக்தன் கந்தன்
  64. முதல் முழு தேசிய இயக்க நாவலை எழுதியவர் யார்? கே.எஸ்.வேங்கடரமணி
  65. முழுமுதல் கிராமிய நாவல் எது? மண்ணாசை [சங்கரராமின் புதினம்]
  66. மண்மணம் வீசும் நாவல் முன்னோடி யார்? சங்கரராம்
  67. துப்பறியும் சாம்புவைப் படைத்தவர் யார்? 
  68. தனிமனித வரலாற்று நாவல் : fiction biography  வகைப் புதின முன்னோடி யார்? எம்.எஸ்.கல்யாண சுந்தரம் 
  69. முதல் தனிமனித வரலாற்றுப் புதினம் யாது? இருபது வருஷங்கள்
  70. அண்ணாவின் புதினங்கள் யாவை? 
  71. தில்லானாமோகனாம்பாளின் ஆசிரியர் யார்? 
  72. மு.வரதராசனின் முதல் புதினம் யாது? செந்தாமரை
  73. மு.வ.வின் புதினங்கள் யாவை?செந்தாமரை, கள்ளோ காவியமோ, அந்த நாள், அல்லி, மலர்விழி, பாவை, கரித்துண்டு, வாடாமலர்,  அகல்விளக்கு, கயமை, பெற்றமனம், நெஞ்சில் ஒரு முள், மண்குடிசை
  74. விந்தனின் இயற்பெயர் யாது?  கோவிந்தன்
  75. விந்தனின் புதினங்கள் யாவை? பாலும் பாவையும், சுயவரம், மனிதன் மாறவில்லை, பசிகோவிந்தம், மிஸ்டர்  விக்கிரமாதித்தன், ஓ மனிதா
  76. பாட்டாளி புனைகதை ஆசிரிய முன்னோடி யார்?
  77. கூட்டுறவை மையமாகக் கொண்ட முதல் புதினம் யாது? உழைக்கும் கரங்கள்
  78. சாண்டில்யன் எழுதிய முதல் வரலாற்றுப் புதினம் யாது? ஜீவபூமி
  79. சத்யாகிரகம் பற்றிய முதல் தமிழ் நாவல் யாது? பலாத்காரம் [சாண்டியன்]
  80. பொய்த்தேவின் ஆசிரியர் யார்? க.நா. சுப்ரமணியம்
  81. கோ.வி. மணிசேகரனின் நூறாவது புதினம் யாது? ஒரு தீபம் ஐந்து திரிகள்
  82. இந்திரா பார்த்தசாரதியின் முதல் புதினம் யாது? காலவெள்ளம்
  83. இந்திரா பார்த்தசாரதியின் புதினங்கள் யாவை?காலவெள்ளம், தந்திரபூமி, சுதந்திர பூமி, குருதிப்புணல்
  84. இந்திரா பார்த்தசாரதியின் சாகித்ய அகாதெமி விருது வென்ற புதினம் யாது? குருதிப்புணல்
  85. சுந்தர ராமசாமியின் புதினங்கள் யாவை?ஜே.ஜே. சிலக்குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை
  86. அசோகமித்திரனின் புதினங்கள் யாவை?கரைந்த நிழல்கள், தண்ணீர், 18ஆவது அட்சக்கோடு, ஆகாயத்தாமரை, இன்று
  87. திரைப்படத் துறை குறித்த அசோகமித்திரனின் புதினம் யாது? கரைந்த நிழல்கள்
  88. புனலும் மணலும் யாருடைய படைப்பு? அ. மாதவன்
  89. ஜெயகாந்தனின் முதல் புதினம் யாது? வாழ்க்கை அழைக்கிறது
  90. ஜெயகாந்தனின் புதினங்கள் யாவை? வாழ்க்கை அழைக்கிறது, பாரிஸுக்குப் போ, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சினிமாவுக்குப் போன சித்தாளு,  ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
  91. தாகம் யாருடைய புதினம்? கு. சின்னப்பபாரதி
  92. சாகித்ய அகாதெமி விருது வென்ற டி. செல்வராஜின் புதினம் யாது? தோல்
  93. டி. செல்வராஜின் புதினங்கள் யாவை? மலரும் சருகும்,  தேநீர், தோல்
  94. சேரி மக்கள் பற்றிய முதல் புதினம் யாது? மலரும் சருகும்
  95. நீலபத்மநாபனின் புதினங்கள் யாவை? பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள், உறவுகள், மின்னுலகம், இலையுதிர் காலம்
  96. கீறல்கள் யாருடைய புதினம்? ஐசக் அருமைநாதன்
  97. சாயாவனம் யாரால் இயற்றப்பட்டது? சா. கந்தசாமி
  98. காகித மலர்கள் யாருடைய புதினம்?ஆதவன்
  99. பாலகுமரனின் புதினங்கள் யாவை? விழிமயக்கம், தென்னம்பாளை, ஆனந்தவயல், இரும்புக்குதிரைகள், கரையோர முதலைகள், கொம்புத்தேன்,  மெர்க்குரிப்பூக்கள், நிலாக்கால மேகம், தாயுமானவர்
  100. தலைகீழ் விகிதங்கள் யாருடைய முதல் புதினம்? நாஞ்சில்நாடன்
  101. புத்தம் வீடு யாருடைய படைப்பு? ஹெப்சிபா ஜேசுதாசன்
  102. தமிழில் வரலாற்றுப் புதினத்தின் தந்தை யார்? கல்கி
  103. சூடாமணியின் புதினங்கள் யாவை? புன்னகைப்பூங்கொத்து, நீயே என் உலகம், தீயினில் தூசு, தந்தை வடிவம், மானிட அம்சம், கண்ணம்மா
  104. யுனெஸ்கோ உலக இலக்கியப்படைப்புக்காக ஏற்ற முதல் நூல் எது?  ஆகாசவீடுகள்
  105. வாசந்தியின் புதினங்கள் யாவை? ஆகாசவீடுகள், மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள், நான் புத்தன் இல்லை,  நிஜங்கள், அந்தி நேரத்து உதயங்கள், மூங்கில் பூக்கள் 
  106. கீதமடி நீ எனக்கு யாருடைய புதினம்? இந்துமதி
  107. நெசவாளர்கள் பற்றிய தொ.மு.சி. ரகுநாதனின் புதினம் எது? பஞ்சும் பசியும்
  108. தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குறித்த டி.செல்வராஜின் புதினம் எது? தேனீர்
  109. கம்யூனிசம் பேசும் ஐசக் அருமைராஜனின் புதினம் யாது? கீறல்கள்
  110. சௌராட்டிரர்கள் பற்றிய எம்.வி.வெங்கட்ராமனின் புதினம் யாது? வேள்வித்தீ
  111. நனவோடை உத்தியிலான சி.சு.செல்லப்பாவின் புதினம் யாது? ஜீவனாம்சம்
  112. நடப்பியல் உத்தியைக்கையாண்ட முதல் புதினம் யாது? கமலாம்பாள் சரித்திரம்
  113. விடுதலை உணர்வைப் பேசும் முதல் தமிழ்ப் புதினம் யாது?  காந்திமதி [பனையப்பச்செட்டியார்]
  114. கடித வடிவிலான முதல் புதினம் யாது? கோகிலாம்பாள் கடிதங்கள்
  115. முதல் பெண் புதின ஆசிரியர் யார்? கிருபா சத்தியநாதன் 

சனி, 10 ஏப்ரல், 2021

ஒப்பிலக்கியம்

  1. ஒப்பிலக்கியம் என்னும் பெயர் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?  Comparative Literature
  2. comparative   என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? சேக்ஸ்பியர் : ஹென்றி 4 என்ற நாடகத்தில் பயன்படுத்தினார்.
  3. Comparative Literature என்ற சொல்லாட்சியை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?  மாத்யூ அர்னால்டு
  4. தமிழில் ஒப்பிலக்கியத்திற்கு வித்திட்டவர்கள் யாவர்? ஜி.யு.போப், எஸ்.கிருஷ்ணசாமி, சித்தாந்தா
  5. ஒப்பியல் கொள்கைகள் சார்ந்த முதல் நூலை எழுதியவர் யார்? மொழியியல் அறிஞர் தேவநேய பாவாணர்
  6. தேவநேய பாவாணர் எழுதிய ஒப்பியல் நூல் யாது? ஒப்பியல் மொழிநூல்
  7. ஒப்பிலக்கிய அறிமுகம் எழுதியவர் யார்? தமிழண்ணல்
  8. ஒப்பியல் நோக்கு எழுதியவர் யார்? வ.சுப. மாணிக்கம்
  9. கிரேக்க வீரயுகப்பாடல்களுடன் சங்கப்பாடல்களை ஒப்பிட்டு சங்க காலத்தை வீரயுகம் என்றவர் யார்? க. கைலாசபதி
  10. ஒப்பியல் இலக்கியத்தின் ஆசிரியர் யார்? க. கைலாசபதி
  11. வை.சச்சிதானந்தம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள் யாவை? The impact of western thought on Bharathi, Whitman and Bharathi - A Comparative Study, ஒப்பிலக்கியம் ஊர் அறிமுகம், ஒப்பிலக்கியம் என்றால் என்ன?
  12. கா. செல்லப்பன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள் யாவை? Shakespear and Ilango as Tragedians, The Problem of Evil in king Lear and Silappathikaaram
  13. ஒப்பிலக்கியக் கழகத்தை உருவாக்கியவர் யார்? ஜி.ஜான் சாமுவேல்
  14. ஜி.ஜான் சாமுவேல் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள் யாவை? திராவிட மொழிகளின் ஒப்பாய்வு ஓர் அறிமுகம், ஷெல்லியும் பாரதியும் ஒரு புதிய பார்வை, ஒப்பிலக்கியத் திறனாய்வு, திறனாய்வு சிந்தனைகள், ஒப்பாய்வுக் களங்கள், Studies in Comparative lit., Studies in Tamil Poetry
  15. க. கைலாசபதி எழுதிய நூல்கள் யாவை? அடியும் முடியும், இரு மகாகவிகள்
  16. ஜி. வான்மீகிநாதன் எழுதிய நூல் யாது? மாணிக்கவாசகரும் ரூமியும்
  17. தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய நூல்? ஷெல்லியும் பாரதியும், கங்கையும் காவிரியும்
  18. க. நா. சுப்பிரமணியம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? சிறந்த பத்து இந்திய நாவல்கள்
  19. கதிர் மகாதேவன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம் தொன்மம்
  20. கா. செல்லப்பன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்கள்? எங்கு காணினும் சக்தி, தமிழில் ஒப்பியல் கோட்பாடுகள், இலக்கியத்தில் பழம் புதுமையும் புதுப்பழமையும், விடுதலைச்சிட்டும் புரட்சிக் குயிலும்
  21. அ.அ. மணவாளன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இலக்கிய ஒப்பாய்வுக் காப்பியங்கள், இராமகாதையும் இராமாணங்களும்
  22. சி. கனகசபாபதி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதி- பாரதிதாசன் கவிதை மதிப்பீடு
  23. மா. காத்தையன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதிதாசன் வாணிதாசன் பாடல்கள் ஒப்பீடு
  24. பேரா.சி.மெய்கண்டான் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? புரட்சிக்கவியும் பில்ஹணீயமும் - ஓர் ஒப்பீடு
  25. சு. கோபிநாத் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? தமிழ்க் காப்பியங்களில் அவலச்சுவை
  26. டாக்டர் அகத்தியலிங்கம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே
  27. மு. அருணாச்சலம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கிழக்கு வெளுக்கிறது.
  28. ரீட்டா என். முத்து எழுதிய ஒப்பிலக்கிய நூல்? தேம்பாவணி - சீறாபுராணக் கதைகள் - ஓர் ஒப்பீடு
  29. பத்மா எழுதிய ஒப்பிலக்கிய நூல்? நாவுக்கரசு நம்மாழ்வார் - சமயநெறிகள் ஒப்பீடு
  30. பி. பரமேஸ்வரி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கம்பராமாயணம், வில்லி பாரதத்தில் வரும் எதிர்நிலை நாயகர்கள் ஒப்பீடு
  31. சி. என். குமாரசாமி எழுதிய ஒப்பிலக்கிய நூல்? மாதவியும் கிளியோபாத்ராவும்
  32.  சக்கர. இலக்குமிகாந்தன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இராபர்ட் பிராஸ்டும் கண்ணதாசனும்
  33. ச.வே.சுப்பிரமணியன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இந்திரஜித்தும் இலக்குவனும்
  34. தண்டபாணி தேசிகர் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? வள்ளுவரும் கம்பரும்
  35. ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஒப்பிலக்கிய நூல்? காளத்தி வேடனும் கங்கை வேடனும்
  36. நாமக்கல் கவிஞர் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கம்பரும் வால்மீகியும்
  37. இராய. சொக்கலிங்கம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கம்பனும் சிவனும்
  38. எம். சோலையன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பாரதியும் மில்ட்டனும்
  39. சித்ரா எழுதிய ஒப்பிலக்கிய நூல்? வால்ட்விட்மனும் கண்ணதாசனும்
  40. இராம. குருநாதன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? சங்கப்பாட்டும் ஜப்பான்யக் கவிதையும்
  41. க. ரத்னம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இவர்கள் பார்வையில் அகலிகை
  42. ப. மருதநாயகம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்?  கிழக்கும் மேற்கும், புதுப்பார்வைகளில் புறநானூறு
  43. ச.கு. கணபதி எழுதிய ஒப்பிலக்கிய நூல்?  வியாசரும் வில்லியும்
  44. பாலாம்பிகைதாசன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? இந்திய இலக்கிய இழை
  45. பாலா எழுதிய ஒப்பிலக்கிய நூல்?  பாரதியும் கீட்சும்
  46. எ.சு. சதாசிவம் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? பெரியாரும் கவிஞரும் அண்ணாவும்
  47. இரா. அறவேந்தன் பதிப்பித்த ஒப்பிலக்கிய நூல்?  உலகப்பார்வையில் தமிழ் இலக்கியம்
  48. ஜெயமோகன் எழுதிய ஒப்பிலக்கிய நூல்? கண்ணீரைப் பிந்தொடர்தல்





Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...